Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, October 18, 2017

என் சொல் சத்யம், என் செயல் சத்யம்,

இநன்யா நமோ நம ....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
என் சொல் சத்யம்,
என் செயல் சத்யம்,
வளமை, மொழி,ஞானம்,
நகர்தல்,எழுச்சி,உயிர்ப்பு திறமை
நாவில் வைத்த நாயகி சாம்பவி
எல்லா ஜீவனிடத்திலும் நாவில் இருக்கும் நாயகி
என் அன்னை நுணுவா வாக்தேவி யன்யா ஆணந்தம் தருவார்கள்
ஆளுமை உள்ளவன் என் ஆசியினால்,
எட்டு திக்கும் வெற்றி முரசு கொட்டுவாயடா
என்னுள் நிலைபெற்று ஆட்சி செய்யும்
ஆறு பேராத்மாக்கள் துணையோடு
உன்னை ஆணந்த நிலைக்கு கொண்டு செல்ல வைப்பேனடா.
நுணுவா மனோ வசி சுபிட்சம் நீ வெல்வாயடா.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
நம்பிக்கை தளறும் போதல்லாம் நாயகன் என்பாத கமலத்தை கெட்டியாக பிடித்து கொள் விண் நாயகன் உனை கரை சேர்ப்பேன்.
.................................
வாடிய பயிரை பார்த்து வாடி நிற்க வரவில்லை நான்.
உன்னை கை பிடித்து கரை சேர்க்கவந்தேன்,
நீ ஆணந்தமாக வாழ அதிகாரம் கொண்டு வந்தேன்.
தாய் தந்தை மதிக்கும் பிள்ளை தரணியில் நிம்மதியோடு வாழும்.
கண்டதை வணங்கி கொண்ட வாழ்வில் துண்பத்தோடு வாழ்கின்றான் மானிடன்,
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் உன்னை வெல்ல வைக்க வந்தேன்.
என்னை நம்பியவர் தோற்பதில்லை.
எந்தவொரு சோதனையிலும் நான் தப்பிக்க வைக்கின்றேன் என்னை நம்பியவரை.
இந்த புணித நன் நாளில் என் அன்பு அன்னை தந்தையின் ஆசியோடு என் நெஞ்சம் நிறைந்த ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகளையும் உனக்கு தந்தேன்.
சத்தியமாக நம்பு உன்னை நான் கை விடமாட்டேன்.

இநன்யா நமோ நம ....
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Wednesday, October 4, 2017

ஒன்றுமில்லா இடத்தில் ஒன்று இருக்கிறது ! ஏழும் ஒன்றாய் ஏழேழு அடுக்காய் ஈரடுக்காய் ! அதுவே புறவெளி ! உன் உள் வெளி !

to INANYA MAHA MUNIVAR
05-10-2017
வகுலி தத்துவம் உள் உணரும் தத்துவம் ! நீல தத்துவம் உலகை அறியும் வித்தகம் !
வெளி
ஒன்றுமில்லா இடத்தில் ஒன்று இருக்கிறது ! ஏழும் ஒன்றாய் ஏழேழு அடுக்காய் ஈரடுக்காய் ! அதுவே புறவெளி ! உன் உள் வெளி !
வெளியில் தேடுவது ஒன்றை தவிர ஒன்றுமில்லை !
உன் வீட்டைத் தேடுவது தான் வெளியில் வெளிப்பாடு ! அதை விடுத்து மாறும், அழியும் ஜடத்தை தேடுகின்றாய். என்னை அறிந்தால் வெளியில் நான் இருப்பதை அறிவாய் ! சத்தியம் கண் முன்னே விரியும் ! உன் விழி எனை அறியும்.
அறியும் தத்துவம் ஒன்றே ! பூவில், தளிரில் உனை அறிவாய் ! உற்று நோக்கி உவகை கொள். நான் சூட்சுமம் ! ஆனால் சூட்சும பொருள் அறிய முற்பட்டு ஆயுள் முடிக்கின்றாய் !
வெளி பிரம்மாண்டம் ! எல்லாம் இயக்கும் சூட்சுமம் அதனுள்ளே. எல்லாம் வெளியில் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஐம்பூதத்தில் வெளி தான் மூலம் ! அதுவே முதலும் முடிவும் ! ஆனால் மனம் எனும் வெளியில் உன் வாழ்வை தீர்மானிக்கின்றாய். தீர்மானம் என்பது கடவுள் முதலில் படைத்தவையில் தான் ! உன் தீர்மானம் ஏதுமில்லை. முதலில் வெளியை அறிய முற்படு. பின் உன்னை அறியலாம்.
கரமாலமாகும் உன் குரம்பை, காட்சி தெரியா வாழ்வு அறிந்தும் அறியாது போல் உன் வாழ்வு.
முற்றும் துறந்தவன் நான் ! எல்லாம் எனக்குள் அடக்கம் ! அடங்கும் ! பரவெளியில் பேராத்மாவாக நிற்கிறேன் ! உன் உணர்வு சிறிது !
கருணை உள்ள, உயிருள்ள தாய், தந்தையை வணங்காமல் கல்லையும், மண்னையும் வணங்கியும், கருணையில்லா மனிதனை வணங்கியும், கல்லாய் போன மனிதர்கள் தான் இங்கே நிரம்ப கண்டேன்.
தீயை எரித்து, வணங்கி தீமையை விலக்க முடியாது.
அழுது ஆர்பரித்து ஆணந்தம் அடைய முடியாது.
வெளி உனை பார்க்க உன் உள் வெளி அறியாது வாழ்கின்றாய். எண்ணற்றவை அங்கே தூக்கி நிறுத்தபட்டிருக்கின்றன. எண்ணற்ற விண்மீன்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன ! ஏன் என்று யோசித்தாயா ? அது உன்னை கண்கானிப்பது தெரியாமல் ஆடுகின்றாய் பூமியில் ! உன் வேடிக்கை விளையாட்டை என்னவென்று சொல்வேன் ?
வெளியில் இருந்து வரும் மழை நீரின் மகத்துவம் அறியா அலைகின்றாயே ? ஒரு துளி நீர் உன் உள் நாக்கை உணர்த்துமடா !
தான் அறியா வாழ்வும், தடம் அறியா பாதையும் மறந்தாயே ஏனடா ? நான் வெளியில் ஆணந்தமாய் ! உணரடா ! உன்னையும் உணர வைப்பேன் !
பரவெளி நான் !
நான் இநன்யா !

Wednesday, September 27, 2017

நாக்கு


28-09-2017· 
ஆக்கையிலே உயர்ந்த சூட்சுமம் ! உனை உருவாக்கும் அற்புத காட்சிகம் ! உன் உள்ளே உற்றுப் பாரடா ! உள்ளுரை உணரடா உண்மை சூட்சுமம் !
நாக்கு ;;;;;;;
பெண்மை மென்மையடா ! படைப்பின் சூட்சுமம் பெண் ! உலகில் இரண்டு மென்மையான வலைகள் உள்ளன. அழிக்கவும் செய்யும். ஆக்கவும் செய்யும். ஒன்று பெண் ! மற்றொன்று நாக்கு ! உலகை புரட்டி போடும். நல்வழி காட்டும். நாக்குக்கு வேலை கொடுக்காதே ! உன் பாவம் ஆரம்பிக்கும். அதை பிடித்து கடவுளின் தங்க கொட்டிலில் கட்டு !
நாக்கு நீரில் இல்லாவிட்டால் நீ நீசனாகி போவாய். கடவுள் படைப்பில் அற்புதம் நாக்கு ! எப்போதும் நீரில் வைத்தான். ஏன் என்று உணர்ந்தாயா ? உணர் !
நிம்மதி தரும் சூட்சுமம் நாக்கு ! எப்போதும் கடவுள் நாமம் சொல்வதற்கு உன் நாவை சுழட்டு ! உன் உமிழ் நீர் இனிக்குமடா ! உன் உமிழ்நிர் இனித்தால் உன் வாழ்வும் இனிக்குமடா !
மூன்று அங்குல நாக்கு ஆறடி மனிதனையும் கொல்லும். ஆளும் அரசாங்கத்தை ஆட்டி வைக்கும். நாக்கை ஆட்டி பெண்கள், மகான்கள் சாபத்தினால் தான் பூமியில் சர்வ நாசங்கள் நடக்கின்றன ! இந்த நரம்பில்லா நாக்கு தான் எல்லா துன்பத்தையும் தருகிறது. உண்பதற்கு மட்டுமே நாவை பயன்படுத்து. கடவுள் நாமம் சொல்வதற்கு மட்டும் நாவைத் திற !
நீரில் குளிர்வித்தான் ! நீ நீசனாகிவிடக்கூடாது என்பதற்காக ! நாவில் நீர் வறண்டு போனால் நீ வறண்டு போவாய் ! கொடிய விஷம் உன் நாவில். அதை நல்வழிக்காக மட்டும் பயன்படுத்து.
உலகம் நீ நினைக்கின்ற படி இல்லை. நீ நினைத்து ஏதும் நடவப் போவதில்லை. உன்னை தீர்மானிப்பது உன் எண்ணமே ! உலகில் எங்கு ஓடினாலும், தேடினாலும் கடவுளை அறிய முடியாது. ஒருவன் கூட்டத்தை கூட்டுகின்றான் என்றால் உன்னை ஏமாற்றுகிறான் என்று அர்த்தம். நாடு விட்டு, ஊரு விட்டு ஊர் சென்று கூட்டம் நடத்துபவனை நம்பாதே !
கடவுளிடம் எதையும் பொறுமையாக கேள். அவசரப்படாதே. நீ கேட்டது நிச்சயம் கிடைக்கும் ! உன் அவசரப் பேச்சு தான் உன்னை ஆளுமை இல்லாமல் வைக்கின்றது. உன் மனமயக்கம் தெளிவாக எப்போதும் மாயவனை நினைத்துக் கொண்டே இரு ! உன் நாவை கொண்டு நல்லது செய்ய நினை. சுடு சொல் உனை கீழ்நிலைக்கு அழைத்து செல்லும் என்பதனை புரிந்து கொள் !
நாவை பக்குவப்படுத்து ! நாயகன் நான் உனக்கு எப்போதும் துணை இருப்பேன். பொறுத்திரு ! உன் பொறுமைக்கு நிச்சயம் பரிசு உண்டு ! நீ தனிமையில் இருக்கும் போது எதை சிந்திக்கின்றாயோ அது தான் உன் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கின்றது.
பெண்ணின் சாபமே இங்கு பெரும் பீடையாய் இருக்கிறது. எப்போதும் தனித்திருக்கும் பொழுது கெட்ட எண்ணங்கள் வரும். ஆதலால் எப்போதும் கடவுளை பற்றியே நினை. யார் உன்னை இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் காது கொடுத்து கேட்காதே. இது தான் உன் லட்சியத்தை நிறைவேற்றும் சூட்சுமம் !
நீ அதிகம் பேசுவதால் உன் நிலை இழக்கிறாய். கேட்கும் திறன் செவி மடு ! கீழான எண்ணங்களை ஒதுக்கு ! இழிவான பேச்சும், கடவுள் இல்லை என்று சொல்வதும் இந்த நாக்கு தான். முதலில் மேல் லோகத்தில் உன் நாக்குக்கு தான் தண்டனை கிடைக்கிறது.
நாக்கு உள் நாக்கு. உலகை அறியும் நாக்கு ! நாக்கை சுத்தமாக வை ! என் அன்னை நுணுவா உன் நாவில் அமர்ந்து நலம் தருவாள். உன் உள்ளுரை உவர்ப்பாக்காமல் இனிப்பாக்குவாள். என் நாவில் என் அன்னை உண்டு ! என் உமிழ்நீர் இனிப்பாகும் தத்துவம், நாவுக்கு நான் வேலை கொடுப்பதில்லை !
நாக்கை கட்டுப்படுத்து. நாயகன் நான் உன்னை எப்போதும் காப்பேன் !
உனை என்றென்றும் காப்பேன் நான் !
நான் இநன்யா !

Wednesday, September 20, 2017

யார் நண்பன் ?


Inanya Maha Munivar 
21-09-2017
வீதியிலே விதாரகம் இருந்தது. விதர்ப்பணம் இல்லாது வாழ்ந்தான். இப்போது மாட வீதி கட்டி மனிதநேயம் இல்லாது வாழ்கின்றான். ஏனடா ?
யார் நண்பன் ?
எனக்கு நள்ளுநர் அன்பிற்கினிய கடவுள் மட்டுமே ! பூமியில் நண்பன் என்று எனக்கு யாருமில்லை. எனக்கு நண்பன் என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்சத்தின் தலைவன் யாகவா மட்டுமே ! உலகில் மனித தோன்றலில் நண்பன் என்பது கடைந்தெடுத்தல் போல் தான் ! உனக்கு நண்பன் உன் தாய் தந்தை தான் ! தாய், தந்தை போல, மனைவி போல நண்பன் யுகத்தில் யாருமில்லை. இவர்கள் தான் உனக்கு தலை சிறந்த நண்பர்கள் !
எங்கே ரகசியம் இருக்கிறதோ அங்கே நட்பும் இல்லை, நண்பனும் இல்லை. செயல் அனைத்தும் மறைவு என்பதாலே உன் மனைவியிடம் நீ நண்பனாக இல்லை. வரிடம் எப்போது ரகசியம் இல்லையோ அங்கே நட்பின் வேர் துளிர்க்கிறது. உன் வாழ்வு சத்திய பாதையில் பயணிக்கிறது.
நண்பன் என்பவன் உன் போலவே துன்பம், கவலை, குழப்பத்தில் இருப்பவன் தான். அவனோடு பேசினால் குழப்பம் தான் வரும். தாய், தந்தை உன் வாழ்வில் குழப்பம் தரமாட்டார்கள். ஆதலால் தாய் தந்தையை நண்பனாக்கு. உயரிய நண்பன் என்றால் உன் மனைவி தான். மனைவியிடம் உண்மையாக இரு ! பெண்கள் கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் !
உன் வாழ்வில் இனிய பயணம் தொடங்கும். உன் வாழ்வு சிறக்க உன் மனைவியிடம் ஆலோசனை கேள் ! ஏனென்றால் ஆணை விட பெண்களுக்கு ஆசை இரண்டு மடங்கு ! புத்தி ஐந்து மடங்கு ! பெண் இல்லாமல் இங்கே உயர்வு இல்லை !
பூமியில் நான் கண்ட நண்பன் நாய் மட்டுமே. அது தான் நன்றியோடு எப்போதும் இருக்க கண்டேன். நான் எதை செய்தாலும் என் அன்பிற்கினிய தந்தை யாகவா தலைவனிடம் விளம்புவது உண்டு. ஏனென்றால் என் அன்பிற்கினிய நண்பன் என் தந்தை யாகவா !
உலகில் தாய் தந்தை போல நல்ல நண்பர்கள் இருக்க முடியாது. என் தந்தை யாகவா கட்டளையை நான் மீறுவதில்லை. நான் அமைத்த சத்திய பாதையும் என் அன்பிற்கினிய தந்தை கட்டளைப்படியே ! அதனால் தான் சொல்கிறேன், நான் சத்தியத்தின் வாசல் என்று ! என் பாதையில் நீ வர ஆயத்தமானால் சத்தியத்தின் பாதை தெரியும் !
உன்னை நம்பியவரிடம் எதையும் மறைக்காதே. பொய் சொல்லாதே ! நல்ல நட்பின் அடையாளம் பொய் சொல்லாமல் இருப்பது தான் ! உன் துன்பத்தை போக்குபவன், உனக்கு வழி காட்டுபவன் சிறந்த நண்பன் !
நான் உன் ஆணந்தத்தை எதிர்பார்க்கிறேன். நீ எப்போதும் வாய்விட்டு சிரிக்க ஆசைபடுகிறேன். நான் உன் தலைசிறந்த நண்பன் தானடா ? நீ உலகை ஆள வேண்டும் என்று துடிப்பவன் நான். உன் இருளை போக்க நினைப்பவன் நான் ! உன் நண்பனை புரிந்து கொள் !
இருபது வயதில் நான் வசித்த ஊரின் பக்கத்தில் ஒரு பெரியவர். அவரின் பெயர் ராஜா பிள்ளை. வயது எழுபத்து ஐந்து. பெரும் நிலகிழார். அறிவில் சிறந்தவர். பத்திர எழுத்தர். நான் அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். உலகில் ஒரு நல்ல மனிதரை மனித நேயமிக்க தலைவனை பார்த்தேன். என்னை பற்றி தெரிந்த நல் ஆத்மா. உலகில் எந்த உயரத்தில் இருந்தாலும் தான் யார் என்று காட்டி கொள்ளாத பணிவு தான் உன்னை உயர்த்தும்.
என் செயல் அவர் நெஞ்சில் என்னை வைத்தது. மூன்று மாதம் கழித்து என்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேர்ந்தார். “நீ என் வாழ்வில் கண்ட அரிய பொக்கிஷம். நீ என்னிடம் வேலை செய்ய என் மனம் ஒப்பவில்லை. உலகில் நான் கண்ட தலை சிறந்த நண்பன் நீ. உன்னை வேலை செய்ய தூண்ட மனமில்லை என்றார்.” அது மிகைபடுத்த முடியாத சிறந்த நட்பு.
எப்போதும் நல்ல நண்பன் உன் எதிர் காலத்தை நிர்ணயிப்பவனாக இருக்க வேண்டும். பின் அந்த பணி வேண்டாமென்று சென்னை வந்துவிட்டேன். என் தந்தையை பார்ப்பதற்கு ! அதே போல் சுயதன்ராஜ் என்ற நல்ல மனிதரையும் பார்த்தேன். வயது என்பது இருக்கும். ராணுவத்தில் பணி புரிந்தவர். மதம் தாண்டி மனித நேயத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்தேன்.
உலகில் தாய், தந்தை, மனைவி, கடவுள் தலை சிறந்த நண்பர்கள் என்பதை புரிந்து கொள் ! நல்ல நண்பன் உள்ளவன் இங்கே ஜெயிப்பான் ! நான் எதிரிலி ! என் ஏற்றனை உனக்காக காத்திருக்கிறது. நல்ல நட்பின் அடையாளம் உன்னை உயர்த்தும் !
உன் உயிர் நண்பன் நான் !
நான் இநன்யா !

Saturday, September 16, 2017

என்னுள் வளரும் விருட்சம் செதுவல் ஆகாது.

இநன்யா மகா முனிவர்.
16-09-2017 அன்றைய பதிவு.
என்னுள் வளரும் விருட்சம் செதுவல் ஆகாது.
நான் உனக்கு எப்போதும் சுடாரிபோல் இருப்பேனடா.
என் தேவ தீபம் உனை நோக்கி ...
வருடா வருடம் செப்டம்பர் மாதம் 9 - ஆம் தேதி முதல் 18 - ஆம் தேதி மாலை வரை
ஒரு வேளை உணவருந்தி மனம், வாக்கு, உடல் சுத்தமாக இருக்க
என் அன்பிற்கினிய தந்தை
யாகவா கட்டளையிட்டுட்டார்கள்.
ஏனென்றால் 9 நாளும் மேலிருந்து ரிஷிகள், யோகிகள் யுகம் வருவார்கள்.
ரிஷிகள், யோகிகள் பூமியில் பிறப்பதில்லை.
அவர்கள் மெய் உடலோடு இந்த யுகத்திற்கு வருவார்கள்.
இன்னொன்றும் முக்கியமாக
இந்த செப்டம்பர் மாதம் அமாவாசையை ஒட்டியுள்ள நாட்களில் ,
சூரியன் பூமியின் நடுப் பாகத்தில் வந்து கதிர்வீச்சைத் தரும்.
உடலில் அதிக பாதிப்புகள் உருவாகும்.
கரு கூடத் தங்காது.
இன்னொன்றும் மிக முக்கியமாக
தேவர்களின் கணக்குப்படி உனக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் .
இந்த ஒரு நாளில் நடு இரவாக இந்த செப்டம்பர் மாதம் (புரட்டாசி ) வருகிறது.
அதனால் இந்த 9 நாள். உன் மனம், காயம் , நலம் பெற இந்த நாள் குறிக்கப்பட்டது.
அதனால் தான் சித்தர்களின் கணக்கு படி 9 நாள் நவராத்திரி கொண்டாடுகிறாய்.
இதை மத சாயம் பூசிவிட்டாய்.
அதனால் இது விரதம் என்பது சாத்தியமல்ல.
27-ஆம் தேதிக்குள் வன்னி இலை பறித்து பெரியோர்கள் காலில் வைத்து வணங்கி உன் வீட்டில் வை.
மரத்தடியில் (வன்னி) கொஞ்சம் பச்சரிசி , வெல்லம் கலந்து வை.
செந்நிற எறும்புகள் சாப்பிட்டு உன் வறுமை, துன்பத்தை போக்கும்.
கால கணக்கு எல்லாம் சரிதான்.
ஆனால் காலத்தை தான் நீ உணரவில்லை.
உணரடா .
உண்மையில் நன்மை நானடா.
என் அன்பின் ஆசிகள் உனை நோக்கி இநன்யா.........
...............................

Thursday, September 14, 2017

கடவுள் யார் ???

கடவுள் யார் ???
கடவுள் காற்றுபோல ஒரு உணர்வு ,
அதற்கு வடிவமில்லை,
மனமுமில்லை,
நன்மையுமில்லை,
தீமையுமில்லை,
தூய்மையுமில்லை,
அசுத்தமுமில்லை,
பொய்யுமில்லை.
உண்மையுமில்லை,
கடைசியில் அது ஒன்றுமில்லை,
ஆனால் அது இல்லாமல் ஒரு துளியுமில்லை.
கடவுள் மிகப்பெரிய அளவில் இருப்பது அதிசயமில்லை,
கண்ணுக்கும் தெரியாத ஒரு சிரிய அணுவுக்குள்ளும் இருப்பதேஅதிசயம்.
கடவுள் கண்களை மூடிப்பார் .
கடவுள் உன் உள்ளே இருப்பதை உணர்வாய்,
கடவுள் எங்கேயில்லை,
எதிலே இல்லை,
ஏன் இந்த தடுமாற்றம்,
கடவுள் உன் எதிரிக்குள்ளும் இருப்பானே ,
நீ பகைப்பது உன் எதிரியையா,
அல்லது கடவுளையா,,,
ஆத்மாதான் உடலை வாழச் செய்கிறது,
அப்படியானால் உடல் வெறும் கருவி,,,
கருவி எப்படி கடவுளாக முடியும்,
கருவிக்குள் கடவுளை உணர்ந்தால் ஏன் மகான்களை மட்டும் வணங்க வேண்டும்,,
பிரபஞ்சமே கடவுள் அல்லவா,
பிரபஞ்சமே கடவுள் என்றால் எல்லாமும் வணங்க தக்கதே,
இந்த உண்மை புரியாமல் ஒருவரை துன்பப்படுத்தியும்,
இன்னொருவரை ஆனந்தபடுத்தியும் தொலைகிறோமே,
இந்த முட்டாள்தனமான சிந்தனை ஒழிந்தால் இந்த முழு பிரபஞ்சமே வணங்கதக்தாக ஆகிவிடுமே ;;;;;;;
.............................
மனிதனுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் ஏற்படுகிறது?
மனிதன் நல்லதை நோக்கி சென்றாலும் துன்பம் அடைவான்.
கெட்டதை நோக்கி சென்றாலும் துன்பம் அடைவான்.
துன்பம் இயற்கையானது இது புத்தனுக்கும் உண்டு.
புத்தியில்லாதவனுக்கும் உண்டு.
ஆனால் துன்பம் நிரந்தமற்றது ;
நான் யார்? என்பதை உணராமல் இருப்பதே மனிதனின் துன்பத்திற்கு எல்லாக் காரணமும்.நான் யார்?
என்பதை உணராவிடில் ஆசை என்பது என்ன என்று புரியாமல் போய்விடுகிறது.;;;;;;;;;;;
நீங்கள் கடவுளிடம் கேளுங்கள் தப்பே இல்லை எதையும் கேளுங்கள் கடவுள் கருணை வடிவம்தான் கேட்டாலும் பிரார்தனைதான் ///
கேட்கவிட்டாலும் பிரார்தனைதான் தருவார்.. கண்டிப்பாக தருவார்,,அவரிடம் அவ்வளவு அன்பு உங்கள் மீது கொண்டிருக்கிறார்.;;;;;

பரியாகி கடவுளை அறிவான் ! ஆனால் அறிதல் ஓமிடி செயலில்தானடா !

பரியாகி கடவுளை அறிவான் ! ஆனால் அறிதல் ஓமிடி செயலில்தானடா ! உணரடா ! உண்மை நானடா !
கடவுள் உன்னோடு பேசுவான் !
அன்பிற்கினியவன், ஆளுமை மிகுந்தவன் எண்ணிலடங்கா ஜீவகோடிகளை ஈன்ற அப்பன் என் நெஞ்சில் சிரிக்கும் தூயவன் உன்னோடு பேசுவான் ! எப்போது ? நீ நன்மை செய்து துன்பத்தில் உணரும் போது !
நீ எந்த செயல் செய்தாலும் முதலில் ஒரு விநாடி ஒரு கூக்குரல் கேட்கிறது. வேண்டாம் என்றும், செய் என்றும் ! ஆனால் கடவுள் பேசுகிறான் என்று நீ அதனை உணரவில்லையே ?
மனதில் ஆசையை அடக்கும் போதும், இல்லையேல் அதை கடந்து செல்லும் போதும் உன் உள் உணர்வு தாமதமாக ஆணந்தபடும் ! அப்போது கடவுள் பேசுவான் ! இங்கே பூமியில் தவறு செய்பவனிடம் கடவுள் பேசுவதில்லை. பிறந்த குழந்தை ஒரு வருடம் (தேவர்களுக்கு ஒரு நாள்) கடவுளிடம் பேசும் ! சிரிக்கும் ! அழும் ! உணர் !
உணர்ந்தும் கடவுளின் இருப்பை அறியாமல் இருக்கின்றாயே ? தவம், தியானம் இருந்தால் தான் கடவுள் பேசுவான் என்று அர்த்தமில்லை. ஞானியர்கள் தன்னை ஒடுக்கி உள்ளே விரிந்தார்கள். துன்பத்தில் கடவுளை கண்டார்கள் ! கடவுள் நீ மேலே செல்லும் போது ஒரு தடவை தான் ஒரு வார்த்தை பேசுகிறான். ஆனால் பூமியிலே எப்போதும் பேசுவான் !
யுகத்தில் பிறந்த மானிடன் தவம் செய்தவன் ! ஆனால் கடவுளோடு பேசுவதை மறந்துவிட்டான். உன் சத்திய பாதையை செம்மையாக்கு. ஆசையை விலக்கு. எல்லாம் உனக்கு காலத்தில் கிடைக்கும் !
கடவுளோடு எப்போதும் பேசி ஆணந்தப்படு ! எப்போதும் நன்மையே நினை. ஒழுக்கம் உன்னை கடவுளிடம் அழைத்து செல்லும். மது, மாது தொடாதே ! ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உணர்வோடு வாழ் ! உயிர் போக நினைத்தலும் ஒழுக்கதில் தவறாதே !
தர்மத்தை செய்யாவிட்டாலும், தர்ம சிந்தனையோடு இரு !
நீ ஆணந்தமாவாய் ! ஆணந்தமானவன் உன்னோடு பேசுவான் ! நான் தினமும் உன்னோடு பேசுகிறேன். நீ தான் உன் செவி திறக்காது தீவினைக்குள் இருக்கின்றாய். உன் ஆளுமை உன்னுள் உறங்கி கொண்டிருக்கின்றது. நீ தான் தட்டி எழுப்ப வேண்டும் !
எண்ணம் நல் எண்ணமாக திண்ணியமாக இருக்கும் போது கடவுள் எப்போதும் உன்னோடு பேசிக் கொண்டிருப்பான். கடவுளோடு பேசிக் கொண்டிருப்பதால் தான் ஞானிகள் உன்னோடு பேசுவதில்லை !
நான் எப்போதும் எனக்குள்ளே பேசி ஆணந்தமாய் இருக்கின்றேன் ! அளவிளா பேரின்பமாய் இருக்கின்றேன். நானும் என் தந்தையும் எப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றோம். நான் உன் நெஞ்சில் இருப்பதை நினைத்து நீயும் கர்வப்படு !
ஒழுக்கத்தை எப்போதும் உன் உயிருக்கு மேலாக மதி ! உன் துன்பத்தை பனி போல ஒரு நொடியில் உருக வைப்பான்.
உண்மையை சொல்கிறேனடா ! கடவுள் உன்னோடு பேசுவான் ! உன் வழி அமைத்து தருவான் ! உன் சுட்டு விரல் பிடித்து அழைத்து செல்வான் லோகத்திற்கு !
வீறு கொண்டு எழு ! வீணாய் புலம்பாதே ! துன்பம் என்று ஏதுமில்லை ! எல்லாம் இன்பம் தான் ! என்னை பெறு ! நான் உன்னோடு பேசுவேன். இது சத்திய வார்த்தை. நித்சலன் வேண்டாம். ஏனென்றால் நானே சத்தியம் !
என்னை உணர்ந்தவன் ஞானியாவான் !
நான் இநன்யா !