Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, July 13, 2017

யாகவா முனிவர் படம் 1







பரப்பாழில் வான் விளக்கம் ! பெருவனத்தில் அகழி நிறை ! ஆழம் தெரியாது அறியாது வாழும் மானிடா, ஏதுரைப்பேன் நானடா ?


பரப்பாழில் வான் விளக்கம் ! பெருவனத்தில் அகழி நிறை ! ஆழம் தெரியாது அறியாது வாழும் மானிடா, ஏதுரைப்பேன் நானடா ?
பணிவாய் இரு !
மரம் ஏறினால் மேல் நோக்கி பார்த்து ஏறுகின்றாய். எப்போதும் மேல் நோக்கியே வேண்டு என்று அர்த்தம். மனிதனும், மரமும் தான் மேல் நோக்கி வளர்கிறது. ஆழ்ந்த சூட்சுமம் அறிவாயடா ! மரங்கள் இல்லையென்றால் நீ இல்லை. மரத்தை பயன்பாடுக்கு கொண்டு வா ! மலையில் ஏறும் போது குணிந்து தான் ஏறுகிறாய். இறங்கும் போதும் குணிந்து தான் இறங்குகிறாய். ஏன் என்று யோசி !
எப்போதும் பெரியோர்களை மதிக்க கற்றுக் கொள். பெற்றோரை வணங்க கற்றுக் கொள் ! பணிவு இருந்தால் தான் நீ வெல்வாய் ! நீ உயர உயர உனக்கு பணிவு வேண்டும். அதற்கு பெரியோர்களை துணை கொள். நல்குருவை நாடி வாழ வழி செய்து கொள் !
சித்தர்கள் மலையில் கோயில் கட்டியது நீ உணர்வதற்காகத்தான் ! உள்ளத்தில் பணிவு வர வேண்டும் என்பதற்காக தான். அதை விடுத்து மலையை சுற்றினால் மகத்துவம் உண்டு என்றெல்லாம் சொல்வது பொய்.
கடவுள் உருவாக்கிய உலகத்தை மனிதன் பங்கிட்டு பிரிக்கின்றான். எல்லை வகுத்து நான் என்று இறுமாந்து அலைகின்றான். அகழி தெரியா கடலை பிரித்து ஆணவத்தோடு வாழ்கின்றான். பாதுகாக்க பூமிக்கு அனுப்பினால் நான் என்று பிதற்றுகின்றான். ஆண்டவன் எல்லாம் மாண்டுவிட்டதை அறிவாயோ நீ ?
கடவுள் ஆண், பெண் என்று பார்ப்பதில்லை. ஆண்மாவை பார்க்கின்றான். நாயிடம் உள்ள விசுவாசத்தை எதிர்பார்க்கின்றான். இங்கே எல்லோருக்கும் கடமைகள் வேறு. ஆளுக்கு ஒரு கடமை உண்டு ! ஆணுக்கு ஒரு கடமை, பெண்ணுக்கு ஒரு கடமை. இங்கே கடமை மறப்பதால் தான் கழகம் வருகிறது. யாருக்கும் யாரையும் அடிமையாக படைத்ததில்லை இங்கு !
படைத்தவன் கை பாகுபாடு பார்ப்பதில்லை. படைப்பை பார்த்தவன் தான் பாகுபாடு பார்க்கின்றான். இந்த புண்ணிய பூமியின் அழகை பாரடா ! யுக யுகங்களாக வந்த உயிர்கள் அனைத்திற்கும் வாரி வாரி கொடுத்த சுயநலமில்லாத எதிர்பார்ப்பு இல்லாத இந்த வலிமைமிக்க பூமிக்கு என்றாவது முத்தமிட்டு மகிழ்ந்தாயா ?
எத்தனை எத்தனை தானியங்கள், பழங்கள், கனிகள் ? நீ அழகு பார்க்க நவராத்தினங்கள் ! பருக நீர் தந்த பக்குவ பூமிக்கி என்றாவது நன்றி சொன்னாயா ? நிணநீரும். நிலநீரும் நிம்மதி தந்ததே ! நீ தான் யாருக்கும் நிம்மதி தராமல் நீசனாய் வாழ்கின்றாய். கடவுள், மகான்கள், சித்தர்களை தூக்கி சுமந்த இந்த பூமிக்கு நன்றி சொல் ! நீ புணிதனாவாய் !
கடவுளின் பாதமே உன் உயிருக்கு விடுதலை தரும் !
பற்றிடு பற்றில்லாமல் !
பற்றா தான் பற்றும், பற்றும் எற்றி செல்லாமல் நன்றி சொல்ல மறந்ததினாலே நிம்மதி இல்லாமல் மனிதன் அலைகின்றான். பணிவு இல்லா வாழ்வு உனை பாசமில்லாக்கும். நானலைப் போல பணிந்திரு ! எதற்கும் தளராத மரத்தை போல உயர்ந்திரு !
காற்று, மழை, புயல், பனி, கடும் வெயிலுக்கு தாக்குபிடித்து இறுமாந்து நிற்கும் மரத்தை போல கர்வமில்லா வாழ்ந்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். வாழ்வு பெருஞ்சுவர் உன் சந்ததியை வாழ வைக்கும். கடவுள் இல்லை என்று பிதற்றாதே ! நெஞ்சம் முழுவதும் கவலையை சுமந்து திரிகின்றாய். அதை தீர்க்க பணிவு கொள். துணிவு கொள். துயரமேதடா ?
துண்மார்க்கன் கடவுளை இகழ்வான். தூய நெஞ்சன் கடவுளை அறிந்து மகிழ்வான் !
அறிவாய் இரு ! பக்குவம் உனக்குள் வரும் !
மேருவின் உயரம் நான் ! மேதகு நிறையோன் நான் !
நான் இநன்யா !

Thursday, July 6, 2017

விக்கிரமம் நிறைந்தவன் நீ ! ஏன் விப்பிரம்மாக இருக்கின்றாய் ? ஆரிடை தெரியாது ஏன் ஆனந்தம் தொலைத்து வாழ்கின்றாய் ? ஓர் நிலை கொள் !


விக்கிரமம் நிறைந்தவன் நீ ! ஏன் விப்பிரம்மாக இருக்கின்றாய் ? ஆரிடை தெரியாது ஏன் ஆனந்தம் தொலைத்து வாழ்கின்றாய் ?
ஓர் நிலை கொள் !
ஆதியில் ஆன்மீக அறிவற்று இருந்தான். ஆளுமை தனக்குள் இருப்பதை உணர்ந்தான். ஆனந்தமாய் வாழ்ந்தான். எல்லாவற்றுக்கும் பயந்து இயற்கையை வணங்கி நேசித்தான். இருள், மிருகம், நாமம் எல்லாவற்றுக்கும் பயந்தான் ஓர் நிலை கொண்டவன்.
ஒரு வழியை பின்பற்றியவன் மதத்தை உருவாக்கினான். தன் கடவுள் தான் பெரிது, தன் வழிபாடு தான் பெரிது என்று மனிதனை குழப்பினான் ! வழி தெரியாது தடுமாறி மனிதன் வீழ்ந்தான் துன்ப கடலில் !
கடவுள்கள், முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், சித்தர்கள், ஞானிகள், பித்ருக்கள் முதலிய இந்த ஏழு நிலைகளும் மேலே உண்டு ! மனிதர்கள் வாழும் இடம் காண்டங்கள். இப்படி ஏழு உலகத்தில் எங்கே செல்ல வேண்டும் என தெரியாமல் மனிதன் விழி பிதுங்கினான். அதை மதம் என்ற போர்வை போற்றி குழம்பி திரிய வைத்தான்.
இங்கே வழிமுறைகள் மறந்தாய் ! வழிபாடு என்று கடவுளை நெருங்கமுடியாமல் தவிக்கிறாய் ! மீண்டும், மீண்டும் இங்கே பிறப்பதாலே உன் உலகம் செல்ல முடியவில்லை. நீ உன் உலகம் செல்ல வழிமுறைகளை பின்பற்று.
இங்கே யாரும் குரு அல்ல. பசுத்தோல் போர்த்திய புலி. இந்த கர்ம பூமியில் கர்மங்கள் நிரம்பி வழிய காரணம் உன் வழிபாடு தான்.
நீயே யோசி ! எது இங்கே நிம்மதி தரும் என்று ! தேவ ஜனங்கள் யார் ? கடவுளின் பிள்ளைகள் யார் ? ஒழுக்கம், அன்பு, கடமை, உள்ளவர்கள் யாவரும் கடவுளின் பிள்ளைகள் தான் என்பதை புரிந்து கொள்.
“மதம் மாறி, மனம் மாறி துன்புறுகின்றாயே உன் ஆண்மா இன்புறுவது எப்போதடா ?” என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வதுண்டு !
மனித மனத்தை மாற்ற மனிதனுக்கு தெளிவில்லை. மதம் மாறினால் கடவுள் அருள்வான் என்று சொல்கிறான். மதம் என்பது அன்பற்ற சொல். அறிவற்ற செயல் ! எல்லோருக்கும் பொதுவான தரை காத்திருப்பதை மறந்து அலைகின்றான். உலகம் அழியும் சூழலில் இருக்கிறது.
கடவுள் மதத்தை பார்ப்பதில்லை. மனித மனத்தை தான் பார்க்கின்றான். உலகில் எங்கெல்லாம் மத வழிபாடுகள் நிரம்பி வழிகின்றதோ அங்கேயே மிக கோர நிகழ்வுகள் நடக்க போகிறது இனி ! மதம் அழிந்து மனித நேயம் மலரும்.
கடவுள் ஆயத்தமாகிவிட்டான் !
அரசியல் நாடகமும், மத சூழ்ச்சியும் சாயம் வெளுத்துவிட்டது. எல்லாம் இங்கே நாடகம் என்பதை புரிந்து கொள்வான். இனி கடவுள் நடத்தும் நாடகத்தை பொறுத்திருந்து பார். மனிதன் இனி வழிமுறைகளை தேடி அலைவான்.
தன் குடும்பம், தன் இனம், தன் மதம் வளர்ச்சியாக வேண்டும் என்று ஏமாற்றும் நாடகங்களை மனிதன் அறிவான். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி கூட்டம் கூட்டுகின்றான். யாராவது உழைப்பதற்கு வழி சொல்கின்றானா ? மதம் என்ற போர்வை போர்த்தி மனிதன் போடும் வேஷம் இனி கலையும்.
ஆயிரம் கடவுளை வணங்கினாலும், ஆயிரம் வழிபாடுகள் செய்தாலும் ஏன் அதிகமாக நோய்களும், துன்பங்களும் நாளுக்கு நாள் கூடுகின்றது என்பதை யோசி ! புத்தி உள்ளவன் இதை அறிவான்.
படைத்தவன் பாசமாக பக்குவமாக படைத்தான். அவன் அன்புக்கு நிகர் ஏதுமில்லை. இங்கே மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு மனிதன் அமைத்த சட்டமே காரணம் ! இனி கடவுளின் சட்டம் பொய்க்காது. இந்த இநன்யாவின் சொல்லும் ஓர் நாளும் பொய்க்காது.
ஓர் நிலை கொள்.
உயர்ந்த வாழ்வும், மீண்டும் பிறவி இல்லா வாழ்வும் உன் காலடியில் !
ஓர் நிலை நான் !
நான் இநன்யா !

என்னில் மீசரன் யாருமில்லை ! நீ முழவம் கொட்டடா ! முழவிதான ஒசு செய்யடா ! நான் உன் முன்னால் ! என்னை புரிந்து உணரடா !



என்னில் மீசரன் யாருமில்லை ! நீ முழவம் கொட்டடா ! முழவிதான ஒசு செய்யடா ! நான் உன் முன்னால் ! என்னை புரிந்து உணரடா !
நன்றி சொன்னாயா ?
படைப்பில் எதுவும் மாறவில்லை ! பாழ்பட்ட மனிதன் தான் மாறிவிட்டான் ! என்றாவது நீ பிறந்த வயிற்றுக்கு நன்றி சொன்னயா ? உனை தோளில் சுமந்த தந்தைக்கு, உனக்கு சுகம் கொடுத்த மனைவிக்கு நன்றி சொன்னாயா ?
ஒரு வேளை உணவு கொடுத்தால் நீ எங்கே போனாலும், எந்த கூட்டத்தில் நின்றாலும் உனை பார்த்து வாலாட்டி நன்றி சொல்லும் நாயிடமிருந்து நன்றியை கற்றுக் கொள்ள மறந்துவிட்டாய்.
அதற்கும் மேலாக உண்ண உணவு, உடுக்க உடை , படுக்க இடம் தந்த பரமாத்மாவுக்கு நன்றி சொன்னாயா ?
நீ செய்யும் எல்லா கர்மாக்களையும், பாவங்களையும் சுமக்கும் தாய் பூமிக்கு நன்றி சொன்னாயா ?
எதற்கும் நன்றி சொல்ல தெரியாதவன் நீ ! எப்படி நலமாக வாழ்வாய் ?
கஷ்டத்தில், நஷ்டத்தில் கடவுளை நோக்கி கூக்குரல் போடும் குஷ்ட மனிதனையே கண்டேன். மரத்திற்கு நீர் ஊற்றுகிறாய். அதன் நன்றியை காய்கனியாக உனக்கு தந்து பெருமிதத்தோடு வாழ்கிறது. நீயோ உண்டவன் வீட்டுக்கு கெண்டி தூக்க பார்க்கிறாய்.
இங்கே மழைக்கும், மண்ணுக்கும், தண்ணீர்க்கும், தாவரத்திற்கும் நன்றி சொல்ல மறந்தாய். பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும் புறம் தள்ளும் வேடிக்கை மனிதர்களை பார்க்கின்றேன். பின் சக்தியும், சத்தும் இல்லாமல் நாதி இல்லா சாகக் கண்டேன்.
நன்றியை மறந்துவிட்டாய். பின் எப்படிடா உனக்கு பூரிப்பு வரும் ?
நன்றி, நன்றி இந்த சொல் எப்போதும் நாவில் வரட்டும் ! நாயகன் நான் உனை ஓடோடி வந்து அரவணைப்பேன் !
தன் உயிரையும் மெய்யையும் பிசைந்து பெற்றாள் உன்னை உயிர்மெய்யாக ! நீ பெற்றவளை மறந்து பேடியாக திரிகின்றாய். புலன் அனைத்தும் உனக்கு தந்து பொறி எல்லாம் உனில் கலந்து மெய் சுவைத்து உள் இனித்து பாவையின் ஒழுகு மாடத்தை முகர்ந்தாயடா. சுவைத்தாயடா. மனைவியாய் உனக்கு மார்விலக்கி மடிபிச்சை தந்தாளடா ! மாயை எனும் மனைவிக்கு ஏன் நன்றி சொல்ல மறந்தாயடா ?
உத்தமி என்றும் பத்தினி என்றும் பறைசாற்றும் உன் வாய் உருமறைந்து ஊருக்குள் அலைய கண்டேன். சத்தியம் நீ மறந்தாய். சடுதியில் துன்பம் கண்டாய். உண்டாய் ஊன் துன்பம். உலகின் ஆளுமையை நிந்தித்து வாழ்கின்றாய்.
திருமணமான புதிதில் ஆல் போல் தளைத்து சருகு போல் வேரூன்றி இருக்க கண்டேன். ஆனால் பக்கத்தில் நெருங்க நெருங்க காணல் நீர் போல் உறவு காணாமல் போக கண்டேன் ! அதே போல் தான் என்னில் வருகின்றான். என்னை மிக நெருங்குகிறான். நான் நெருங்கி பாசமாக வரும் பொழுது விலகிக் போகின்றான் !
இங்கே வீரமும், விவேகமும் இரண்டு மூன்று பிள்ளை பெருவதற்கே உபயோகபடுத்துகிறான் ! வந்த கடமை, வாழும் கடமை தெரியாது அன்பை தொலைத்து உறவை தொலைத்து வெளியே எங்கோ தேடுகின்றான். மீண்டும் பிறக்காத கடமை புரியாது மாண்டு போகின்றான்.
நன்றி சொல்லடா ! நாயகன் நான் உனக்கு எப்போதும் துணை இருப்பேன். சுகமான சுகம் தருவேன்.
அணுவுக்குள் அணுவானவன் நான் !
நான் இநன்யா !

தென்னில் கடுமழை உண்டு ,ஒருக்கலிக்கும் புணித நீர்,

03-07-2017
* தென்னில் கடுமழை உண்டு ,ஒருக்கலிக்கும் புணித நீர்,வரும் டிசம்பரில் மேலிருந்து வரும் சூட்சும்ம் யுகத்தை பிளந்து அதிரவைக்கும்.ஜீவராசிகள் கலங்கி நிற்கும்,உன் விஞ்ஞான கோள்கள் எல்லாம் குறையாய் நிற்ககண்டேன் எதை வைத்து தடுப்பாயடா ஆகாசவீதியெல்லாம் ஆனந்தமாய் நான் ஆள்பவன் எனை அறியாமல் ஆழிகூத்தில் சிக்கி தவிக்கின்றான் உன்னை ஆள்பவன் நானடா ,ஏனடா மனபயம்...

* நாம் நினைப்பது அனைத்தும் நடந்தாலும், நடக்காவிட்டாலும் பரவாயில்லை. நடப்பது அனைத்தும் நல்லதாக நடக்க கடவுளுக்கு தினமும் நன்றி சொல்வோம். நன்றி சொல்லும் வேதம் அருளிய ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
"யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா"

* என்னை பார்த்து உன்னை சரிசெய்து கொள் ,
நான் காலகண்ணாடி .

என்னை பார்த்தும் உன்லட்சியம் நிறைவேறவில்லை என்றால் ,
உன்னில் தவறு இருக்கிறது .
அதை விரைவில் சரிசெய்து என் சத்தியபாதையில் ஆனந்தமாக வாழ ஆயத்தமாகு .
நீ எல்லா செல்வமும் பெற்று ஆனந்நதமாக வாழ்வதை பார்க்க அவா எனக்கு .
நீ வாழ்வாயடா .
இநன்யா சத்தியமானவன்.Inanya Maha Munivar

Thursday, June 22, 2017

என் லக்கின் ஏப்பாடு என் கண் பார்க்கும் தூரம் வரை ! இருளுவா, ஒளிவா அறிந்தால் உயிர்கிழவன் தத்துவம் புரியுமடா ! உணரடா !

என் லக்கின் ஏப்பாடு என் கண் பார்க்கும் தூரம் வரை ! இருளுவா, ஒளிவா அறிந்தால் உயிர்கிழவன் தத்துவம் புரியுமடா ! உணரடா !
பிரம்மச்சரியம்
பிரம்மச்சரியம் என்றால் ஆணும், பெண்ணும் சேராமல் தனிமையில் இருப்பது என்று நினைக்கின்றான். மிருகங்கள், பறவைகள் பிரம்மச்சரியம் கொள்வதில்லை. இங்கு பிரம்மச்சரியம் என்பது ஒழுக்கமாக இருப்பது தான் !
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டோடு வாழ்ந்து ஒழுக்கமாக இருப்பது தான் பிரம்மச்சரியம் !
இங்கே கூடி வாழ்ந்து கடமையை செய்து நல் ஒழுக்கத்தை நிலைநாட்டுவது தான் பிரம்மச்சரியம் !
இங்கே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் தத்துவம் படைப்பின் சூட்சுமம் ! இதில் ரகசியம் ஏதுமில்லை. ரகசியம் என்பது உன் படைப்பு தான் அதை விளக்கி பாடம் சொல்ல அவசியம் இல்லை.
தன்னை உணர்ந்தால் எல்லாம் உணர்வான் !
பெண்ணை அறிந்தால் எல்லாம் அறிவான் !
நான் உன்னை உணர வைக்க வந்தேன் ! உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவி நான் அல்ல ! நான் உழைத்து கடமையை செய்து கொண்டிருக்கும் இல்லறத்தான். ஆதிகால முனிவர்கள் இல்லறத்தோடு இருந்தார்கள் ! நல்லறம் கொண்டு பிறருக்கு நல் அறிவு தந்தார்கள். வித்தை எல்லாம் கற்று கொடுத்து வீரனாக மாற்றினார்கள் !
இப்போது தியானம் யோகா என்று சொல்லி ஏமாற்றும் கள்ளத் துறவிகளையும், கபட நாடகமாடும் அற்ப மனிதர்களையும் தான் நான் கண்டேன்.
தனித்திரு என்ற சொல். உன் புலன்களையும், பொறிகளையும் விட்டு தனித்திரு என்று தான் அர்த்தம் ! கட்டிய மனைவியை பெற்ற பிள்ளையை தவிக்கவிட்டு தனிமையில் இருப்பது பிரம்மசரியம் அல்ல !
பெண் இல்லா வாழ்வு பெரு நரகம். பெண்ணே இன்பம் ! பெண்ணே ஞானம் ! மனிதனை ஆணந்தமாக இருக்க வைக்கும் சூட்சுமம் பெண் தான். உனக்கு மீண்டும் பிறப்பில்லா வாழ்வு தர பெண்ணால் மட்டுமே முடியும் ! இங்கே பெண்ணை ஆணந்தமாக வைப்பது தான் ஆணந்தம் ! அவளை புரிந்தால் உன் பிறப்பை தவிர்க்கலாம் !
இப்போது மதம் என்ற போர்வை போர்த்தி அதில் பிரம்மச்சரியம் என்ற இருண்ட சால்வை போர்த்தி ஆட்டம் போடும் மதபிசாசுகளின் கொட்டம் அடக்க கடவுள் ஆயத்தமாகிவிட்டான் !
உனது பாதை ஞானவழியில், ஒழுக்க வழியில் சென்றால் உலகில் நீ பார்க்கும் இடமெல்லாம் கடவுளின் பூமுகம் தெரியும் ! உன் ஆணவம், அதிகாரம் விலக்கப்பட்டாலே ஆத்மாவின் நித்ய யோகம் புரியும்.
எல்லாம் உன்னுள் இருக்கும் வரை (கர்மா, பாவம்) நீ பூஜ்யம் தான் ! உன்னால் ஆண்மாவை அறிய முடியாது. ஆண்மா தனித்திருப்பது உனக்கு தெரிந்துவிட்டால் யுகம் இருக்கும் வரை உனக்கு ஆணந்தம் தான் !
படைக்கப்பட்டதில் ஆதியிலிருந்து எதுவும் மாறவில்லை ! கூடவில்லை, குறையவில்லை, அதன் இயல்பிலிருந்தும் மாறவில்லை. (நீர், நிலம், வித்துக்கள், பறவைகள், மிருகங்கள்). இந்த நீச மனிதன் தான் மாறிவிட்டான்.
இனி எல்லாம் மாறும் ! மாற்றுவேன் !
இங்கே திருமணம் செய்யாமல் தன் சொந்த நலன் கருதி இருப்பவர்கள் பிரம்மசாரிகள் அல்ல. பிரம்மசாரியத்தை வலுக்கட்டாயமாக செய்வது தான் துக்க மரணம் ! துக்க நிவாரணி கடவுளின் பாதம் மட்டும் தான். மற்றவை எல்லாம் இங்கு பொய் தான் !
போதிப்பவன், உபதேசம் செய்கின்றவன், மதபிரச்சாரம் செய்பவன், உயர்ந்தவன் அல்ல ! அவன் ஞானியும் அல்ல ! கடவுளின் பிள்ளையும் அல்ல ! உழைப்பிற்கான வழியை சொல்லி கொடுப்பவனே ஞானி என்பதை புரிந்து கொள் !
நான் கதை படித்தும், காணொலி பார்த்தும், செவி வழி கேட்டும் யுக தர்மத்தை சொல்லவரவில்லை !
என்னை உணர்ந்தேன் ! உன்னை உணர வைக்க வந்தேன் !
வந்தவர்கள் யாவரும் உழைப்பையும், கடமையையும் சொல்லித் தரவில்லை. உருவாக்கம் எதற்கென்று உன்னை எவரும் உணர வைக்கவில்லை. சித்தாந்தம் பேசி சிதிலமடைந்து மாண்டது தான் மிச்சம்.
அளவம் வைத்து வாழ்கின்றான், ஆளுமை தெரியாமல் !
உன் நித்ய யோகம் நான் !
நான் இநன்யா !

Wednesday, June 14, 2017

புராவிருத்தம் எல்லாம் பொய்யடா ! நான் மெய்யடா ! எந்தை முழு விந்தை கந்தை உன் சூத்திரம் !

புராவிருத்தம் எல்லாம் பொய்யடா ! நான் மெய்யடா ! எந்தை முழு விந்தை கந்தை உன் சூத்திரம் !
வீதி உலா
வீதராகம் உள்ளவன் நான் ! வீதி உலா வருவதை அறிவேன் ! செயற்கை தேர் சக்கரம் உருவாக்கி, சிதிலமான உயிரற்ற சிலை ஒன்றை நிறுவி வீதி உலா வருவதை அறிந்தேன், உன் கஷ்ட நஷ்டம் பார்ப்பதற்காக. பவித்ரம் இல்லா சிலை, பாவி உனை அறியுமோ ? வீதியில் உலா வரும் இந்த விடங்கனை நீ மறந்தது ஏனோ ?
கோழை போல வாழ்கின்றாயே, வீரனாய் எப்போது மலர்வாயடா ? வீரம் என்பது சரீர பலம் அல்ல. வீரம் என்றால் துன்பப்படுகின்றவனுக்கு தொண்டு செய்வது தான் ! தர்மம் செய்வது தான் ! எதற்கும் ரத்தம் சிந்த தயாராக இரு. உன் லட்சியம் அடையும் வரை ஓய்ந்திருக்க எண்ணாதே !
நான் காற்றாய் உனதருகில் வருகிறேன் ! என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் செல்வ செழிப்பு நிரம்ப கண்டேன் ! நானும் செவி குளிர கேட்டு மெய் மறந்து போகின்றேன். ஆனாலும் என் கடமையைச் சிறிதளவு தடை வராமல் சிந்தை சீர்தூக்கி நிற்கின்றேன்.
நான் இல்லற தர்மத்தில் வாழ்கின்றேன். இல்லறத்தை ஆட்சி செய்பவனே ஞானி. எந்த துன்பம் வந்தாலும் மனைவி பிள்ளைகளுக்கு கடமை செய்து விலகாமல் காத்து நிற்பவனே மிக பெரிய ஞானி ! ஆகாயத்தில் உலவுகின்றேன், பாசப் பறவைகளாய் !
பக்குவம் உள்ளவன் எனை அறிவான் ! தூய்மையாய் இருக்கும் பெண்ணை தூய்மை இல்லை என்று விலக்கினான். தூமகேது என்று நினைப்பவன். துயர்படும் சூத்ரம் தெரியாது வாழ்கின்றான். ஏனடா ? எப்போது அறிவாயடா ? ஞான பெண்ணை மறந்தான், நாயினும் கீழான எண்ணம் உள்ளவன்.
பெண்ணை போற்றி பாடடா ! போற்றும் உனை உலகமடா !
பரணியில் நான் பட்சிகளோடு உலா வருவதை மறந்தாய். தரணி முழுவதும் என் முகம் உண்டு ! என் கண் உண்டு ! பார்த்தவன் அறியவில்லை. நான் பாசத்தால் சொன்னாலும் புரியவில்லை. பாசமில்லா பாவியடா நீ ! பக்தி எதற்கடா ? இதோ வருகிறான், இதோ வருகிறான் என்று கூவி அழைக்கின்றான். நான் வந்து அலைகின்றேன் ! கண்டு கொள்ளாமல் திரிகின்றான். என்ன வேடிக்கையடா ?
நெஞ்சில் மதம் (திமிர்) கொண்ட மனிதன் மதத்தில் மயங்கினான். வந்து அலைகின்றேன். கண்டான் எவருமில்லை இங்கு.
யாருக்கேனும், எதற்கேனும் ஒரு சிறிதளவு தொண்டு செய். தர்மம் செய்ய மறவாதே ! தர்மமும் புண்ணியமும் தான் உனை மீண்டும் பிறக்க வைக்காத சூத்ரம் ! ஒழுக்கம் இங்கே பிராதனம். எதையும் வைராக்கியத்தோடு அடைய நினை. உன்னை இழந்தால் தான் ஜெயிக்க முடியும் !
அன்பை கொண்டு உன் வீட்டை அழகுபடுத்து ! உலகம் அன்பாய் தெரியும். அன்பின் இலக்கணம் (உனை) அரவணைத்து மகிழும். என் நாமம் திதியம் தரும் ! சிக்கன பிடி. தேவலோகம் உனை அள்ளி அரவணைக்கும் !
111 கோடி முனிவர்களோடு, நான் வீதி உலா வருவதை பார் ! காலகணக்கு என்றும் பொய்ப்பதில்லை ! இந்த காலன் சொல்லும் சரித்திரம் பொய்த்து போனது இல்லை.
சாஸ்திரத்தில் மயங்காதே ! சரித்திரம் மறவாதே ! இந்த வீதி உலா வரும் (காற்று) இந்த விடங்கனையும் மறவாதே !
தஞ்சன் எனை அறிவான் !
வீதி உலா வருபவன் நான் !
நான் இநன்யா !