Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, November 2, 2014

ஆழ்மனமும்.. வெளிமனமும்

ஆழ்மனமும்.. வெளிமனமும்.. மனதை, பொதுவாக அறிவு மனம்(conscious mind), ஆழ்மனம்(Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.விவாதங்கள் மனதில் மிகும். அறிவின் துணை கொண்டு ஆய்வுகள் நடைபெறும். நல்லது கெட்டது தெரியும். அதனால் வாழ்வில் சிலவற்றை நாம் ஒதுக்குவோம். பலதை விரும்புவோம். அதற்குரிய செயல்கள் தொடரும். பழக்கங்கள் மிளிரும். பண்புகள் தோன்றும். தன் அனுபவத்தை வைத்து சிந்தித்து சீர்தூக்கி முடிவு செய்யும்
ஆனால் ஆழ்மனம் அல்லது உள்மனம் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு பெட்டகம். இது தன்னிச்சையாக இயங்கும். அறிவு மனத்திற்குக் கிடைக்கும் செய்திகள் எதையும் அது ஏற்காது. அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது, கிடையாது. வெற்றி,தோல்வி என்றும் எதுவும் கிடையாது. உண்மையான அனுபவத்திற்கும், கற்பனையான அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அது அறியாது
இத்தகைய பண்புகளைக் கொண்ட ஆழ்மனம் என்னதான் செய்யும்?
அடிக்கடி காண்பவைகள், திரும்ப திரும்பக் கேட்பவைகள் உணர்வு வயப்பட்ட நிலையில் கண்டு, கேட்டவைகள், அனுபவித்தவைகள், ஆல்ஃபா என்ற தளர்வு நிலையில் அல்லது தியானநிலையில் கேட்டவைகள் ஆகியவை மட்டுமே அதனுள் செல்லவல்லது. எந்த எண்ணத்தை வேண்டுமானாலும் ஆழ்மனதுள் ஆல்ஃபா நிலையில் நாம் செலுத்தலாம். நல்ல எண்ணம் அல்லது தீயஎண்ணம், வாழ்விற்கு உதவும் எண்ணம், உதவாத எண்ணம் என அது விவாதம் புரிவதில்லை. எண்ணத்தின் தன்மைகளை பார்ப்பதில்லை. அனிச்சையாக நாம் எந்த செயல் செய்தாலும் அது உள்மனதின் வழிகாட்டுதல்தான்.      திரும்பதிரும்பச் சொல்லப்பட்டவைகளை, தனக்கு தரப்பட்டவைகளை ஏற்றுக்கொள்வது என்கிற ஒரே நிலையில் அது பணிபுரிகிறது. ஆனால் இது மகத்தான சக்தி உடையது. எந்த எண்ணத்தை அதற்குத் திரும்பதிரும்ப கொடுக்கிறோமோ அதை ஆழ்மனக்கட்டளையாக மாற்றி ஏற்றுக்கொண்டு,அக்கட்டளைகளைப் புற உலகில் வேண்டியவைகளை ஈர்த்து, தனதாக்கிக் கொண்டு அவ் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. தன்னிடம் தரப்படுவதை, ஊட்டப்படுவதை ஒன்றுக்கு பத்தாக பெருக்கிக் காட்டுவதே இதன் இயல்பு.                     இதை பண்படுத்தப்பட்ட நிலமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு. நல்ல விசயங்களை ஆழ்மனதிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். உண்மையாகவும், விசுவாசமாகவும் கொடுக்கப்படவேண்டும் என்பதே முக்கியம். நினைத்தேன் நடக்கவில்லை என்றால் மேலோட்டமாக நினைத்துள்ளோம் என்பதே பொருள். நமக்கு நாமே எப்படி உண்மையாக, விசுவாசமாக இருக்கிறோமோ அதுபோல் எண்ணம் இயல்பானதாகி விடவேண்டும். நம்மை மாற்றியமைக்க ஒரே வழி, நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆழ்மனதை உற்ற நண்பனாக்கிக் கொள்வதுதான்.                      இப்போது சற்று சிந்தித்து பாருங்கள், நீங்கள் அடிக்கடி எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? எதைப் படிக்கிறீர்கள் ? அடிக்கடி என்னவிதமான எண்ணங்களை மனதில் சுழல விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? இவை உங்கள் வாழ்வில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன? இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா? சிந்தியுங்கள், வாழ்க்கை வளம் அடையும்.



No comments:

Post a Comment