Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, May 19, 2019

ஆழ்மனம் என்பது நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தி .

  • ஆழ்மனம் என்பது நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தி ..நாம் நமது வெளிமனம் மூலமாக தேர்ந்தெடுத்து அவற்றை பற்றி தீவிரமாக சிந்திக்கின்ற போது அவை அப்படியே  ஆழ்மனதிற்கு செல்கின்றது. ஆழ்மனம் என்பது ஈர்ப்புவிதியின் செயல்பாடு போன்றது .ஈர்ப்பு விதியின் கோட்பாடுகளில் மறைந்திருக்கும் மாபெரும் உண்மையே  ஆழ்மனதின் செயல்பாடுகளை வெளிமனம் மற்றும் எண்ணங்கள் மூலமாக தீர்மானிப்பதே  ஆகும்..ஆழ்மனத்தின் சக்தி (subconscious mind) அல்லது ஈர்ப்பு விதியின் ஒரு செயல்திட்டம் .நன்றி..
  •  
  • *ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். *
  •  
  • ஆழ்மனம் நம்பும்படியே நாம் உணர்கிறோம். அதன்படியே நாம் பாதிக்கப்படுகிறோம். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே  உண்மையாகிறது. அதன்படியே  அனுபவம் அமைகிறது.
  •  
  •     ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் சந்திக்கிறார்கள்.
  •  
  •     முதலாமவன் "என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?" என்று கேட்கிறான். நம் ஆள் "இல்லையே நன்றாகத் தானே இருக்கிறேன்" என்கிறான்.
  •  
  •   சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் "என்ன உடம்பு சரியில்லையா?" என்று கேட்கிறான்.
  •  
  •     இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.
  •  
  •     நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும் நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். "நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது" என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள்.
  •  
  •     எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம்> பலவீனம்> கவலை> தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம்> வலிமை> தன்னம்பிக்கை> மகிழ்ச்சி> உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
  •  
  •     பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. "இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். "என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" அவர்கள் கூறினார்கள். "ஆமாம் பிரபு" இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். "உங்கள் நம்பிக்கையின் படியே உங்களுக்கு ஆகக் கடவதாக!". அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்)". (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.
  •  
  •       இனி ஆழ்மனதைப் பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் வேலைகள் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.
  •  
  •  நீங்கள் சாதிக்க வேண்டிய சாதனை அல்லது இருக்க வேண்டிய நிலை பற்றி ஒரு பக்காவான காட்சியை மனதில் கற்பனையாய் தயார்  செய்யுங்கள்.
  •  
  •      அந்த கற்பனை காட்சிக்கு ஒலி, ஒளி, உயிர், வாசனை அனைத்தையும் கொடுத்து  காட்சி(Visualization)படுத்துங்கள்.இந்த காட்சியை மனதில் நம்பிக்கையுடன் அடிக்கடி ஓட விடுங்கள். சாதிக்க வேண்டிய சாதனையை நிறைவேற்ற வேண்டிய முயற்சிகளை எடுங்கள்.
  •  
  •       நாளடைவில், மனம் சாதிக்க வேண்டிய சாதனை பற்றிய  கற்பனையை நம்ப துவங்கி, அதனை நிறைவேற்ற துவங்கி விடும்.
  •  
  •     விடா  முயற்சியுடன் கூடிய ஆழ்மனதின் நம்பிக்கை,  சாதிக்க வேண்டிய சாதனையை நிறைவேற்றியே தீரும்.
  •  
  • வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
  •  
  • எண்ண அலைகளின் சக்தி
  •  
  • ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
  •  
  • விரும்பியதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் தான் முயற்சியும் சாத்தியமாகிறது."மின் அலைகள் பரவி சென்று பொருள்களை பாதிப்படைய செய்வது போல நமது எண்ண அலைகளும் பரவி சென்று பொருள்களை பாதிக்கின்றன.
  •  
  •  பிதகோரஸ் என்ற கணித மேதை,  உலகில் நாம் காணும் அனைத்து பொருள்களும் அதிர்வுகள் என்கிற அலை ரூபங்களாக தான் இருக்கின்றன என்று குறிப்பிட்டுச் சொன்னார். அணுவின் இயக்க தத்துவமே அது தான்.அணைத்து பொருள்களும் அலை வடிவங்களாகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன. நமது எண்ணங்களும் அலை வடிவில் நம்மை சுற்றிலும் வியாப்பித்திருக்கின்றன.
  •  
  • வலிமையான எண்ணங்களின் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம்மால் பாதிப்பினை ஏற்படுத்த முடியும். ஆழ் மனம் நமக்கு அரிய சேவைகள் புரிய  எப்போதும் தயாராக இருக்கிறது.
  •  
  • மனிதனின் எண்ண அலைகள் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை பாதிக்கும் சக்தி வாய்ந்தது கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி போன்ற ஒரு சக்தியை நம் ஆழ் மனதில் ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.
  •  
  • தனிமனிதனானாலும் சமூகமானாலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக எண்ணுகிற போது அந்த எண்ணங்களின் அடிப்படையில் காரியங்களும் நடைபெறத் தொடங்குகின்றன..
  •  
  • எதை சாதிக்க விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான இமேஜை (உருவத்தை) ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.   அதற்காண தீர்வு வழிமுறைகள்  தென்படும் அந்த வேலையை பெறுவதற்கான ஆற்றலை ஆழ்மனம்  கொடுக்கும்.இதற்கு அடிப்படைத் தேவை 'image creation' தான்.
  •  
  • உள்ளபடியே மனப்பூர்வமாக அந்த காரியத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்று  அழுத்தமான நம்பிக்கை வைத்திருப்பது தான் முக்கியம்.
  •  
  • நம்முடைய எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு.   நமது எண்ணங்களின் வழியில்தான் நம் வாழ்க்கை பயணிக்கிறது.. நமது எண்ணங்களின் தாக்கம் வாழ்விலும் எதிரொலிக்கும்.                                                                                                                                                        Stay with the breath
  •  
  • மூச்சோடு இருப்பது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு விஷயத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள் மூச்சின் உணர்ச்சியின் மீது மட்டுமே கவனத்தைச் செலுத்துங்கள்.
  • உள் மூச்செடுக்கும் போது உள் மூச்செடுக்கிறோம் என்பதைத் தெரிந்திருங்கள்.
  • வெளி மூச்செடுக்கும் போது வெளி மூச்செடுக்கிறோம் என்பதை உணர்ந்திருங்கள். உடலில் எங்கெல்லாம் தோன்றும் உணர்ச்சிகளால் உள் மூச்செடுக்கிறோம் அல்லது வெளி மூச்செடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்கிறோம் என்பதைக் கவனியுங்கள்.
  • அந்த உணர்ச்சிகளை எப்படி உணர்கின்றீர்கள்?
  •  
  • உள் மூச்செடுக்கும் முழு நேரமும் வசதியாக இருக்கிறதா?
  •  வெளி மூச்செடுக்கும் முழு நேரமும் வசதியாக உள்ளதா?
  •  உள் மூச்சின் முடிவில் அல்லது வெளி மூச்சின் இறுதியில் அசௌகரியமாக இருந்தால் அது, மூச்சு மிகவும் நீண்டு இருப்பதற்கான ஒரு அறிகுறி.
  •  ஆக மூச்சின் நீளத்தைச் சற்றுக் குறைத்து விடுங்கள். உள் மூச்சு திருப்திகரமாக இல்லாவிட்டால் சற்று நீண்ட உள் மூச்சு விட்டுப் பாருங்கள்.
  • மூச்சின் தாளலயம் உடலை நாம் அறிவதை எப்படிப் பாதிக்கிறது?
  •  மூச்சின் மீதான நமது எண்ணங்கள் உடலில் தோன்றும் உணர்ச்சிகளை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கவனியுங்கள். மூச்சோடு சண்டையிட்டுக் கஷ்டப்பட்டு மூச்சை இழுக்க வேண்டும் என்று எண்ணத் தேவையில்லை.
  •  
  •  ஏனென்றால் நாம் கஷ்டப்படாவிட்டாலும் மூச்சு தானாகவே வந்து போகத்தான் போகிறது.
  •  அதனுடன் சண்டைபோடாமல் இருப்பதே உடலுக்கு நல்லது.
  •  
  • எனவே முச்சு எந்தத் திசையிலிருந்து வந்தாலும் உடலின் எந்தப் பாகத்திலிருந்து வந்தாலும் அது தானே செயற்படட்டும் என்று உங்களிடமே சொல்லிக் கொள்ளுங்கள்.
  • உங்கள் ஒரே கடமை உடலில் தோன்றும் உணர்ச்சிகளை அறிந்திருப்பதும், அவைகளை வசதியாக இருக்க விடுவதுமேயாகும். ஏனெனில் அவை வசதியாக இருந்தால் மூச்சோடு நாம் சேர்ந்து இருப்பதும் சுலபமாகிவிடும்.
  •  நாம் இங்கு பயிற்சி செய்வது மனத்தை நிகழ் காலத்தில் அடங்க வைப்பதற்காகத்தான். அமைதியாக இங்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
  •  
  • மனம் நிகழ் காலத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்லது.
  • அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று, நிகழ் காலத்தில் மனம் இராவிட்டால் நாம் கடந்த காலத்தை நினைத்து ஓடிக் கொண்டே இருப்போம்.
  •  
  •  அல்லது
  •  வருங்காலத்தை நினைத்துக் கற்பனையில் மிதந்து கொண்டு இருப்போம். இப்படி இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் பற்றி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது மனத்தைச் சாந்தபடுத்தப் போவதில்லை.அது தளர்ந்து விடும்.
  •  
  •  எனவே நிகழ் காலத்தில் மூச்சின் இதமான உணர்ச்சியோடு இருப்பது மனத்திற்கு ஆறுதளிக்கிறது. மனத்தில் எண்ணங்கள் எழுந்தால் அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டாம். தியானத்தின் போது உங்கள் ஒரே கடமை, வசதியான மூச்சின் உணர்ச்சியோடு இருந்து மனத்திற்கும் உடலுக்கும் ஆறுதல் அளிக்க வேண்டும் என்பதே.
  •  
  • நாம் தியானம் செய்து மனத்தை நிகழ்காலத்தில் கட்டுப் படுத்தி அதன் எண்ணங்கள் உருவாகும் செயற்றொடரைக் கவனிக்கிறோம்.
  • மறைந்து இருக்கும் அந்தச் செயற்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறோம். தியானம் எளிமையான பயிற்சி தான். மனத்தை மூச்சொடு இருக்க வைக்கிறோம். அது வேறு எங்காவது சென்று விட்டால் அதை மீண்டும் மூச்சிற்கே கொண்டு வருகிறோம். திரும்பத் திரும்ப அதை மூச்சிடமே கொண்டு வந்து இடைவெளியில்லாமல் மூச்சைக் கவனிக்க வைக்கிறோம்.
  • இது எளிமையான பயிற்சி என்றாலும் மிக முக்கியமானதுமாகும். மனத்தின் ஆரோக்கியத்திற்கும் பிழைப்பிற்கும் இது ஒரு அடிப்படையான திறமையாகும். எனவே இங்கு செய்யும் ஒரு மணி நேரத் தியானத்தைப் பயனற்ற நேரம் என்று நினைக்கவேண்டாம். இது மிகக்குறுகிய காலமே.
  •  
  • இந்த ஒரு மணி நேரத்தைப் பயன்படுத்தி மனத்தை ஆறுதலடையச் செய்யுங்கள். ஒரே விஷயத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்துங்கள். உங்கள் உயிர் இதை நம்பி இருப்பதாக நினைத்துச் செய்யுங்கள். உண்மையில் உங்கள் உயிர் இதை நம்பித்தான் இருக்கிறது.
  • ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment