Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, November 23, 2016

முன்னால் வழியெல்லாம் வழியம்பலம் நிரம்ப கண்டேன். இந்நாள் வழியெல்லாம் மதுக்கடைகளை நான் கண்டேன். இது தானடா உன் விஞ்ஞான வளர்ச்சி !

Inanya Maha Munivar
24-11-2016
முன்னால் வழியெல்லாம் வழியம்பலம் நிரம்ப கண்டேன். இந்நாள் வழியெல்லாம் மதுக்கடைகளை நான் கண்டேன். இது தானடா உன் விஞ்ஞான வளர்ச்சி !
எது வளர்ச்சி ?
அறிவை தொலைத்து ஆர்பரிப்பது உன் வளர்ச்சியா ?
பயிர் நிலத்தை அழித்து வான் நோக்கி கோபுரம் கட்டுவதா உன் வளர்ச்சி ?
வீட்டின் முன்னால் உள்ள திண்ணையை அழித்து பிறருக்கு தீங்கு விளைவிப்பதா உன் வளர்ச்சி ?
கட்டிய மனைவி இருக்க எங்கேயோ தேடி அலைந்து ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை மீறுவது வளர்ச்சி அல்ல.
முறுக்கை தின்று மூடனாகிப் போனான் மனிதன். எழுச்சி இல்லா வாழ்வில் சூரிய வெளிச்சமில்லா வாழ்வை கொண்டு வாழ்கின்றான். விஞ்ஞானத்தில் அணுகுண்டை தயாரித்து பிறரை அழிப்பது தான் வளர்ச்சி என்று பிதற்றுகின்றான்.
முன்னால் வீட்டிற்கு கதவுகள் இல்லாமல் வாழ்ந்தான். இப்போது காவல் வைத்து, கவலையில் ஆழ்ந்து, கண் உறக்கம் இல்லாது வாழ்கின்றான். முன்னால் உயிர் போகும் வழி தெரிந்து வாழ்ந்தான். மரணத்தை கணித்து வாழ்ந்தான். எல்லாம் அறிந்து வாழ்ந்தான். இப்போது அறிவை தொலைத்து ஆணந்தமில்லாது வாழ்கின்றான்.
கை, கால் மடக்கி யோகா, தியானம் என்று சோம்பி உழைப்பை மறந்து உட்கார்ந்து சுகம் காண துடிக்கின்றான். வீட்டில் நூறு கடமைகள் இருக்க, இவன் கடவுளை தேடி, நாடு விட்டு, கண்டம் விட்டு, மலை ஏறி, மகத்துவம் இல்லாது வாழ்கின்றான். இருக்கும் இடத்தில் எல்லாம் இருக்க எங்கெங்கோ தேடி அலைகின்றான்.
முதலில் தன்னம்பிக்கை கொள் ! பின் உன் உள்ளிருக்கும் ஆண்மாவை சந்தோஷப்படுத்து ! கடவுள் உன்னை தேடி வருவான் ! தன் கடமையை செய்யாமல் கடவுளை தேடிக் கொண்டிருக்கின்றான். இந்த அற்ப மனிதனின் அறியாமையை என்ன சொல்வேன் ?
உன் அறிவியலும் ஆன்மீகம் தான் என்பதை மறவாதே ! ஆதிகாலத்தில் இருந்த அறிவியல் கோடான கோடி மடங்கு பெரியது ! முன்னால் ஆக்கத்திற்கு பயன்படுத்தினான். இப்போது நான் என்ற கர்வத்தில் அழிவிற்கு பயன்படுத்துகின்றான்.
சகதண்டமாருதம் உக உண்டமாருதம் உண்று தின்று உணராதிருப்பது ஏனோ ? சகத்தை சகதண்டம் என்று புலம்புகின்றாயே, உன் முதுகும், பாதமும் தட்டை வடிவாய் கொண்டாயே ? ஏனடா உணரவில்லை ?
வளர்ச்சி முதிர்ச்சியாகி மூச்சற்று கல்லறையில் அடங்கினாய். எது வளர்ச்சி என்று புரியாமல் இறக்கின்றாய். ஊன் வளர்த்தாய், உடல் வளர்த்தாய், உன் உயிர் வளர்த்தாயா ? ஊன் உடம்பை தேய வைத்தேன். திகைப்பார் யாருமில்லை. மதியை தேய்த்து வளர வைத்தேன். மதிகெட்ட மனிதன் மட்டும் மலராமல் இருந்தான். நொடிக்கு நொடி உடல் தேய்கிறது. இந்த அற்ப மனிதன் பிறந்த நாள் கொண்டாடுகிறான் ! உணரடா !
மரம் வளர்ச்சி ! மலர்ச்சி ! நீ உடல் வளர்த்தாய். பின் தேய்ச்சி, காய்ச்சி பஷ்பமாக கண்டேன். நகமும், நீள் முடியும் உருந்து முளைத்ததடா ! உன் ஊன் உடம்பு ஏன் முளைக்காமல் போனதடா ! ஆடும் ஆட்டமெல்லாம் ஆறடி குழிக்குள் அடக்கமாவதை மறந்து போனாயே ?
மரம் வளர்ந்து பிறருக்கு உதவ கண்டேன். நீ வளர்ந்து எதற்கடா உதவினாய் ? நீ வளர் ! உதவி செய்து உண்மை பேசி ஒழுக்கத்தில் நிறைவு பெறு ! நான் உன்னை உன் வாழ்வை வளர்ச்சியாக்கி மலர்ச்சியாக்குகிறேன். மரணம் இல்லா பெறு வாழ்வை கொடுத்து பேரழகாக்குகிறேன். சத்தியமாக !
நான் வளர்ந்தேன் ! மலர்ச்சியானேன் ! என் வளர்ச்சி சத்திய தர்மமடா ! நான் வளர்ச்சியாகி அகண்டமாய் விரிந்து கொண்டிருக்கின்றேன். ஆர்பரிக்கும் வெள்ளம் போல முதலில் ஓடி வருகிறாய். என் கையில் இருக்கும் தேன் (பொக்கிஷம்) கிடைக்கவில்லை என்று உடனே ஓடிவிடுகிறாய். தேனை லாவகமாக எடுத்தாலும் தேனீ கொட்டத்தான் செய்யும். எதுவும் இங்கு எளிதாக கிடைப்பதில்லை என்பதை புரிந்து கொள் !
எனக்குள் காத்திருப்பவன், தனது இலக்கையும், செல்வத்தையும் அடையாமல் இருக்க மாட்டான். பொறுமையோடு இருந்தால் பொக்கிஷம் கிடைக்கும் என்பது புரிந்தவனுக்கு தெரியும் ! என்னுள் கரைந்து, உன் கர்மம் பாவம் தொலைத்து, உணர்ந்து கிடைத்தால் சுகமோ சுகமானதடா !
2017 ஆம் ஆண்டு முதல் பகற் கொள்ளை பெருகும். பெண்கள் மானபங்கப்படுவர். மழைக்கு பருவகாலம் இருக்காது. பஞ்ச காலம் தலைவிரித்தாடும். என்ன செய்யப் போகின்றாய் ? வல்லரசு நாடுகள் எல்லாம் சொல்ல வொனா துயரத்தில் தவிக்கும் ! தென்னாடு வளர்ச்சியாகும் ! வட நாடுகள் வீழ்ச்சியாகும் ! எல்லா நாடுகளிலும் கடல் நீர் உட்புகுந்து தத்தளிக்கும். இனி வரும் காலங்களில் உலக மக்கள் தன் மதத்தை மறந்து, கடவுளை தேடி கதறி அழக் கண்டேன். தர்மாக்கள் என் வலது பரிஷத்தில் ஆணந்தமாக திளைக்க கண்டேன். சொலியில் கூட சுகம் ஒன்று கண்டேன். ஆனால் உன் தோளில் புழு மொய்க்க கண்டேன். உணரடா !
வளர்ச்சி தெரியா வாழ்வில், நீ எழுச்சி பெறுவது எப்போதடா ?
வளர்மதியில் எழுச்சி நானடா !
நான் இநன்யா !

No comments:

Post a Comment