Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, May 25, 2019

தீட்டு தீட்டு தீட்டு ****** *** ****** தீட்டை அறியாப் பாவிகளுக்கு எல்லாமே தீட்டு...

பிரம்மரிஷி சிவவாக்கியம்:-
++++++++++ ++++++++++++
சித்த மார்க்கம் = சாகா கல்விச்சாலை,

எங்கும் நிறைந்தவா
**********:************

தீட்டு தீட்டு தீட்டு
****** *** ******

தீட்டை அறியாப் பாவிகளுக்கு எல்லாமே தீட்டு...
" பிணத்தைப் பார்த்து விட்டு வந்ததே தீட்டு என சொல்பவர்களே"
கொன்ற பிண மாமிசத்தை கசாப்புக் கடையினிலே சென்று காசு கொடுத்து வாங்கி
வீட்டின் கருவறையாம் 
(சமயம்;பக்குவம்,
சமயல்; பக்குவப் படுத்துததல்)
சமயலறையில் குழம்பாக்கி
இறைவன் இருக்கும் கோவிலான உடலுக்குள்ளே உண்டு உயிர் வளர்க்கிறீர்களே

இது மஹா தீட்டு ஆகாதா
பெண்களுக்கான இயற்கை சுழற்சி (இயற்கை ; இறைவன்) இதுவும் தீட்டா... ?
அவர்களை அந்த நாள்கள் ஏன் தனிமைப் படுத்தினார்கள்.
வெளியேறும் தூமையானது
வெளிப்பட்ட பிறகு காற்றின் மூலம் கிருமிகள் உருவாகும்.
ஆகையால் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
இதற்கு எந்த தயக்கமும் இருக்கக் கூடாது என்பதற்காக மட்டுமே...

அன்று நோய் தொற்று இல்லாமல் இருந்தார்கள். ஆனால் இன்று பஞ்சிதனை வைத்து அடைத்து செல்கின்றனர்
இதனால் இன்று கருப்பை நோய்க்கு சிக்காத பெண்கள் எவரேனும் உண்டா.?

சிந்தியுங்கள்
தனிமை என்பது தனிமைப் படுத்துவதல்ல ஓய்வு மற்றும் தன்னை சுத்தம் செய்து நோயிலிருந்து காக்கவுமே.
இதையும் தீட்டென்று சொல்பவர்களே சித்தர்கள் யாவரும் இதையும் தீட்டு என சொல்ல வில்லை மாறாக தீட்டென சொல்வோரை இயற்கை அறியாப் பாவிகள் என்றே கூறுகிறார்கள்.
தூமை,தூமை என்றே ஒதுக்கித்
திரியும் இறைநிலை அறியாப் பாவிகளே 
இந்த இயற்கை சுழற்சியானது பெண்ணுக்கு உள்ளே இருந்துதானே தோன்றுகிறது
. அப்படி 3முதல் 5 நாளும் தீட்டென்றால் 
மற்ற நாள்களும் அந்த தூமை எங்கே போனது அந்தப் பெண்ணுக்கு உள்ளேதானே இருக்கிறது. அப்படியானால் பெண்களே தீட்டா?

ஆமையானது கடல் மணலிலே
முட்டையை விட்டு கடலில் மூழ்கி சிந்தனையால் நினைத்தே பொறிக்கும். அதுபோல எத்தனையோ வேத மந்திரங்களை சிந்தனையால் ஓதுகிறீர்களே

அந்த சிந்தனை எங்கிருந்து வருகிறது
நீங்கள் கருவாகும் முன்னே சுக்கிலத்தில் விதையாகி சுரோனிதம் எனும் தூமையினுள்ளே நுழைந்து பத்து மாதம் அதிலேயே வளர்ந்து உருவானோம் 
ஆன்மா உடலெடுத்து இருப்பதே அந்த சுக்கில சுரோனித வித்தில்தானே...
அப்படித் தூமையிலே நமசிவாய எனும் பஞ்சபூதமான இவ்வுடல் கிடைத்தது.
இவ்வுடலாலே நாம் மந்திரங்களை ஓதுகிறோம்.

தூமை தீட்டெனில் அதில் வளர்ந்த உடலும் தீட்டே. இவ்வுடலால் எப்படி இறைவனை வணங்குவது.?
நமசிவய என்னும் பஞ்சபூதமும் ஒன்றிணைந்த உடலில் இருந்து வரும் அனைத்து வேத மந்திரமும் ஜோதியாய் உள்ளே திகழ்வதும்,
முப்பிரி சடையானை பூசை செய்வதும், சற்குருவான இறைவன் நிறைந்து இருப்பதாகச் சொல்லக் கூடிய இவ்வுயிரானதும்
இந்த தூமையினால் ஈரைந்து மாதம் வளர்ந்து திரண்டு உருண்ட 
" இவ்வுடலுக்கு உள்ளேதான் "

தூமை தீட்டென்றால் இவ்வுடலும் தீட்டே. அப்படியெனில்
இவ்வுடலையும் உள்ளிருக்கும் உயிரையும் இயக்க 
"இறைவனைத் தவிர வேறொரு மிகப்பெரும் சக்தி உள்ளதா",?

சிந்தியுங்கள்
ஒன்றென்றிரு தெய்வம்
உண்டென்றிரு...
ஒன்றென்றிரு தெய்வம் 
ஒன்றென்றிரு...

பெண் எனும் உடலிலிருந்து சுரோனிதம் உடைந்து தரையில் விழுந்தால் தீட்டு என்கிரீர்
உயிரானது உடலெடுக்க தாயும் தந்தையும் இணைந்தால் தீட்டு என்கிறீர்
பனிக்குடம் உடைந்து உயிர் உடலாகப் பிறந்த அன்றும் தீட்டு என்கிறீர்
தீட்டினால் உருவாகி வளர்ந்து பிறந்த உடலால் செய்யும் அனைத்துமே தீட்டுதானே ?
தீட்டான இவ்வுடல் கொண்டு என்ன செய்ய முடியும்.?
எவ்வாறு இறைவனை வணங்க முடியும்.?
ஒவ்வொரு அணுவின் உள்ளேயும் அணுவின் அணுவாக இருக்கும் ஈசன் இல்லாத இடம்தான் உண்டோ.
இறைவனுக்கு ஏது தீட்டு
அப்படி என்றால் தீட்டு ஏது?
பஞ்ச மஹா பாதகம்
வஞ்சம், கொலை, களவு, கற்பழிப்பு, பொறாமை, காமம், பேராசை
போன்ற ஆணவத் திமிரினால் வரக்கூடிய

" தீய செயலே தீட்டு"
இந்த தீய செயலான தீட்டை செய்வோருக்கும் இறைவனே உள்ளிருந்து அருள்கிறான்.
அதற்குத் தகுந்த பலனை வாரி வழங்குகிறான்.

தீது செய்ங்கின்ற பாவிகளுக்கும் செய்தாய் கருணை...
ஓராதார் உள்ளத்தும் ஒளிர்க்கும் ஒளியானே...
சிவசிவ சிவமே சிவசிவ
சிவ செம்பொன் ...

தூமை தூமை என்று
துவண்டலையும் பேதைகாள்
தூமையான பெண்ணிருக்க
தூமை போனதெவ் விடம்
ஆமைபோல மூழ்கி வந்து
அனேக வேதம் ஓதுரீர்
தூமையும் திரண்டுருண்டு
சொற் குருக்கள்ஆனதே

சொற் குருக்கள் ஆனதும்
சோதி மணி ஆனதும்
மெய் குருக்கள் ஆனதும்
வேண பூசை செய்வதும்
சத் குருக்கள் ஆனதும்
சாத்திரங்கள் சொல்வதும்
செய் குருக்கள் ஆனதும்
திரண்டுருண்ட தூமையே

அரையறை இடைக் கிடந்த
அன்று தூமை என்கிறீர்
பிறையறித்து நீர் குளித்த
அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்துநீர் பிறந்த
அன்று தூமை என்கிறீர்
புரையில்லாத ஈசரோடு
பொருந்துமாறு எங்கனே

சிவவாக்கியர்...
நன்றி. ஆத்ம வணக்கம்

No comments:

Post a Comment