Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 8, 2017

நான் எதிரிலி ! என் ஏற்றனை உனக்காக காத்திருக்கிறது ! எப்போது உணர்வாயடா ? தேடுகின்றேன்


Inanya Maha Munivar
 09-03-2017
நான் எதிரிலி ! என் ஏற்றனை உனக்காக காத்திருக்கிறது ! எப்போது உணர்வாயடா ?
தேடுகின்றேன்
பொல்லா உலகில் நல்லோரை தேடுகின்றேன். தர்மத்தின் சாயல் இருந்தாலும் கர்ம எண்ணங்களோடு உணர்வில்லா திரியும் கர்ம மனிதர்களையே யுகத்தில் நிறைய கண்டேன். நான் யுகத்தை மாற்ற வந்தேன். மனிதன் மாறுவான். போகின்ற வழி தெரியாமல் புத்தி பேதலித்து அலைகின்றான். நான் கைபிடித்து கரை சேர்க்க நினைத்தால் குழம்பி திரிகின்றான். மனம் நிறைய வஞ்சவ சாயல் வைத்து என் நாமம் சொல்கின்றான். தன் துன்பத்திற்கும், வீட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு கடவுளை குற்றம் சொல்லி காலத்தை விரயமாக்குகின்றான்.
எப்பொழுது தன் துன்பத்திற்கு தானே காரணம் என்று புரிந்து தெளிவடைகின்றானோ அன்றே மலர்வான். வாழ்வில் மாற்றம் காண்பான். மாரூஸ்தலி பயனம் எளிதாக்க இங்கே யாரும் அறிய முற்படவில்லை. என்ன உரைத்தாலும், ஏது கற்றாலும் ஏதோ விரக்தியில் வாழ்கின்றான். இறப்பும், பிறப்பும் புரியாது பேதலித்து வாழ்கின்றான். வாழ்வதா, சாவதா என்று புரியாமல் விரக்தியில் வாழ்கின்றான். துன்பத்தை எதிர் கொண்டு வாழ்வை எளிதாக்க இங்கே யாருக்கும் துணிவில்லை. கோழை போல வாழ்வை துறக்க நினைக்கின்றான்.
கோமாளியைப் போல வாழ்கின்றான். தன் குறை பார்க்காமல் பிறர் குறை தேடி புலம்பி திரியும் மானிடா, உன்னை எப்போது தேடுவாயடா ? தன் குடும்பம், தன் பொருள், தன் வீடு என்று சுயநலமாக வாழ்கின்றான். ஆனால் துன்பம் வந்தால் என்னை குறை சொல்லி திரிகின்றான்.
நான் அகண்டமாய் விரிகின்றேன் ! ஆளுமை என்னுள் இருப்பதை புரியாமலும் என்னுள் இருக்கும் ஞானத்தை எப்படி அடைய வேண்டும் என்று அறியாமலும் வாழ்கின்றான்.
தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட நூறு நல் ஆத்மாக்களை தேடிக் கொண்டிருக்கின்றேன். இந்த யுகத்தை நல் யுகமாக மாற்றுவேன். என் நூற்றி பதினோரு கோடி முனிவர்களின் துணையோடு என் சதுரங்க சேனா படை தலைமை ஏற்று சதிராட எதிர் நோக்குகிறேன். தைரியமும், தன்னம்பிக்கையும், விவேகமும், வேகமும் கொண்டவனை தேடுகின்றேன்.

உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம் ! சோர்வாய், விரக்தியில் இருப்பவனிடம் செல்வம் தங்குவதில்லை. வாழ்வின் பாதை தெரிவதில்லை.
நான் முற்றும் துறந்தவன் ! முழுமையின் வடிவம் நான் ! அரசு போல் ஆள்பவன், ஆல் போல தளைத்து வாழை போல் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவன். எனை அறிந்தவன் வாழ்வான் !
நீ நலமாக இருக்க தினமும் பிரபஞ்சம் சென்று என் அரசாங்கத்தில் முறையிடுகின்றேன். கோழை போல் வாழாதே ! உன் வீரியம் கல்லறை வரை இருக்கட்டும். உன் பெயரை வரலாற்றில் பதிய வை ! நீ முயற்சித்தால் நான் உனக்கு துணையாக வருகிறேன். ஆனாலும் வீரிய மிக்கவனையும், தன்னம்பிக்கை உள்ளவனையும் என் வாயிலில் நின்று எதிர் நோக்குகின்றேன்.
எப்போதும் விரக்தியோடு இறப்பை பற்றி நினைப்பவனை என் நெஞ்சில் நிறுத்துவதில்லை. என் தந்தை யாகவா தனது ஐம்பத்து நான்கு பிறவிகளிலும் நல்லோர்களை நான் காணவில்லை என்று சொன்னார்கள் ! ஆனால் நான் நல்லவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் காட்டுகிறேன் என்று 1999 இல் வாக்கு கொடுத்திருக்கின்றேன். நிச்சயம் நூறு வலிய, வீர , பராக்கிரம செயல் வடிவம் கொண்ட நல் ஆத்மாக்களை பார்ப்பேன் !
நான் சோதிக்க வரவில்லை. உன்னை சாதிக்க சொல்லவே வந்தேன் ! ஞானத்தை கொடுத்து உலகை மாற்றும் யுக்தியை சொல்லித் தர வந்தேன். வாய் மூடி, விழி மூடி, செவி மூடி, உன் மூடி எப்போது உணர்வாயடா ? மண் மூடி போகும் முன் என் மூடி எப்போது அறிவாயடா ?
உனை தட்டி எழுப்பவே இந்த யுகம் வந்தேனடா ! நான் தேடுகின்ற நல் ஆத்மாக்களில் நீயும் ஒருவனாக இருக்க ஆசைப்படு ! அத்தனை பேரின்பமும் உன் காலடியில் இருப்பதை உணர்வாய் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment