Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

அனுபவ சாட்சி 6 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

எந் நேரமும் அதில் மனம் லயித்து இளிச்சவாயத்துடன் இருக்கும் நிலையும் ஏற்படும் பெரும் அபாயத்தை உணர்ந்தேன்.புகழை விட பெரும் போதை ஏதும் இல்லை.ஏன் இந்த பல்லக்கு தூக்கிகள் எமக்கு....எம்முள் இருந்த அகங்கார சூழ்ச்சயின் வெளிபாடா ....பல்லக்கை விட்டு இறங்க பெரும் பிரயத்தனம் செய்தேன்.ஏனெனில் அவ்வளவு ஆணந்தம் தூக்கி கொண்டாடும் சுகத்தில்....எல்லாம் மரணத்தில் முடிய கூடியது...அனைத்துக்கும் நன்றி சொல்லி நகரும் பக்குவம் புரிந்தது....யார் பாரட்டினாலும் நகர்ந்து செல்லும் பக்குவம் வேண்டும்... பயிற்ச்சியும் வேண்டும்...உக்கார்ந்த எம்மை சுமப்பதை விட இறங்கி சமமாக நடந்தால் இன்னும் பரவசம் புரியும் என்பதை எம் பரந்தாமன் இநன்யா மிக உயர்ந்த ஒரு நல் ஆண்மாவின் வழி உணர்த்தினாா்.மிகை அன்பு.,,மிகை பாராட்டு...,,இது அனைத்தும் கடக்கும் தெளிவை உணர்ந்த மகிழ்வுடன் பல்லக்கை துறந்தேன்....இயற்கை காற்றின் சுவாசம் இப்பொழுது ஆண்மாவினுள் ஊடுறுவி சிலிர்க்க வைக்கிறது....
இநன்யாவின் சத்திய பயணத்தில் ஒவ்வொரு அடியில் அவருடை அன்பின் வழிகாட்டல் நிறைந்து இருக்கிறது....உணர்ந்தேன்...தெளிந்தேன். சின்ன சின்ன வட்டம் கட்டிஒற்றை காலில் பாண்டியாடி
ஊர் முழுக்க சுற்றி திறிந்துஏழாம் கல்லாடிகூட்டாஞ் சோறு பொங்கி தின்று...கூடி ஆடி மகிழ்ந்து திரிந்து
பொங்கி சிரித்த நாட்கள் கடவுளின் அன்பில் வாழ்ந்த நாட்கள்..... பருவ மாற்றத் தில்  பருவகால மாற்றத்தில்....மதியின் சதியில் உழன்ற வாழ்வதுஊமத்தமாய் நெறிஞ்சி முள்ளாய்... நெட்டி முறித்த பாசமதில் பற்று கொண்ட சிலந்தி போல மாட்டி மடியும் மாயத்தை இந்த செட்டி பொம்மை உணர்த்தியதே....எந்த ஆட்டத்துக்கும் ஈடு கட்டிஇருந்த இடத்தில் நின்றதே...இருப்பு நிலையை ஆடி நின்று காட்டியபாங்கு எம்மில் வழிகாட்டியாய் ஆனதே...
 கடவுள் தத்துவத்தை பற்றி....நம் வாழ்வின் பல நேரம் சார்பு நிலை கொண்டே நகர்ந்துள்ளது. இதில் பிறந்து வளர்ந்த பல தருணங்களில் பொற்றோர்., உற்றார்.,சான்றோர் என பல கட்டங்கள் சொல்வதை ஏற்கும் சூழலில் சிக்குண்டு சில சௌகரியங் களுக்குஅடிமைபட்டு.,சொல்வதை அப்படியே ஏற்கும் தன்மைக்கு ஆட்பட்டு.....அதை அப்படியே இன்னும் இரட்டிப்பு செய்து அடுத்த தலைமுறைக்கு கொடையாக தர போராடி இப்படி தானே....தனக்கு புரியாத.,தெரியாத ஒன்றை எப்படி மற்றவருக்கு முழுமையாக தர முடியும்..??!!! அப்படி தர கூடிய ஒன்று எப்படி முழுமையான தாக ஆகும்.இங்கே படித்தோம் பட்டம் பெற்றோம் சமூகத்தில் தன்னின் ஆளுமையை உறுதிபடுத்தி விட்டோம் என்ற அங்கார பாவனையில் அனைத்தையும் வென்று விட்டோம் என்று நம்மை நாமே ஏமாற்றி கொண்டு நம்மை நகர்த்தி கொண்டிருக்கிறோம்....அறிவை தேடினோம் ஆண்மத்தை தேடினோமா..???. கடவுளிடம் பணம்.,பதவி.,தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டி னோம்.ஞாணத்தை வேண்டினோமா.?? கடவுள் என்பவர் நம் ஆசை களை நிறைவேற்றும் ஒரு கருவி.... இது தானே நமக்குள்நாம் விதைத்த கடவுள்தத்துவம்எப்படியான விதை நம்முள் தூவப்பட்டுள்ளது என்று சற்று சிந்தித்தோமானால் நம்மை நாமே வெறுத்து கொள்ளும் அவலத்துக்கு தள்ள படுவோம்.இங்கு கடவுள் படைப்பில் சூட்சுமங்கள் ஏராளம்.ஆனால் இங்கு கடவுளையே சூட்சுமமாக ஆக்கிய பெருமை மனிதனுக்கு உண்டு.இத்தனைக்கும் படைப்பில் கடவுளுக்கு பிடித்தது மனித படைப்பு.....எம்மின் உணர்தலில் கடவுள் இநன்யா...யான் கொண்ட இநன்யா கடவுளிடம் பக்தி தேவையில்லை.,பயம் தேவையில்லை.,சடங்கு.,புரோகிதம் தேவையில்லை.,வழிபாட்டுக்கு (அக்னி) நெருப்பு தேவையில் லை.படையல் என்ற பெயரில் பாசாங்கு தேவையில்லை.பலியிடுதல் என்ற பெயரில் உயிர் கொலை தேவை இல்லை.விரதம் என்கிற பெயரில் போலிதனம் தேவையில்லை.,பண்டிகை என்ற பெயரில் உண்டிகுலுக்க தேவையில்லை..குலுக்கிய உண்டியால் ஒருவனை தர்ம கர்த்தாவாக ஆக்க தேவையில்லை.துதி பாடதேவையில்லை.தீவிரமான யோக பயிற்சிகளும் தேவையில்லை.இநன்யா கடவுளிடம் நம்மை விசாலபடுத்திக் கொள்ள தூய அன்பின் தத்துவம் நிறைந்து இருக்கிறது..கடவுள் இநன்யாவிடம் நாம் காட்ட வேண்டியது அவர் மீது நாம் கொண்ட அன்பில் வைராக்கியம் மட்டுமே.அந்த அன்பின் தத்துவம் நம்மில் ஞாணத்தை சுரக்க செய்யும்.ஆண்மாவை சிரிக்க வைக்கும் கடவுளை உணர வைக்கும்.!!இணையில்லா பேரன்பு கொண்ட "இநன்யா"கடவுளை நாம் புரிந்தோமானால் இதுவரை நாம் வாழ்ந்த வாழ்வின் சூழ்ச்சியும் கடவுளின் தத்துவமும் முழுவதும் தெரிய வரும்.அதன் பின் ஏற்படும் உணர்தலின் தன்மை நம் பிறப்பை அர்த்த படுத்தி கொள்ளும் வாய்ப்பாக அமையும்.ஞாணத்தை பெற முயலும் தர்மாகக்களாக ஆவோம்.கடவுள் தத்துவத்தை உணர்வோம்.நம்மில் நம்மை மீட்டெடுப்போம்..... இநன்யத்தின் இன்பமதில் பாடி திரிவோம்.சொல் இல்லாது குரல் கொண்டு கூவி திரிவோம்.
கீச்சிட்டு பாமாலை பாடி மகிழுவோம்.ஞாண சாரம் எங்கள் உயிர்களிடத்துமடண்டி கிடக்குதே.
மானிடா நீீ உன் புத்தியாலே ஞாணமதை மறந்து போனாயே.இயற்கையை உன் அறிவினால் அழிகின்றாயே.எங்கள் அன்பை கூர்ந்து பார்த்து புரிந்து திருந்துடா.ஒற்றுமையை எங்களிடத்தில்
கற்று கொள்ளடா.மனிதா கற்று உணர்ந்து உன் வாழ்வில் முக்தி கொள்ளடா.மனிதா முக்தி கொள்ளடா..
சோர்ந்து போகாதே,சோதனை என்று துவண்டு விடாதே என் நாமம் சத்தியம் உன்னை எப்போதும் கைவிடாது அழைத்து செல்லும் நீ கேட்டதை நிச்சயமாக தரும் என் சத்திய கரங்கள் உன்னை எப்போதும் காக்கும் பயப்படாதே நான் உன்னை கைவிட மாட்டேன் என் அன்பு உனக்கு எல்லா வளமும் நலமும் தரும் சத்தியமாக என் ஞான குலங்களே வெல்வாய் நீ. கடல் நீரின் ஆழம் தெரியவில்லை. பெண்ணின் ஆழம் தெரியவில்லை. மண்ணின் ஆழம் தெரியவில்லை. நீ விண்ணின் ஆழம் பார்க்க நினைக்கின்றாய். வேடிக்கை வாழ்க்கையடா ! நீ மரங்களை அழிக்கின்றாய் ! மனிதனையும் அழிக்கின்றாய். யாரையும் புண்படுத்தாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள். பூமியில் மனிதன் நினைத்தால் வளமையாக வாழலாம். படைத்தவன் எல்லா வளங்களையும் பூமியில் உனக்காக படைத்தான். வறுமை, நீர் தட்டுப்பாடு எல்லாம் மனிதன் செய்வது தான் ! நீ கடவுளை குற்றம் சொல்லாதே ! உணர்வோம், தெளிவோம்,திறன் கொள்வோம்எல்லா இடங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்கடவுள் இநன்யாவின் பாதம் பணிகிறேன்....
பல்லுயிர் தோற்றத்தின் பரிணாம வளர்ச்சியில் இயற்கையின் பங்களிப்பு ஏராளம்.ஒவ்வொரு உயிரும் கடவுள் கொடையாக அளித்த ஞாணத்தை உணர்ந்து தன் பங்கு தர்மத்தை இவ்வுலக உயிர்களுக்கு
முழுமையாக செய்து செல்கிறது.காலையில் மலரும் மலருக்கு இரவு வாடி உதிர்வோம் என தெரிந்து சிரித்து கொண்டே பூக்க தவறுவதில்லை.ஆனாால் நூறு வருடம் வாழப்பேகும் மனித உயிருக்கு
தான் பிறப்பு.,இறப்பு குறித்த பெரும் அச்சம்....பிறக்கும் போதும் அழுது கொண்டே பிறக்கின்றான்..வாழும் போதும் அழுது கொண்டே வாழ்கின்றான்.இ்றப்பிலும் அழுகை.தனியாக வருபவனுக்கு இங்கு எடுத்து செல்ல ஏது இல்லை என்ற உணர்தல் வருவதே இல்லை.பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்வினை போரட்ட களமாகவேஆக்கி சிக்கி உழன்று கண்டதே கோலம் என இருப்தால் மீண்டும் யுகத்தில் பிறப்பு.மீட்சி குறித்து.,கடவுளை குறித்து.,அவரின் அன்பை குறித்து சிந்தித்துள்ளோமா.கடவுளின் தத்துவத்தை உணர்த்த நம்மிடையே பல மகான்கள் தோன்றினார்கள்.கடவுள் தத்துவத்தை.,கோட்பாடுகளை நம்முள் விதைத்து சென்றார்கள்."ஒன்றே குலம் ஒருவனே தேவன்"...என்று கடவுள் தத்துவத்தை அன்றும் தமிழன் தான் சொன்னான்.ஆனால் நாம் உணர
தவறி வழிமாறி போனோம் மாயசூழ்ச்சிகளால்.அதற்கான இன்னல்களின் விளைவை அதிகமாகவே அனுபவித்து உள்ளோம். இருப்பினும் கடவுள் மிக அன்பானவர் என்பதை மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளார்.கடவுளை காண நமக்கு வாய்ப்பு வழங்க பட்டது.கடவுளை கண்டோம்.கடவுளின் அன்பெனும் தத்துவத்தை உணர்ந்தோமா..அதே வஞ்சம்..,சூழ்ச்சி.,அகங்காரம்.,கோட்பாடு களுக்குள்ளே இன்னும் நின்று கொண்டிருந்தால் கடவுளின் தத்துவத்தை என்றும் உணர முடியாத சூழலில் சிக்கி தவிக்க வேண்டியதே.கடவுளின் அன்பு ஞாணத்தை தர தயாரக உள்ளது. இரு கரங்கொண்டு அன்புடன் அரவணைத்து செல்ல தயாரக உள்ளது..அதை உணர்ந்து சத்திய பாதையில் சென்று முக்தி பெருவோம்.
உணர்வோம்..தெளிவோம்..திறன் கொள்வோம்.....

No comments:

Post a Comment