Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, November 27, 2018

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது…

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்…

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்…

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை…

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரசவம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்…

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது…

7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்…

8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன…

9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது…

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப் பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்…

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது…

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்…

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு…

14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்…

15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது…

16. நம் உடல் தசைகளின் எண்ணிக்கை 630…

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது…

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன…

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது…

20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்…

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ…

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது…

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது…

24. பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது…

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்…

26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்…

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்…

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடையாது…

29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது…

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்…

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை/கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது…

32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்…

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன…

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபகங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன்.. அந்நியன் தான்…

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள்தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது…

36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன…

37. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது…

38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது…

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போதும், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்…

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது…

41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்…

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது…

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே…

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீதம் கூடுதலாக வியர்க்கிறது…

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்…

46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே…

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் கேலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்…

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன…

49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்…

50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது…

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்…

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டிமீட்டர்…

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்…

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன…

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது…

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்…

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..

58. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்…

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது…

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்…

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன…

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட்டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்..

65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்..

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது…

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயிரணுக்கள் வரை இருக்கும்..

69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்…

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது…

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்…

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட்டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்…

74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது…

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை…

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்…

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள ‘ஆலவியோலி’ என்னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது..

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன..

80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு..

81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன..

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு..

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை, மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது..

85. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்..

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்..

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற்படுகிறது..

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கிறது. வருஷத்திற்கு 4 கோடி தடவை..

90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..

92. மனித உடலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உருவாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்..

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்..

95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்..

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலிருந்து இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது…

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்…

98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி…

99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..

ஓர் ஆன்மாவின் குரல்!

ஓர் ஆன்மாவின் குரல்!

நான் அமரன்! எனக்குச் சாவு கிடையாது! 
நாழிகைகள் கழிந்தாலும் நாட்கள் ஒழிந்தாலும் பருவங்கள் மாறினாலும் 
ஆண்டுகள் சென்றாலும் எப்போதும் நான் மாறுபடமாட்டேன்!
நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன்!
என்றும் உயிர் வாழ்வேன்! 
எப்போதும் சத்யமாவேன்! 
எப்போதும் ஆனந்தித்திருப்பேன்.
இதையெல்லாம் நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன்!
இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன்! 
ஏனெனில் என்னுள் நான் நிரம்பிக்கிடக்கின்றேன்!
நான் கடவுளின் அணு! 
ஆதலால் சாக மாட்டேன்!
தெய்வம் என்னுள் எப்போதும் 
வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி 
என்னைத் திறந்து வைத்திருக்கின்றேன்! 
அதாவது, நான் என்னுள் வீழும்படி 
எப்போதும் திறந்து நிற்கிறேன்! 
என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான்! 
அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கின்றேன்!
உடல் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது!.
அதனால் உடலின் ரத்தம் வேகமும் 
தூய்மையும் உடையதாய் இருக்கின்றது!
அதனால் என்னுள்ளே வீர்யம் 
பொங்கிக் கொண்டிருக்கிறது! 
நான் எப்போதும் வீர்யம் உடையேன்! ஜாக்ரதையுடையேன்!
எப்போதும் தொழில் செய்வேன்! 
எப்போதும் அன்பு செய்வேன்! 
அதனால் சாதல் இல்லாதவன்! 
நான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடப்பது ஏன்! 
நான் தேவன் ஆதலால்!
நான் தீராத இளமை சார்ந்தேன்! 
என்றும், எப்போதும், நித்யமான கால முழுமையிலும், 
தீராத மாறாத இளமையுடையோன்! 
மூட மனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர்! 
நான் அதனை வேண்டேன்! 
ஏனென்றால் வேண்டும் நீண்ட வயது 
துன்பமாகிறதேயன்றி வேறில்லை!
நான் சதாகாலமும் துன்பமின்றி 
வாழும் வாழ்க்கையை விரும்புகின்றேன்! 
அதனை நான் எய்திவிட்டேன்.
தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை 
சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்! 
ஞானம்பெறும் எண்ணம் குறையும்!
நான் கவலையை ஒழித்தேன்!
ஆதலால் எப்போதும் வாழ்வேன்!
ஆதலால் கவலையை விட்டேன்!
கவலையாலும் பயத்தாலும் மரணமுண்டாகிறது!
கவலையும் பயமும் பகைவர்கள்! 
நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்!
ஆதலால் மரணத்தை வென்றேன்.
நான் அமரன். நான் அமரன். 
நான் அமரன். என்றும் நான் அமரன். 
நீங்களும் அமரனாகலாம்! முயற்சி 
திருவினையாக்கும். 
இது ஓர் ஆன்மாவின் இனியகுரல் --குருஜி

இராஜயோகம் Written by குருஜி


இராஜயோகம்

Written by 

                                   ஓம்சிவாயநமக!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து என்பணியை
உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
0=0=0=0=0=0

பொது:

வாழ்வின் வெற்றிக்கு மகிழ்வு ஓர் காரணம். மகிழ்ச்சிக்கு உடல்நலம் இன்றியமையாதது. உடல் நலமுடன் இருக்க, இயங்க சில பயிற்சிகள் அவசியம். அப்பயிற்சிகள் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் ஆகியவைகளைச் சீராக்கி, நுறையீரல்கள், முதுகுத்தண்டு மற்றும் உள்ளுறுப்புகளை முழு அளவில் இயக்கிட உதவி புரிகின்றது. உடலின் உறுப்புக்கள் நல்லமுறையில் இயக்கப்பட்டால் நாள்தோறும் புத்துணர்வோடு நோய்களின் தாக்கமின்றி செயல்படலாம். இதற்காக தினமும் சில மணி நேரங்களைச் செலவிடுதலில் எந்த தவறுமில்லை. 
மனிதன் வாழ்வு இயற்கையை ஒட்டி இருந்தது. அப்போது மனிதனின் இயக்கம் நன்றாக இருந்ததால் அவன் உறுப்புகள் மிகுந்த செயல்பாடுகளை கொண்டிருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அவனிடம் அதிகமாக இருந்தது. அவன் ஆரோக்கியமாக இருந்தான். உடல் உழைப்புக்குத் தகுந்த உணவு கிட்டாதபோதுதான் அவனை நோய் தாக்கியது.
நவி உலகில் உடல் உழைப்பு குறந்துவிட்டது. முக்கிய உறுப்புகள் இயக்கமும் குறைய எதிர்ப்பு சக்திகள் உடலில் குறையத்தொடங்கியது. நோய்க்கு தவறான உணவுப் பழக்கம், அவனின் வாழ்க்கை முறை, உடலில் கழிவுகளின் தேக்கம், இரத்த, காற்று, வெப்ப ஓட்டங்களால் ஏற்படும் தடை ஆகியவைகளே காரணமாயின. மேலும் அதை மிகப்படுத்த உணவு முறையில் கட்டுப்பாடின்றி தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு உறுப்புக்களுக்கு அதிக செயலாக்கம் நிர்பந்திக்கப் படுவதால் அவைகள் தளர்ச்சியுறுகின்றன. இது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது.
இதை சரிசெய்ய சிலர் உடற் பயிற்சிகளை செய்கின்றனர். உடற் பயிற்சி தசைகளை இயக்கி இறுக்கி வலுவடைய மட்டுமே செய்கிறது. உடற் பயிற்சிக்கு நம் சக்தி அதிகமாக செலவிடப்படுகின்றது. உடல் உறுப்புகள் ஓரளவே இயக்கமடைகிறது.
நோய்களை எதிர்க்கும் ஆற்றல் உள்ள உள் உறுப்புகளின் இயக்கத்திற்கு உடற் பயிற்சியைவிட ஆசனப்(யோகா) பயிற்சி சிறந்தது. கண்ணுக்குத் தெரியா உள் உறுப்புகள் இயக்கமடைந்து பலன் தரும். ஆசன, யோக பயிற்சிகளினால் தைராய்ட், சோற்றுப்பை, பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல், மற்ற உருப்புகள் எல்லாம் முழுவதும் இயக்கமடைந்து பலனடைகிறது. இரத்தக்குழாய்களில் கூடுதல் பிராணன் செல்வதால் எல்லா உறுப்புகளுக்கும் தடையில்லா இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. முதுகுத்தண்டு எல்லா நிலைகளிலும் வளைந்து செயல்பட்டு அதை ஒட்டியுள்ள நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. மனக்கட்டுப்பாடு வளரும். உணவு கட்டுப்பாடு தன்னால் ஏற்படும்.
உலக ஆத்மாக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் ஆனந்த வாழ்வு வாழவேண்டும் என்பதே குருஜியின் எண்ணம். ஒரு மனிதன் ஆனந்த ஆரோக்கிய வாழ்வு வாழ்திடில் அவனைச் சுற்றியுள்ள சுற்றமும் ஆனந்தத்தில் திளைக்கும். ஆகவே எல்லா ஆன்மாக்களும் இந்த தேக, ஆசன, யோக முறைகளைப் பயிற்சி செய்து ஆரோக்கிய ஆனந்த வாழ்வு வாழ்ந்திடுவீர். அதைத் தருவது  “இராஜயோகம்“ 
கருத்து வேற்றுமைகளால் ஏற்படும் இறுக்கம், விறைப்பு (Tension), எளிதில் கலவரமடைந்து சஞ்சலத்தினால் ஏற்படும் பயம், நடுக்கம் (Nervous strain), உணர்ச்சிமிக்க மனவெழுச்சிகளினால் ஏற்படும் தீவிர உணர்ச்சிகள் (Emotional disturbances)போதுமான தூக்கம், உறக்கம் இல்லாதிருத்தல் (Sleeplessness), சந்தி, நிம்மதி, அமைதியில்லாதிருத்தல் (Peacelessness) ஆகியவைகளிலிருந்து தப்பிக்க, விடுபட தங்களது கவனத்தை, மனதை “யோகா” வின் பக்கம் மக்கள் திரும்புகின்றனர். 
வந்தபின் நாடுவதைவிட வருமுன் காப்பது என்ற அடிப்படையில் அனைவரும் ”யோகா” கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். “யோகா” என்பது அறிவு புகட்டும், ஞானம் உபதேசிக்கக்கூடிய ஒரு அமைதியான ஒழுங்கீனமில்லா வழி முறைகளைக் கொண்ட கலை.எந்த ஒரு மனிதனும் தொடர் யோகா பயிற்சிகள் மூலம் நிலைபெற்ற அமைதி, முக்தி, எப்போதும் சந்தோஷத்துடன் கூடிய புனிதமான வாழ்வு, ஜீவன் முக்தி அடைய வாய்ப்புகள் உண்டு. ‘யோகா’ என்றால் இனைப்பு, தொடர்பு, சம்பந்தம் என்றாகும். பரிசுத்தமான ஆன்மீக நிலையில் சொன்னால் மனதிற்கும், உள்மனதிற்கும் உள்ள ஐக்கியமான ஒர் ஒற்றுமை வளையமாகும்.
நம்மில் பலருக்கு இந்த இனைப்பு வளையம் உடைந்து, செயலில்லா தொடர்பில்லா நிலையில் உள்ளது. முதலில் அந்த புனித தொடர்பை மீண்டும் ஏற்படுத்த முனைய வேண்டும். நாம் இறைவனின் அணுக்கள். அவனின் குழந்தைகள். எப்படி ஒரு குழந்தை பிறந்தவுடன் அது தந்தையின் உறவாகிறதோ, பின் வளர்ந்தபின் வாழ்வின் அனுபவங்களை தந்தையின் மூலம் தெரிந்து புரிந்து செயல்பட நாடுகின்றதோ, அதுபோல நாமும் இறைவனிடம் நம் உறவை மேம்படுத்த வேண்டும். ஒன்ற வேண்டும். யோகத்தின் உதவியோடு நமது மனம், உள்மனம் இறையின் அருளைப் பெறமுடியும். 
இறைபற்றிய ஞான அறிவு, அந்த அறிவின்மேல் முழுநம்பிக்கை, மனதளவில் எப்போதும் அதை நிலை நிறுத்துவது என்ற மூன்றின் அடிப்படையைக் கொண்டு நமது உள்மனதை யோகம் இயக்க முடியும். நாம் இறையின்மேல் கொண்ட அன்பை, யோகமானது தொடர்ச்சியான தியானம், மாசு மருவற்ற மயக்கத்தை, புனிதமான, முழுமையான அர்ப்பணிப்பை தருகின்றது. ‘யோகா’வின் புரிந்து கொள்ளும் சக்தி மனதிற்கு தோழமையானது.‘யோகா’விற்காக மந்திரங்களையோ, ஜபங்களையோ திரும்பத் திரும்ப சொல்லி மனதில் பதிய வைக்க வேண்டியதில்லை. ‘யோகா’ என்பது மனித மனதில் தூய்மையான ஒருமுனைப்படுத்தும் ஒரு செயலாகும். இறை தானே செய்ததும், எல்லோரும் எந்த முறையையும் சார்ந்திராமல் கற்றுக்கொள்ள உதவுவதும் “இராஜயோகம்” ஆகும். 
இறையை தந்தையாக நினை. அதுதான் உண்மை. ஒரு குழந்தை தன் தந்தையை நினைப்பதுபோல இறை உன்மனதில் எப்போதும் இருப்பார். இறை ஒளி மயமானவர். இறையின் ஒளி வடிவத்தைக்காண ‘யோகம்’ உதவி புரியும். இதற்கு பிரமச்சாரியம் அதிகமான உதவியுடன் கூடியதாக இருக்கும். “இராஜயோக”ப் பயிற்சியினால் மன அழுத்தம் ஏற்படாமலிருக்கும். மன அமைதி கிட்டும். புனிதத் தன்மை வந்தடையும். வாழ்வு சீராகும். உடல் தளர்ச்சி அடையாது. உயிர்களுக்கு வழிகாட்டக்கூடிய மேலான நிலையை அடைய சிறந்த வழிகாட்டக்கூடிய ஞானம் பெறுவர். எல்லோருக்கும் வழிகாட்டக்கூடிய உதாரண புருஷன், ஆத்மா ஆவீர்.
நமது அறிவிற்கு ஆதாரம் அனுபவமே. தெரிந்ததைக்கொண்டு தெரியாததைக் கிரகிக்கும் அனுமான ஞானத்திற்கும் அனுபவமே அடிப்படையாகும். உலகின் சமயங்கள் எல்லாம் சாஸ்திரங்களை உடையவை. அஃதன்றி தோன்றிய சமயங்கள் நாளடைவில் மறைந்து விட்டது. சமயங்களின் சமயவாதிகள் உண்மைகளை அனுபவித்து அதை உபயோகித்தார்கள். நம் அறிவின் பலத்தின் அடிப்படையாகிய அனுபவத்தின் பேரில் சமயங்கள் அமைக்கப்பட்டன. சாஸ்திரங்களை உருவாக்கினர். உபதேசங்கள் செய்தவர்கள் கடவுளைக் கண்டனர். தங்கள் ஆன்மாவைக் கண்டனர். எதிர் காலத்தை, தங்களின் அமர வாழ்க்கையை உணர்ந்தனர். தாங்கள் கண்டதை உபதேசித்தனர்.
சமய மதங்கள் முன்னோர்களின் அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. ஒரு சமயத்தை பின்பற்ற நினைக்கும் ஒருவன் அந்த அனுபவத்தை உணர்ந்தால்தான் அந்த சமயத்தை முழுமையாக பின்பற்றமுடியும். இந்த அனுபவங்களை அடையும் வழியைப் புகட்டுவது யோக சாஸ்திரமாகும். ஆன்மீக விடுதலை அடைவதைக் குறிக்கோளாக கொண்டுள்ள முறைகளுக்கு ‘யோக’முறைகள்தான் சிறந்த வழிகாட்டி.
யோகமுறைகளை ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அனைவரும், இதுதானே எனக்குத்தெரியும் என்ற நினைவில் செய்ய முயன்றால் அது ஆபத்தில் போய் முடியும். ஒரு குருவுடைய நேரடித் தொடர்பில்தான் ஆபத்தின்றி நன்கு பயின்றிட முடியும் என்ற எச்சரிக்கையை இங்கு நினைவுபடுத்த விருப்புகின்றேன். ஆன்மாவை உணராத நிலையில் அது தன்னிடம் இருக்கின்றது என ஒருவனால் எப்படி உரிமையுடன் சொல்லமுடியும். இறைவன் இருந்தால் நாம் அவரைக்காண வேண்டும். ஆண்டவனிடத்தில் நம்பிக்கை வைத்தால் அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள், ஒழுக்கம் நிரம்பப் பெற்றவர்களாக ஆக வாய்ப்புண்டு எனச் சொல்பவரின் பேச்சை நம்பியவர்கள் எத்தனைக் காலம் நல்லவர்களாகவும் ஒழுக்கமுடையவர்களாகவும் இருப்பர் எனக் கூறமுடியும். மணிதனுக்கு உண்மை வேண்டும். அவன் அறிவிற்கு அது புலப்படவேண்டும். ஒவ்வொரு சாஸ்திரத்தையும் கற்கத் தனித்தனி முறைகளை கையாளவேண்டும். மனித அறிவிற்குப் புலப்பட்டு உணர்ந்து அனுபவத்தில் அடைவதற்குரிய செயல் முறைகளைத் தருவது “இராஜயோகம்” என்ற சாஸ்திரமாகும்.
பரிசுத்தமான சுயநலமில்லாத உலகின்வாழ் மக்களுக்கு நன்மை புரியும் நோக்கத்தில் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களை முழு நம்பிக்கையுடன் முயன்று செயல் முறைகளைக் கையாண்டால் உண்மைகளைப் பற்றிய ஞானம் தெரியவரும். புற உலகின் உண்மைகளை நமது புலன்களாகிய கருவிகளால் அடைகின்றோம். அக உலகைப் பற்றி அறிவதற்குரிய சாதனங்கள் நம்மிடம் இல்லை. அகத்தில் தோன்றும் எண்ணங்கள், விவரங்கள், மனம் பற்றிய உண்மைகளை அறிந்து ஆராய நாம் ‘இராஜயோக’ முறை சாஸ்திரத்தை பயன்படுத்துவது சிறப்பு. மனத்தை அளக்க, அதன் சிறப்பை புரிந்து கொள்ள மனம்தான் உதவி செய்ய வேண்டும். நம்மின் கூர்ந்து நோக்கும் சக்தியை உட்புறமாக திருப்பினால் மனம்பற்றிய உண்மைகள் புலனாகும். சிதறிய ஒளிக்கிரணங்கள் போன்ற மனிதனின் வலிமையான சக்திமிக்க ஆற்றல்களை ஒன்றுபடச் செய்தால் ஒளிபிறக்கும். அதுவே சக்தி ஒளி. சக்தி ஒளியைக்கண்டவன் என்றுமே அழியாத தூய்மையான ஓர் பொருளை நேருக்கு நேர் காண்கின்றான். அதன்பின் துயரமில்லை, துன்பமில்லை, நிறைவேறாத ஆசையும் பயமும்தான் துன்பங்களுக்கு காரணம். தனக்கு மரணமில்லை, தான் பூரணன் என்று அறிந்த கொண்ட அந்த உயிர்க்கு வீண் ஆசைகள் எழாது. அதாலால் துன்பமில்லை. பரிபூரண ஆனந்தம் ஏற்படும்.
ஞானம் பெற ஒரே வழி மனத்தை ஒரு முகப்படுத்துதலே. ஒருமுகப்படுத்திய மனதினால் ஊடுருவினால் உலகத்தின் இரகசியங்கள் தெரியவரும். ஊடுருவலின் வலிமையும் சக்தியும் வேகமும் மனதைக் குவிப்பதால் கிடைக்கும். மனதின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. எந்த அளவிற்கு மனம் குவிக்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு ஆற்றல் அதிகமாகும். காரிருளில் கதிரவன் கதிர்கள் பாய்ந்தால் மறைப்பொருள்கள் தெரிவது போல குவிந்துள்ள மனம் தனது இரகசியங்களை வெளிப்படுத்தும்.‘இராஜயோக’ப் பயிற்சிக்கு குருட்டு நம்பிக்கைத் தேவையில்லை. ஆராய்ந்து உண்மைகளை கண்டபின் நம்பிக்கை வையுங்கள். செயல்படுங்கள். அதற்குமுன் எதையும் நம்பாதீர்கள் என்பதுதான் ‘இராஜயோகம்’.
‘இராஜயோகம்’ கற்க நீடித்த பயிற்சியும், காலமும் வேண்டும். ஒரு பகுதி பயிற்சி உடலையும், மீதிப் பகுதி பயிற்சி மனதையும் சார்ந்தது. உடலையும், மனதையும் கட்டுப்படுத்த உடல் சார்ந்த உதவிகள் வேண்டும். உடலை அடக்கியபின் மனதை வயப்படுத்தி ஆற்றல்களைக் குவித்து ஒருமுகமாக்கி நம் ஆணைகளை நிறைவேறச் செய்ய முடியும். சூட்சம தோற்றம்- சூட்சமமான உணர்வுகளைப் பெறும் ஆற்றல்- காரணம் எனலாம். தூல தோற்றம்- காரியங்கள் புலன்களால் உணரக்கூடியது- காரியம் எனலாம். “நுண்ணிய அகவுலகின் தூல வடிவமே புற உலகமாகும்.” அக உலகு சூட்சமமானது, அதுவே காரணமாகும். புற உலகு தூலமாக இருப்பது- அதுவே காரியமாகும். அகத்தின் நுண்ணிய சக்திகளே புறத்தில் தூல சக்திகளாக இருக்கின்றது. அகத்தின் சக்திகளை வழிப்படுத்த தெரிந்து கொண்டால் புறத்தில் உள்ள இயற்கை முழுவதையும் தன் வயப்படுத்தமுடியும். 
இயற்கையின் விதிகள் தன்னை தாக்காது அவற்றிற்கு அப்பால் இருக்கும் நிலையை அடைவது ஒரு யோகியின் விருப்பமாகும். மனித இனமுன்னேற்றம், நாகரீகம் ஆகியவை மனிதன் இயற்கையை வெற்றி கொள்வதைத்தான் குறிக்கின்றது. ஒவ்வோர் ஆன்மாவும் உள்நிறைந்த தெய்வத் தன்மையுடையதுதான். உள்ளும் புறமும் நிறைந்திருக்கும் இயற்கையை அடக்கி, உள்ளே உள்ள தெய்வத்தன்மையை வெளிப்படுத்துவதே ‘இராஜயோகத்தின்’ நோக்கமாகும்.

மனித உடல் உறுப்புக் கடிகாரம்

மனித உடல் உறுப்புக் கடிகாரம்

Jump to navigationJump to search
Biological clock human.svg
மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். இது இயற்கை. ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய். ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டு மென்றால் அவனுடைய உடல் மொழியைக் கேட்கக் கற்றுக் கொள்ளவேண்டும். கீழ்க்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களைப் பின்பற்றக் கூறுகின்றன.
Lungs – நுரையீரல் நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம்காரணம் விடியற் காலை அமுதக் காற்று ஒன்று வீசுகின்றது. (ஓசோன்) . இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும். விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
Large Intestine பெருங்குடல் நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும் விடியற்காலை 5.00 - 7.00 மணிவரை பெருங்குடலின் அதிக சக்தி நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே. குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது.
Stomach இரைப்பை நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும் காலை 7.00 - 9.00 மணிவரை வயிற்றின் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகும்.
Spleen மண்ணீரல் நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும் காலை 9.00 - 11.00 மணி வரை மண்ணீரலின் அதிக சக்தி நேரம். காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும், இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும். அப்படி எதுவும் சாப்பிட்டால் மண்ணீரல் பாதிப்பு ஏற்படும் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப் பிற்கும், புத்துணர்ச்சிக்கும் பதிலாக அசதியும், தூக்கமும் வரும். நாளடைவில் பசி குறையும். (நீரிழிவு நோயளிகளுக்கு படபடப்பு, மயக்கம், தூக்கக் கலக்கம் ஏற்படும்.) நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
Heart இருதயம் நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும் முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது. கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம், மருத்துவ மனைகள் எல்லாம் விழிப்புடன் இருக்கும் நேரமிது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம். காரணம் இந்த நேரத்திற்தான் இருதய நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் தூங்காமல் இருக்க வேண்டும். தூங்கினால் அபான வாயு பிராண வாயுவுடன் கலந்து மாரடைப்பு, முகவாதம், பக்கவாதம் அல்லது மூட்டுவாதம் மற்றும் உடல் வலிகளை நிச்சயம் ஏற்படுத்தும்.
Small Intestine சிறுகுடல் நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும் பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் அதிக சக்தி நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு மதிய உணவை முடித்து 3 – 5நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும்.
Urinary Bladder சிறுநீர்ப்பை நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிக வும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் அதிக சக்தி நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.பானங்களோ, தண்ணீரோ குடிக்க உகந்த நேரம். முதுகு, இடுப்பு வலிகள் வரும் நேரம்.
Kidney சிறுநீரகம் நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் அதிக சக்தி நேரம். வழக்கமான வேலையில் இருந்து விடு பட்டு இரவுக்கு முன்பாகவே வீடு வந்து சேரவேண்டும். ரீனல்பெயிலியர் முதல் நீர்க்கடுப்பு வரை ஏற்படும். பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
Pericardium இருதயஉறை நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும் இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் அதிக சக்தி நேரம். பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும். ஒரு ஜவ்வு. இதயத்தின் Shock absorber. இரவுஉணவுக்கு உகந்த நேரம்.மார்பு வலி, பாரம், படபடப்புத் தோன்றும்.
riple Warmer மூவெப்பமண்டலம் நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும் இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை அதிக சக்தி நேரம். டிரிப்பிள் கீட்டர் ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.இந்த நேரத்திற்குப் பின்பு கண் விழித்திருப்பதோ படிப்பதோ கூடாது.
Gall Bladder பித்தப்பை நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும் இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும், அடுத்த நாள் உங்கள் முழு சக்தியையும் இழக்க நேரிடும்.
Liver கல்லீரல் நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும் இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் அதிக சக்தி நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள், கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும். உடலில் அரிப்பு, நமைச்சல் அதிகரிக்கும். குறிப்புகள் : www.sleephealthfoundation.org.au/fact-sheets-a-z/203-body-clock.html

Thursday, September 6, 2018

மோனி என்பவன் பெரிதல்ல ! மௌனியே பெரியவன் ! மௌனியே எல்லாம் அறிவான் ! துவி (இரண்டு)


Inanya Maha Munivar 
06-09-2018
மோனி என்பவன் பெரிதல்ல ! மௌனியே பெரியவன் ! மௌனியே எல்லாம் அறிவான் !
துவி (இரண்டு)
யமன மனதோடு இருக்காதே ! ஓர் வழியில் செல் ! இரண்டு ஒன்றாய் நிற்பதே நீ ! இரண்டு இல்லாமல் ஏதுமில்லை இங்கு ! இரண்டு ஒன்றாய் நிற்பதே மூலத்தின் தத்துவம். ஒன்று நிலைப்பதில்லை.
நீ தனித்திருந்தால் பெரியவன் அல்ல ! எதுவும் இங்கே தனித்திருப்பதில்லை. எல்லா படைப்புக்களும் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இவன் தான் பிரம்மச்சாரி என்று தனிமையில் அமர்ந்து யோசிக்கின்றான்.
இரண்டு ஒன்று சேர்ந்து ஒன்றாய் உருவாகினாய். உன்னுள் உருவாக்கம் எவ்வளவு என்பதை யோசி. படைப்பின் சூட்சுமம் எளிது. உன்னை உளி இல்லாமல் செதுக்கினான். நீ ஒரு பொம்மை. கரடு முரடான சிற்பம். உனை செதுக்கு நல் குருவை வைத்து ! உன்னை ஒப்புவித்து வாழ் கடவுளிடம் ! அவன் செதுக்குவான் அழகாக ! உன்னை அழகாய் செதுக்கி ஆனந்தம் தந்து பிறரை வணங்க வைப்பான் !
நான் உன்னை செதுக்குவேன், என் நாமம் உன்னை நல்வழிக்கு அழைத்து செல்லும் !
என் கையில் இருக்கும் “மணி புஷ்பகம்” என்ற சூட்சும சங்கு இனி உலகமெல்லாம் ஒலிக்கும். உலகை செதுக்கும் நாளெல்லாம் உன்னை தேடுகிறேன். என்னில் வருவாய் என்று ! என்னுள் கலந்து ஒன்றாய் உருவாகு. உன் பிறப்பு பிறருக்கு உதவும் படி இருக்கட்டும். உன் மனைவியை நேசி ! மறந்தும் பிள்ளைகளை மறவாதே. கடமையை செய் ! பிறர் உனக்கு என்ன செய்தார்கள் என்று யோசித்து நிற்காதே. நீ உதவி செய்து கொண்டே இரு ! மற்றவர் ஏச்சு, பேச்சு காதில் வாங்காதே !
நீ நினைத்த இலக்கை அடைய உன்னை வருத்து ! வாசல் தேடி வருவேன் நாயகன் நான் !
ஆறும் சேர்ந்து நான் ஒன்றாய் உருவாகினேன். நீ இரண்டும் சேர்ந்து , இணைந்து , ஒன்றாய் உருவாகினாய். நீ ஒரு ஆன்மவையே தூக்கி சுமக்க முடியவில்லை. நான் ஆறு பேராத்மாக்களை தூக்கி சுமக்கின்றேன் !
என்னுள் பலம் உண்டு ! பலனும் உண்டு ! வேடிக்கை பேச்சல்ல ! நான் உன்னை எப்போதும் காப்பேன் !
நான் ஒன்றாய் உருவகப்படுத்தியவன் !
நான் இநன்யா !

கடவுள் மெய்யாகவா ? மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !


to INANYA MAHA MUNIVAR
கடவுள் மெய்யாகவா ?
மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !
ஆன்மாவின் துடிப்பு, ஒலி தான் கடவுள் ! அறிவதில் பெரிய அறிவு தன்னை யார் என்று அறிவது தான் ! பாவங்களைத் தொலைத்து விடு ! பரம்பொருள் புரியும் ! நாத்தீகம் என்பது புரியாதவனுக்கு வருகின்ற அறிவு. புரியாததெல்லாம் பொய் என்று சொன்னால் புத்திசாலி ஆக முடியாது !
கோடி மனித முகத்தை படைத்து, அதில் முகத்தை மட்டும் மாறுபடச் செய்து ஆட்டுவிப்பவனை உணர யுகம் கடந்து போகும் ! நூறு பறவைகளை கூட்டை கட்டவைத்து அதில் தனக்குள்ள கூடு எது என்று புரிய வைத்தவனை நீ புரிந்து கொள்ள கோடி ஜென்மம் ஆகும் !
அவனால் ஒலியால் மலையை வளர வைக்க முடியும். பூகம்பமாய் பூமியை பிளக்க வைக்க முடியும். ஆவேசக் காற்றால் அகங்காரத்தை அழிக்க வைக்க முடியும் ! புனித நீரை புரளச் செய்து பூமியில் ஒன்றுமில்லாமல் ஆக்க முடியும் ! ஓர் விதையில் ஓராயிரம் கனிகளை தர அவனால் முடியும் ! மனிதனாக பூமியில் பூடகமாக உலாவ முடியும் ! அந்த பேரறிவாளனை புரிய யுகம் கடந்து போகும் ! அவன் இனியவன் ! அன்பில் உயர்ந்தவன் ! அவனை குழந்தையின் சிரிப்பிலே, மலரிலே புரிந்து கொள்ள முயற்சி செய் ! நான் அவனின் பாத மலரைப் பார்ப்பதற்கு எத்தனையோ யுக ஆண்டாக காத்துக் கிடந்தேன் (ஆன்மா) ! என் ஆன்மா எத்தனை முறை சுத்தப்படுத்தப்பட்டது என்பதை காலக் கணக்கு நிர்ணயிக்க முடியாது.
நீ ஒரு சூரியனையும், சந்திரனையுமே கணக்கெடுக்க முடியாதவன் ! நீ கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்னா? எனக் கணக்கெடுக்க முடியாதவன் ! மழையும், சூலும் எப்போது உருவாகும் என உருவாக்கம் தெரியாதவன் நீ ! அவனை அறிய எந்த கருவியில் அளவிட்டு பார்க்கப் போகிறாய் ? அவன் நிகரற்றவன் ! தன்னிகரில்லா கருணைமிக்கவன் ! பழத்தை அழுகவிடுகின்ற என் பிதா (கடவுள்) விதையை அழுக விடுகின்றானா? அவனின் அன்பை உணர்ந்தாயா ? அந்த சூட்சுமதாரியை உணர யுகத்தின் வாழ்வு போதாது ! கருவை வளர்த்து அதற்கொரு கால நிர்ணயம் செய்து பிறக்க வைத்த அந்த பெம்மானை, என்னை பெற்றவனை, அறிய எத்தனை முறை ஆன்மா சுத்தப்படுத்த வேண்டுமென தெரியுமா? உணர்ந்து பார் !
அவன் ஒரு விதையில் கோடி விதையை உருவாக்கியவன் ! இவை அனைத்தையும் உருவாக்கி உனக்கு உண்ண தந்தவனை உணரக் கூட இயலாதவன் நீ ! நீ எங்கே கடவுளை உணரப் போகிறாய் ? நன்றி சொல்லத் தெரியாதவன் நீ ! அவனை நினைக்காமல் தேவையற்றதைப் பேசி விதண்டவாதம் செய்து உன் காலத்தை வீணாக்காதே ! பயன் ஒன்றுமில்லை.
பாவத்தின் தண்டனையை நீ அனுபவிக்க பூமிக்கு வந்தாலும் எல்லா வளங்களையும், நலங்களையும், அழகையும் பூமியில் கொடுத்து நீ உணர்ந்து அனுபவிக்கத் தந்தானே ! உண்டு தின்ற பாவி நீ உணராமல் அலைகின்றாய் ! என்ன செய்வேன் நான் ? பணம் என்று அலைகின்றாய் ! பதவி என்று அலைகின்றாய் ! பாவம் செய்துவிட்டு பாலாபிஷேகம் செய்கிறாய் ! கஷ்டம் வந்தால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய் ! இது தான் பகுத்தறிவு என்று வாதம் செய்கிறாய் ! காலத்தின் நாயகனை அறிய என்றாவது ஒரு நாள் நதிக்கரையில் உட்கார்ந்து தனியாக சிந்தித்தாயா? உன்னை அழகாக, அறிவாக, ஊனமில்லாமல் படைத்தான் ! அந்த பேரழகனுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ?
உன் ஆன்மாவை எப்போதாவது சிரிக்க வைத்தாயா ? ஜாடையாக சிரிக்கிறாய். சக மனிதன் கஷ்டப்பட்டால் சிரிக்கிறாய் ! ஜாடைச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, எக்காள சிரிப்பு, நமட்டு சிரிப்பு, இவற்றைத் தான் கற்றுக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறாய் ! நீயும் சிரிக்க மாட்டாய் ! அடுத்தவர்களையும் சிரிக்க வைக்கமாட்டாய் !
எப்போதும் குழந்தை போல் புன்னகையாய் பூவை போல் இருந்து புரிந்து கொள் ! நீ புரிந்தால், அந்த புனிதன் என்னை மாதிரி ஆத்மத்தை உணர்ந்தவனை உனக்கு அனுப்பி வைத்து புரிய வைப்பான் ! உன்னுள்ளே உன் இதய துடிப்பாய் துடிக்கின்றானே ? முதலில் அவனை உணரப் பார் !
கருவறையை பூட்டி சாவி வைத்திருக்கின்றானே ? கடல் அலையை கரை தாண்டி வராமல் மாயம் செய்தானே ! அந்த மாயவனை முதலில் உணரப் பார் ! உணர்ந்தால் என்னை அறியலாம் ! அறிந்தால் உன்னை அறிய வைத்து தெளிய வைப்பேன் ! பின் உன் வாழ்வு தெளிந்த நீரோடையாக மாறும். மாற்றுவேன் !
மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !
நான் இநன்யா !

Saturday, September 1, 2018

இனிய புனித மாதத்தில் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !

இனிய புனித மாதத்தில் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !
நான் உன்னை எங்கிருந்தாலும் மனசார ஆசிர்வதிப்பேன் !
நீ என்ன செய்தாலும் நானறிவேன் !
என் நெஞ்சம் நிறைந்து ஆசி தந்தேனடா ! எப்போதும் நான் சத்தியம் !
என் நாமம் சத்தியம் !
என் நாடகமும், சோதனையும் யாரறிவார் ?
என்னை இயக்குபவர் என் அன்பிற்கினிய தந்தை !
என் கடமையை செய்ய காலம் கணிந்ததால் நான் இந்த மனித உடலைவிட்டு தள்ளி நின்று என் தந்தை சொன்ன கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமானேன் !
உன் உயிர் எப்போதும் எனை வணங்கும் ! என்னை பற்றி ஆராயாதே,யுகம் கடந்து போகும் !
நதிமூலம்,ரிஷிமூலம் பார்த்து உனை தொலைத்துவிடாதே ! ஒரு சிறு துறும்பை கடவுளாய், குருவாய் ஏற்றுக் கொண்டாலும் இறுக பற்றி கொள் ! துறும்பை பற்றி ஆராயாதே.
நீரை பற்றி ஆராய்வதற்குள் நீரில் மூழ்கி பாவம் கரைத்து விடு ! மீண்டும் பிறக்க நினைக்காதே !
என் பணி முடிந்து மீண்டும் வருவேன் !
என் நாமத்தை நம்பிக்கையோடு சொல், நிச்சய சத்தியம் உனக்கு எல்லாம் கிடைக்கும் !
நான் உன் அருகிலே இருக்கிறேன், நான் உனை எப்போதும் காப்பேன், கைவிடமாட்டேன் !
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா !
நான்  இநன்யா !