Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 4, 2015

சௌந்தர்ய லஹரி தமிழில் 1----25

சௌந்தர்ய லஹரி தமிழில்  1----25
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது...சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பு. ஈசனால் அம்பிகையின் புகழை பாடுவதாக அவைஅமையப்பட்டுள்ளன.சங்கரர் கைலாயம் சென்று பார்வதி பரமேஸ்வரனை தரிசித்தார் அப்போது ஈஸ்வரன் அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் ஒரு சுவடி கட்டையும் குடுத்தார். சுவடியில் அம்பாளை பற்றிய நூறு ஸ்லோகங்கள் இருந்தன.பஞ்ச லிங்கங்கள் அரூ்பமான ஈஸ்வரன் அம்சங்கள். மந்த்ரமயமான ஸ்லோகங்கள் நூறும் அம்பாள் ஸ்வரூபம். சங்கரர் ஈஸ்வரனின் அவதாரம். கொடுத்தவர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்டவர் சங்கரர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்ட பொருள் (அம்பாள்) ஸ்லோகங்கள் எல்லாமே ஒன்று தான்.இதிலே அத்வைதம் த்வைதம் இரண்டும் கலந்து விடுகின்றன.பஞ்ச லிங்கங்களையும் ஸ்தோத்ர சுவடியையும் பெற்று கொண்ட சங்கரரை நந்திகேஸ்வரர் வழி மறித்து அவர் கையில் இருந்த சுவடியை பிடித்து இழுத்தார். ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை நந்திகேஸ்வரர் தன்வச படிதிகொண்டார்இழந்த ஐம்பத்தி ஒன்ட்பது ஸ்லோகங்களையும் கையில் இருக்கும் நாப்பத்தி ஒரு ஸ்லோகங்களை சேர்த்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அம்பாளின் ஆக்ன்யை போலும். கடல் மடை திறந்தது போல் சங்கரர் அம்பிகையை கேசாதி பாதமாக வர்ணித்து பாடி நூறு ச்லோகனகளையிம் பூர்த்தி பண்ணி விட்டார்)


1."ஸர்வவிக்ன நாசம்; ஸகல கார்ய ஸித்தி"
சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
தேவம் தேவோ கலு குசல ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வாம்-ஆராத்யாம் ஹரி-ஹர-விரிஞ்சதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி [1]
 
 சகல உலகங்களையும் படைக்கும் ஈசன்சக்தியாகிய உன்னுடன்இணைந்தால்தான்  இந்த  உலகத்தை படைக்க முடியும்.சக்திஇல்லாமல் சிவனால் செயல்படமுடியாது .  மும்மூர்த்திகளான சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகியோர் ,துதிக்கின்ற உன்னை முன் ஜென்மபுண்ணியம்  இல்லாவிட்டால் துதிக்கவும்வணங்கவும்  முடியுமோ ? 


2. 'பாத தூளி மஹிமை'
தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: சஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம்
வஹத்யேனம் சௌரி: ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூலன-விதிம் 2
உன்னுடைய  பாத  தூளியைச் சேர்த்து , பிரம்மா , இந்த  உலகைப் படைக்கிறார் .  ஆயிரம்  தலை  உடைய   ஆதிசேஷனான  திருமால் ,அந்த பாத தூளியான சகல உலகத்தையும்   தாங்குகிறார் . சிவனானவர் இந்த பாததூளியை விபூதியாக உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார்.     

 3. 'பாத தூளி முக்தி அளிப்பது'
அவித்யானாம் அந்தஸ்திமிர- மிஹிர-த்வீப-நகரீ
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி 3 அம்மா ! உன்னுடைய பாத தூளி யானது,  இருளை அகற்றும்  சூரியன் போல் ,அறியாமை   என்னும் இருள் அகற்றி , ஞானனத்தை நல்கும் .ஏழைக்கு துயர் துடைக்கும் சிந்தாமணி போன்றதுபிரளய  காலத்தில்திருமால் வராக  அவதாரம் எடுத்து , எப்படி இந்த   உலகை  கப்பாற்றி னாரோ,   அதுபோல்   பிறவிக்கடலைக்  கடக்க அபயம் தரக்கூடியது .

  4. "ஸகல பய/ரோக நிவ்ருத்தி"
த்வதன்ய: பாணிப்யாம்-அபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி வஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ கி சரணாவேவ நிபுணௌ 4தாயே ! மற்ற தேவர்களும்,தெய்வங்களும்அபயவர  பிரதானத்தை,தங்கள்  அபிநய முத்திரைகளால்  காட்டநீ மட்டும் அபிநயம்காட்டுவதில்லைஏனென்றால் ,  இந்த  அபயவர பிரதானத்தை விடஅதிகமாக , வேண்டிய  வரங்களைக்  கொடுப்பதற்கு உன் பாத தாமரை போதுமே  . 

5. "தேவி பூஜையின் மஹிமை/ஸ்த்ரீ புருஷ வசியம்"
ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன சௌபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயன-லேஹ்யேன வபுஷா
முனீனா-மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் 5
 
 சகல  நமைகளைத் தரும்  தேவீ ! மகாவிஷ்ணுஉன்னை வணங்கி ,அழகான பெண் உருவம்  கொண்டு ,சிவனை மோகம் கொள்ளச்செய்கிறார்மன்மதன் உன் பாத கமலத்தைவணங்கிமூஉலக அழகனாகி,  முற்றும் துறந்த முனிவர்களின் மனதில்,மோகத்தை உண்டுபண்ணுகிறான்.
 6. "கடைக்கன் பார்வை/ புத்ர சந்தானம்"
தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸமந்தோ மலயமரு-தாயோகன-ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிசுதே காமபி க்ருபாம்
அபாங்கத்தே லப்த்வா ஜதித-மனங்கோ விஜயதே 6மன்மதனுடைய வில் மலர்களால் ஆனது.  நாண்  வண்டுகளின் வரிசை.பாணங்கள் மலர்களே.  அமைச்சன் இளவேனிற்காலம் . தேரோதென்றல் காற்று .இவைகளோடு கூடிய   உருவமற்ற   மன்மதன் உன்அருளினால் இந்த  உலகத்தையே   ஜெயிக்கின்றான் . 

7. "தேவியின் ஸ்வரூபம்/ சாக்ஷாத்காரம்/ சத்ரு ஜயம்"
க்வணத் காஞ்சீ-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன- நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-ஸரச்சந்த்ர-வதனா
தனுர்-பாணான் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா தாஸ்தம் : புரமதிது-ராஹோ-புருஷிகா 7முழுநிலவு   போன்று  மலர்ந்த  முகத்துடனும் , இடையிலே ஒட்டியாண  சலங்கை ஓசையுடனும்,  யானையின் கும்பத்தைப்போன்று ஸ்தனபாரத்துடனும் , கைகளில் கரும்புவில்மலர்பானம்பாசக்கயிறு ட்டிகரங்களுடன்அலங்காரமாகத் தோன்றும்அன்னையே ! எங்களுக்கு  காட்சி தருவாயாக  !

  8. தேவியின் சிந்தாமனி க்ருஹம் [ஜனன மரண நிவ்ருத்தி]
ஸுதா ஸிந்தோர் மத்த்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமனி க்ருஹே I
சிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம் II 8
அமிர்தகடலின் மத்தியில் , கடம்பவன காடுகளால் சூழப்பட்டு ,சிந்தாமணி என்னும் ஒருவகை ரத்தினத்தால் நிர்மாணிக்கப்பட்ட மணித்வீபம்  என்னும்  அரண்மனையில் அந்தப்புரத்தில்பரமசிவனுடைய மடியில்,  ஆனந்த  சல்லாபத்துடன்  சயனித்திருக்கும்அன்னையே ! உன்னை வணங்குபவர்களே  உயர்ந்தவர்கள் .    

9. "ஆதார சக்கரங்கள்" [சென்றவர் திரும்பி வர, அஷ்டைஸ்வர்ய ப்ராப்தி]
"
"மஹிம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி I
மனோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே" II  9
  
 மூலாதார  ( பூமி  ),  ஸ்வாதிஷ்டான ( அக்னி ), மணிபூரக (நீர் ) , அனாகதவாயு  ),  விசுத்தி (ஆகாயம்)  என்ற பஞ்ச  பூதத்தையும் , ப்ருத்விமனோமாயா , சுத்தவித்யா , மகேஸ்வரசதாசிவ தத்வம் என்னும்நால்வகை  தத்வங்களையும்  தாண்டி  சந்திர மண்டலத்தில் ஆயிரம்இதழ்களைக் கொண்ட  தாமரையில் சதாசிவனுடன் கூடி அன்னை மகிழ்கின்றாள் .

 10. மூலாதாரம் [சரீர சுத்தி, வீர்ய விருத்தி]
ஸுதாதாராஸரைச்-சரணயுகலாந்தர்-விகலிதை:
ப்ரபஞ்சம் ஸ்ஞ்சஎதீ புனரபி ரஸாம்னாய-மஹஸ: I
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்தயுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி II 10
சந்திர   மண்டலத்திலிருக்கும் அன்னையின் திருவடிகளிலிருந்துபெருகும் அமிர்த வெள்ளமானது , இந்த உலகமாகிய  உடலின்  நாடிகளை நனைக்கிறது .  பிறகு சந்திர மண்டலத்திலிருந்து ஒருசர்பமாகத்  தன்னைச் சுற்றிக்கொண்டு , தன்னுடைய ஆதாரமானமூலாதார சக்கரத்தில் கண்ணுக்குத் தெரியாமல் அன்னை யோகநித்திரை  செய்கிறாள் 

11. ஸ்ரீசக்கர வர்ணனை [ஸத்ஸந்தானம், ஜன்ம ஸாபல்யம்]
சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவ யுவதிபி; பஞ்சபிரபி
ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி: I
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாshra-த்ரிவலய
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா பரிணதா: II  11
 
சிவச் சக்கரங்கள் 4 , சக்திச் சக்கரங்கள் 5,  இந்த மூலச் சக்கரங்களான 9 சக்கரங்களோடு,  அஷ்டதள ( 8 ) , சோடசதள( 16), த்ரிவலய ( 3 சுற்று ),த்ரீ ரேகைகளோடு     ( 3கோடுகள் ) கூடிய உன் இருப்பிடம் ,நாற்பத்தி  நான்கு  கோணங்கள்      கொண்ட     உன் ஸ்ரீ சக்கரமாக விளங்குகிறது
 

12. உவமையற்ற சௌந்தர்யம் [சிவஸாயுஜ்யம், ஊமையும் பேச]
த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்ச-ப்ரப்ருதய: I
யதாலோகௌத்ஸுக்யா-தமரலலனா யாந்தி மனஸா
தபோபிர் துஷ்ப்ராபாமபி கிரிஷ-ஸாயுஜ்ய-பதவீம் II  12
தேவீ ! உன் மேனியின்  அழகினைப் பார்த்து , ரம்பை , ஊர்வசி போன்றதேவலோக மங்கையரும் கூடஆசைப்படுகிறார்கள் . படைக்கும்கடவுள்   பிரம்மாவினால்  கூட உன்னுடைய பேரழகை   வருணிக்கமுடியவில்லை . அந்த பேரழகை  பரமசிவனால் மட்டுமே அனுபவிக்கமுடியும் . எனவே பரம  தபஸ் விகளால்  கூட அடைய முடியாத அந்த சிவசாயுஜ்ய  பதவியை , தேவலோகப்பெண்கள்  மனதால் அடைய விரும்புகிறார்கள்   .
 

13. கடைக்கண்ணின் கிருபை [காமஜயம்]
"
" நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித-மனுதாவந்தி சதச:
கலத்வேணீபந்தா: குசகலச-விஸ்ரஸ்த-ஸிசயா
ஹடாத்த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய: II  13
 
 தாயே ! ஒருவன் எவ்வளவு வயதானவனாக இருந்தாலும் ,அழகில்லாமல் உடல் பலம்  அற்றவனாக இருந்தாலும் , காமரசசல்லாபம் தெரியாதவனாக இருந்தாலும் , உன் பார்வை அவன் மீதுபட்டால்இளவயது மங்கையரும் கூட ,கூந்தல் அவிழ , மேலாடைநழுவ , இடையினில் ஒட்டியாணம் தெறிக்கதன்னை மறந்து அவன் மீது  மோஹம் கொண்டு , அவனை மன்மதன்  என்று எண்ணி அவனைத்தொடர்வார்கள் .

 14. ஆதார சக்கரங்களின் கிரணங்களும் அதற்கு அப்பாலும் [பஞ்சம், கொள்ளைநோய் நிவிருத்தி]
க்ஷிதௌ ஷட்-பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாச-துதகே
ஹுதாசே த்வா-ஷஷ்டிச்-சதுரதிக-பஞ்சாச-தனிலே i
திவி த்வி:ஷட்த்ரிம்சந்மனஸி சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம் ii 14
தாயே ! உன்னுடைய பாத  கமலம்  ஆதார  சக்கரங்களான மூலாதாரத்தில் 56     ( பூமி ), மணிபூரகத்தில் 52 ( நீர் ) ,  சுவாதிஷ்டானத்தில் 62 (அக்னி ), அனாகதத்தில் 54 (வாயு), விசுத்தியில்72 (ஆகாயம் ), ஆஜ்ஞா சக்கரத்தில் 64  ஆகிய  இந்த கிரணக்களுக்குமேலே ஆயிரம் தள தாமரையில் ஒளிர்கின்றது .  

 15."தேவியின் சுத்த ஸத்வ வடிவம் [கவித்துவமும், பாண்டித்தியமும்]
சரஜ்-ஜ்யோத்ஸ்னா ஸுத்தாம் சசியுத-ஜடாஜூட-மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம் i
ஸக்ருன்ன த்வா நத்வா கதமிவ சதாம் ஸன்னிதததே
மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதய: Ii 15
இலையுதிர்  காலச் சந்திரனைப் போன்று வெண்மையான உடல்அழகினைக் கொண்டவளும் ,  சந்திரனை மகுடமாகத் தரித்தவளும் , அபய வரப்  பிரதான முத்திரைகளுடன் ,கையில் புத்தகம் ,ஸ்படிகமாலை இவைகளை  உடையவளுமான உன்னை ஒருமுறையாவது வணங்குகின்ற பக்தனுக்கு ,  தேன் , பால் , திராட்ஷைஇவைகளையும் விட ,மிக இனிமையான வாக்கு பலம் கிடைக்கும்என்பது நிச்சயமே .  

16. "அருண மூர்த்தி" [வேதாகம ஞானம்]
கவீந்த்ராணாம் சேத: கமலவன பாலாதப-ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம் i
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ஷ்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதததிஸதாம் ரஞ்சனமமீ ii  16
 
 கவிகளின் மனமாகிய தாமரை மலரை மலரச்  செய்கின்ற , இளஞ் சூரியனைப்  போல் செந்நிற மேனி அழகை உடையவளே ! உன்னைவணங்குபவர்களுக்கு , காலத்தைக் கடந்த ஒரு பக்திப் பரவச நிலைஏற்பட்டு (விழிப்புணர்வு), அதன்  மூலம் சரஸ்வதியின் அருள்  பெற்று , தெய்வீகக் கவிகள் படைக்கும் திறமை பெற்று , அதனால் மற்றவர்களையும் மகிழ்விக்கின்றனர்.
 

17. வாக் தேவதைகளால் சூழப்பெற்றவள் [வாக் விலாஸம், சாஸ்த்ர ஞானம்]
ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர்
வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி i
கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர்
வசோபிர்-வாக்தேவீ-வதன-கமலா மோத மதுரை: Ii 17
சந்திரகாந்தக் கற்கள்  போல் ,வெண்மையான வசினி முதலாய வாக்தேவதைகளால்   சூழப்பட்டவளேஉன்னை  முழு மனதுடன்தியானம் செய்பவனுக்கு , மஹா கவிகளின் வாக்குகள் போல் ,சரஸ்வதி தேவியின் இனிமையான  வாக்விலாசத்தை உடையவனாய் ,மஹா காவியங்கள் படைக்கும் திறமை உடையவனாய் ஆகின்றான் .  

18. அருணரூப த்யானம்: காமஜயம்:தனுச்சாயாபிஸ்-தே தருண தரணி ஸ்ரீ ஸரணிபிர்திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி யா i
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண-சாலீன-நயனா:
ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி கீர்வாண-கணிகா: Ii 18
 
 உதய சூரியன் போல்உன் மேனியிலிருந்து வருகின்ற அழகான சிவந்த கிரணங்களினால்,  இந்த பூமிஆகாயம்  முழுவதும் சிவப்பு  நிறத்தில்மூழ்கி இருப்பதாக (அருணா தேவீ ரூபம்தியானம் செய்யும்பக்தர்களிடம் , மருண்ட மான் விழிகளைக் கொண்டரம்பை ஊர்வசி போன்ற தேவலோக பெண்களும் வசப்படுகிறார்கள் . அப்படியிருக்கசாதாரண  பெண்களைப்பற்றிச் சொல்லவும்  வேண்டுமோ ?
 

19. காமகலா த்யானம் (காம ஜபம்);முகம் பிந்தும் க்ருத்வா குசயுகமதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத்யோ ஹரமஹிஷி தே மன்மத கலாம் i
ஸத்ய: ஸம்க்ஷோபம் னயதி வனிதா இத்யதிலகு
த்ரிலோகீமப்யாஷு ப்ரமயதி ரவீந்து ஸ்தனயுகாம் II 19சிவனின் துணைவியே ! காமகலா ரூபிணி ! உன் முகத்தை   பிந்துஸ்ஸ்தானமாகவும்அதன் கீழ் உன் இரு  ஸ்தனங்களையும்அதன்  கீழ்சக்தி வடிவத்தையும் , தியானித்து , அதில் மன்மதக்  கலையை எவன்துதிக்கிறானோ , அவன் எல்லா பெண்களின் மனத்திலும் காமவிகாரத்தை  ஏற்படுத்துகிறான் . சூர்ய சந்திரர்களை  ஸ்தனங் களாகக்கொண்ட  மூஉலகப் பெண்களையும்  தன்   வசப்படுத்துகிறான் .
 

20. சந்திரகாந்தப் பிரதிமை போன்ற வடிவம் - ஸர்வ விஷ, ஸர்வ ஜ்வர நிவாரணம்:கிரந்தி மங்கேப்ப்ய: கிரண நிகுரும்பாம்ருத ரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர சிலா மூர்த்திமிவ : I
ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா ii[20]
அன்னையே ! சந்திர காந்தக் கற்களினால் செய்யப்பட்டதுபோல் அழகியஉருவம் கொண்டவளே ! உன்னை வணங்கும் அடியார்க்கு , உன்அங்கங்களிலிருந்து பெருகும்  அமிர்த   மழையினை வாரிவழங்குபவளே  ! அதனால் உன் அருள்   பெற்றவன் ஆடும் பாம்பிற்குசாடும் கருடனைப்   போலவும் , ஜுரத்தினால் பாதிக்கப்  பட்டவர்களுக்கு,உன்னால் கிடைக்கப் பெற்ற அமிர்த  பார்வையினாலேயே ,நிவர்த்தியைத் தருபவனாகவும் இருந்துஅவர்களின் நோயை குணப்படுத்துகிறான் .  

 21. மின்னல் கொடி போன்ற வடிவம் - ஸர்வ வசீகரம்தடில்லேகா தன்வீம் தபன சசி வைஷ்வானர மயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம் i
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித மலமாயேன மனஸா
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம் ii [21]
தாயே ! ஆனந்தவல்லி ! ஆறு  ஆதார சக்கரங்களுக்கும்  மேலே ,தாமரைக்காடு  போன்ற ஆயிரம் தளத் தாமரையில்மின்னல் கொடிபோன்றுசூர்யா சந்திர  அக்னிவடிவம் கொண்டவளே ! உன்னுடைய'சாதா '   என்ற கலையை காமம்மாயை , அறியாமை விட்ட , ஞானிகளும் தியானித்து ஆனந்தநிலை பெறுகிறார்கள்


 22.- ஸர்வ ஸித்திபவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி : I

ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம் ii [22]
 
 தாயே ! உன்னுடைய பக்தன் உன்னைப் பார்த்து , தாயே !    பவானி !உன்னுடைய கடைக்கண் பார்வை இந்த அடியவன் மீது படட்டும் என்றுநினைத்து ,'பவானி நீ ' என்று சொல்ல  ஆரம்பித்த உடனேயே ,மும்மூர்த்திகளால் வணங்கப்பட்ட உனக்கு , அவன் மீது மிகுந்தகருணை ஏற்பட்டுஅவனுக்கு உன் சாயுஜ்ய பதவியைத் தருகின்றாய் .  (மோக்ஷத்தைத்   தருகிறாய் )

 23. "சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம்" [ஸர்வ ஸம்பத்து]
த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா
சரீராத்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத் i
யதேதத் த்வத்ரூபம் ஸகல-மருணாபம் த்ரிநயனம்
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம் ii 23   அம்மா ! சிவந்த சந்திரக்கலையுடன் கூடிய மணிமுடி , மூன்று கண்கள் ,பருத்த இரு ஸ்தனங் களோடுநீ  சற்று   முன்புறம்  சாய்ந்து இருப்பதைப் பார்த்தால்நீஆதி சிவனுடைய இடப்பாகத்தைஅபஹரித்தது  போதாமல் , ஆசை தணியாமல்அவருடைய முழுபாகத்தையும் அபஹரித்து விட்டது  போல்  தோன்றுகிறது .

 24. "தேவியின் புருவ அமைப்பு' [ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்]
ஜகத் ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வன்-னேதத் ஸ்வமபி வபு-ரீசஸ்-திரயதி i
ஸதா பூர்வ: ஸர்வம் ததித-மனுக்ருஹ்ணாதி சிவஸ்
தவாஜ்ஞா மாலப்ய க்ஷண சலிதயோர்-ப்ரூலதிகயோ: Ii 24
 
 தாயே ! படைக்கும் கடவுளான பிரம்மா , காக்கும் கடவுளான விஷ்ணு ,அழிக்கும் கடவுளான ருத்ரன்  ஆகிய மூவரையும்  ஈசனானவர் தன்னுள்மறையும்படி  செய்து தானும் மறைகிறார்  (கண்ணுக்குத் தெரியாமல் ). பின் உன் கொடி போன்ற புருவத்தின் அசைப்பால்நீ  காட்டிய உத்தரவை மதித்துசதாசிவன்  இன்நால்வருக்கும்  அனுக்கிரகம் செய்து , மீண்டும் உலகத்தை உற்பத்திச் செய்வதற்காக அவர்களைப்படைக்கிறார் .
 

25. "தேவியின் பூஜையில் மும்மூர்த்தி பூஜை அடக்கம்" [உன்னதப்பதவியும் அதிகாரமும் பெற]
த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா i
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-கரோத்தம்ஸ-மகுடா: Ii 25
அன்னையே !  தேவீ ! மும்மூர்த்திகளான பிரம்மா ,விஷ்ணுருத்ரன்  (முக்குணங்களை உடையவர்கள் ) ஆகியோர்தன் மணிமுடிகளின் மீது ,கூப்பிய கரங்களுடன் உன்னை வணங்கியபடி நிற்பதால் , உன்  சரணங்களுக்குச் செய்யும் பூஜையானதுஅவர்களையும்  பூஜிப்பது போல் ஆகின்றது................. 

1 comment:

  1. மிக நல்ல துவக்கம். இதன் தொடர், அதாவது மீதமுள்ள 75 பாடல்களும் தமிழில் விளக்கமும் எங்கு பார்க்கலாம்?

    ReplyDelete