Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, November 15, 2014

Bhagavath Gita - Dhyaana Shloka 2

13 இனி, வேறு சிலர் பகவத் கீதையை சந்நியாச நூலென்று கருதுகிறார்கள். அதாவது பெண்டாட்டி பிள்ளைகளைத் துறந்து, தலையை மொட்டையிட்டுக்கொண்டு ஆண்டியாய்த் திரிவோருக்கு எழுதப்பட்ட நூலென்று நினைக்கிறார்கள். இதைக் காட்டிலும் ஆச்சரியமான தப்பிதம் நாம் பார்த்ததே கிடையாது. கீதையைக் கேட்டவனும் சந்நியாசியல்லன், சொல்லியவனும் சந்நியாசியல்லன். இருவரும் பூமியாளும் மன்னர். குடும்ப வாழ்விலிருந்தோர். ‘ஆகா! அஃதெப்படிச் சொல்லலாம்? அர்ஜுனன் ஜீவாத்மாவென்றும், கண்ணன் பரமாத்மா வென்றும் மேலே கூறிவிட்டு, இங்கு அவர்களை உலகத்து மன்னர்களாக விவரிப்பதற்கு நியாயமென்ன?’ எனில்வேண்டா; அதனை விட்டுவிடுக.பரமாத்மா ஜீவாத்மா இருவருமே உலக காரியங்களில் தளைப்பட்டுத் தானிருக்கிறார்கள். கீர்த்தி பெற்ற வங்க கவியாகிய ஸ்ரீமான் ரவீந்திரநாத் தாகூர் கடவுளை நோக்கிஐயனே, நீயே சம்சார வலையில் அகப்பட்டிருக்கிறாயே? யான் இதினின்றும் விடுதலை வேண்டும் பேதைமையென்னே?’ என்று பாடியிருக்கிறார். சம்சார விருத்திகள் கடவுளுடைய விருத்திகள் செயலெல்லாம் சிவன் செயல். ‘அவனன்றி ஓரணுவு மசையாதெனும் பெரிய ஆப்தர் மொழியுண்டு கண்டீர்.
கீதையிலே பகவான் சொல்லுகிறான் – “அர்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனிச் செய்ய வேண்டியதென மிஞ்சி நிற்கும் செய்கையன்றும் எனக்குக் கிடையாது, ‘அடையத்தக்கது, ஆனால், என்னால் அடையப்படாததுஎனவொரு பேதமில்லை எனினும், நான் தொழில் செய்துகொண்டுதான் இருக்கிறேன்என.ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் – “நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும். அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண பூதனாகும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்துகொண்டேயிருக்கிறேன்என.கடவுள் ஓயாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான்.நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது. எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமாகிய ஜீவர்களும், மரம், செடி, கொடிகளாகிய உயிர்ப் பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக்கொண்டு, அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை பண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய் நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வதும் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத்தக்கது என்பதில் ஐயமில்லை.ஆனால், ‘கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடும் நன்றேஎன்று முன்னோர் குறிப்பிட்டபடி, கடும்புலி வாழும் காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிக கஷ்டமாக்கக்கூடிய மனிதரும் இருக்கக்கூடுமென்பது மெய்யே. ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது. பொது விதியை ஸ்தாபனம் செய்வதாகிய விதிவிலக்கென்றே கருதத்தகும்.கதையை வளர்த்துப் பயனில்லை. பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இஃதே ஸ்ரீபகவத் கீதையில் உபதேசிக்கிற கொள்கை.பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். ஜன சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.துறவிகளுக்குள்ளே பட்டினத்துப் பிள்ளை சிறந்தவரென்று தாயுமானவர் பாடியுள்ளார். அந்தப் பட்டினத்துப் பிள்ளை என்ன சொல்லுகிறார்?“அறந்தா னியற்றும் அவனிலுங் கோடி யதிகமில்லந் ,,துறந்தான் அவனிற் சதகோடி யுள்ளத் துறவுடையோன் மறந்தான் அறக்கற்று அறிவோ டிருந்துஇரு வாதனையற்று ,,இறந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியே கம்பனே!”,இல்லத் துறவைக் காட்டிலும் உள்ளத் துறவு சககோடி மடங்கு மேலென்று மேலே பட்டினத்தடிகள் சொல்லுகிறார். பட்டினத்தடிகள் தாம் துறவியாதலால் இங்ஙனம் கூறினார். உள்ளத் துறவு செய்தற்குரியதென்றும் மனைத் துறவு செய்யவொண்ணாததொரு பாவமென்றும் நான் சொல்லுகி றேன்.பாவமாவது யாது? புண்ணியமென்பதெதனை?தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்க தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும்.ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.‘இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை’ = கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலையன்று. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச் சிகரத்தையடுத்ததொரு முழையிலே கடவுளைக் காணமாட்டான்.கடவுள் எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலைச் சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்.
அங்கமே நின் வடிவமான சுகர்கூப்பிட நீ ,,எங்கும்ஏன்? ஏன்?’ என்ற தென்னே பராபரமே?”என்று தாயுமானவர் பாடியுள்ளார்.எங்ஙனமேனும், கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற பேராவலுடன், சுகப் பிரம்மரிஷி காட்டு வழியே, ‘கடவுளே, கடவுளேயோ!’ என்று கதறிக்கொண்டு போயினராம். அப்போது அங்கிருந்த மலை, சுனை, மேகம், நதி, ஓடை, மரம், செடி, கொடி, இலை, மலர், பறவை, விலங்குஎல்லாப் பொருள்களும்ஏன்? ஏன்?’ என்று கேட்டனவாம்.எங்கும் கடவுள் நிறைந்திருக்கிறார். ‘ஸர்வமிதம் ப்ரஹ்மஉலகமெல்லாம் கடவுள் மயம் என்று வேதம் சொல்லும் கொள்கையையே மேற்படி கதை விளக்குகிறது.இங்ஙனமாகையில் வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் பூஜித்துக்கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களினின்றும் விடுபட்டு, ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழியா? அல்லது, காட்டிலே போய், உடம்பை விழலாக வற்றடித்து மடித்தும், புலி, பாம்பு முதலிய துஷ்ட ஜந்துக்க ளுக்கிரையாய் மடிந்தும், கடவுளைத் தேட முயலுதல் சிறந்த உபாயமா?சூரியனைக் காணவில்லையென்று ஒருவன் தன் கைப்பெட்டிக்குள்ளே சோதனை போடுதலொக்குமன்றோ, ஒருவன் கடவுளைக் காணவேண்டிக் காடுகளிலும் இருண்ட முழைகளிலும் புகுந்து வாழ்தல்?‘இல்லற மல்லது நல்லறமில்லைதாயுமானஸ்வாமி, தாம் உயர்ந்த துறவு பூண்டிருந்த போதிலும், இதனைப் பின்வரும் பாடலில் அங்கீகாரம் செய்கிறார். அதாவது, முற்றிலும் அங்கீகாரம் புரியவில்லை. துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே சிறந்ததென்று அவர் தெளிவுபட உரைத்துவிட வில்லை. முக்திக்கு இரண்டும் சமசாதனங்கள் என்கிறார்.தாயுமானவர் சொல்லுகிறார்:“மத்த மதகரி முகிற்குல மென்ன நின்றிலகு ,வாயிலுடன் மதி யகடு தோய் ,மாடகூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த ,மணிமேடை யுச்சிமீது முத்தமிழ் முழக்கமுடன் முத்து நகையார்களொடு ,முத்து முத்தாய்க் குலாவி ,மோகத் திருந்து மென்? யோகத்தினிலைநின்று ,மூச்சைப் பிடித் தடக்கிக் ,கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்க மொடு ,கரடி நுழை நூழை கொண்ட ,கான மலை யுச்சியிற் குகை யூடிருந்து மென்? ,கர தலாமலக மென்ன ,சத்த மற மோன நிலை பெற்றவர்களுய்வர் காண்! ,ஜனகாதி துணிவி தன்றோ? ,சர்வபரிபூரண அகண்டதத்துவமான ,சச்சிதானந்த சிவமேஇதன் பொருள் யாதெனில், ‘மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில், சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ் பாட்டுக்கும் நாட்டியங்களுக்கு மிடையே முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி, யோக வாழ்விலே சென்று மூச்சை அடக்கிக்கொண்டு ஆயுதங்களைப் போல் வலிய நகங்களையுடைய புலி, சிங்கம், கரடி முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளுடைய காட்டுமலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம். ‘சலனமின்றி மனத்திலே சாந்தநிலை பெற்றோர் உய்வார்இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடிபாவது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே?’இங்ஙனம், இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல்லாமல், இரண்டும் ஒருங்கே மோக்ஷத்துக்குச் சமமான சாதனங்கள் என்று சொல்லியதே நமக்குப் பெரிய ஆறுதலாயிற்று. சம்சார சுகங்கள்கூடத் துன்பங்களுக்கே வழிகாட்டுகின்றன வென்றும், ஆகவே எல்லா வகையினும் இகலோக வாழ்க்கை துன்பத்தைத் தவிர வேறில்லை யென்றும் சொல்லிச் சில பிற்காலத்துத் துறவிகள், ‘வீட்டையும் பெண்டு பிள்ளைகளையும் துறந்து விட்ட மாத்திரத்தி லேயே ஒருவன் இகலோக வாழ்வைத் துறந்துவிட்டானாகிறான்என்ற பிழைக் கருத்து கொண்டவர்களாய், ஊர்தோறும் சுற்றிக்கொண்டு, வீடு, வாயில், சுற்றம், துணை, இனம் ஏதும் இல்லாதவர்களாய், பிச்சையெடுத்து வயிறு வளர்க்கி றார்கள். இக் கூட்டத்தாரின் வாழ்க்கை மகா பரிதாபமானது. இந்தக் கூட்டத்தாரில் இடையிடையே சிற்சில இடங்களில் சிற்சில மகான்கள் அளவற்ற பக்தியுடையோராகவும், வரம்பற்ற ஜீவ காருண்யமுடையோராகவும் தோன்றுகிறார்கள். மற்றும் அவர்களில் பெரும்பான்மையோருக்கு ஒரு விதமான முக்தித் தேட்டம் இருக்கத்தான் செய்கிறது.எனினும், இவர்களில் மிகப்பெரிய மகான்கள்கூட, உலகத்தில் மானுடர் எய்தற்குரியதாகிய பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தனர் எனக் கூறத்தகாது. வேதகாலத்தில் இந்தத் துறவு வழி ஹிந்துக்களுக்குள்ளே கிடையாது. வேத காலத்தில், சந்நியாசம் நமக்குள்ளே இருப்பதாக சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். வசிஷ்டர், வாமதேவர் முதலிய வேதரிஷிகள் அத்தனை பேரும் மணம் புரிந்துகொண்டு, மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கியாளும் பொருட்டாக, அக்காலத்து ரிஷிகள் பிரம்மசாரிகளாக இருந்து நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்த துண்டு. ஆனால், குறிப்பிட்ட காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்வாழ்க்கையுட் புகுதலே மகரிஷிக ளுக்குள்ள வழக்கமாக நடைபெற்றுவந்தது. மஹாபாரதத்திலும் மற்றப் பூர்வ பூராணங்களிலும் வேதரிஷிகளைப் பற்றிய கதைகளும் சரித்திரங்களும் ஒரே சித்தாந்தமாக வேத ரிஷிகளுக்குத் துறவறம் என்ற விஷயமே இன்னதென்று தெரியாது என்ற என் வார்த்தையை நிலைநிறுத்துகின்றன. மேலும் சுவாமி விவோகானந்தர் வேதத்தின் பிற்சேர்க்கைகளாகிய உபநிஷத்துக்களையே முக்கியமாகப் பயின்றவர். இந்த உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம் இவை வேத ரிஷிகளால் சமைபட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைபட்டன. ஸம்ஹிதைகள் என்று மந்திரங்கள் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால், பச்சை வேதமென்று மந்திரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியேயாம்.இந்த மந்திரங்கள் அல்லது ஸம்ஹிதைகள் பழைய மிகப்பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப் போலவும் இருக்கின்றன.ஆனால், இந்த உவமானம் முற்றிலும் பொருந்துவதாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி விளக்குமிடத்தே. ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம்அதாவது, ஸம்ஹிதை அல்லது மந்திரம் மாத்திரம்தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெருவியப்பு அன்றோ? வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது. உபநிஷத்தில் சில, மிகச் சில பகுதிகளில், விசேஷமாக வேத மந்திரங்களை மீட்டுமுரைக்குமிடத்தே, வேத பாஷையைக் காணலாம். மற்றபடி உபநிஷத்துக்கு முழுவதும் பிற்காலத்துப் பாஷையிலேயே சமைந்திருக்கிறது.இங்ஙனமிருக்கப் பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்றும்கருதுவாரா யினர்.இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு உண்டான காரணங்கள் பல. அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம், வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது. நிருத்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளே காணப்படும் வேத மந்திர விளக்கங்களையும் சுற்ற பின்னரே, ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல் சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்டமான நூல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வோர் மிக மிகச் சிலரேயாவார். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் சாயணரென்ற வித்தியாரண்ய சங்கராச்சாரியரின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருத்தத்தையுமே ஆதாரமாகவுடையது.பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப் பொருளுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருத்தத்திலே என்றால் பெரும்பாலும் வேதப் பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருள்களே பிழைபட்டதாகவும் இருக்கிறது.வேத மந்திரங்களுக்குச் சரியான அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டுமென்று தற்காலத்திய ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் அநேக பண்டிதர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில வருஷங்களுக்கு முன்னே காலஞ்சென்றவராகிய சுவாமி தயாநந்த சரஸ்வதி வேதத்துக்கு தாம் எப்போதுமில்லாத புதிய அர்த்தமொன்று கற்பித்து அதற்கிணங்கஆரிய சாமஜம்என்ற புதுமதக் கொள்கையன்று ஸ்தாபித்தார்.ஆனால், சிற்சில பதங்களுக்கு சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும், பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹிந்து வைதி கர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டி ருக்கும் சாயணபாஷ்யமே பூர்வ வியாக்கியானங்களுக்கு விரோதமில்லாமலும், தெளிவாகவும், உண்மையாகவும் அமைந்திருக்கிறது.சாயண பாஷ்யமில்லாவிட்டால், வேதம் ஹிந்து ஜாதிக்குப் பயன்படாமலே போயிருக்கும். சரியான சமயத்தில் சாயணர் வேதங்களுக்கு பாஷ்யம் எழுதி வைத்தார். எனினும், சாயணாச்சாரியர்கூடத் தம்முடைய குருக்களைப் போலவே வேதம் கர்ம நூலென்று கருதிவிட்டார். அதனால் அது ஹிந்து மதத்துக்கு ஆதிவேர் என்பதை இந்த ஆசாரியர்களால் மறுக்க முடியாவிடினும், அதற்கு ஞானநெறியில் எவ்விதப் பிரமாணமுமில்லை யென்று அவர்கள் தவறாக எண்ணும்படி நேர்ந்துவிட்டது. ஏனென்றால், வேதத்தைக் கர்மங்களைப் போற்றும் நூலாகக் கருதிய இவர்கள் கர்மங்களென்ற இடத்தே யாகங்களைக் கருதிக் கூறினர். அதாவது, யாகங்களுக்கு மாத்திரம் உபயோகப்படும் நூலாக எண்ணி, கர்மங்கள் என்றால் யாகங்களெனப் பொருள்கொண்டு இவர்கள் வேதத்தைக் கர்ம காண்டம் என்றா ர்கள்.மேற்படி யாகங்களே பெரும்பாலும் பல வதைகளும், குதிரைக் கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாப் பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோக்ஷத்துக்கு வழியென்ற போலி வைதி கரைப் பழிசூட்டி, அந்தக் கொலைச் சடங்குளால் மனிதன் நரகத்துக்குப் போவான் என்பதை நிலை நாட்டிய புத்த பகவானும், அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும் இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத் திவிட்டார்கள். அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்று ஹிந்து தர்மத்தை நிலை நாட்ட சங்கராசாரியர் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துக்களைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் செய்து கொண்டார். ஷண்மத ஸ்தாபகராகியராய், சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமான ஞானத் திறமை யாலும் கல்வி வலிமையினாலும் மீள உயிர்ப்பித்து அதற்கு அழியாத சக்தி ஏற்படுத்திவிட்டுப் போனார். தம்மாலே வெட்டுண்ட புத்த மதம் என்ற விருக்ஷத்தின் கிளைகள் பலவற்றை ஹிந்து தர்மமாகிய மரத்துக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்படி எருவாகச் செய்து போட்டார். இங்ஙனம் புத்த மதக் கொள்கைகள் பலவற்றை ஹிந்து தர்மத்துக்கு ஆதரமாகச் சேர்த்துக்கொண்டது பற்றியே, சங்கராச்சாரியாரை அவருடைய எதிர்க்கட்சியார் பலர்பிரசன்ன பௌத்தர்’ (மறைவுபட்ட பௌத்தர்) என்று சொன்னார்கள். எனினும் அவர் ஹிந்து தர்மத்துக்குச் செய்த பேருபகாரத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலோர் அவரைப் பரமசிவனின் அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள்.பௌத்த மதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று. அதற்கு முன் அங்கங்கே சில மனிதர் துறவிகளாகவும் சில இடங்களில் சிலர் துறவிக் கூட்டத்தவராகவும் இருந்தனர்.துறவிகள் மடங்களை இத்தனை தாராளமாகவும் இத்தனை வலிமையுடையனவாகவும் செய்ய வழி காட்டியது பௌத்த மதம். எங்கே பார்த்தாலும் இந்தியாவை அம்மதம் ஒரே சந்நியாசி வெள்ளமாகச் சமைத்துவிட்டது. பாரத தேசத்தை அந்த மதம் ஒரு பெரிய மடமாக்கி வைத்துவிட்டது. ராஜா, மந்திரி, குடி, படை எல்லாம் மடத்துக்குச் சார்பிடங்கள். துறவிகளுக்குச் சரியான போஜனம் முதலிய உபகாரங்கள் நடத்துவதே மனித நாகரிகத்தின் உயர் நோக்கமாக கருதப்பட்டது. துறவிகள்தாம் முக்கியமான ஜனங்கள்! மற்ற ஜனங்களெல்லாரும் அவர்களுக்குப் பரிவாரம்! மடந்தான் பிரதானம். ராஜ்யம் அதற்குச் சாதனம்.பாரத தேசத்தில் புத்த மதம் ஜீவகாருண்யம், சர்வ ஜன சமத்துவம் என்ற இரு தர்மங்களையும் நெடுந்தூரம் ஊன்றும்படி செய்தது. ஆனால், உலக வாழ்க்கையாகிய ஜகத்தில் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்து உலகமெல்லாம் பொய் மயம் என்றும், துக்க மயம் என்றும் பிதற்றிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்கு உண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித் தள்ளிவிட்டது. பின்னிட்டுப் புத்த தர்மத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும் புத்த மதம் இங்ஙனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது. பிற்காலத்தில் பௌத்த வழியைத் தழுவி, பலமான மட ஸ்தாபனங்கள் செய்த ரோமன் கத்தோலிக்க மதத்திலும் குருக்களுடைய சக்தி மிஞ்சிப் போய் மனித நாகரிகத்துக்குப் பேராபத்து விளையும் போலிருந்தது. அதை ஐரோப்பிய தேசத்தார்கள் பல புரட்சிகளாலும், பெருங் கலகங்களாலும், யுத்தங்களாலும் எதிர்த்து வென்றனர். அதுமுதல் ஐரோப்பாவில் மடாதிபதிகளுக்கு ராஜ்யத்தின் மீதிருந்த செல்வாக்கும் அதிகாரமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றன. இது நிற்க.ஹிந்து தர்மம் புத்த மதத்தை ஜெயிக்கவில்லை யென்றும், பௌத்த மதமே ஹிந்து மதத்தை ஜெயித்து விட்டதாகவும் சில மாதங்கள் முன்பு, காரைக்குடியில் ஒரு நண்பர் என்னிடம் தாக்கினார். சரித்திரத்திலும் பிரத்யக்ஷத்திலும் ஐயமற புத்த மதமழிந்து, ஹிந்து மதம் வெற்றி பெற்று நிற்கும் செய்தி விளங்குகையில், பட்டப் பகலை இரவென்று கூறுதல் போல், மேற்படி காரைக்குடி நண்பர் சொல்லியது பச்சைப் பொய்யை இங்கெடுத்துச் சொல்லவந்த முகாந்தரம் யாதெனில் :- ‘அவர் சொல்லியது பச்சைப் பொய்யன்று. அதில் சிறிதளவு உண்மையும் கலந்திருக்கிறது. எங்ஙனமெனில், பௌத்த மார்க்கத்தை களைத்தெறிந்து மிஞ்சி நின்ற ஹிந்து மதம் பல அம்சங்களில் பௌத்த மதக் கொள்கைகளை முழுமையாகவும் பல அம்சங்களிற் சற்றே மாற்றியும் தன்னுள்ளே சேர்த்துக் கொண்டுவிட்டது. ஆகவே பௌத்த மதம் இந்நாட்டில் இருந்த இடம் தடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாய் மடிந்து போகவில்லை. அதன் கொள்கைகளில் பல ஹிந்து மதக் கொள்கைகளுடன் கலந்து இந்நாட்டில் வழங்கி வருகின்றன.’இந்தச் செய்தியையே அந்தக் காரைக்குடி நண்பர் மிகவும் அதிச யோகதியாக மேற்கண்டவாறு பச்சைப் பொய் வடிவத்தில் கூறினார். புனர் ஜன்மக் கொள்கை, புலால் மறுத்தல்இவை இரண்டுமே பௌத்த மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்குள் நுழைந்த கொள்கைகளில் முக்கியமானவை என்று கருதப்படுகின்றன. ஆனால், இக்கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்துதான் ஹிந்து மதத்துக்குள் புகுந்தனவென்று கூறுவதற்குப் பலமான ஆதாரங்களில்லை. புனர் ஜன்மக் கொள்கை பூர்வ புராணங்களிலேயே இருந்தது. பௌத்த மதம் அக்கொள்கையை அறிஞர் கண்டு நகைக்கத்தக்க படியாக, வரம்பு மீறி வற்புறுத்திற்று.பிற்கால ஹிந்துமதத்தில் அக்கொள்கை அளவுக்கு மிஞ்சி, நிரார்த்தகமாக ஏறிப்போய் இப்போது ஹிந்து நம்பிக்கையிலுள்ள குறைகளிலொன்றாக இயல்கிறது. சாதாரணமாக ஒருவனுக்குத் தலை நோவு வந்தாலுங்கூட, அதற்குக் காரணம்முதல்நாள் பசியில்லாமல் உண்டதோ, அளவு மீறித் தூக்கம் விழித்ததோ, மிகக் குளிர்ந்த அல்லது மிக அசுத்தமான நீரில் ஸ்நானம் செய்ததோஎன்பதை ஆராயும் முன்பாகவே அது பூர்வ ஜன்மத்தின் கர்மப் பயனென்று ஹிந்துக்களிலே பாமரர் கருதக்கூடிய நிலைமை வந்துவிட்டது. உலகத்து வியாபார நிலைமையையும், பொருள் வழங்கும் முறைகளையும் மனித தந்திரத்தால் மாற்றி விடலாம் என்பதும்,அங்ஙனம் மாற்றுமிடத்தே செல்வ மிகுதியாலும் செல்வக் குறைவாலும் மனிதர்களுக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும், அவமானங்களையும், பசிகளையும், மரணங்களையும் நீக்கிவிடக்கூடும் என்பதும் தற்காலத்து ஹிந்துக்களிலே பலருக்கு தோன்றவே இடமில்லை. பிறர் சொல்லிய போதிலும் அது அவர்களுக்கு அர்த்தமாவது சிரமம். ஏனென்றால், மண விஷயத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும், தார தம்மியங்களையும், பாரபக்ஷங்களையும் கண்டு, அதற்கு நிவக்ஷணம் தேட வழி தெரியாத இடத்திலேதான், பெரும்பாலும் இந்த பூர்வ ஜன்ம கர்ம விஷயம் விசேஷமாக பிரஸ்தாபத்துக்கு வருகிறது. அற்பாயுள், நீண்ட ஆயுள், நோய், நோயின்மை, அழகு, அழகின்மை, பாடத் தெரிதல், அது தெரியாமை, படிப்புத் தெரிதல், அது தெரியாமை முதலிய எல்லாப் பேதங்களுக்கும் பூர்வ ஜன்மத்தின் புண்ய பாவச் செயல்களையே முகாந்தரமாகக் காட்டினார்களெனினும், பண விஷயமான வேறுபாடுகளே இவையெல்லாவற்றைக் காட்டிலும் மனிதர்களுக்கு உள்ளக் கொதிப்பையும் நம்பிக்கைக் கேட்டையும் விளைத்து, அவர்களை இந்த ஜன்மத்தின் துக்கங்களுக்குப் பூர்வ ஜன்மத்திலே காரணம் தேடுவதும், அடுத்த ஜன்மத்திலே பரிகாரந் தேடுவதுமாகிய விநோதத் தொழிலிலே தூண்டின.எனவே, இந்த பூர்வ ஜன்ம சித்தாந்தத்தைப் பௌத்த மதம் நமது தேசத்தில் ஊர்ஜிதப்படுத்தியது பற்றி நாம் அதற்கு அதிக நன்றி செலுத்த இடமில்லை.பௌத்த மதத்தால் நாம் அடைந்த நன்மைகளிலே உண்மையான நன்மை ஒன்றுதான். அதாவது, விக்கிரக ஆராதனையை பௌத்த மதம் ஊர்ஜிதப்படுத்திற்று. புதிதாக உண்டாக்கவில்லை. ஏற்கனவேயிருந்த வழக்கத்தை மிகவும் விஸ்தாரமாக்கி ஊர்ஜிதப்படுத்திற்று. பௌத்தர்கள் மனிதருக்கேற்படுத்திய சிலைகளை நம்மவர் தம்முடைய அற்புத ஞான சக்தியின் விரிவாலும் கற்பனைச் சக்தியின் தெளிவாலும் தேவர்களுக்குச் சமைத்துக் கொண்டனர். தேவர்களைச் சிலைகளில் வைத்து வணங்குதல் முக்திக்கு மகத்தான சாதனங்களிலொன்றாம். ஆனால் உண்மையான பக்தியுடன் வணங்கவேண்டும்.இனி, புத்த மதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எழுப்பிவிட்டது. உபநிஷத்துக்களிலும் வேதத்திலும்மாயாஎன்ற சொல் பராசக்தியை குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய்யென்றதொரு வாதம் உண்டாயிற்று. இதனால், ஜகத் பொய்; தேவர்கள் பொய்; சூரிய நக்ஷத்திராதிகள் பொய்; மனம் பொய்; சைதந்யம் மாத்திரம் மெய்; ஆதலால், இந்த உலகத்துக் கடமைகளெல்லாம் எறிந்துவிடத் தக்கன; இதன் இன்பங்களெல்லாம் துறந்துவிடத் தக்கன என்றதொரு வாதம் எழுந்தது. ‘இவ்வுலக இன்பங்களெல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம்; இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையும் தேடப் புகுதல் மடமையாகும். எனவே எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமாகும்என்ற கட்சி ஏற்பட்டது.ஆனால், இவர்கள் எல்லா இன்பங்களையுந் துறந்து விட்டதாக நடிக்கிறார்களேயன்றி, இவர்கள் அங்ஙனம் உண்மையிலே துறக்கவில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை, கடமைகளைத் துறந்துவிட்டுச் சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம். அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித் தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்க வில்லை. உணவின்பத்தைத் துறந்துவிட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையி ன்பத்தை இவர்கள் துறக்கவில்லை. ஸ்நானவின்பத்தைத் துறக்கவில்லை. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வி யின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின் பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் முக்கியஸ்தர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால்கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.                                                               தத் த்வம் அஸி (ஸாம வேதம்: சாந்தோக்ய உபநிடதம், 6-9-4);'தத்': பெயரோ உருவமோ இல்லாமல் இரண்டற்ற ஒன்றாக படைப்புக்கு முன்பே இருந்த அது இப்பொழுதும் அப்படியே உள்ளது. அது தான் 'அது' என்று பொருள் படைத்த 'தத்'.,'த்வம்': கேட்பவனின் தேகத்திற்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்டதாய் உள்ளே விளங்கும் உண்மைப்பொருள்.,'அஸி' : 'தத்' எனும் சொல்லால் குறிக்கப்படுவதும் 'த்வம்' என்னும் சொல்லால் குறிக்கப்படுவதும் ஒன்றே என்று பொருள்படும் வினைச்சொல்.                                                                                                                      
அயம் ஆத்மா பிரம்ம (அதர்வ வேதம்: மாண்டூக்ய உபநிடதம், 2);'அயம்' : அகராதியிலுள்ள பொருள் 'இவன்'.;'அயம் ஆத்மா': இங்கு, தனக்குத்தானே, யாரும் சொல்லவேண்டியிராமலே, உள்ளுறைபவனாக விளங்கும் ஆன்மா.அதனாலேயே 'இந்த ஆன்மா' என்று குறிக்கப்படுகிறது. 'நான்' என்ற அகந்தைக்கு அடித்தளமாக வியாபித்துள்ளவன்.,'பிரம்ம': பார்க்கப்படும் உலகனைத்தும் வியாபித்துள்ள தத்துவம்.,'அயம் ஆத்மா பிரம்ம': 'அந்த' பிரம்மமும் 'இந்த' ஆன்மாவும் ஒன்றே.                                                                                                                
சொற்பொருளும் உட்பொருளும்; மஹாவாக்கியத்தின் பொருளை உணர சொற்களின் 'சொற்பொருள்' (வாச்சியார்த்தம்), 'உட்பொருள்' (லக்ஷ்யார்த்தம்) ஆகிய இரண்டு வகையான பொருளையும் கவனிக்கவேண்டும். த்வம் என்ற சொல்லின் சொற்பொருள் ஐம்பூதங்களாலான உடலும் அதன் புலன் முதலியவைகளும். உட்பொருளோவெனின், உடல், மனது, புலன்கள் இவைகளுக்கபாற்பட்ட ஜீவன். தத் என்ற சொல்லின் சொற்பொருள் உலகை ஆளும் கடவுள்; உட்பொருளோ ஸச்சிதானந்த பிரம்மம். அஸி எனும் சொல், உட்பொருளில் இவையிரண்டும் ஒன்றே என்பதாகும்.                                                                                                                           
சுக பிரம்மம்;பரமசிவனாலேயே பிரம்மோபதேசம் செய்யப்பட்ட சுகர் தன்னுடையது, தான், என்ற எதுவுமில்லாது, துறந்தெழுந்து, கடவுளை வணங்கி உலகுடன் இரண்டறக்கலந்து மனதளவில் ஐக்கியமாகிவிட்டார். பிரம்மம் என்ற அமுதக்கடலில் மிதப்பவர்போல் துறவியாகச்செல்லும் அவரைப்பார்த்து அவர் தந்தை வியாசர் அவரைப்பின்தொடர்ந்து, பிள்ளையின் பிரிவாற்றாமையினால் 'மகனே' என்று கூவினார். அப்பொழுது அசைவது அசையாதது யாவும், உலகனைத்தும், 'ஏன், ஏன்' என்று எதிரொலி செய்தது. அவ்வொலியைக் கேட்டு வியாசர் தன் புத்திரனின் பிரம்மபாவத்தை உணர்ந்து அதிசயித்தார்.
பொன்மொழி;வேதத்தின் ஆதியில் விளங்கும் ஒலி என எது கூறப்படுகிறதோ, வேதாந்தத்தில் நிலைபெற்றது எதுவோ, பிரகிருதி ஒடுங்குமிடம் எதுவோ அந்தப் பரம்பொருள் மகேசுவரன்
GIta Mahatmiyam - 1       ஸ்ரீ கணேஷாய நம: கோபால கிருஷ்ணாய நம:                                                                                       1. பூமி சொன்னது: பகவானே! உயர்ந்த தலைவனேபிராரப்த கர்மா ஆகிய சம்சார ஜீவனத்தில் மூழ்கியுள்ள ஒருவனிடம் எவ்வாறு சலனமற்ற பக்தி தோன்ற முடியும் பிரபுவே?                                                                                                  2.ஸ்ரீ விஷ்ணு சொன்னதுசம்சார ஜீவனத்தில் ஒருவன் மூழ்கி இருந்தாலும், கீதையை ஒழுங்காக பாராயணம் செய்பவ னால் முக்தி அடைய முடியும். அவன் இந்த உலகில் மிகுந்த சந்தோசம் உடையவனாக இருப்பான். எந்த கர்ம வினையும் அவனை அண்டாது.                                                                                                                                                   3.தாமரை இலையை எப்படி நீரினால் கறைப் படுத்த முடியாதோ, அதைப் போல கீதையை ஒழுங்காக பாராயணம் செய்யும் ஒருவனை எந்தப் பாவமும் தீண்டாது.                                                                                                                           4.எங்கெல்லாம் கீதை வைக்கப் பட்டுள்ளதோ , எங்கெல்லாம் கீதை படிக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் பிரயாகை போன்ற எல்லா புண்ணிய தலங்களும் உறையும்.                                                                                                                          5.எல்லா தேவர்களும், முனிவர்களும், யோகிகளும், தேவ சர்ப்பங்களும், கோபாலர்களும், ஸ்ரீ கிருஷ்ணனின் நண்பர்களும், பக்தைகளுமான கோபிகைகளும், நாரதர், உத்தவர் போன்ற மற்றவரும் குடி இருப்பர்.                                         6.எங்கெல்லாம் கீதை பாராயணம் செய்யப் படுகிறதோ அங்கெல்லாம் உதவி உடனே கிடைக்கும். பூமியே! எங்கெல்லாம் கீதை கேட்கப்படுகிறதோ, கற்றுக் கொடுக்கப்படுகிறதோ, விவாதிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் நான் எப்பொழுதும் இருப்பேன்.                                                                                                                                                              7.நான் கீதையில் சரண் அடைகிறேன். கீதையே எனது சிறந்த இருப்பிடம்.கீதையின் ஞானத்தைக் கொண்டே, மூவுலகையும் நான் காக்கின்றேன்.                                                                                                                                              8. கீதை என்னுடைய உயர்ந்த கல்வி. அதுவே எந்த சந்தேகமும் இல்லாமல் பிரம்மத்தின் ரூபம் ஆகும்,எப்பொழுதும் நிலைத்திருப்பதுபிரணவ மந்திரம் ஆகிய ஓம் என்னும் அரை மாத்திரை சொல் (இலக்கணத்தில் உள்ள அரை மாத்திரை பிரயோகம்), பரமாத்மாவின் குறை இல்லாத சிறப்பு.                                                                                                                  9.இது எல்லாம் அறிந்த பூஜ்ய கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரால் அவர் வாயால் அர்ஜுனனுக்குச் சொல்லப்பட்டது. இது வேதத்தின் சாரத்தைக் கொண்டுள்ளது. பரம ஆனந்தத்தைத் தரக் கூடியது.கீதை ஆனது வேதம் மற்றும் உபநிஷத்தின் சாரத்தைக் கொண்டுள்ளது. எனவே இது எல்லா வயதினர்க்கும், எல்லா குணம் உடையவர்களுக்கும் உகந்த பொது மறை ஆகும்.                                                                                                                                                                                     10. எவர் ஒருவர் பகவத் கீதையில் உள்ள பதினெட்டு அத்தியாயங்களையும் தினமும் பவித்ரமான, சலனமற்ற மனதுடன் பாராயணம் செய்கின்றாரோ, அவர் ஞானத்தில் பூர்ணம் அடைந்து பரம பதம் ஆகிய உயர்ந்த நிலையை அடைவார்.             11.முழு பாராயணம் செய்ய முடியாவிட்டாலும், பாதி படித்தாலும் அவர் கோ தானம் செய்த பலனை அடைவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.                                                                                                                                                      GIta Mahatmiyam - 2
12..மூன்றில் ஒரு பகுதியைப் பாராயணம் செய்யும் ஒருவருக்கு புனித நதியாம் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.ஆறில் ஒரு பகுதியைப் பாராயணம் செய்பவருக்கு சோம யாகம் செய்த பலன் கிட்டும்.
13. ஒரு அத்தியாயத்தைப் பரம பக்தியோடும், சிரத்தையோடும் படிப்பவர்கள், ருத்ர லோகத்தை அடைந்து, பரமசிவ னின் சேவகனாகிய கணம் என்ற பதவியைப் பெற்று, அங்கே பல்லாண்டு வாழ்வார்கள்.
14..பூமியே! ஒருவர் தினமும் ஒரு அத்தியாயம் படித்தாலோ, அல்லது ஒரு ஸ்லோகம் படித்தாலோ அவர் மந்வ ந்திரம் காலத்தின் (71 மஹா யுகங்கள் / 3084488000 வருடங்கள் ) இறுதி வரை சரீர உடலுடன் இருப்பார்.
15-16.கீதையின் பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று அல்லது பாதி ஸ்லோகத்தை உபாசிப்பவர்கள் சந்திர லோகத்தை அடைந்து அங்கே பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்வார்கள். கீதையை நித்ய பாராயணம் செய்யும் வழக்கம் உடையவர்கள் இறந்த பிறகும் மற்றொரு மானிடப் பிறவி எடுத்து மீண்டும் ஜனிப்பார்கள்.
17.கீதையை மீண்டும், மீண்டும் பாராயணம் செய்வதன் மூலம் ஒருவர் மோக்ஷம் அடைகிறார். இறக்கும் தருவாயில் கீதா என்ற வார்த்தையை உச்சரிப்பதால் ஒருவர் மோக்ஷத்தை அடைகிறார்.
18. ஒருவர் பாவத்தில் மூழ்கி இருந்தாலும், கீதையின் சாராம்சத்தைக் கேட்பதற்கு  உரிய முயற்சியை எடுப்பவர்கள் வைகுண்டம் சென்று விஷ்ணுவுடன் மகிழ்ந்து இருப்பார்கள்.
19. கீதையின் பொருளைக் குறித்து தினமும் தியானிப்பவர்கள், பல சத்காரியங்கள் செய்து மரணத்தின் பின்னே சிறந்த கதியை (பரமபதம்) அடைவார்கள். அப்படிப்பட்ட ஒருவரையே உண்மையான ஜீவன் முக்தாவாகக் கருத வேண்டும்
20. இவ்வுலகில் கீதையில் சரண் அடைந்த பலர், ஜனகரைப்* போன்ற மன்னர்களும், மற்றவர்களும் உயர்ந்த கதியான பரமபதம் அடைந்து, எல்லாப் பாவங்களில் இருந்தும் தங்களைச் சுத்தப் படுத்திக் கொண்டார்கள்.(*  ஜனகரின் காலம் த்ரேதா யுகம். பகவத் கீதையின் காலமோ த்வாபர யுகம். இங்கே குறிக்கப்படுவது அஷ்டவக்ர கீதை ஆகும். அஷ்டவக்ரர் (உடலில் அஷ்டகோணலுடன் பிறந்தவர்), பாண்டித்தியம் பெற்று, ஜனக மகாராஜாவிற்கு உபதேசம் செய்தார். அது அஷ்ட வக்ர கீதை என்று அழைக்கப் படுகிறது.
21.பகவத் கீதையை பாராயணம் செய்த பின்னர் இந்த மகாத்மியத்தை ஒருவர் படிக்காமல் விட்டால், அதன் பலனை ஒருவர் தொலைக்கின்றார். பாராயணம் செய்த முயற்சி மட்டுமே இருக்கும். இது பக்தர்களின் மனதுள் ஒரு பக்தி மற்றும் ஷ்ரத்தையை விதைக்கவே. பகவத் கீதை கடவுளின் வாக்கியம் - வெறும் தத்துவ நூல் அல்ல. எனவே இதைப் பாராயணம் செய்யும் போது தகுந்த பக்தியும், கவனமும் அவசியம்.
22. கீதா மஹாத்மியம் உடன் கீதையைப் பாராயணம் செய்யும் ஒருவர், மேலே குறிப்பிட்டுள்ள பலன்களை அடைந்து, பிற வழிகளில் அடைய முடியாத நற் கதியைப் பெறுவார்.
23. சுதர் சொன்னது:
என்றும் நிலைத்து இருக்கக் கூடிய, என்னால் உரைக்கப்பட்ட இந்த கீதா மஹாத்மியத்தை கீதையைப் பாராயணம் செய்த பின்னர் படிக்க வேண்டும். அதன் மூலம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்களை அடையலாம்.
இதி ஸ்ரீ வராஹ புராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்  ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ஸ்ரீ கீதா மஹாத்மியம்  ; ஸ்ரீ கணேஷாய நம: கோபால கிருஷ்ணாய நம:
தரை சொன்னது:
பகவானே, பரமேசா, பிராரப்த கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் மாற்று அறியாத பக்தியைப் பெறுவது எங்ஙனம்?
ஸ்ரீ விஷ்ணு சொன்னது:
கீதா அப்பியாசத்தில் ஒருவன் சதா மகிழ்வடைந்திருப்பானாகில், பிராரப்த கர்மத்தில் கட்டுண்டு கிடக்கினும், அவனே முக்தன், இவ்வுலகிலேயே சுகத்தை அனுபவிப்பவனும் அவனே. புதிய கர்மத்தில் அவன் தேய்வுறான்.கீதா தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மஹாபாபமும் தீண்டுவது கிடையாது. தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாதிருப்பது போன்று அவன் இருக்கி றான்.கீதா புஸ்தகம் எங்கு இருக்கிறதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ அங்குப் புண்ணியதீர்த்தங்களனை த்தும், பிர யாகைகளும் மற்றும் உள்ளவைகளும் வந்து கூடுகின்றன.தேவர்கள் அனைவரும், ரிஷிகளும், யோகிகளும், பன்னகர்களும், கோபாலர்களும், கோபிகளும், நாரதரும், உத்தவரும், அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்கு உளர்.எங்கு கீதை வாசி க்கப்படுகிறதோ அங்கு சீக்கிரம் சஹாயம் வருகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ, ஓதப்படு கிறதோ, புகட்டவும் கேட்கவும் செய்யப்படுகிறதோ, ஆங்கு நிலமகளே கேள், நான் நிச்சயமாக ஸதா வாசம் செய்கிறேன்.கீதை என்னும் புகலிடத் தில் நான் வீற்றிருக்கிறேன். எனக்கு உத்தமமான இருப்பிடம் கீதை. கீதாஞானத்தில் நின்றுகொண்டு மூவுலகங்களையும் நான் பரிபாலிக்கிறேன்.எனது பரம வித்தையாயிருப்பது கீதை; அது பிரம்ம ரூபம் என்பதில் சம்சயமில்லை. அர்த்த மாத்திரையாய், அக்ஷரமாய், நித்தியமாய், எனது சொரூபத்தைச் சொல்லால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உளது.மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாயுள்ள இந்த ஞானம் சிதானந்த கிருஷ்ணனால் அர்ஜு னனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது. உறுதியான உள்ளத்துடன் எம்மனிதன் நாள்தோறும் பதினெட்டு அத்தியாயங் களையும் ஓதுகின்றானோ, அவன் ஞான சித்தியடைந்து பிறகு பரமபதத்தைச் சேருகிறான்.முழுதும் படனம் செய்ய இயலாவிட் டால் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்கின்றவன் கோதானத்தினின்று விளையும் புண்ணியத்தைப் பெறுகிறான். அதில் சந்தேகமில்லை.மூன்றில் ஒரு பகுதி படிக்கிறவன் கங்காஸ்நான பலனை அடைகிறான். ஆறில் ஒரு பங்கு படிப்பவன் சோமயாகப் பலனைப் பெறுகிறான்.பக்தியுடன் ஓர் அத்தியாயமாவது நித்தியம் படிப்பவன் ருத்திரலோகத்தையடைந்து அவ னுடைய கணங்களில் ஒருவனாக அங்கு நெடிது வாழ்கிறான். வசுந்தரே, ஒரு அத்தியாயத்தின் அல்லது ஒரு சுலோகத்தின் காற் பங்கு நாள்தோறும் படிப்பவன் ஒரு மன்வந்தரம் முடியும் வரையில் மானுடப்பிறப்பு எடுக்கிறான்.கீதையினுடைய பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ, பாதியோ ஸ்லோகத்தைப் படனம் பண்ணுபவன் சந்திரலோகத்தில் பதினா யிரம் வருஷங்கள் வசிக்கிறான். கீதையைப் படித்துக்கொண்டிருக்கும் போது உயிர் துறப்பவன் மனுஷ்ய லோகத்தை அடை கிறான்.கீதா அப்பியாசம் செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடை கிறான். மரணமடையும் போது கீதை என்று உச்சரிக்கும் மனிதன் வீடுபெறுவான்.மஹாபாவம் செய்தவனும் கீதையின் அர்த்தத்தைக் கேட்பதில்விருப்பமுடைய வனாயிரு ப்பானாகில் அவன் வைகுண்டம் ஏகி விஷ்ணுவுடன் பேரானந்தம் திளைப்பான்.ஓயாது கர்மம் செய்துகொண்டிருப்பதற்கு இடையில் யார் கீதையின் அர்த்தத்தை இடையறாது எண்ணிக் கொண்டிருக்கிறானோ அவனை ஜீவன் முக்தன் என்று கருத வேண்டும். உடல் அழியும்போது அவன் பரமபதத்தை அடைகிறான்.இந்த கீதையைத் துணையாய்க்கொண்டு ஜனகன் போன்ற பூபாலர்கள் பலர் இவ்வுலகில் குறைகள் நீங்கப்பெற்றவராயினர். பின்பு பரமபதத்தையும் பெற்றனர் என்று பாடப்பட்டிருக் கிறது. கீதையை வாசித்தான பிறகு, இங்கு இயம்பியபடி அதன் மஹாத்மியத்தை வாசிக்காதவனுக்கு வாசிப்பு வீண் போனதா கும்; முயற்சியும் வீண்போனதேயாம்.இந்த மாஹாத்மியத்தோடு கூடிய கீதா அப்பியாசத்தை யார் செய்கின்றானோ அவன் ஈண்டு இயம்பியுள்ள பலனைப் பெறுகின்றான். கிடைப்பதற்கு அரிய உயர்கதியும் அவனுக்குக் கிடைக்கிறது.
சூதர் சொன்னது:
கீதையை வாசித்தான பிறகு என்னால் இயம்பப்பட்ட இந்த கீதா மாஹாத்மியத்தை யார் வாசிக்கிறானோ அவன் இதில் விளக் கியுள்ள பலனைப் பெறுவான்.கீதா மாஹாத்மியத்தில் பகர்ந்துள்ள இக்கருத்துக்கள் ஒரு விதத்தில் மிகைப்பட்டவை களாகும். ஆகவே அவைகளை இருக்கிறபடி வாச்சியார்த்தம் பண்ணலாகாது. தாய் ஒருத்தி குழந்தைக்கு உணவூட்டுகிறாள். விளையாட் டில் கருத்துடைய குழந்தையோ ஆகாரம் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறது. உணவு உண்டால் விளையாட்டுச் சாமான்கள் சில வாங்கித்தருவதாகத் தாய் இயம்புகிறாள். உண்மையில் விளையாட்டுச் சாமான்களை விடக் குழந்தைக்கு அதிகம் பயன்படு வது ஆகாரமே. கீதா மாஹாத்மியம் அங்ஙனம் சிறிய பொருள்களில் ஆசை காட்டிப் பெரிய பொருளை மறைமுகமாக வழங்க முயலுகிறது. இனி, உணவைச் சிறிது சிறிதாக நாள்தோறும் ஏற்று வந்தால் அது நன்கு ஜீரணமாகி உடல்மயமாய் மாறியமை கிறது. அங்ஙனம் கீதையின் கோட்பாடுகளில் அப்போதைக்கப்போது ஏற்கும் சிறுபகுதிகள் நாளடைவில் நிறைஞானமாகவும் யோகமாகவும் சாதகனுக்கு அமைவனவாகின்றன. அதன் மூலம் அவன் இகலோகத்தில் சாதிக்க வேண்டியவைகளை யெல்லாம் நன்கு சாதித்து விட்டுப் பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வல்லவனாவான்.
இதி ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்
வராஹ புராணத்தில் கீதாமாஹாத்மியம் ஸம்பூரணம்.

கிருஷ்ணார்ப்பணம்.    ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். அக்ஷரம் ப்ரஹ்ம பரமம்                                                                  
ப்ரஹ்மம் என்று சொல்வதன் பொருள் மிக உயர்ந்தது. அழிவற்றது. அந்த பிரும்மம் அதனுடைய ஸ்வரூபம அதாவது ஜீவாத்மா. அத்யாத்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. சராசரங்களின் இருப்பை உண்டுபண்ணுகிற த்யாகம், கர்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பரமம் என்ற சொல் ?பரமம் என்ற சொல் நிர்குணமான், உருவமற்ற, ஸத், சித், ஆனந்தமயமான பரமாத்மாவைக் குறிக்கும். வேதத்தையோ நான்முகனையோ ப்ரக்ருதியையோ குறிப்பிடாது. எது எல்லாவற்றிலும் சிறந்ததோ, நுண்ணியதோ, அதுவே பரமம் ஆகும். 'ப்ரஹ்மம்', 'அக்ஷரம்' என்ற சொற்கள் எந்த தத்வங்களைக் குறிப்பிடுகின்றதோ, அவையெல்லாவற்றையும் விட சிறந்தது, மேலானது, ஒன்றேயானது சத் சித் ஆனந்தமயமான பரப்ரம்மம் ‍ == அது பரமாத்மாதான். அதனால் தான் ' பரமம்' ' அக்ஷரம்' என்ற சொற்கள் பரமாத்மாவைக் குறிப்பிடுகின்றன. ஸ்வபாவம் (sva bhava ) என்ற சொல் ?ஸ்வ sva  என்றால் தன்னுடைய, பாவ bhava  என்றால் இருப்பு .natureஸ்வபாவம் என்றால் தன்னுடைய இயல்பு இருப்பு எனப்பொருள் கொள்ளலாம்.ஜீவன் உருவிலுள்ள பகவானுடைய சைதன்யத்தின் ரூபமான் பராப்ரக் ருதியான ஆத்ம தத்வம், ' ஆத்ம ' என்ற சொல்லால் கூறப்படுகின்ற உடல், புலன்கள், மனம், புத்தி, முதலியவற்றால் ஆன அபரா ப்ர்க்ருதியை ஆட்கொள் ளும் பொழுது ' அத்யாயம்'    எனப்படுகிறது. ' பூத ' என்பது அசைவன, அசையாதன எல்லாமே அடங்கும். இந்த ப்ராணிகள் உண்டாவது, வளர்வது, எல்லாம் எந்த த்யாகத்தினால் நடைபெறு கின்றனவோ, எது படைப்புக்கும் காப்புக்கும் ஆதாரமோ அந்த த்யாகத்தின் பெயர்தான் கர்மம்.ப்ரளய காலத்தில் உலகே உள்ள சகல ப்ராணிகளும் தத்தம் மனப்பதிவுகளுடன் ( ஸம்ஸ்காரங்கள் உட்பட )பகவானிடத்தில் அடங்கிவிடும். பிறகு படைப்பின் துவக்கத்தில், பகவான், " நான் ஒருவனே பலவாறாகப் பல்கிப் பெருகுவேன்' எனச் சங்கல்பம் செய்கையில், மறுபடி உருவாகின்றன. பகவானுடைய இந்த " ஆதி சங்கல்பம் ' ஒன்றே உணர்வற்ற ப்ரக்ருதியின் கருவில் உணர்வுள்ள விதையை விதைப்பதாம். இதுவே ஜட சேதன கூட்டுறவாகும். இதுவே பெரிய த்யாகம் அன்யதா சொல்லப்போனால் விஸர்கம்.
இதிலிருந்தே ப்ராணிகள் பலவாறாகப் பிறக்கின்றன. பகவான் சொல்லும் ' ஸம்பவ: ஸர்வபூதானாம் ததோ பவதி பாரத " என்பதை நினைவு கொள்ளவும். அந்தகாலே மாமேவ ஸ்மரன்முக்த்க்வா கலேவரம்  உடலைவிட்டு உயிர் நீங்கும் தருணத்திலும் எவன் ஒருவன் என்னையே நினைத்துக்கொண்டு உடலை  நீத்துக் கிளம்புகிறானோ, அவன் எனது ஸ்வரூபத்தையே அடைகிறான்இதில் சற்றும் ஐயம் இல்லை.
'
அந்தகாலே ' என்ற சொல்லுடன் '' என்று சேர்த்துச் சொல்லுவதன் பொருள் என்ன?
'
' என்பது " கூட " என்னும் பொருளில் உள்ளதுஇதனால், மரணகாலத்தின் தனிப்பட்ட பெருமை உணர்த்தப்படுகிறது.எவனொருவன், ஜீவித நாட்களில், எப்பொழுதும், என்னையே நினைத்துக்கொண்டு இருப்பானோ, அவனைப்பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறதுஎவன் ஒருவன் இந்த மனிதப்பிறவியின் கடைசி மணித்துளியில் கூட, என்னையே நினைத்து உடலை விடுகிறானோ, அவனும் என்னையே அடைகிறான் என்பதே பகவான் கூறுவதாகக் கொள்ளவேண்டும். "  மாம்என்ற சொல் ?ஏழாம் அத்தியாயத்தில் என்னுடைய முழு ஸ்வரூபத்தை வர்ணிப்பேன் எனக்கூறிய பகவான், ஏழாம் அத்தியாயம், 30ம்  ஸ்லோகத்தில் வர்ணித்தவாறு, ' மாம்" என்ற சொல் அந்த முழுமையான, ஸமக்ர ஸ்வரூபத்தை குறிப்பிடுகிறது. பகவானுடைய எல்லா ரூபங்களும் அதிலேஇணைந்து விடுகின்றனயார் எந்த ரூபத்தில் பகவானை நினைந்தாலும், அவர் பகவானையே ஸ்மரிக்கிறார்பகவானுடைய அந்தந்த அவதாரங்களுக்கு உண்டான திரு நாமங்கள், குணாதிசங்கள், ப்ரபாவங்கள், லீலைகள் எல்லாமே பகவானை நினைப்பதற்கு காரணம் ஆகும்ஆகையால், அவற்றை நினைவில் வைத்துக்கொள்வதாலேயே, பகவானுடைய நினைப்பும் தானாகவே வருகிறதுஆகவே பகவானுடைய நாமம், குணங்கள், ப்ரபாவங்கள், சரித்திரங்கள் எல்லாமே அடங்கும். " ஏவஎன்று ஏன் கூறவேண்டும் !!அந்திம காலத்தில், மனைவி, மக்கள், தாய் தந்தை, உறவினர், சேர்த்துவைத்த செல்வம், ஆண்ட , ஆள்கின்ற பதவிகெளரவம் இவற்றை சிந்திக்காமல், இவற்றில் எதிலுமே சிக்காமல், என்னையே நினைக்கவேண்டும் என பகவான்  சொல்வதாகக் கொள்ளவேண்டும். ஒருமுனைப்பாய் பகவத் சிந்தனை ஒன்றே பகவனை அடையும் வழி. " மத் பாவம்" என்று கூறுவது ஏன்?  இவ்வாறு பகவனை நினைப்பவர், ஸாயுஜ்யத்தை அடைவரா ? அல்லது   நிர்குண பிரும்மத்தை அடைவாரா ?இது சாதகனின் விருப்பம் குந்தியின் மகனேஅர்ஜுனாமனிதன் ஒருவன் மரணத்தருவாயில் எந்தெந்த ஸ்வரூபத்தைச் சிந்திக்கிறானோ   அப்படிச் சிந்தித்தவண்ணமாய், தன் உடலை விட்டு நீங்குகிறானோ, அந்தந்த ஸ்வரூபத்தையே அடைகிறான்ஏன் எனில், அவன் எப்பொழுதும் அதே சிந்தனையில் இருந்திருக்கிறான். bhavam  பாவம் என்ற சொல் எதைக்குறிக்கும் ? நினைப்பது என்றால் என்ன ? பகவான், தேவதைகள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், மரங்கள், வீடு, சொத்து, சம்பத்தி,     நிலம் ஆகிய எல்லா உணர்வுகளையும் அல்லது ஜடமானவை என்று நாம் நினைக்கின்ற எவ்வளவு பொருட்கள் உண்டோ அவையெல்லாமே ' பாவம் ' தான்கடைசிக்காலத்தில் எந்த ஸ்வருபத்தைப் பற்றி சிந்திக்கிறானோ, அதுவே அதை நினைப்பதாகும். கடைசிக்காலம் என்றால் ?இந்த ஸ்தூல உடலில் இருந்து, ப்ராணன், புலன்கள், மனம், புத்தி இவையடங்கிய ஸூக்ஷ்ம சரீரமுடைய ஜீவாத்மா     பிரியும் தருணத்தையே கடைசிக்காலம் என்று பகவான் சொல்லுகிறார்.நல்ல அல்லது தீய பிறவிகள் பெறுவதற்கு ஸத்வ, ரஜஸ, தமஸ் என்ற முக்குணங்கள் தான் காரணம் என்று பகவான் முன்னம் சொன்னார். இங்கே கடைசிக் காலத்து நினைவு என்கிறார். ஏன் ? மனிதன் எந்த் செயல்களைச் செய்தாலும், அவை ஸம்ஸ்காரங்களாக அவனுடைய உள்ளத்தில் பதிந்துவிடுகின்றன.      எண்ணற்ற ஸம்ஸ்காரங்கள் அவனுடைய உள்ளத்தில் நிரம்பியி ருக்கின் றன. இந்த ஸம்ஸ்காரங்களுக்கு ஏற்றவாறு தான், எந்தத் துணை, நிமித்தமாக அமைகிறதோ, அதன் படி செயலும், நினைவும் உண்டாகின்றன. ஸாத்வீக கர்மங்கள் செய்வதால், ஸாத்வீகமான ஸம்ஸ்காரங்கள் எப்பொழுது குவிகின்றதோ, அப்பொழுது அவனிடத்தில் ஸத்வகுணம் மேலிடுகிறது. அதற்கு ஏற்றவாறே நினைவும் ஸாத்வீகமாக அமைகிறதுஅதே போலவே ராஜஸ், தமஸ் செயல்களை  அதிகம் செய்வதால், அந்த ஸம்ஸ்காரங்கள் பெருகி, ரஜோ தமோ குணமும் மேலீட்டு, அந்திம காலத்தில் அந்த நினைப்புகளே ஏற்படுகின்றன. இவ்விதம், கர்மம், குணம், நினைவு மூன்றுமே ஒன்றுபடுவதால், இவற்றில் எதை அடுத்த பிறவிக்கு காரணம் எனக் கூறினாலும் தவறில்லை. எல்லாம் ஒன்று தான்.




No comments:

Post a Comment