Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, November 23, 2017

நிம்மதி தரும் கடவுளின் பாதம் ! நிர்மதி தரும் என் கைவாரம் ! பீழை தான் தந்தது பீடை உள்ள மனிதனால் !


to INANYA MAHA MUNIVAR
23-11-2017
நிம்மதி தரும் கடவுளின் பாதம் ! நிர்மதி தரும் என் கைவாரம் ! பீழை தான் தந்தது பீடை உள்ள மனிதனால் !
ஏழுநிலை
கீழே ஏழு உலகங்கள் இருப்பதாக பிதற்றுகிறான். பாதாள உலகம் என்றும் விளம்புகிறான். கடவுளை பாதளம் தேடி அலைந்தான் என்று கதை படித்தான். கதை படித்து முழுவதும் விளங்காமல் காலம் தெரியாத கயவனிடம் ஏது கூற ?
உன்னில் மேலே ஏழு நிலைகள். கீழே ஏழு நிலைகள். மொத்தம் பதினான்கு நிலைகள் ! பாதத்தில் அடியில் இரண்டு நிலைகள் உள்ளன. உன்னில் மேல்நிலை ஏழையும் கடந்தால் தான் கடவுளை அறிய முடியும். ஈரேழு உலகம் என்று இதைத் தான் சித்தர்கள், மகான்கள், ஞானிகள் அனைவரும் சொல்லிப் போனார்கள்.
உடலில் ஏழு ஆதார சுருதிகள், ஆறு சக்கரங்கள் உள்ளன. இவைகளை அறியாமல் ஞானம் தேடி புலம்புகின்றான் புற உலகில் !
அகத்தில் கழிந்தால் புறம் ஒடுங்கும் என்பதை புரியாமல் அலைகின்றான். ஒரு விநாடி சூட்சுமமே எல்லாம். ஆனால் யோகா, தியானம், தவம், விரதம் இன்னும் எத்தனையோ மடமைதனமான செயல்கள் கொண்டு தன்னை வருத்தி ஆதியில் கடவுளை மறந்தான். தன்னை கடக்காமல் விண்னை கடக்க நினைக்கின்றான்.
இங்கே எதுவும் நிலையில்லாதது என்னைத் தவிர !
காலம், சூரியன், சந்திரன், மனிதன் என இங்கே எல்லாம் மாறும் என்பதை உணர் ! ஆனால் நான், வானம், பூமி என்றுமே மாறுவதில்லை !
மனிதன் தான் வேஷம் போடுகின்றான் கடவுளிடம். கடவுளுக்கு கண் தெரியாது என்று எண்ணற்ற தவறுகள் செய்கின்றான். இங்கே நிலை, நிலை இல்லாதது எதுவென்று அறிந்து வணங்கினால் மனிதன் ஞானியாவான் ! கற்சிலைக்கு குடம், குடமாக பால் தயிரை, நெய்யை விரயமாக்கி கோமாளி போல் வாழும் குறை உள்ள மனிதனிடம் ஏது கூற ?
ஐயாயிரம் வருடங்கள் மனிதன் அலங்கோலப்படுகிறான். இரண்டாயிரத்து ஐந்நூரு வருடத்திற்கு முன்னால் கோயில் இல்லை ! கோபுரம் இல்லை ! கொடி மரங்கள் இல்லை ! குளங்கள் உண்டு ! மனிதன் நிம்மதியாய் வாழ்ந்தான். ஆனால் நான் என்று மார்தட்டி இப்போது நாயகனை (கடவுள்) அறியாது மாண்டு விடுகின்றான்.
என்னை பார்த்தவன் ஏழு நிலைகளையும் கடப்பான் ! எந்த தியானமும், தவமும் செய்யாமல் என் பின்னால் வருபவன் தன் ஏழு கீழ் நிலைகளையும் அறிவான் !
திடன் உள்ளவன் தப்பித்து கொள்கிறான். என்னுள் நிந்தித்து நின்று யோசிக்கின்றவன் நிர்மூலமாக போகின்றான். நான் நானாக எப்போதும் இருக்கின்றேன் ! ஆனால் நீ தான் நீயாக இல்லை. மனிதன் எப்போதும் மது உண்டவன் போல மயக்க நிலையில் நிற்கின்றான். கேட்டது கிடைத்தால் கடவுள் இருப்பதாக உளர்கின்றான். கேட்டது கிடைக்கவில்லை என்றால், நினைத்தது நடக்கவில்லை என்றால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறான். உன் கோபம் உன்னையே சுட்டெரிக்கும் என்பதை உணர் !
வம்பு பேசும் மானிடனே, எப்போது உணர்வாயடா ? என்னுள் ஆறு சூட்சுமம் எப்போது அறிவாயடா ? ஆனந்த நிலையில் எப்போதும் நான் ! ஆனால் நீ இல்லை. உன் ஆனந்தம் நான் காணவே ஆசைப்படுகிறேன் !
முயற்சி செய்யடா ! உன் முன்னால் நின்று நான் அள்ளித் தருகிறேன் ! திட நம்பிக்கை கொண்டு எதையும் செய். நான் உன் உறவு. என் மேல் திட நம்பிக்கை கொண்டு எதையும் தொடங்கு ! வெற்றி நிச்சயமடா !
சத்தியத்தின் தலைமகன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment