Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 22, 2019

இதிகாசத்திலும், புராணத்திலும் பூமியில் அவதரித்த அவதார புருஷர்களை

இதிகாசத்திலும், புராணத்திலும் பூமியில் அவதரித்த அவதார புருஷர்களை வணங்குவதை விட்டு விட்டு ,

பூமியில் தோன்றிய அவதார புருஷர்களை விட ,

பல்லாயிரம் மடங்கு மேம்பட்ட பரமாத்மாவை மனிதர்கள் வணங்குவது தான் தலை சிறந்த, தலையாய கடமையுமாகும், நன்றியுமாகும்.

அவ்வாறு வணங்குவது மூலம் தான்,

மனிதர்கள் பிறவியற்ற நிலைக்கு ஆளாக முடியும்.

ஏனெனில் அவர் தான் எல்லோருக்கும் தந்தை.

அவர் நம் சரீரத்திலே இருந்து நம்மை கண்காணிக்கிறார்.

அவரே ஒன்றே குலம். ஒருவனே இறைவனாகும்.

இதுவே அண்ட ஆகாசத்தில் உள்ள இறைவன் ,நம் பிண்ட உடலிலே இருக்கிறார்.

பரிசுத்த ஆன்மாவாக உள்ள பரமாத்மா, எப்பொழுதும்,

எள்ளலவும் பாவம் செய்யாத இறைவன், 

நம் சரீரத்திலே செம்மண் நிறமாக, நட்சத்திர பிழம்பாக,

இறைவன் மனிதனுக்கு கொடுத்த சரீரத்தில்,

சரீரத்தில் உள்ள ஆன்மாவை கண்காணித்து கொண்டிருக்கிறார்.

மனிதன் உபயோகிக்க கூடிய நான்,எனது, என்னுடையது என்ற வார்த்தை தவறானதே,

மனிதன் உபயோகிக்கும் சரீரத்தை,

என்னுடைய சரீரம் என்று மனிதன் ஆணித்தரமாக கூற முடியாது.

மனிதன் உபயோகிக்கும் பொருளை, 

என்னுடையது என்று மனிதன் ஆணித்தரமாக கூற முடியாது.

மனிதன் உபயோகிக்கும் சொத்துக்களை, 

என்னுடையது என்று மனிதன் ஆணித்தரமாக கூற முடியாது.

மனிதர்களுடைய தாய், தகப்பன், மனைவி, கணவன் , மகன், மகள், 

என்னுடையது என்று ஆணித்தரமாக மனிதன் கூற முடியாது.

மனிதன் உபயோகிக்கும் இவைகள் அனைத்தும்,

பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் வழிநடத்தும் பகவானுடையதே.

இவைகளில் எதுவுமே மனிதன் ஆரம்ப காலம் முதல், கடைசி காலம் வரை மனிதன் சொந்தம் கொண்டாட முடியாது.

ஏனெனில் அனைத்தும் பகவானுடையதாகும்.
ஆகையால் தான் மனிதன், என்னுடைய சரீரம் என்று கூறிக் கொண்டிருந்தவன், 

சரீரத்தில் உள்ள உயிர் பிரியும் நேரத்தில், பகவானுடைய நிலைக்கு உள்ளதால், 

சரீரத்தை, பூமியில் விட்டு, விட்டு செல்கின்றான்.

மேலும் பூமியில் இருந்து கொண்டு, 

உண்டு, வளர்ந்து, வாழ்ந்த உடலை பூமியிலே விட்டு செல்ல வேண்டும் என்ற நியதி உள்ளதால்,

சரீரத்தை பூமியிலே விட்டு செல்கின்றான்.

ஒருவரை ஒருவர் மனதால் தேர்ந்தெடுத்த 

கணவன் மனைவியாயினும்,

பெற்றெடுத்த பிள்ளைகளாயினும், 

உழைத்த பணம் பொருளாயினும் அனைத்தும் பகவானுடையதே.

அவ்வாறாக பூமியில் உள்ள ஓரறிவு முதல் ஆறரிவு வரை உள்ள அனைத்து ஜீவராசிகளும் பகவானுடைய குழந்தைகளாவார்கள்.

பூமி என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரு நாடக மேடை.

பூமிக்கு வந்தோமா , உயிர் உள்ளவரை நாடகம் ஆடினோமா, 

நாடகம் முடிந்ததும் போய் கொண்டே இருக்க வேண்டும்.

பூமியில்,எந்த ஜீவராசிகளுக்கும் எந்த உடைமைகளும் சொந்தம் இல்லை. 

மனிதர்களுக்கு எதுவும் நிரந்தரமும் இல்லை, எதுவும் நிலையானதும் இல்லை.

இவ்வாறு இருக்க என்னுடைய உடல், என்னுடைய சொத்து , என்னுடைய பணம் என்று மனிதன் எவ்வாறு கூற முடியும்?.

பின்னே மனிதன் உபயோகிக்கும் நான் , எனது, என்னுடையது என்கின்ற சொல் எதைப் பற்றி கூறுகிறான் ?

மனிதன் முற்பிறவியில் செய்த பாவச் செயல்களை நீக்குவதற்கு,

ஆன்மாவே, பரமாத்மாவின் ஆசியோடு ஒரு உடலை எடுக்கிறது. 

ஆன்மா எடுத்த உடலை வழி நடத்துவதற்கு ,பஞ்ச பூத சக்தியின் துணைக் கொண்டு,

 ஆன்மா, உயிர் சக்தி என்ற நிலைக்கு உடலை வழி நடத்துகிறது.

பஞ்ச பூத சக்திகள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயமாகும்.

பஞ்ச பூத சக்தி மூலம் சரீரம் வழி நடத்தி, வாழ்ந்து கொண்டிருப்பது அறியாமல், 

தான்தோன்றித்தனமாக நான், நான் என்று கூறுகின்றான்.

மனிதன் ஆகப்பட்டவன் நான் தான் உழைத்தேன், உழைத்ததனால் கிடைத்தப் பணம், அதன் மூலம் கிடைத்த சொத்து,

என்னுடைய தாய் தகப்பன், கணவன், மனைவி, பிள்ளைகள் என்றெல்லாம் போலித்தனமான சொந்தம் கொண்டாடுகிறான்.

போலித்தனமான சொந்தம் கொண்டாட்டங்களின் மூலம்,மேலும் பாவத்தையே சம்பாதிக்கின்றான்.

பாவத்தையே சம்பாதிப்பதன் காரணம் ,

பூமி என்பது என்ன? நம்மை யார் படைத்தது?நாம் எதற்க்காக பூமியில் வந்தோம்? நம்முடைய அவதார கோலம் என்ன?நம்மை பின்னி பிணைத்திருக்கும் சொந்தங்கள் யார்? நம் மூலம் உருவான, கருவான பிள்ளைகள் யார்? நம்முடைய வாரிசுகள் நமக்கு எதற்கு?

இவைகள் எல்லாம் எதற்க்காக என்று அறியாமல், 

படைத்தவனையும், சரீரத்தை வழிநடத்துபவனையும் அறியாமல், அறிய முற்படாமல், 

படைத்தவன் யார் என்ற நிலையே அறிந்து கொள்ளாமல்,

நான் தான்,எனது, என்னுடையது என்ற மிருகத்தனமான கோட்பாடின் மூலம், தான்தோன்றித்தனமாக வாழ முற்படும்போது,

பலவந்தமான பாவத்திற்கும், பாவத்தின் மூலம் கஷ்ட நஷ்டத்திற்கும், தீராத வியாதிக்கும் ஆளாகி , வினைப்பயனை அதிகமாக்கி,

முற்பிறவி பாவமும் கலையாமல், இப்பிறவி பாவமும் கூடுதலாக்கி,

அடுத்த பிறவிக்கு மீண்டும் பிறக்கும் நிலைக்கு ஆளாகின்றான்.

மனிதன் ஆகப்பட்டவன் எண்ணம், சொல், செயல் என்ற முக்காரண குணத்தின் அடிப்படையில், 

முக்குண விளைவுகளான சத்வம்,ரஜோ,தமோ நிலைகளுக்கு உட்பட்டு வாழ முற்படும் போது,

குணத்தின் விளைவால் மனதை நாசம் செய்யும்போது,

அவனையே அறியாமல் நான்,எனது, என்னுடையது என்ற வார்த்தைகளை உபயோகிக்கிறான்.

மனம் கொண்டவனே ஈசன்.

குணத்தின் அடிப்படையில் மனிதனாகப்பட்டவன்,

மனம் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு ஈசனையே அவமதிக்கிறான்.

இருப்பினும் மனம் கொண்ட ஈசனே, மனிதனின் கடைசி காலம் வரை இருக்கின்றான்.

எவன் ஒருவன் இயற்கையின் இறை சட்டப் பிடியிலிருந்து மாறி வாழ்கின்றானோ, 

அவர்களுக்கு எல்லாம் மூன்று விதமான தண்டனைகள் அனுபவித்தே ஆக வேண்டும்.

அதில், நம்மால் வரும் தடைகள், பிறரால் வரும் தடைகள், இயற்கையால் வரும் தடைகள்.

இங்கு தடைகள் என்பது கஷ்டம், நஷ்டம், வியாதி கண்டம், சொல்லண்ணா துயரம், வீண் பழி, அவமானப்படுதல் இன்னும் ஏகபோக காரணங்கள்.

இதை அறியாத மனிதர்கள், மனதை, அதாவது ஈசனை அவமதித்து விட்டு,

என்னுடைய மனம் சரியில்லை என்றும், 

சரியில்லா மனதால் வியாதி வந்துவிட்டது என்றும்,

நான்,எனது, என்னுடையது என்ற போலித்தனமான வார்த்தைகளை உபயோகிக்கின்றான்.

எண்ணம், சொல், செயல் = குணம் (மனிதன்).

மனம் = ஈசன்.

மனமே குரு.

மனமே ஈசன்.

ஆக, இது போன்ற தீய விளைவுகளிலிருந்து, 

நரகத்திற்கு உட்பட்ட கொடிய, தீங்கான வாழ்க்கையிலிருந்து விடுபட,
:::::::::::::::::::::::::::::::::::

என்னுடைய தந்தை பரமாத்மா அழிவற்றவர். 

தந்தையாகப்பட்டவர் செம்பழுப்பு நிறமாக, நட்சத்திரத்திற்க்கு எல்லாம் உயர்ந்த நட்சத்திரமாக,

நட்சத்திரபிழம்பாக உலகையும், அனைத்து ஜீவராசிகளையும் கண்காணித்து கொண்டு இருக்கிறார்.

அந்த பரமாத்மாவே இந்த சரீரத்திலும் அணுவாக இருக்கிறார்.

நான் ஒரு ஆன்மா, 

என்னை நெருப்பால் எறிக்க முடியாது.

நீரால் நனைக்க முடியாது.

என்னை வெட்டவும் முடியாது,

என்னை கொள்ளவும் முடியாது. 

கொல்லப்படுவதெல்லாம், 

அழிக்கப்படுவதெல்லாம், 

காயப்படுத்துவதெல்லாம்,

துக்கமும், வேதனையும், மன துயரம் படுவதெல்லாம்,

பஞ்ச பூதத்தால் உண்டான சரீரத்திற்கே,

என்னுடைய ஆன்மாவிற்கு அல்ல.

சரீரம் சட்டையை போன்றது.

சட்டையை எவ்வாறு மாற்றி கொள்கிறோமோ,அது போல்,

சரீரம் அடுத்த பிறவியில் மாறும்.

நான் ஒரு அழிவற்றவன்.

என்னுடைய ஆன்மாவில் உள்ள பாவப்புண்ணியத்தை கலைய,

நானே பிறவி எடுத்து,

என்னுடைய ஆன்மாவிற்கேற்ற சரீரமெடுத்து,

புருவ மையத்தில் உயிர் சக்தியாக பஞ்ச பூதத்தின் துணையால்,

இந்த சரீரத்தை வழி நடத்தி செயல்படுகின்றேன்.

என்னுடைய அனைத்து செயல்களையும் பரமாத்மா கண்காணித்து கொண்டிருக்கிறார்.

பரமாத்மாவின் அருளால்,

என்னுடைய ஆன்மாவையும், பஞ்ச பூத அருளால் உள்ள சரீரத்தையும்,

சரீரத்திற்கு ஏற்படுகின்ற அனைத்து செயல்களையும் ஆசிர்வதித்து வழி நடத்துகிறார்.

இந்த சரீரத்தையும், சரீரத்தில் உள்ள ஆன்மாவையும், நல்வழி பாதையில் கொண்டு சென்று, ஆரோக்யமாய் வழி நடத்தும் பரமாத்மாவே,

இந்த சரீரத்திற்கு தேவையான சகல ஐஸ்வரியமும் கொடுத்து கொண்டிருக்கும் பரமாத்மாவே,

இந்த சரீரத்தை சுற்றியுள்ள கோடான கோடி மக்களின் நடுவே பாதுகாத்து கொண்டிருக்கும் பரமாத்மாவே,

இந்த சரீரத்திற்கு இயற்கையிலிருந்து ஏற்படுகின்ற சீற்றத்திலிருந்தும், 

ஜீவான்மாவால் ஏற்படுகின்ற எழுச்சியிலிருந்தும்,

பிறரால் ஏற்படக்கூடிய எண்ணற்ற இச்சைக்கு உண்டான தடையிலிருந்தும், 

இந்த சரீரத்தை பாதுகாத்து வழி நடத்தி கொண்டிருக்கும் பரமாத்மாவே, 

என்னுடைய இந்த ஆன்மாவால் ஏற்ப்பட்ட, ஏற்படுகின்ற பாவப்புண்ணியத்தைதங்கள் திருவடியில் சமர்ப்பிக்கிறேன்.

பரமாத்மாவே,இந்த ஆன்மாவை ஏற்றுக்கொண்டு பிறவி அற்ற நிலைக்கு ஆளாக்குவீர்களாக என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

தங்களுக்கு கோடான கோடி பாத வணக்கங்களும், நன்றிகளும்.

No comments:

Post a Comment