Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 4, 2015

சௌந்தர்ய லஹரி தமிழில் 26-----50

சௌந்தர்ய லஹரி தமிழில்  26-----50

26. "பராசக்தியின் பாதிவ்ரத்ய மகிமை" [அகத்திலும், புறத்திலும் சத்ருக்களின் அழிவு]
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
வினாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம் i
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருசா
மஹா ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸௌ ii 26
  தாயே ! மஹா பிரளய காலத்தில்  பஞ்சபூதங்களும் , பிரம்மா ,விஷ்ணு ,யமன் , குபேரன் முதலியோரும் , தேவேந்திரன் உள்ளிட்ட மற்ற தேவர்கூட்டமும் அழிய , நீ மட்டும் அழியாமல் சதாசிவனின்  சம்ஹார ருத்ரதாண்டவத்தைப் பார்த்து மகிழ்வது , உன் கற்பின் சக்தியால் அன்றோ ?(கடைசியில் சிவனும் சக்தியும் மட்டுமே இருப்பது மீண்டும் உலகத்தை உண்டாக்க ). 

27. "ஸமயாசார மானஸிக பூஜை" [ஆத்மஞான சித்தி]
ஜபோ ஜல்ப:சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனத்யாஹுதி-விதி: I
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
சபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் ii 27
 தாயே !  நான் பேசுவது எல்லாம் உன்  மந்திர  ஜபமாகவும் , என் உடல்அசைவு உன்னுடைய  பூஜாரூபமான முத்திரைகளாகவும் , நான்நடப்பது உன்னை வலம் வருவதாகவும் ,நான் சாப்பிடுவது உன்னைக்குறித்துச்  செய்யும் ஹோமத்தின் ஆகுதியாகவும்  , படுப்பதுஉன்னை வணங்குவதாகவும் , நான் செய்யும் மற்ற  செயல்கள் யாவும்  உனக்குச் செய்யும் பூஜையாக இருக்கட்டும்.

28. "தேவியின் தாடங்க மகிமை" [விஷபயம், அகாலம்ருத்யு நிவாரணம்]
சுதா மப்யாச்வத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதி-சதமகாத்யா திவிஷத: I
கராலம் யத் ஷ்வேலம் கபலிதவத: காலகலனா
சம்போஸ் தன் மூலம் தவ ஜனனி தாடங்க-மஹிமா ii 28
 தாயே ! மஹா பிரளய காலத்தில் பிரம்மா , இந்திரன்  முதலான தேவர்கள் , முதுமை , மரணம் நீக்கும் அமிர்தம் அருந்திய பிறகும்அழிந்து போகின்றனர் . ஆனால் ஆலகால  விஷத்தை அருந்திய உன்துணைவன் சதாசிவன் மட்டும் காலன் வசப்படவில்லை .கற்புக்கரசியே ! இதற்குக் காரணம் உன் தாடங்க (காதணி ) மகிமைதானே ! 

29. "தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம்" [ப்ரஸவாரிஷ்ட நிவ்ருத்தி, மூர்க்கரை வசப்படுத்துதல்]
கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடோரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி-மகுடம் i
ப்ரேணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப-முபயாதஸ்ய பவனம்
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர்-விஜயதே ii 29
  உன்னைக் காண்பதற்கு , சிவன் உன் இருப்பிடம் தேடி வரும்போது , நீவேகமாக பரபரப்புடன்  எழுந்து வருவதைக் கண்ட உன் சக  தோழிகள் ,ஹரி , ஹரன் , இந்திரன் முதலான பிரம்மாதி தேவர்கள் உன்னை நமஸ்க்கரிப்பதால் அவர்களுடைய மணி மகுடங்கள் உன் காலில்இடறப்போகின்றதே , அவைகளை  ஓதிக்கிவிடு  என்று உனக்கு  நினைவுகூர்வது  உன் பெருமையை எடுத்துக் காட்டுகிறது . 

30. "தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல்" [பராகாயப் பிரவேசம்]
ஸ்வேதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-ரணிமத்யாபி-ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி : I
கிமாச்சர்யம் தஸ்ய த்ரிநயன-ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸவர்த்தாக்னிர்-விரசயதி நீராஜன-விதிம் ii 30
 ஆதி  அந்தமில்லாத தாயே ! உன்னுடைய சரணங்களிலிருந்து வெளிவரும்  கிரணங்களாகிய அணிமா , மஹிமா போன்ற (8) சக்திகளால்  சூழப்பட்டவளே ! உன்னை  எவன்  எப்பொழுதும் மனதில்தியானம் செய்கிறானோ , அவனுக்கு சிவ சாயுஜ்ய பதவி கூட ஒருவறண்ட புல்  போல் தோன்றும் . மகா பிரளய கால அக்னி அவனுக்குமங்கள ஹாரத்தி செய்திடும் என்பதில் என்ன ஆச்சர்யம் ?  

31. "64
தந்திரங்களும் ஸ்ரீவித்தையும்" [ஸர்வ வசீகரம்]
சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸந்தாய புவனம்
ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி: I
புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில-புருஷார்த்தைக-கடனா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம் ii 31
 நாம் விரும்புகின்ற  அந்தந்த   சித்திகளைப்  பெறுவதற்கு 64சாத்திரங்களை   அளித்து சிவனும் மௌனமாக இருந்தார்  . அதனைஉலகம்  தவறாக பயன்படுத்தி ,   துராசாரத்தில் ஈடுபடுவதைப் பார்த்து சிவன் மெளனமாக இருந்தார் . திரும்பவும் உன்னுடைய கட்டாயத்தால்சகல புருஷார்த்தங்களையும்  ஒருங்கே கொடுக்கக்கூடிய  பஞ்சதசாக்ஷரி   என்ற மந்திரத்தை உலகுக்கு  அளித்தாயே !  

32. "
ஸ்ரீவித்தை பஞ்சதசாக்ஷரி மந்த்ரம்" [ஸகல கார்ய ஜயம், தீர்க்காயுள்]
சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு பரா-மார-ஹரய: I
அமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸானேஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் ii 32
 சிவ , சக்தி , காம ,  ப்ருத்வீ பீஜங்கள் ஒரு  பிரிவும் ,  ரவிசந்திர ,  மன்மதஹம்ச,    இந்திர  பீஜங்கள் ஒரு பிரிவும்பரா , மன்மதாஹரி பீஜங்கள்ஒரு பிரிவும் ஆகிய இந்த பீஜங்களின் கடைசியில் சேர்க்கப்பட்ட  ஹ்ரீம்காரங்களும்  சேர்ந்து இந்த 15  அட்ஷரங்களும் உன்னுடைய  மஹாமந்திரப்  பகுதிகளின் அங்கங்களாக விளங்குகின்றன .   

33.
ஸௌபாக்ய மந்திரம் [ஸகல ஸௌபாக்யம்]
ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதௌ தவ மனோ:
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா: I
பஜந்தி த்வாம் சிந்தாமணி-ஜுண நிபத்தாக்ஷ-வலயா:
சிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை: Ii 33
 தாயே ! உன்னை எப்போதும் தொடர்ச்சியாக    இடைவெளி இல்லாமல்தியானம் செய்து அதனால் கிடைக்கும் ஆனந்தத்தைஉணர்ந்தவர்களான  சிவ யோகீஸ்வரர்கள் , சிந்தாமணி யாலான அட்ஷமாலையை   உடையவர்களாய் , உன்னுடைய மந்திரத்தின் முன் , காமபீஜ மந்த்ரமான  "க்லீம்", புவனேஸ்வரி மந்த்ரமான " ஹ்ரீம் ",லக்ஷ்மி மந்த்ரமானஸ்ரீம் ", இவைகளைச் சேர்த்து,  த்ரீ  கோணமானஅக்னி குண்டத்தில் , ஸ்ரீ சக்கரத்தில் இருக்கும் உன்னை எண்ணி பசுநெய்  தாரைகளால் ஹோமம் செய்து உன்னை   மகிழ்விக்கின்றனர் .  

34.
சேஷசேஷீ பாவம் [அன்னியோன்னிய ஸமரஸ வளர்ச்சி]
சரீரம் த்வம் சம்போ சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான-மனகம் i
அத: சேஷ: சேஷீத்யய-முபய-ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ: Ii 34
 ஈஸ்வரியே ! என்னுடைய மனக் கண்ணால் உன்னைப் பார்க்கும்பொழுது , சூர்ய  சந்திரர்களை ஸ்தனமாகக் கொண்டு , நீ பரமேஸ்வரனுக்கு உடலாக இருக்கின்றாய் .  உன்னுடைய  உடல்தோஷமற்ற புதிய ஆத்மாவாகவும் ,   நவ  வியூக  ஆத்மாவானசிவனுடைய   உடல்  உன்னுடயதாகவும்  இருக்கிறது . எனவே உனது கரி நிறம் ஆனந்த பைரவர் உடலாகவும்  , சிவனின் உடல்  உனதாகவும்தோன்றுகிறது . எனவே நீங்கள் இருவரும்  ஒன்றுபட்ட உடலாக ,சமமான குணங்களை உடையவராக இருப்பதால் , நான் , எனது என்ற  சம்பந்தமும் ஒன்றாக இருப்பதால் , ஆனந்தபைரவர் ,ஆனந்தபைரவி யாக எல்லா வகையிலும் சமமாக இருக்கிறிர்கள்.  

35. "6
சக்கரங்களிலும் விளங்கும் தேவி" [க்ஷயரோக நிவ்ருத்தி]
மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதசி மருத்-ஸாரதி-ரஸி
த்வ-மபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ஹி பரம் ii
த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ-வபுஷா
சிதானந்தாகாரம் சிவயுவதி-பாவேன பிப்ருஷே ii 35
 தாயே ! நீயே  மனஸ் , ஆகாய , வாயு , அக்னி , நீர் , பூமி   தத்துவம் . நீயேதான்   இந்த உலகமாக இருக்கிறாய் .  நீயேதான் பிரம்மஸ்வரூபமான   சிவதத்வம் .  இந்த உலகத்திற்காக நீயேதான்சிவனின் பட்ட  மஹிஷியாகவும்  இருக்கின்றாய் .

36, தவாக்ன சாக்ரச்தம் தபனா சக்தி கோடி தியுதிதாரம் ,
பரம் ஷாம்பும் வந்தே பரிமிலிதா -பார்ஷ்வ பராச்சிதா
யமராத்யன் பக்த்ய ரவி சசி சுசிணாம விஷ்ஹயே
நிராலோகீலோகே நிவசக்தி ஹி பாலோக புவனே  36
 தாயே ! உன்னுடைய  புருவ மத்தியில் உள்ள  ஆஜ்ஞா  சக்கரத்தில்இருப்பவரும் , ஆயிரம்  கோடி சூர்ய சந்திரர்களின் ஒளியைஉடையவரும் , சகுண , நிர்குண சக்திகளை இரு  பக்கங்களில் உடையவருமான , பரமசிவனையும் , உன்னையும் எவன் தியானம்செய்கிறானோ அவன் , ஆயிரம் கோடி சூர்ய சந்திரனைவிட ஒளிமிகுந்த(கண்ணுக்கு புலப்படாத ) ஒரு ஜோதிமயமான உயர்ந்த  உலகத்தைஅடைகிறான் .

37. "
விஸுத்தி சக்கரத்தில் பார்வதி பரமேஸ்வர தியானம்" [ப்ரம்ம ராக்ஷஸ பூதப்பிரேத பிசாச நிவாரணம்]
விசுத்தௌ தே சுத்த ஸ்படிக விசதம் வ்யோம ஜனகம்
சிவம் சேவே தேவீமபி சைவஸமான-வ்யவஸ்திதம் i
யயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண-ஸாரூய ஸரணே:
விதூதாந்தர்-த்வாந்தா விலமதி சகோரீவ ஜகதி ii 37
தாயே உன்னுடைய  விசுத்திச் சக்கரத்தில் , ஆகாய தத்துவத்தைஉண்டுபண்ணுபவரும்,  சுத்த ஸ்படிகமணி  போல் நிர்மலமானவருமானபரமசிவனையும் , உன்னையும்  தியானம் செய்பவன் ,உங்களிடமிருந்து  வெளிவருகின்ற  வெண்ணிலாவைப் போன்றஒளிமயமான  காந்தியினால் , அறியாமை இருள் அழிக்கப்பட்டு , முழுநிலவைக் கண்ட  சகோரபட்ஷி போல் ,    அமிர்தம் அருந்தியபரமானந்தத்தை அடைகிறான் . 

38. "அநாஹத சக்கரத்தில் ஜீவப்பிரஹ்ம ஐக்கியம்" [பாலாரிஷ்ட நிவாரணம்]
ஸமுன் மீலத் ஸம்வித்-கமல-மகரந்தைக-ரசிகம்
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம் i
யதாலாபா-தஷ்டாதச-குணித-வித்யா பரிணதி:
யதாதத்தே தோஷாஅத்குணமகில-மத்ப்ய: பய இவ ii 38
 அன்னையே ! எந்த இரு ஹம்சத்தினுடைய பேச்சானது ( ஒலி ),18வித்தைகளுக்கு ( தந்திரம்கலை )   மூலமாக இருக்கின்றதோ ,பாலிலிருந்து தண்ணீரை பிரிப்பது போல் சகல தோஷங்களையும்பிரித்து , குணங்களை மட்டும் ஏற்றுக்கொள்கின்றனவோ , மகான்களுடைய மனமாகிய (ஞானம் ) தாமரை மலரிலுள்ள தேனைப் பருகுகின்றனவோ,  அத்தகைய  வருணனைக்கும்  அப்பாற்பட்டமகிமையுடன் கூடிய  ஹம்ச தம்பதிகளான உங்களை என்னுடைய  இதயகமலத்தில் தியானம் செய்து  நமஸ்க்கரிக்கிறேன்

39. "ஸ்வாதிஷ்ட்டானத்தில் காமேஸ்வரி"
தவ ஸ்வாதிஷ்ஹ்ட்டானே ஹுதவஹ-மதிஷ்ட்டாய நிரதம்
தமீடே ஸம்வர்த்தம் ஜனனி மஹதீம் தாம் ஸமயாம் i
யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிர-முபசாரம் ரசயதி ii 39
தாயே !  காலாக்னி  ருத்ரரையும் , அந்த காலாக்னி ருத்ர  ரூபிணியானஉன்னையும் , என்னுடைய சுவாதிஷ்டான  சக்கரத்தில் (   அக்னி ),தியானம் செய்து வணங்குகிறேன் .  சிவனுடைய  ருத்ராக்னி பார்வையானது உலகங்களை அழிக்கும் சமயம் , உன்னுடைய நிலவைப் போன்ற கனிந்த பார்வையானது ,(சந்திரகலா சக்தி /சமயா /சந்திரகலா தேவீ )  இந்த உலகை  மீண்டும் குளிரச்  செய்கின்றது .(தகிக்கப்பட்ட மன்மதன் உன்  கருணையால் ரதியின்  கண்களுக்கு மட்டும் தெரிவது போல் ).

40. "
மணிபூரகத்தில் மேகத்திடை மின்னல்கொடி போன்றவள்" [நல்ல கனவு பலித்தல், கெட்ட கனவு விலகுதல், லக்ஷ்மி கடாக்ஷம்]
தடித்வந்தம் சக்த்யா திமிர-பரிபந்த்தி ஸ்புரண்யா
ஸ்புரந்-நானாரத்னாபரண-பரிணேத்தேந்த்ர-தனுஷம் i
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக-சரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவனம் ii 40
 அம்மா !  மணி பூரகச்நீர் ) சக்கரத்தை மூலமாகக் கொண்டு ,  சிவனை,மழைக் காலத்து   நீண்ட   கருத்த மேகமாகவும்  , உன்னை  மின்னல்கொடியாகவும் நினைத்து வணங்குகிறேன்.  இருளைப் போக்கும்மின்னலாக நீ இருக்கிறாய் . நீ அணிந்திருக்கும் ரத்ன  ஆபரணங்களிலிருந்து வீசும் ஒளியானது , அந்த மேகங்கள் ஒளிமயமாக இந்திரவில்லுடன் கூடியது போல் தோன்றுகிறது . காலாக்னி   ருத்ரனால்தகிக்கப்பட்ட   மூ உலகங்களையும் , தன் அமுத  மழையினால் குளிரச் செய்கின்ற  உன்னுடைய சதாசிவ தத்துவத்தை வணங்குகின்றேன் .

41. "
மூலாதாரத்தில் ஆநந்தத் தாண்டவம்" [தேவியின் சாக்ஷாத்காரம்-குன்ம நோய் நிவாரணம்]
தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா
நவாத்மானம் அன்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம் i
உபாப்யா-மேதாப்யா-முதய-விதி முத்திசய தயயா
சனாதனாப்யாம் ஜஜ்ஞே-ஜனகஜனனீமத் ஜகதிதம் ii 41
தாயே ! உன் மூலாதாரத்தில் , நடனத்தில்  பிரியமுள்ள சமயாதேவியுடன் , ஸ்ருங்கார ரசங்களுடன் மகா தாண்டவ நடனம்செய்யும்  ஆனந்தபைரவருடன் உன்னையும்  தியானம் செய்துவணங்குகிறேன் . பிரளய காலத்தில் அழிந்த உலகத்தை மீண்டும்உண்டாக்க வேண்டுமென்று நீங்கள் இருவரும் ஸ்ருஷ்டி தாண்டவநடனம் செய்வதால் , பைரவர் , பைரவி ஆகிய உங்களை கருணைவடிவான  தாய் , தந்தையராக  இவ்வுலகம்  அடைந்தது .

42. " கிரீட வர்ணனை" [ஸகல வச்யம், ஜலரோக நிவாரணம்]
கதைர்-மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர-கடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி : I
நீடேயச்சாயா-ச்சுரண சபலம் சந்த்ர-சகலம்
தனு: சௌனாஸீரம் கிமிதி நிபத்னாதி திஷணாம் ii 42
அன்னையே !  மலையரசன் பெற்ற மாணிக்கமே !  உன்னுடைய கிரீடத்தை  எந்த பக்தனாவது வருணிக்க நினைத்தால் ,  பன்னிரண்டு சூரியர்களே , மாணிக்கங்களாக இழைக்கப்பட்டிருக்கும் உன் கிரீடத்தில்,நெருக்கமாகப் பதிக்கப்பட்டிருக்கும் இரத்தினங்களின் ஒளியால்மின்னுகின்ற உன்னுடைய  சந்திரக்கலைதனை,  வானவில்லோஅல்லது   இந்திரதனுசோ  என்றே எண்ணுவான் . 

43. "
கேச வர்ணனை" [ஸர்வ ஜயம்]
துனோது த்வாந்தம் நஸ்-துலித-தலிதேந்தீவர-வனம்
கன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே i
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ-முபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மின் மன்யே வலமதன-வாடீ விடபினாம் ii 43
 தாயேமலர்ந்த கருங்குவளை ( நீலோத்பலம் ) மலர்க்காடு போன்றதும்நெருக்கமானதும் , மிருதுவானதும்வழ வழப்பானதுமான உன்கேசத்தின் அழகு,  எங்களின் அறியாமையை நீக்கட்டும் . உன் கேசத்தின்இயற்கை மணத்தைத் தானும் அடைய எண்ணி , இந்திரனுடைய நந்தவனத்து மலர்கள் உன்  கூந்தலை அலங்கரிக்கின்றனவோ ? 

44. "
வகிட்டின் வர்ணனை" [ஸர்வரோக நிவ்ருத்தி]
தனோது க்ஷேமம் -ஸ்தவ வதன ஸௌந்தர்யலஹரீ
பரிவாஹஸ்ரோத:-ஸரணிரிவ ஸீமந்தஸரணி: I
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ-பார-திமிர-
த்விஷாம் ப்ருந்தைர்-பந்தீக்ருதமிவ நவீனார்க்க-கிரணம் ii 44
அம்மா ! உன் கேசத்தின் நடுவில் உள்ள வகிடு , உன் முகத்திற்கு அழகுசேர்க்கின்றது . பால சூர்யா கிரணம் போன்று உன் வகிட்டில் மின்னும்சிந்தூர வர்ண குங்குமமானது , உன் அடர்ந்த இருட்டு போன்ற,கருமையான கேசம் என்ற எதிரிகளின் சிறையில் அடைக்கப்பட்டதுபோல் உள்ளது . அந்த  முகத்தின்  அழகு வெள்ளத்திற்கு  கால்வாய்போன்ற உனது கேச வகிடு,  எங்களுக்கு எல்லாவிதமானநன்மைகளையும் தரட்டும் . 

45. "
முன் நெற்றிமயிர் வர்ணனை" [லக்ஷ்மீ கடக்ஷம், வாக்குப் பலிதம்]
அராலை: ஸ்வாபாவ்யா-தலிகலப-ஸச்ரீபி-ரலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம் i
தரஸ்ன்மேரே யஸ்மின் தசனருசி கிஞ்ஜல்க-ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன-சக்ஷுர்-மதுலிஹ:ii 45
 தாயே ! இயற்கையாகவே சுருண்டதும் , இள வண்டுகள் போல்பளபளப்புடன் தங்கமயமாக ஒளிரும் கேசத்தையுடைய உன்னுடையஅழகான தங்க முகம்தாமரை மலரையும் பரிகாசம் செய்கின்றது . இந்தஅழகிய முகத்தில் இதழ்கள் போன்று வரிசையான  பல் வரிசையுடன்கூடிய உன் புன்சிரிப்பைக் கண்ட , காமனையும் வென்ற பரமசிவனின்கண்களாகிய வண்டுகள் , மயங்குகின்றன .  

46. "
பாதிச்சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை" [புத்திரப் பிராப்தி]
லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-மாபாதி-தவ யத்
த்ஹிதீயம் தன்மன்யே மகுட-கடிதாம் சந்த்ரசகலம் i
விபர்யாஸ-ந்யாஸா-துபயமபி ஸம்பூய மித:
ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர: Ii 46
தாயே ! உன் நெற்றி   கீழ் நோக்கித் தொங்கவிடப்பட்ட , மற்றொருசந்திரக்கலை போல் இருக்கிறது . உன் மணி முடியிலுள்ள சந்திரக்கலையையும் , நெற்றியிலுள்ள சந்திரக்கலையையும் ஒன்றுடன்ஒன்று  திருப்பிவைத்துப் பொறித்தினால் , அது அமிர்தம் நிறைந்த முழுநிலவு போல்  ஆகுமே  !   

47."தலை முதல் கால் வரை தேவியின் அழகு வர்ணனை"
 
ப்ருவௌ புக்னே கிஞ்சித்புவன-பய-பங்க வ்யஸநிநி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர-ருசிப்யாம் த்ருதகுணம் i
தனுர் மன்யே ஸவ்யேதரகர-க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டௌ ஸ்தகயதி நிகூடாந்தர-முமே ii 47
 சகல உலகங்களுக்கும் அபயமளிக்கும் அன்னையே ! உமையே ! சற்றேவளைந்திருக்கும் உன்  புருவங்கள்உன் கண்களாகிய வண்டுகளை ,நாண் கயிறாகக் கொண்ட காமனின் வில் போல்  தோன்றுகிறது .காமனும்  அதனை இடது கரத்தால் பிடித்தது போல்அவனின்முழங்கையும்மணிக்கட்டும் ,கைவிரல்பிடியும் , உன்னுடையமுகத்தின் மத்திய பாகத்தை மறைப்பது போல் உள்ளது . 

48. "
கண்களின் அழகு" [நவக்ரக தோஷ நிவிருத்தி]
அக: ஸூதே ஸவ்யம் தவ நயன-மர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீனாயகதயா i
த்ருதீயா தே த்ருஷ்டிர்-தரதலித ஹேமாம்புஜ-ருசி:
ஸமாதத்தே ஸன்த்யாம் திவஸ நிசயோ-ரந்தரசரீம் ii 48
தாயே ! சூர்யன் போன்ற உன் வலது கண் பகலையும் , சந்திரன் போன்றஇடது கண் இரவையும் உண்டாக்குகின்றது .சற்றே மலர்ந்த தங்கத்தாமரை  போன்ற உனது மூன்றாவது கண் , காலைமாலை ,என்றஇரண்டு சந்தியா  காலங்களை உண்டாக்குகின்றது .

49. "
எட்டு விதமான கண்ணோட்டம்" [ஸர்வ ஜயம், நிதி தர்ஸனம்]
விசாலா கல்யாணீ ஸ்புட-ருசி-ரயோத்யா குவலயை:
க்ருபாதாராதாரா கிமபி மதுரா ஆபோகவதிகா i
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகர-விஸ்தார-விஜயா
த்ருவம் தத்தந்நாம-வ்யவகரண-யோக்யா விஜயதே ii 49
 தாயே ! உன் கண்கள் விசாலமானது . அதனால் விசாலா என்றும் ,மங்களமானதால் கல்யாணீ என்றும்இந்தீவர புஷ்பம் போன்று (  ப்ளூலில்லி ) அழகானதால் அயோத்யா என்றும் ,கருணை உள்ளவளாதலால்  தாரா என்றும் , மாதுர்யத்தோடுகூடியவளாதலால் மதுரா ( இனிமையானவள் ) என்றும் , ஆழ்ந்துஇருப்பதால் போகவதி என்றும் , சகல உலகங்களையும்  காக்கும்   சக்தி உள்ளவளாதலால்  அவந்தி என்றும் , நகரங்களின் பெயர்களைச்கொண்டு  அழைக்கும்படியான தகுதி கொண்டதே .

50. "
மூன்றாவது கண்" [தூர தர்சனம்; அம்மை நோய் நிவாரணம்]
கவீனாம் சந்தர்பஸ்தபக-மகரந்தைக-ரஸிகம்
கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ரமரகலபௌ கர்ணயுகலம் i
அமுச்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத-தரலௌ
அஸூயா-ஸம்ஸர்க்கா-தலிகநயனம் கிஞ்சிதருணம் ii 50

 அம்மா ! உன் காதுகள்  கவிகளின்  காவியங்களான மலர்களில் உள்ளதேனைச் சுவைக்கின்றனஉன் கண்கள்   நவரசங்களைப்  பருகும்வண்டுகள் போல் , உன்   காதுகளை விட்டு அகலாமல் இருக்கின்றன .உன் கண்களைக் கண்டு பொறாமைக் கொண்ட  உன் மூன்றாவதுநெற்றிக்கண்சிறிது சிவந்தது போல் தோன்றுகிறது . (காது வரை நீண்ட அழகிய கண்கள்  ) .....................   

No comments:

Post a Comment