Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 22, 2019

ஆன்மீகம் என்பது, இயற்கையை இயக்குபவன் இறைவன்.

ஆன்மீகம் என்பது, இயற்கையை இயக்குபவன் இறைவன். இறைவனுடைய இயல்பை, நான் செய்யும் செயலை, செயலோடு செயலாய் இறைவனே முன் நின்று செய்பவன் என்று உணர்ந்து, இறை வழி செல்வது பேரானந்தமே

என்னுள் உயிராய் இருப்பது சிவன் (இறைவன்) என்று அறியாமல், கண்கள் காணும் காட்சிகளையும் , காணத் தகாத காட்சிகளையும், கண்டும், கேட்டும், என்னை காணும், உன்னை காணாமல் காலத்தை கொன்று கழித்தேனே சிவனே, ஜீவனே சிவனானார்.

ஓம், ஆதியும், அநாதியும் அற்ற அகிலாண்ட கோடி, பிரம்மாண்ட நாயகன், உலகை படைத்த ஒருவன், என்னை இயக்கும் சிவன், சிவனடி என்னுள் ஜீவனாய் இருக்கிறார்.

உன் கண்ணில், சிவனே கண்களாய் இருக்கையில், உன் கண்ணைக் கொண்டு சிவனை காணாமல் , கண்டதும், கேட்பதும், நிகழுமா என்றால் தீயவை கண்டிப்பாக நிகழும். சிவனை கண்டுணர்ந்தால் கண்டதும், கேட்பதும் தேவையே இருக்காது. இனி எல்லாம் சுகமே.

நீயெல்லாம் சுகமே, நிம்மதி என்றுணர்ந்த மனமே, நிகழும் காலத்தில் நிம்மதி பெறுமே, நான் நினைத்ததெல்லாம் நடத்தி கொடுக்கும் உயிரே சிவன், இறைவனே.

நான் படைத்த படைப்பில் உயர்ந்தவை ஏதொன்று இருந்தாலும் , உன்னை காணும் சக்தி பெற்ற உயர்ந்த கடவுள் எனக்கு நீயே, எனக்கு நானே இறைவன்.

உறங்கும் நேரத்திலும், உறங்காமல் இருக்கும் இறைவனை, உணர்ந்த அறிவு இருக்கும் இடம் எங்கும் வெற்றியே. எதிலும் வெற்றியே.

சாத்தியம் இல்லா நேரத்திலும், நான் இருக்கும் இடத்தில், என்னோடு இருப்பவருக்கு தானே முன் வந்து,  அந்நேரத்தில், அற்புத சக்திகள் எனக்கு தந்து, சத்தியமாய் சாதிக்க செய்தேன், ஏனெனில் நான் உன் சிவன். சர்வம் செய்பவன் இறைவன்.

என்னால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும் , இறைவன் என்னிடம் ஒப்படைப்பதில்லை. நம்பிக்கையோடு செயல்படுவேன், இறைவனே.

என்னிடம் உள்ளது எதுவோ, அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். 

என்னிடம் இல்லாதது எதுவோ, அது இனி இறைவன் கொடுப்பார் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.

எனக்கு வேண்டாததையும் இறைவன் கொடுக்க மாட்டார் என்று என்னுடைய பக்தியின் மூலம் அறிந்து கொள்ளுகிறேன்.

உயிர் உள்ள வரை உயர்ந்த பரப்பிரம்மமான இறைவன் என்னோடு இறுக்கையில் என்று உணர்ந்த பின்னே, துன்பமும் துயரமும், எனக்கு அறவே இல்லை.

உயிருள்ள வரை உயிருடன் இருப்பேன் என்று தீர்மானம் செய்த நொடியிலிருந்து, என்னோடு இருப்பது நன்மையும், மேன்மையும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும் ,என்பதை உயிர் உள்ள வரை தீர்க்கமாக இந்த உலகிற்கு உரைப்பேன்.

சுகமாய் சுவாசம் இருக்கும் நேரத்தில், விழிப்புடன் பெற்ற இறைவனின் உணர்வு , உச்சியில் ஓங்கியே இருப்பதால், முருகனை கொண்டு, உச்சியில் சிவனாய் இன்றி , நான் இஷ்டமில்லாமல் , என் வாழ்வு சத்தமில்லாமல், கர்மத்தின் மிச்சமில்லாமல், இறைவனாய் வாழ்தல். இறைவனுக்காக,

ஜோதிடத்தில் மகா ஜோதிடம் சிவனடி என்னுள் இருக்கையில், முப்பத்தி முக்கோடி தேவர்களும், நவகிரஹங்களும், அஷ்டதிக் பாலகர்களும், பஞ்ச பூதங்களும், சூரிய சந்திர நட்சத்திர தேவாதி தேவர்களும் அனுகிரஹமாய் மாரும். கண்டங்கள் தண்டமாகும். தோஷங்கள் திவ்யமாகும். நோக்கங்கள் நிறைவேறும்.யோகங்கள் விருத்தியாகும். கர்ம நிவர்த்தி யோக விருத்தியாகும்

நம்மை சுற்றியும், எல்லா இடத்திலும் பகவான் சக்திகள் உள்ளன. இல்லாத இடத்தில் கடவுளை நாடி செல்வதும், இருக்கும் இடத்தில் கடவுளை அவமதித்து தேடாமல் இருப்பதும் மாபெரும் இழிவான வாழ்க்கைக்கு உண்டான குற்றமே,

உனக்காக வாழ்ந்தால், வாழ்க்கையில் கஷ்டமும், உடலில் வியாதியும்,,,, இறைவனுக்காக வாழ்ந்தால் , வாழ்க்கை என்றுமே ஆனந்தம். ஆக , உனக்காக வாழ்வதை விட்டு விட்டு , இறைவனுக்காக வாழ்வதே என்றென்றும் ஆனந்தமே.

சர்வம் செய்த இறைவனுக்கும் இறைவனை உணரும் வலிமையும், வள்ளமையும் படைத்த உயர்ந்த பிறவியான மனித பிறவியும், மனித பிறவியில் இறைவன், பிரம்மமே , பரந்த பரப்பிரம்மமாய் ஜீவனாய் இருக்கிறார்! அந்த சிவனே  (பரப்பிரம்மம் )அறிவாகவும் இருக்கிறார்!ஜீவனை அறியக் கூடிய அறிவாய் , என்னுள் இருக்கும் உயிரான மகா குருவுக்கும் , இறைவனே ஆழ்மனமாக இருக்கையில் , ஆழ்மனதை வாழ்க்கையில் குருவாக ஏற்றுக் கொண்டு, வாழ்க்கையில் மிகபெரிய வெற்றியை இறைவன் அருளால் சாதித்து வாழ்கிறேன்.

உயிரே கடவுள் இறைவன் அண்டமெங்கும் ஒளியாக ஒளிர்பவன், அணுவுக்குள் அணுவாக ஒளிர்பவன், மனித உடலினுள் பலகோடி அணுத் துகள்களில் இல்லாமலா  போவான், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”.  இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை!

வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்.  “அகம்பிரம்மாஸ்மி”. இறைவன் தன்னை சிறுஜோதியாக குறுக்கிக் கொண்டு உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார். கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்,  கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் கடவுளை காண்பது அரிது.

கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் எளிதில்,   வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம் இறைவன் கூப்பிடு தூரத்தில் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர் பெரியோர்கள். நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்.நம்மை நேசிப்போம் கடவுளை காண்போம்.

சிவனே என் ஜீவன் என்னில் , சிவனும் சிவனில் நானும் என்கிற சிவன்

இந்த சரீரத்தில் இருப்பது (சிவனே) ஜீவனாயும், உயிராயும், ஒலியும் ஒளியுமாயும், சப்தமும், அதிர்வுகளும், உணர்வுகளுமாயும், அனைத்தையும் கண்காணிக்கிறார்.

சிவனே இந்த சரீரத்தை ஆரோக்கியமாக , உற்சாகமாக, வீரியமாக, தைரியத்துடன் முன் நின்று வழி நடத்துகிறார்.

சரீரத்திற்கு தேவையான சகல சம்பத்தும், ஆனந்தமும், ஐஸ்வர்யமும் வழங்கி வாழ்க்கையை மிக சிறப்பாக பேரானந்தத்துடன் வழி நடத்துகிறார். சிவனுக்கு கேடான கோடி நன்றிகள்.

வந்த வழியும் புரியவில்லை சிவனே

போகும் வழியும் தெரியவில்லை சிவனே

அடுத்த நொடியும் நிரந்தரமில்லை சிவனே

சொந்தங்கள் எதுவும் எமக்கு சொந்தமாவதில்லைசிவனே

பந்தங்கள் அனைத்தும் எமை பாதுகாப்பதில்லை சிவனே

உறவுகளிடமும் எமக்கு எந்தவொரு உரிமைகளுமில்லை சிவனே

வாழும் வாழ்க்கையும் உண்மையில்லை சிவனே

சொந்தமாக எமக்கு நீ வந்திடு சிவனே

பந்தமாக இருந்து என்னை நீ காத்திடு சிவனே

உறவாக உம்மை நினைத்து உரிமையோடு கேட்கிறேன் சிவனே

என் பிறவி கடன் முடிந்து நான் உன் திருவடி சேரும் வரை சிவனே

என்னை என்றும் காத்து அருள வேண்டும் சிவனே

நின் திருவடி சரணம் சிவனே சிவாயநம

என்னை சுற்றி இருக்கும் சக மனிதருக்கும்

சரீரத்தை சுற்றி இருக்கும் பேரண்டமாகிய மகா சக்திக்கும்,

சரீரத்தில் உள்ள சிற்றண்டமாகிய ஆன்ம ஆற்றல் சக்திக்கும்,

சரீரத்திற்கு உண்டான ஐஸ்வரியத்தை அள்ளித்தரும் பஞ்சமுக இயக்க சக்திக்கும்,

சிரம் தாழ்ந்த கோடான கோடி நன்றி.நன்றி. நன்றி.

மனிதர்களுடைய நினைப்பு , நான் தான் செய்தேன், நான் இல்லையென்றால் அவன் மிகவும் கஷ்டப்பட்டு இருப்பான். நான் காப்பாற்றவில்லை என்றால் அவன் வாழ்க்கையே வீணாகி இருக்கும்.இது போன்ற 

இன்னும் பல மடங்குக்குண்டான தகாத வார்த்தைகளை நான், நான், நான் என்று உபயோகித்து மனிதன் சம்பாதித்தது என்னவென்றால் பாவமூட்டைகளே பல தலைமுறைக்கு.

ஒரு குடும்பத்தில் தாய், தகப்பனுடைய சொல்லை மீறி, குழந்தைகள் ஒரு செயலை செய்வதும்,

செய்த செயலுக்கு குற்ற உணர்வு வரும் போது, தாய், தகப்பனுக்கு எவ்வாறு கோபமும், மன சங்கடமும் உருவாகிறதோ,

அதுபோல் இறைவன் ஆகப் பட்டவர் நமக்கு இயற்கை சூழல்களான காற்று,மழை,வெப்பம், உடலில் ஜீரணம், ஜீரணத்தின் கழிவுகள், சரீரத்திற்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இறைவன் மனிதருக்கு கொடுத்து விட்டு,

மனிதன் அதை அறிந்து கொள்ள முடியாத நிலைக்கு நான் தான், நான் தான் என்று கூறுவதனாலேயே,

மனிதனுக்கு வாழ்க்கையில் பெறுத்த கஷ்டமும், நஷ்டமும், வியாதியும் உருவாகிறது.

இறைவன் சகல ஜீவராசிக்கும் தேவையானதை கொடுத்து விட்டு, அதை மனிதன் அனுபவித்து விட்டு , சுயநலவாதியான மனிதன் , இறைவன் கொடுத்ததை மறந்து, நான், நான் என்று ரூபம் எடுத்து அவதார புருஷனாகிறான் மனிதன் , இந்த அவதாரமே மனிதனுக்கு பாவமே .

பணத்தை மனிதன் உருவாக்கினான். அந்த பணத்தை கொண்டு வித்தியாசம் பார்க்கிறான். ஆனால். இறைவன் எந்த விதத்திலும், எந்த காரணத்திலும் சகல ஜீவராசிகளையும் வித்தியாசம் பார்க்கவில்லையே

பணத்தை உருவாக்க மூலக்கூறுகள் பூமியில் இருந்து எடுக்கப்பட்டது என்றறியாமல் , விட்டு போகும் பணத்திற்கும், விட்டு போகும் சொத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதனாலேயே இறைவனின் கோபத்திற்கு ஆளாகி பெறுத்த பாவத்தை சம்பாதிக்கிறான்.

பாவத்தின் சம்பளம் தீராத கஷ்டமும், துக்கமும், வியாதியும் மரணமுமே.

ஆக நான் நான் நான் என்பதை உபயோகித்தால் வாழ்க்கையில் கஷ்டமும் வியாதியும் தான்.

நான் என்பதை மறந்து விட்டு, இறைவன் தான் சரீரத்தில் உள்ள ஆன்மாவையும், உயிரையும், சரீரத்தையும், சரீரத்திற்கு உண்டான சகல ஐஸ்வரியத்தையும், ஆனந்தத்தையும் வழி நடத்துகிறார் என்றுணர்ந்து,

இறைவன் தான் என் வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருகிறார் என்ற உணர்வுடன் , நாம் திசை திருப்பி வாழ்ந்தோமானால் நமக்கு வாழ்க்கையில் பிரச்சனையும் ,கஸ்டமும் ஏற்படாது.

நமக்காக வாழ்வதை விட்டு விட்டு, இறைவனுக்காக வாழ்வது சாளச் சிறந்தது. 

சரீரத்தில் இருக்கும் கடவுளை அவமதித்து விட்டு, கடவுளை காணாத இடத்தில் கடவுள் உள்ளார் என்று நினைத்து, ஆலயத்தில் வழிபடுவதை விட,

சரீரத்தில் உள்ள கடவுளை காண முயற்சித்து, கடவுளை கண்டு களித்து, மதித்து வாழ்வது இல்வாழ்க்கையில் பேராணந்தமே.

சரீரத்தில் உள்ள இறைவனை மனப்பூர்வமாக உணர்ந்து வாழ்ந்தால்,

அவரவர் இதயத்தின் அருகில் இதயக்கமலம் உள்ளது. இதயத்தையே மாற்றுகிற மருத்துவருக்கு இதய கமலத்தை தொடக்கூட முடியாது. அந்த இதயக்கமலமே அனாஹத சக்கரம். நம் ஆன்மாவின் இருப்பிடம் .

மூளையில் பினியல் சுரப்பி அருகில் இறைவனின் சிம்மாசன இருப்பிடம்.

ஆக நாம் தான் தோன்றியத்தனமாக நமக்காக வாழாமல் , நம்முடைய ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் வாழ ,இந்த இரண்டு இடத்தில் நம்முடைய பார்வையும் உணர்வையும் வைத்தால் , இறைவனே நம்மை வழிநடத்துவார் . உண்மையே.

1 comment: