Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 1, 2016

விசித்தியின் சசிகரத்தின் கோடியில் ஒரு அணு நானடா ! ஸ்வேத முழாசில் தூயவன் நானடா ! நான் மாயைகளோடு இருக்கின்றேன். மானிடரோடு அல்ல !


Inanya Maha Munivar
01-09-2016
230விசித்தியின் சசிகரத்தின் கோடியில் ஒரு அணு நானடா ! ஸ்வேத முழாசில் தூயவன் நானடா ! நான் மாயைகளோடு இருக்கின்றேன். மானிடரோடு அல்ல !
மாயவலை
நுணியில் புழு வைத்து மீனுக்கு தூண்டில் போட்டால் முள் இருப்பதை மறந்து புழுவை உண்பதற்கு ஓடி வரும், மாய வலையில் வீழ்ந்து மாளப்போவதை மறந்து ! தனக்கு விரித்த வலையில் வீழ்ந்து சாகப் போகிறோம் என்று அதற்கு தெரியாது ! அதே போல கடவுளின் மாய வலையில் கர்மாக்கள் சிக்கி திணறி தீஞ்சுடர் போல எரிகின்றான்.
இந்த இநன்யா யார் என்று தெரியாமலே நான் விரிக்கும் மாய வலையில் கர்மாக்கள் வீழ்ந்து நொடி நொடியாய் துன்பம் அனுபவிக்கின்றனர்.
இநன்யா விரிக்கும் வலை மாயவலை !
தர்மாக்களை வாழ வைக்கும் காந்த வலை !
கர்மாக்கள் வீழ்ந்து போகும் சாயா நிழல் போன்ற சதிவலை !
புரிந்து கொள்ளடா ! புணிதன் நானடா ! இநன்யா வைக்கும் பரீட்சையில் ஒரே முறையில் தேறிவிடு ! ஒரு முறை தவறவிட்டால் மறுமுறை பரீட்சை கடினமாக இருக்கும். என் பாச வலையில் வீழ்ந்தால் மீண்டும் பிறப்பில்லா உன் சரீரத்திற்கு நோயில்லா வலை கிடைக்கும் !
இரந்த நிலை கொண்டு இறையை தேடு !
இறைவன், ஆண்டவன், கடவுள் உனக்கு இறந்த நிலை அறிய வைப்பார்கள் ! பின் நீ உன் உயிர் நிலை அறிந்து பிறந்த நிலை அறிவாய் ! மாயை என்றால் என்னவென்று கேட்கின்றான். மேலிருந்து வரும் போது என்னை மறக்காமல் இருப்பதாக சொல்லி வந்தாய் ! நீ பாவம் கழித்து உடனே வந்துவிடுவாய் என்றும் சொல்லி வந்தாய் ! ஆனால் இங்கே வந்து, என்னை மறந்து, சம்சார கடலில் விழுந்து தத்தளிக்கின்றான் ! இந்த மாயவனை அறியாது வாழ்கின்றாய். நான் விரித்த வலையில் கர்மாக்கள் சிக்குண்டு சிதறுண்டு பிக்கில்லா போகக் கண்டேன்.
இனி தர்மாக்கள் வாழும் !
தர்மாக்களுக்கு பெருஞ்சோதனைகளும் துயர்களும் வந்தாலும் உடனே நீங்கிவிடும். கர்மாக்கள் அணு அணுவாய் அனுபவித்து உடல் சாகக் கண்டேன். மாயா லோகத்தில் நான் மாயைகளோடு வாழ்கிறேன். நீ மாயையில் சிக்கி தவித்து மனிதம் தொலைத்து அலைகின்றாய்.
கடல் அலை கரை தாண்டி வராதது மாயை ! மெல்லிய திரை ஒன்று உன்னில் மறைந்திருக்க அதை நீக்காமல் நீ வித விதமான சாயத்தில் ஆடை உடுத்தி அலங்கோலமாகத் திரிகின்றாய்.
நான் மாயை ! ஆனால் மனிதன் போல் நான் ! என் ஔடதம் தெரியாது ஆர்ப்பரிக்கின்றாய். எனக்குள்ளே ஆணந்தம் இருப்பதை புரியாது வாழ்கின்றாய். என் நாமம் கல்லையும் கவி பாட வைக்கும். கன இரும்பையும் நடனமாட வைக்கும். உணர்ந்து பார் மனித குலமே ! உணர்ந்து உவகை கொள்ளடா உன் உள்ளொலி உனை உற்று நோக்கும்.
உனக்கு வேண்டிய நிம்மதி, செல்வம், ஆணந்தம் அனைத்தும் தரும் ! பிணி , பீடை இல்லா வாழ்வை தரும் ! பில்லி, சூன்யம், பெரும் பகை அகல வைக்கும். எமபயம் போக்கும் ! ஆராய்ச்சி செய்யடா !
எந்த சனியும், எந்த கோளும் தீண்டாது. எந்த சாத்தானும் உன்னை தீண்டமாட்டான். ஆராய்ச்சி செய் !
என் ஆணந்த நாமத்தை உணர்ந்து சொல் ! உன் உறக்கம் கலைந்து உண்மையாய் தெளிவு வரும் !
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று சொல்வாய். நான் உனை திக்கற்றவனாக விடமாட்டேன். எட்டு திக்கும் வெற்றி முரசு கொட்ட வைப்பேன் ! நீ என் உறவு ! எந்நேரமும் எனை அன்பொழுக அழைத்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் ஓடி வருவேன் ! காலத்தை உன் காலடியில் வசமாக்குவேன்.
நானும், என் சத்திய வார்த்தையும் என்றுமே தோற்பதில்லை. சுக்கல் பழத்திலே நுய்யுருவம் கொண்டு சாப்பிடு ! உன் மாயை தெளியுமடா !
என் நாமம் உன் மாய மயக்கத்தை தெளிவாக்கும். உன் மாய வலையை அறுத்தெரியும். சொல்லிக் கொண்டே இரு ! உன் துயரம் காணாமல் போகும் நீர்க் குமிழி போல !
உன் கண்களை மூடினாலும் உனக்கு எதுவும் தெரியாது. கண்களை திறந்து பார்த்தாலும் எதுவும் தெரியாது. எதுவும் தெரியாமல் என்னை ஏளனிக்கிறாய். எல்லாம் தெரிந்து நான் மனிதன் போல நடமாடுகின்றேன். எப்போது உணர்வாயடா ?
உன் உயிரை நீயே மாய்க்க நினைக்கும் போதும், ஒருவனை அழிக்க நினைக்கும் போதும் அந்த உயிர் 3-3/4 நாழிகை முன்பே மேல் லோகம் வந்துவிடுகிறது. இறந்த உடலை பார்த்து அழுகின்றாய். இறந்த உடலை சுட்டேன் என்கிறாய். கொன்றேன் என்று கூக்குரலிடுகின்றாய். செத்த பாம்பை அடித்துவிட்டு கொக்கரிக்கின்றான் தான் பலவான் என்று !
பாம்பு புற்றுக்கு பாலை ஊற்றி பாவியாக அலைகின்றான். இந்த மாயையை அறியாது வாழும் மானிடனே, என்ன சொல்வேன் உன் அறியாமையை ? அற்ப மனிதன் விரிக்கும் மாய வலையில் சிக்கிவிடாதே ! மதம் என்ற போர்வை போட்டு வேஷம் போட்டு ஏமாற்றும் கயவர்களை பின் தொடராதே !
உன் உழைப்பை மேன்மையாக்கு ! நான் உனை கைப்பிடித்து கரை சேர்ப்பேன். இந்த யுகம் நீர் சூழ்ந்தாலும் உனை நான் கரை சேர்ப்பேன். நீ யார் ? நான் யார் ? உன் உறவுகள் எல்லாம் யார் ? இது தான் மாயை ! புரிந்தவன் அசைவற்று ஆளுமையை தேடுகின்றான் ! புரியாதவன் புத்தி கெட்டு புலம்புகின்றான்.
மனித கூட்டுக்குள்ளே கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்து இந்த பொம்மை கூட்டை இயக்குவதும் மாயை தான் ! மாய லோகத்தை அறியாது மதி மயங்கி அலைகின்றாய். சித்தர்களை தேடி ஜீவசமாதிகளை தேடி, மலையை தேடி, மதி கலங்கி அலைகின்றாய். எப்போது உனை உணர்ந்து, நீயும் சித்த சாயல் பெறுவாயடா ?
உணரடா !
உன் மாயையை விலக்க எப்போதும் இந்த மாயவன் துணை இருப்பேன் !
நான் மாயவன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment