Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, November 2, 2014

அகந்தை, புருஷன், பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா

அகந்தை, புருஷன், பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா
பரமாத்மா ஜீவாத்மாவாக அகந்தை வழி செய்கிறது.அகந்தை அழியும்பொழுது பிரபஞ்ச ஆத்மா தரிசனம் தரும்.அகந்தை சக்திக்குரியது, ஜீவியத்திற்கோ, ஜீவனுக்கோ இல்லை.உடல் அகந்தை கரைந்தால் துணி கிழியும் சத்தம் கேட்கும்.உயிர் தன்னை வலியுறுத்தினால் அகந்தை பிறக்கிறது.அகந்தை யின் தர்மம் அதர்மம்.அகந்தையை அழிக்கும் எந்த முறையையும் தானே செய்வதாக நடித்துக் கெடுக்கும்.அகந்தையை அழித்தால், சக்தி நம்மை நாடி வரும். வந்த சக்தியைப் பயன்படுத்த அங்கு அகந்தையிருக்காது.இதுவரை உலகம் கண்ட ஆன்மிக அனுபவங்கள் அகந்தைக்குரியன.அகந்தை மேல் மனத்திற்குரியது.அகந்தை என்பது அறிவின் மையம்.அகந்தையும் பகுத்தறிவும் ஒன்றே.தெய்வங்கட்கு அகந்தையுண்டு.புலன்கள் அகந்தையின் கருவிகள்.சத்திய ஜீவியத்தின் மூன்று நிலைகளில் அறியாமையில் உள்ள நிலை அகந்தை.அகந்தைக்கு அனந்தனின் அம்சமுண்டு.
ரூபம், சக்தி, ஜீவியம்
இரு சக்திகள் சேர்ந்தால் ரூபம் உண்டாகிறது. இரு ரூபங்கள் சேர்ந்தால் ஜீவியம் உண்டாகிறது.முத்து, வைரம் ஒரு காலத்தில் எவை என்று மக்கள் அறியாத காலத்தில் எவரும் பயன்படுத்தவில்லை. அவை என்ன என்று அறிவது அவற்றின் individuality தன்மையை அறிவதாகும்.விஞ்ஞானம் அவை இரண்டும் ஒரே அணுக்களால் செய்யப்பட்டன எனக் கண்டுள்ளது. (Commonality) இரண்டிற்கும் பொதுவான தன்மையை அறிவதால், அவற்றை இன்று செயற்கையாகச்செய்கிறா ர்கள.இரண்டும் பிரம்மத்தாலானது என்பது essentiality. அதை அறிந்த ரிஷி ஒன்றை மற்றதாக மாற்றுவார் transmute.தனித்தன்மை தெரிந்தால் பொருள்களைப் பயன்படுத் தலாம்.பொதுத்தன்மை தெரிந்தால் அவற்றை நாமே செய்யலாம்.ஆன்மீகச் சாரம் தெரிந்தால், ஒன்றை மற்றதாக மாற்றலாம். அது இரஸவாதம் எனப்படும்.
பகுதி, முழுமைபகுதியும், முழுமையும் சமம், ஒன்றேயாகும்.பகுதி தன்னுள் ஈஸ்வரனிரு ப்பதை அறிந்தால் முழுமையை விடப் பெரியதாகும்.
தன்னையறிந்த பகுதி முழுமையை விடப் பெரியது.
தர்மம் (Ethics)விலங்குக்கும், தெய்வத்திற்கும் தர்மமில்லை.மனிதன் தர்மம் என்று கூறுவது அதர்மம். தான் புலியைச் சுடுவது வேட்டை. புலி மனிதனைச் சாப்பிடுவது கொடுமை என தனக்கொரு தர்மத்தையும், பிறர்க்கொரு தர்மத்தையும் பின்பற்றுவது அநியாயம்.விலங்குக்கும், மனிதனுக்கும், தெய்வத்திற்கும் பொதுவானது என்ன?சக்தி தன்னைப் பூர்த்தி செய்து கொள்வதே மூன்று நிலைகட்கும் பொதுவானது என்பதால் தர்மத்தை ஏற்பதைவிட இக்கொள்கையை ஏற்கலாம்.சச்சிதானந்தம் ஆனந்தத்தை அமைதியாக அனுபவிக்கிறது (Delight of Being). மனித உலகில் ஆனந்தம் சிருஷ்டியில் வெளிப்படுகிறது (Delight of Becoming). The spiritual fact id the Delight of Being changes into the Delight of Becoming அமைதியான ஆனந்தம் சிருஷ்டியில் வெளிப்படும்பொழுது ஆனந்தம் பரிணாம வளர்ச்சியைப் பெறுகிறது.நம் அன்றாட வாழ்வில் இக்கொள்கை வெளிப்படுவதைக் காண முடிந்தால் அதர்மம் இல்லை எனவும், நாம் இன்று தர்மம் என நினைப்பது தர்மமில்லை எனவும் தெரியும். உதாரணமாக நாம் கடும் விரதங்களைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக இனிய பண்புகளை மேற்கொள்ள முயன்றால் கடுமை இனிமையாக மாறுவதைக் காணலாம்.நாம் உயர்ந்த பண்புகளை ஏற்க முடியாத நேரம் வாழ்வு நம்மைக் கடுமைப்படுத்துகிறது. ஆனந்தம் பெற நம்மை வாழ்வு கடுமைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் நம் மனத்தைக் குழப்புகிறது. இனிமையை இதமாகக் கடும் உள்ளம் ஏற்றால் சத்தியம் கருணையாக, கனிவாக வெளிப்படும்.
இரட்டை ஜீவியம்பூமியில் நாம் நிற்பது horizontal ஆக நிற்கிறோம், ஆனால் நாம் நேராக நிற்பதாகவே உணர்கிறோம். தரைமட்டமாக நிற்பதை அறிவு ஏற்றாலும், உணர்வு நேராக நிற்பதாகக் கூறுகிறது.ஜோஸ்யம் பெரும்பாலும் பலிக்கிறது. இந்த சாஸ்திரம் சூரியன் உலகைச் சுற்றி வருவதாகக் கொண்டு எழுதப்பட்டது. இன்று எந்த ஜோஸ்யமும் பூமி சூரியனைச் சுற்றி வருவதாக அறியும். அப்படி அறிந்தாலும் ஜோஸ்யத்தை எதிராகக் கணிக்கின்றனர்.இரண்டு எண்ணங்களை மனம் ஏற்றாலும், மனிதனால் ஒன்றைப் புறக்கணித்து அடுத்ததின் அடிப்படையில் செயல்படமுடியும் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
மாயை
மாயை என்பது இல்லாதது என்று கூறுகிறார்கள்.இதற்குக் கனவையும், பழுதென்ற பாம்பையும் உதாரணமாகக் காட்டுகிறார்கள்.கனவு இல்லாதது இல்லை. பழுதும், பாம்பும் உள்ளவை. இல்லாதவையில்லை என்பதால் பொருத்தமாகாது.மாயை சிருஷ்டியின் கருவி, இல்லாதது இல்லை என்கிறார் பகவான்.அஞ்ஞானத்தை 'அசித்தி' என விளக்கி இறைவனை அறியாதது அஞ்ஞானம் என்றால் உலகம் மாயையாகும். அஞ்ஞானம், ஞானத்தின் மறு உருவம் எனில் அத்தவறு வாராது. உலகம் மாயையில்லை, இறைவன் தன்னிச்சைப்படி தன்னைத் தன்னுள் ஒளித்து மீண்டும் நினைவு வந்து ஆனந்தம் பெற ஏற்படுத்தியதே உலகம் என்றாகும் என்பது பகவான் விளக்கம்.


No comments:

Post a Comment