Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 4, 2015

சௌந்தர்ய லஹரி தமிழில் 51--------75

சௌந்தர்ய லஹரி தமிழில்  51--------75

51. "தேவியின் பார்வையில் 8 ரஸங்கள்" [ஸர்வஜன வச்யம்]
சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா
ஸரோஷா கங்காயாம் கிரிசசரிதே விஸ்மயவதீ i
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ சௌபாக்ய ஜனனீ
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்ருஷ்டி: ஸகருணா ii 51
அம்மா ! உன் கண்கள் சதாசிவனிடத்தில்ஸ்ருங்கார ரசமும் ,மற்றவர்களிடத்தில் வெறுப்பும் ,சிவனின்  மற்றொரு மனைவியானகங்கையிடம் கோபமும் , சிவனின் லீலைகளைக் கேட்டு அதனால்ஆச்சர்யமும்,  அவர் கழுத்தில் உள்ள பாம்பிடம் அச்சமும்நெற்றிக்கண்தாரை மலர் போல் சிறிது சிவந்து இருப்பதால் வீர ரசத்துடனும்உன்சக தோழிகளிடம் ஹாஸ்யமும் , என்னிடம் மட்டுமே கருணாரசத்துடனும் , இப்படியாக பல ரசங்களுடன்  கூடியதாக இருக்கிறது .

52. "
மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்" [காமஜயம்: காது, கண்களின் ரோக நிவாரணம்]
கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம் பேத்துச்-சித்தப்ரசம-ரஸ-வித்ராவண-பலே i
இமே நேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட-ஸ்மரசர-விலாஸம் கலயத: Ii 52
 மலையரசன் பெற்ற மாணிக்கமே ! உன் கண்கள் காதுவரைநீண்டிருக்கிறது . இமை மயிர்கள் அம்பிலிருக்கும் இறகுகள் போல்உள்ளது . இந்தக் கண்களைப் பார்த்தால் காதுவரை இழுத்து விடப்பட்டமன்மத பாணம் போல் தோன்றுகிறது .  இந்தக் அழகிய கண்கள் , மூஉலகத்தையும் எரித்த சிவனுடைய மனதில் சலனத்தைஏற்ப்படுத்துகிறது . 

53. "
மும்மூர்த்திகளையும் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப் படைக்கும் கண்கள்" [தேவி ப்ரத்யக்ஷம்; ஸகலலோக வசியம்]
விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்சனதயா
விபாதி த்வந்நேத்ர த்ரிதய மித-மீசானதயிதே i
புன: ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண-ஹரி-ருத்ரானுபரதான்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ ii 53
சிவனின் துணைவியே ! அஞ்சனத்துடன் ( கண் மை ) கூடியஉன்  அழகிய  மூன்று கண்களும் வெண்மை , சிவப்பு , கறுப்பு ,நிறங்களில் உள்ளது . மகா பிரளய காலத்தில் பிரம்மா , விஷ்ணு ,ருத்திரன் ஆகிய மூவரும் அழிந்து , உன்னுள் மறைந்திட , அவர்களைமீண்டும் படைப்பதற்காக உன் கண்கள்முக்குணங்களுடன் (சத்வ,ரஜஸ்,தமோவிளங்குவதாக தோன்றுகிறது . 

54. "3
வர்ணங்கள் கொண்ட கண்ரேகைகள் # புண்ணிய நதிகளைப் போல்வன" [ஸர்வபாப நிவிருத்தி; உபஸ்தரோக நிவாரணம்]
பவித்ரீ-கர்த்தும் : பசுபதி பராதீன-ஹ்ருதயே
தயாமித்ரைர்-நேத்ரை-ரருண-தவல-ச்யாம-ருசிபி: I
நத: சோணோ கங்கா தபன-தனயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்த்தான-முபநயஸி ஸம்பேத-மநகம் ii 54
 சிவனையே எப்போதும் மனதில் நினைத்திருக்கும் அன்னையே !  உலகமக்களை  புனிதமாக்கும் , சிவப்பான சோனா நதி , வெண்மையானகங்கா நதி , கறுப்பான யமுனா நதி , இவைகளின் சங்கமம்  போல்இருக்கும் உனது  கண்களில் உள்ள  சிவப்பு , வெண்மை , கருப்பு , என்றமூன்று ரேகைகளும்  எங்களை புனிதமாக்கவே உன்னால்கருணையுடன்   படைக்கப்பட்டது  என்பதில் சந்தேகம் இல்லை . 

55. "
கண்கள் மூடாமல் இருக்கும் காரணம்" [ரக்ஷிக்கும் சக்தி; அண்டரோக நிவாரனம்]
நிமேஷேன்மேஷாப்யாம் ப்ரளய-முதயம் யாதீ ஜகதீ
தவேத்யாஹு: ஸந்தோ தரணிதர-ராஜன்யதனயே i
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மசேஷம் ப்ரளயத:
பரித்ராதும் சங்கே பரிஹ்ருத-நிமேஷாஸ்-தவ த்ருச: Ii 55
 அம்மா ! நீ கண்களைத் திறப்பதால் உலகம் தோன்றுவதாகவும் ,கண்களை மூடுவதால் அழிந்துவிடுவதாகவும் கற்றறிந்த ஞானிகள்கூறுகின்றனர் . அப்படி நீ கண் திறந்தபோது உண்டான  இந்த உலகம் ,கண்ணை மூடினால்  அழிந்துவிடுமே என்று ( உலக நலத்தை மனதில்எண்ணி ) கருணையுடன் நீ மூடாத கண்களுடன் இருப்பதாகநினைக்கிறேன் .  

56. "மீன்களின் அழகையும் நீலோத்பலத்தின் அழகையும் வெல்லும் கண்கள்" [பந்த விமோசனம்; நேத்ர தோஷ நிவாரணம்]
தவாபர்ணே கர்ணே ஜபநயன-பைசுன்ய-சகிதா
நிலீயந்தே தோயே நியத-மனிமேஷா: சபரிகா: I
இயம் ஸ்ரீர்-பத்தச்சத-புடகவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிசி விகடய்ய ப்ரவிசதி ii 56
தாயே ! காதுவரை நீண்ட அழகிய மீன் போன்ற கண்களை உடையவளேஉன் கண்கள் காதுகளிடம் சென்று தங்களைப் பற்றிக் கோள்சொல்கின்றனவோ என்று பயந்த கறுமையான பெண் மீன்கள் ,  மூடாதகண்களுடன் தண்ணீரில் ஒளிந்து கொண்டு இருக்கின்றன . உன்கண்களில் உள்ள லக்ஷ்மியும் பகலில் கருங்குவளை மலர்களை விட்டுஉன் கண்களிடம் வந்தும் , இரவு நேரத்தில்   அம்மலரிடையேசென்று (இரவில்  மலர்வதால்அதன் இதழ்களைத் திறந்து கொண்டு உள்ளே உறைகிறாள் . 

57. "
நாட்டிலும் காட்டிலும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு போன்ற கடாக்ஷம்" [ஸகல ஸௌபாக்யம்]
த்ருசா த்ராகீயஸ்யா தரதலித நீலோத்பல-ருசா
தவீயாம்ஸம் தீனம் ஸ்னபய க்ருபயா மாமபி சிவே i
அனேனாயம் தன்யோ பவதி தே ஹானிரியதா
வனே வா ஹர்ம்யே வா ஸமகரநிபாதோ ஹிமகர: Ii 57
சிவனின் துணைவியே ! சற்றே திறந்திருக்கும் உன்னுடைய அழகியநீண்ட கருங்குவளை போன்ற கண்கள் என்மீதும் பாரபட்ஷமின்றிகருணைப் பார்வையை வீசட்டும் . அதனால் நானும் பயனடைவேன் .சந்திரன் எப்படி பாரபட்ஷமின்றி காடு , அரண்மனை என்று பாராமல் தனகிரணங்களை வீசுகின்றானோ , அதுபோல் என்மீதும் உன் பார்வைபடட்டும் . அதனால் உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது ? 

58. "
மன்மதபாணம் போன்ற கடக்கண் பார்வை" [காமஜயம்; ஸகலரோக நிவிருத்தி]
அராலம் தே பாலீயுகல-மகராஜன்யதனயே
கேஷா-மாதத்தே குஸுமசர கோதண்ட-குதுகம் i
திரச்சீனோ யத்ர ஸ்ரீஅவணபத-முல்லங்க்ய விலஸன்
அபாங்க வ்யாஸங்கோ திசதி சரஸந்தான-திஷணாம் ii 58
தாயே !  மலையரசன் மகளே ! உன்னுடைய கண்களுக்கும்காதுகளுக்கும் மத்தியில் உள்ள இரு வளைவான கன்னங்களைப்பார்த்தால் மன்மதன் வில் என்றுயார்தான் நினைக்க மாட்டார்கள் ?இந்த கன்னங்களில் உன் கடைக்கண் பார்வை காதுகளைத் தாண்டிஒளிர்வதால்  உன் கண்களையே பாணங்களாகக் கொண்ட  மன்மதன் பாணங்களைச் செலுத்துவது போல்  தோன்றுகிறதே ! 

59. "
மன்மதனுடைய ரதம் போன்ற முகம்" [ஸர்வ ஜன வச்யம்]
ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித- தாடங்க-யுகளம்
சதுச்ச்க்ரம் மன்யே தவமுகமுதம் மன்மதரதம் i
யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத-மர்க்கேந்து-சரணம்
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே ii 59
அம்மா ! கண்ணாடி போன்ற உன் இரு கன்னத்தில் , உன்னுடையகாதிலுள்ள தோடுகள் பிரதிபலிக்கிறது . அதனால் உன் முகம் நான்குசக்கரங்கள் உள்ள மன்மதனுடைய  ரதமாகத்  தோன்றுகிறது . இந்த உன்முகமாகிய  ரதத்தில் ஏறிக்கொண்டு மன்மதனானவன் , சூர்ய ,சந்திரர்களை ரதமாகக் கொண்ட , பூமி என்னும் ரதத்தில் ஏறியிருக்கும்சிவனுடனேயே , போர்  புரியத்  தயாராக இருக்கும் வீரனாகிறான் . 

60. "மதுரமான சொல்லோசை" [வாக்குப்பலிதம் ; ஊமையையும் பேச வைப்பது]
ஸரஸ்வத்யா: ஸூக்தி-ரம்ருதலஹரீ கௌஷலஹரீ:
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண-சுலுகாப்யா-மவிரலம் i
சமத்கார-ச்லாகாசலித-சிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ்தாரை: ப்ரதிவசன-மாசஷ்ட இவ தே ii 60
சிவனின் துணைவியே !  அமிர்தம் போன்ற இனிமையான உன்னுடைய பேச்சுகளை  கல்விக்கு அரசியான சரஸ்வதி , அசையாமல்  ,இடைவிடாமல் , ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறாள் . உன்பேச்சிலுள்ள ரசங்களை அறிந்து , வியப்பினால் , அங்கும் , இங்கும்தலையை அசைத்த வண்ணமே இருக்கும் சரஸ்வதி தேவியின்காதுகளிலுள்ள குண்டலங்கள் ,  சப்தம் செய்வது , உன்  பேச்சுகளைஆமோதிப்பது போல் இருக்கிறது .  

61. "
மூக்குத்தி முகத்தின் அழகு" [மனோஜயம்; லக்ஷ்மீ கடாக்ஷம்]
அஸௌ நாஸாவம்சஸ்-துஹிநகிரிவ்வம்ச-த்வஜபடி
த்வதீயோ நேதீய: பலது பல-மஸ்மாக-முசிதம் i
வஹத்யந்தர் முக்தா: சிசிரகர-நிச்வாஸ-கலிதம்
ஸம்ருத்தயா யத்தாஸாம் பஹிரபி முக்த்ஹாமணிதர: Ii 61
அம்மா ! முத்துக்கள் நிறைந்ததாகக் கூறப்படும் இளமூங்கில் போல்இருக்கும் உன்னுடைய மூக்கிலிருந்து , நீ வெளிவிடும் மூச்சுக் காற்றிலிருந்து , வெளிவரும் ஒரு முத்து மணியானது , நீஅணிந்திருக்கும் முத்து மூக்குத்தியாக ஆனது போல் தோன்றுகிறது .அந்த   முத்து மூக்குத்தியானது எங்களுக்கு எல்லாவிதமானநன்மைகளையும் தரட்டும் .   

62. "
உதடுகளின் அழகு" [நல்ல நித்திரை]
ப்ரக்ருத்யா ஆரக்தாயாஸ்-தவ ஸுததி தந்தச்சதருசே
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ருமலதா i
பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலன-ராகா-தருணிதம்
துலா-மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேதகலயா ii 62
 தாயே ! அழகிய பல் வரிசை  கொண்டவளே ! உன்னுடைய  அழகானசிவந்த உதட்டிற்கு  ஈடாக எதையும் கூற முடியாது . ஒரு சமயம் பவழக்கொடி பழம் தந்தால் , அது ஈடாகலாம் .  கோவைப் பழம் கூட ,உன்னுடைய சிவந்த உதட்டின் நிறத்தைப் பிரதிபலிப்பது போல்இருப்பதால் ,  அது துளி அளவு கூட சமமாக முடியாமல் ,வெட்கப்படுகிறது . 

63. "
புன்சிரிப்பின் அழகு" [ஸர்வஜன ஸம்மோஹனம்]
ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் தவ வத்ஹன-சந்த்ரச்ய பிபதாம்
சகோரணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா i
அதஸ்தே சீதாம்சோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சிகதியா ii 63
 தாயே ! உன் நிலவு போன்ற முகத்தில் உள்ள இனிமையானஒளிமயமான  புன்னகையை , நிலவு  ஒளி  என்று  நினைத்துக் குடித்த சகோரபட்சிகள் , உன்  அமிர்தம் போன்ற இனிமை ஒளியால் திகட்டல்கொண்டு , அதை மாற்றிக்கொள்ள நினைத்து , சந்திரனுடைய  அமிர்த ஒளிக்கிரணங்களை , புளித்த கஞ்சியாக எண்ணி அதை இரவு நேரத்தில்குடிக்கின்றன . 

64. "நாவின் வர்ணனை" [ஸரஸ்வதி கடாக்ஷம்]
அவிச்ராந்தம் பத்யுர்குணகண-கதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா i
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருச-தச்சச்சவி-மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா ii 64
அம்மா ! கற்புக்கரசியான நீ ,  எப்பொழுதும்  உன் கணவனின்பெருமைகளைத் திரும்பத்   திரும்பச்  சொல்வதால் , புனிதமான உன்நாக்கு , செம்பருத்திப்  பூவைப் போல் சிவந்த நிறமாகவே  இருக்கிறது .உன் நாவின் நுனியில் இருக்கும் வாணியின் சுத்த வெண்மை நிறமானதுமாணிக்கம் போல் சிவந்த நிறமாகவே  மாறிவிட்டது . 

65. "
தேவியின் தாம்பூல மஹிமை" [வெற்றி, வாக் விலாஸம்]
ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி:
நிவ்ருத்தைச்-சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்யா-விமுகை:i
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசிவிசத-கர்பூரசகலா
விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா:ii 65
தேவீ ! அசுரர்களுடன் போர் செய்து திரும்புகின்ற முருகன் , விஷ்ணு ,இந்திரன் ஆகியோர்  தங்களுடைய வெற்றியை உன்னிடம் தெரிவிக்க வருகின்றபோது , அவிழ்த்துவைக்கப்பட்ட  தலைப்பாகையை கையிலும்அவிழ்க்காத கவசங்களுடனும் உன்னை வணங்கி ,  சண்டிகேஸ்வரருக்குச் சொந்தமான சிவ நிர்மால்யத்தை மதிக்காமல் , நீ வாயில் மென்று தருகின்ற பச்சைக்  கற்பூரத்துடன் கூடிய  தாம்பூலக்கவளங்களை ஆசையுடனும்  , பக்தியுடனும் மென்று சாப்பிடுகிறார்கள் . 

66. "தேவியின் குரல் வீணையினும் இனியது" [இன்சொல்; ஸங்கீத ஞானம்]
விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதானம் பசுபதேஸ்
த்வயாரப்தே வக்தும் சலிதசிரஸா ஸாதுவசனே i
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் ii 66
தாயே ! சரஸ்வதியானவள் , சிவனுடைய  புகழைத் தன்னுடையவீணையில் இசைக்க ,  நீயும்  மனமகிழ்ந்து ,  ஆகா ! என்று , அதனைப்புகழ , உன் இனிமையான குரல் வீணையின்   ஒலிதனைப் பழிப்பதுபோல்இருப்பதைக் கேட்டு,வெட்கமடைந்த கலைவாணி ,வீணையை  உறைத்துணியால் நன்றாக  மறைகின்றாளே !   

67. "
மோவாய்க்கட்டையின் சிறப்பு" [தேவியின் ப்ரஸன்னம்]
கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹினகிரிணா வத்ஸலதயா
கிரிசேனோ-தஸ்தம் முஹுரதரபானா-குலதயா i
கரக்ராஹ்யம் சம்போர் முக-முகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மௌபம்ய-ரஹிதம் ii 67
தாயே ! மலையரசன் குலவிளக்கே ! உன்  தந்தையால் உனதுமுகவாயும்  அளவற்ற பாசத்தினால் கைவிரல்  நுனியால்தொடப்பட்டதும் , உன் கணவனாகிய சிவனின் கைகளால் அதர பானம்செய்யும் நினைவுடன் அடிக்கடி உயரத்தூக்கப் பட்டதுமான , உன் ஈடுஇணையற்ற  முகவாயானது , உன்னுடைய  முகமாகிய கண்ணாடிக்குபிடி போல் இருக்கிறது . இந்த அழகான முகவாயை நான் எப்படிவருணிப்பேன் ? 

68. "
முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து" [ராஜ வச்யம்]
புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முக-கமல-நால-ச்ரிய-மியம்
ஸ்வத; ச்வேதா காலா-கரு-பஹுல-ஜம்பால-மலினா
ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா ii 68
  அம்மா ! சிவன் உன்னை எப்போதும் தழுவுவதால் ஏற்படும்மயிர்க்கூச்சலினால்  முள்ளு முள்ளாகத் தோன்றும் உன் கழுத்து , உன்முகமான தாமரைக்கு , முள் கூடிய தாமரைத் தண்டு போல்தோன்றுகிறது . உன் கழுத்திலுள்ள வெண்முத்து மாலையானது ,உன் கழுத்தில் பூசப்பட்ட  அகருவினால் , கறுமை நிறம் அடைந்து , சேற்றில்உள்ள தாமரைக் கொடிபோல் தோன்றுகிறதே ! 

69. "கழுத்தில் பிரகாஸிக்கும் 3 ரேகைகள்" [ஸங்கீத ஞானம்]
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதிக-நிபுணே
விவாஹ-வ்யானத்த-ப்ரகுணகுண-ஸங்க்யா ப்ரதிபுவ: I
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவ தே ii69
அம்மா ! கதி ,கமகம் ,கீதம் என்ற இசையில் வல்லவளே ! உன்கழுத்திலுள்ள முன்று ரேகைகளும்சிவன் உனக்கு திருமணநாள் அன்றுஅணிவித்த மங்கள சூத்திரத்தின் அடையாளம் போலும் .  இனிமையானசங்கீதத்திற்கு ஆதாரமான சட்ஜம் ,மத்யமம் ,காந்தாரம் என்ற  இவைகளின்  அடிப்படைகளைக்   காட்டும் எல்லைகள் போல்விளங்குகிறது .  

70. "தாமரைக்க்கொடிகள் போன்ற 4 கைகள்" [சிவ அபராதத்திற்கு சாந்தி]
ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ஸ்ருணாம்
சதுர்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை: I
நகேப்ய: ஸந்த்ரஸ்பன் ப்ரதம-மதனா தந்தகரிபோ:
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபயஹஸ்தார்ப்பண-தியா ii 70
தாயே ! அபயாம்பிகா ! ஒரு சமயம் பிரம்மாவினுடைய ஐந்தாவதுதலையை சிவனும் கிள்ளியதால்அவருடைய விரல் நகங்களுக்குபயந்து நடுங்கிய  பிரம்மா , உன்னிடம் சரண் அடைந்து , தன்னுடைய நான்கு தலைகளுக்கும் ஒரே நேரத்தில் உன் நான்கு கைகளால் அபயம்கிடைக்கும் என்று எண்ணி , உன்னுடைய மென்மையான தாமரைக்கோடி போன்ற நான்கு கைகளின்  அழகினைத் தன் நான்குமுகங்களினாலும் புகழ்கிறார்  .   

71. "கமலம் போல் சிவந்த கைநகங்களின் காந்தி" [லக்ச்மீ கடாக்ஷம்]
நகானா-முத்யோதைர்-நவநலின-ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்தி கதய கதயாம: கதமுமே i
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ-சரண-தல-லாக்ஷா-ரஸ-சணம் ii 71
 அம்மா !  உமா தேவீ ! புதிதாக மலர்ந்த தாமரைப் பூவின் ஒளியைவிடபிரகாசமான உன் கைவிரல் நகப் பொலிவை நாங்கள் எப்படிவருணிக்கமுடியும் ? செந்தாமரைப்பூவிற்கு , அதில் வாழ்கின்ற  லக்ஷ்மிதேவியின் சரணங்களில் இருக்கும் மருதாணியால் தானே அந்த ஒளிகிடைத்தது . அந்த  பிரகாசமானது உன் கரங்களின் அழகில் ஏதோ ஒருசாயல் போல் ஆகுமே !    

72. "கணபதியும், ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்" [தேவியருள் சுரத்தல், யக்ஷிணி வச்யம், இரவில் பயமின்மை]
ஸமம் தேவி ஸ்கந்த-த்வி-வதன-பீதம் ஸ்தன-யுகம்
தவேதம் : கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத-முகம் i
யதா-லோக்யா-சங்கா-குலித-ஹ்ருதயோ ஹாஸ-ஜனக:
ஸ்வகும்பௌ-ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேன ஜடிதி ii 72
 தேவீ ! உன்னுடைய பிள்ளைகளான கணபதி , கந்தன் இருவராலும் ஒரேநேரத்தில் பருகப்பட்ட உன் ஸ்தனங்களின் பருமனைக் கண்ட கணபதி ,தன் தலையிலுள்ள கும்பங்களை நீ அபகரித்து , உன்  ஸ்தனங்களாகவைத்துக் கொண்டாயோ என்று , குழந்தைத் தனமாக  நினைத்து தன்தலையில் கும்பம் இருக்கிறதா , என்று தலையைத்  தடவிப் பார்க்கிறார்அதைப் பார்த்த தாய் , தந்தையாரான நீங்கள் ,  சிரித்தீர்களே  ! அந்தபெருமையுடைய உன் ஸ்தனங்கள் எங்களுடைய துன்பத்தைப்போக்கட்டுமே !    

73. பால் வளர்ச்சி; ஜீவன் முக்தி:
"
அமூ தெ வக்ஷோஜா-வம்ருதரச-மாணிக்ய-குதுபௌ
ஸந்தேஹச்பந்தோ நகபதி-பதாகே மனசி : I
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித-வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரத-வதன-க்ரௌஞ்ச-தலனௌ ii 73
அம்மா ! உன் ஸ்தனங்கள் அமிர்தம் நிரம்பிய மாணிக்ய குடுவைகள் .பாலுள்ள ஸ்தானமாக இருந்திருந்தால் கணபதியும்  , கந்தனும் குழந்தை வயதினைத் தாண்டி பருவத்தின் முதிர்ச்சியைஅடைந்திருப்பார்களே !  அந்த  ஸ்தனங்களில் இருந்து   அமிர்தத்தைப்பருகியதால் தான்  கணபதியும் கந்தனும் பால்ய வயதினைத்தாண்டாமல்  மங்கையர் சம்பந்தம் இல்லாத  குழந்தைகளாகவேஇருக்கின்றனர் . 

74. "
மார்பில் விளங்கும் முத்துமாலை" [நற்கீர்த்தி]
வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ-கும்ப-ப்ரக்க்ருதிபி:
மமாரப்தாம் முதாமணிபி-ரமலாம் ஹார-லதிகாம் i
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்ட்த: சபலிதாம்
ப்ரதாப-வ்யாமிஸ்ரீஆம் புரதமாயிது: கீர்த்திமிவ தே ii 74
தாயே ! பரமேஸ்வரி ! நீ கஜாசுரனை வதம் செய்து அவன்கும்பத்திலிருந்து உண்டான பல நிறங்கள் உள்ள  முத்து மாலையைஉன்  ஸ்தனங்களின் மத்தியில் அணிந்திருக்கிறாய் . அந்த பலநிறமுடைய முத்தானது , உன் சிவந்த உதட்டின் ஒளி வீசி , வெளிப்புறம்சிவப்பாகவும் , உட்புறம்  பலவர்ணங்களோடும்  விளங்குகிறது . இந்தமுத்து மாலையானது மூ உலகையும் எரித்த பரமசிவனது வெற்றிமாலையாகத் தோன்றுகிறது . 

75. "
முலைப்பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம்" [கவி பாடும் திறமை]
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர-கன்யேஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதம்மிவ i
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா-மஜனி கமனீய: கவயிதா ii 75

 அம்மா ! உன்  ஸ்தனங்களிலிருந்து பெருகும் பால் இதயத்திலிருந்துபெருகும் பாற்கடல் . கலைவாணியே அந்தப் பாலாக உருவெடுத்ததுபோல் தோன்றுகிறது . உன்னால் கருணையுடன்  தரப்பட்ட , பாலைக்குடித்த  திராவிட  நாட்டுக் குழந்தை ஒருவன்  கற்றறிந்தோர்  போற்றும் பெருங்கவிஞ்சனாக ஆகிவிட்டான் அன்றோ ?.....................................  

No comments:

Post a Comment