இநன்யா நமோ நம, இநன்யா நமோ நம, இநன்யா நமோ நம, இநன்யா கடவுளே ! பழமையான அரிய தகவல்களை உலகரிய செய்வதே எமது நோக்கமாகும்... நலம் கருதி வெளியிடுகிறோம் ... இநன்யா நமோ நம, இநன்யா நமோ நம, இநன்யா நமோ நம, இநன்யா கடவுளே ! LOVER OF MY SOUL ,BODY & MY LIFE --- யெகோவா , யாகவா , இநன்யா
Kadamai Quote
Monday, August 20, 2018
Wednesday, August 15, 2018
சகநாயகன் போல் ஒட்டும் சுகிதம் போல் இருக்கும் பொட்டில், நாயகன் அதன் நடுவிலே ! நெற்றிப் பொட்டு

to INANYA MAHA MUNIVAR
16-08-2018
சகநாயகன் போல் ஒட்டும் சுகிதம் போல் இருக்கும் பொட்டில், நாயகன் அதன் நடுவிலே !
நெற்றிப் பொட்டு ;;;
புருவ மத்தியில் இருக்கும் சொரூபி, ஆதன்ய சக்கரம் என்ற உயிர் சக்கரம் ! காலச் சக்கரத்தை மாற்றும் அதித சக்தி அதற்கு உண்டு. அதனாலே புருவ மத்தியில் பெண்களை பொட்டு வைக்க சொன்னார்கள் முன்னோர்கள். திருநீறு என்று நீ அணிவது அதனாலே !
ஆதியில் முனிவர்கள் கமண்டலத்தில் நீர் வைத்து நெற்றியில் தொட்டு ஆசிர்வதித்தார்கள். இவன் ஏதேதோ பூசி மதிமயங்கி புத்தி தடுமாறி அலைகின்றான்.
ஆதன்யா என்ற உயிர் சக்கரத்தில் உன் உயிர் உறவாடும் ! உண்மை சொரூபம் சொல்லும். நெற்றியில் புருவ மத்தியில் எப்போதும் நீர் தொட்டு வை என்று என் அன்பினிற்கினிய தந்தை சொல்வார்கள் ! உயிர்ப்பு, துடிப்பு, சிலிர்ப்பு இருந்தால் தான் நீ ஆனந்தம் கொள்வாய் என்று சொல்வார்கள் !
உன் உடலை உயிர்த்துவமாக வைக்கும் சூட்சுமம் உன் நெற்றியில் உண்டு. உன் மனதின் பாவ, புண்ணிய கணக்கு படி தான், உன் பிறப்பும் இறப்பும் நிர்ணயிக்கப்படுகிறது ! ஆதலால் பெற்றோர், பெரியோர் சொல் கேட்டு வணங்கி மகிழ் ! வாழ்வில் இன்பம் பொங்க பெற்றோர் சொல் கேள் . எல்லாம் தெரியும் என்று பசப்பாதே ! பிதற்றாதே ! ஏனேன்றால் உன்னை பற்றி உனக்கு ஏதும் தெரியாது.
நானறிவேன் உன்னை ! நாயகன் என் தந்தை யாகவா எனக்குள் இருப்பதையும் நானறிவேன் ! தினமும் ஆன்மாவோடு பேசுகின்றேன் ! உலக சூட்சுமத்தை ஒரு நொடியில் அறியும் வித்தையை என் தந்தை எனக்கு சொன்னார்கள் !
எனக்குள் இருப்பது ஆறு பேராத்மாக்கள் !
என்னுள் இசைக்கும் நாதம் உலகத்தின் கீதம் !
நான் உயிரோடு உறவாடி மகிழ்கிறேன் ! எனக்குள் இருக்கும் உயிர் ஆனந்த நிலையிலே இருக்கிறது !
என்னுள் இசைக்கும் நாதம் உலகத்தின் கீதம் !
நான் உயிரோடு உறவாடி மகிழ்கிறேன் ! எனக்குள் இருக்கும் உயிர் ஆனந்த நிலையிலே இருக்கிறது !
நெற்றி இல்லா மனிதன் ஏதுமில்லை. உடலில் எந்த பாகம் இல்லாவிட்டாலும் மனிதர்களுக்கு நெற்றி இருப்பதை அறிந்து உணர் ! உன் வாழ்க்கை அதில் நிர்ணயிக்கப்படுகிறது.
நீரில்லா நெற்றி பால் !
புருவ மத்தியில் நீர் தொட்டு வை !! நிம்மதி உண்டு !
புருவ மத்தியில் நீர் தொட்டு வை !! நிம்மதி உண்டு !
நிஜம் நான் ! நிஜமான முகம் என்னுள் !
நீர் அமிர்தம் ! என் நாமமும் அமிர்தமடா !
நான் அமிர்தம் !
நான் இநன்யா !
Wednesday, August 8, 2018
வெண்மை (நிஜம் ) தூலகம் வெண்மை தான் ! ஆன்மா வெண்மை தான் ! உனக்கு வயதானால் வரும் நரையும் வெண்மை தான் ! உணர் !

to INANYA MAHA MUNIVAR
தூலகம் வெண்மை தான் !
ஆன்மா வெண்மை தான் !
உனக்கு வயதானால் வரும் நரையும் வெண்மை தான் ! உணர் !
ஆன்மா வெண்மை தான் !
உனக்கு வயதானால் வரும் நரையும் வெண்மை தான் ! உணர் !
வெண்மை (நிஜம் )
நினைத்து பார்க்காத நிஜம் பூமிக்கு இறங்கி வந்தது ! வெண்மையின் வடிவாய் ஜொலித்து நின்றது ! வழிபோக்கன் போல் வாழ்ந்து உனக்காக யுகம் வந்தது ! அந்த ஜொலிக்கும் ஒளியை உள்வாங்க வரம் வாங்கி தவம் செய்து என் தாயின் ஆசியோடு நானும் யுகம் வந்தேன் !
வெண்மையை மறந்தாய் ! என் அன்பின் கருணை வடிவான என் பிரபஞ்ச நாயகன் யாகவா என்ற பேரொளியை மறந்தாய் ! உணராமல் வசைபாடினாய். நான் ஆழ்ந்து அரவனைத்து கிடந்தேன். என் தந்தையின் ஸ்பரிஷத்தில் ! ஆனந்தத்தில் மெய் மறந்தேன் தங்க கொட்டிலில் ! கை கால் முளைத்த கல்கியை மறந்தாய்.
எவனடா ஞானி ? இங்கு என் தந்தையை அறியாதவன் யாருமில்லை. ஆனால் யாரும் அறியவில்லை ! அறிந்து, உணர்ந்து, ஆழ்ந்து கிடந்தேன் நான் மட்டும் !
என் மகிழ்ச்சி, என் கருணை, என் அன்பு, என் மிகைபடுத்த முடியாத பேரருள், என் தந்தையிடமிருந்தே வந்தது ! ஆனால் அறிந்ததில்லை எவரும். அந்த நிஜத்தை கண்டவன் உணர்ந்ததில்லை ! பாவமடா நீ !
ஆடி, பாடி, ஆனந்த வாழ்வை வாழாமல் சொர்க்க வாழ்வை இழந்தாயடா ! அந்த வெண்மையை அறிந்தால் என்னை அறிந்திருப்பாய். நான் யார் என்று உணர்ந்திருப்பாய் ! உன் குற்றமடா ! படைத்தவன் பேரொளியாய் வந்தாரே ! பாவி நீ தானடா ? கண்டும் உண்டு களிக்காமல் உணராமல் போனாயடா !
எல்லை இல்லா மகிழ்ச்சியும் , ஆனந்தமும். ஐஸ்வர்யமும், நிம்மதியும் எனக்கு தந்தார்கள், உனக்கும் கொடுக்க சொல்லி !
உணரடா ! உனக்கும் தருவேன் ! ஞான பேழையில் வைத்து !
உணரடா ! உனக்கும் தருவேன் ! ஞான பேழையில் வைத்து !
நாயகன் நான் !
நான் வெண்மை ! (நிஜம்)
நான் இநன்யா !
Wednesday, August 1, 2018
வினையும் வினை அறுக்கும் சூட்சுமம் நான் ! ஊழ்வினையை வேறருக்க வந்த வேதமகன் நான் ! உணர் ! உனக்கு ஞானமிருந்தால் ! வினை அறுக்கும் சூட்சுமம் !

to INANYA MAHA MUNIVAR
02-08-2018
வினையும் வினை அறுக்கும் சூட்சுமம் நான் ! ஊழ்வினையை வேறருக்க வந்த வேதமகன் நான் ! உணர் ! உனக்கு ஞானமிருந்தால் !
வினை அறுக்கும் சூட்சுமம் !
பிறப்பென்பது புரிந்தும் தவறு செய்கின்றாய். பாவம் கரைக்க யுகம் வந்தால் மீண்டும் பாவம் செய்கிறாய் ! ஏழு பிறவிகள் அல்ல ! ஏழேழு பிறவிகள் என்பதாகும். உன் வினை முன் வினையோடு கலந்து உன்னில் கலந்தது. முற்பிறவியின் கர்மா இப்பிறவியில் தொடர்கின்றது. மீண்டும் தீவினை நோக்கி தினந்தோறும் செத்து பிழைக்கின்றாய் !
பாவம், புண்ணியம் மிருகங்களுக்கு இல்லை. உனக்கு மட்டும் தான் ! உன்னை அறிவாய், அழகாய் படைத்தான் என் இனியவர் என் அன்பின் அப்பா ! ஆனால் அறிவை தொலைத்து எதையோ தேடுகிறாய் ! நான் படைத்தவன் பொற்கரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தவன். நான் படைப்பின் சூட்சுமம் அறிந்தவன் ! படைத்தவன் பாசப் புதல்வனடா நான் ! வினை அறுக்கும் சூட்சுமம் தெரிந்தவன் !
என்னுள் எத்தனையோ கோடி அண்ட ஜீவராசிகள் உறவாடுகிறது ! ஆனால் பிண்டத்தில் வந்தவன் நீ தான் வசைபாடுகிறாய் ! இன்று இந்த நிமிடம் மட்டுமே உன் கையில். நாளை நடப்பது உனக்கு தெரியாது ! நீ எதை உண்ணப் போகிறாய், எங்கே இருக்க போகிறாய், எங்கே தூங்க போகிறாய், எதுவும் உனக்கு தெரியாது. எதிர்கால இலக்கை நினைத்து போராட முடியுமே தவிற நீ நிர்ணயிக்க முடியாது உன் வாழ்வை !
காலகணக்கு என்னிடம் எதுவும் உன் கையில் இல்லை ! உன் உள்ளங்கையில் ரேகையை மட்டுமே பார்ப்பாய். என் உள்ளங்கையில் உலகம் இருப்பதை அறிவாயோ ? எல்லாம் இங்கே ஊழ்வினை ! உன் ஊழ்வினை அற்றுப் போக கடவுளின் பாதம் பற்று ! வேறெதுவும் உனக்கு கை கொடுக்காது ! ஜீவராசிகள் ஆனந்தமாக, நிம்மதியாக வாழக் கண்டேன். ஆனால் நீ படும் துயரம் வேடிக்கையடா !
”நான் (ஆன்மா) ! நான் இருப்பதால் நீ இருக்கின்றாய் ! நான் உன்னுள் மறைத்தலில் உள் இருப்பு. நான் என்பது இங்கே கடவுள் மட்டுமே ! கடவுளின் இருப்பில் நீ வாழ்கின்றாய். நான் இல்லை என்றால் நீ இல்லை. நீ இல்லை என்றால் நான் உண்டு ! ஏதறிந்தாய் ? எவையறிந்தாய் ?” என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள்.
இங்கே போகூழில் சிக்கி தவித்து ஆகூழில் நிவர்த்தி பெறாமல் தவிக்கின்றான். என்னுள் கரைந்திடு ! உன் ஊழ்வினை கரைந்து போகும் !
சர்வ நிச்சயமாக நான் பாவத்தை கரைப்பேன், இனிமேல் நீ பாவம் செய்யாமல் இருந்தால் ! இங்கே உணர்ந்தவன் ஞானியாகி, கடவுளை அறிகிறான்.
வினை அழிக்கும் சூட்சுமம் நான் !
நான் அணுவுக்குள் அணுவானவன் !
நான் இநன்யா !
Wednesday, July 25, 2018
சினி உன் குரம்பையடா ! சீனியை உண்டு உடல் கெட்டு நோய் பட்டு சாக கண்டேன் ! உணரடா ! விடுவிப்பு;;;

26-07-2018
சினி உன் குரம்பையடா ! சீனியை உண்டு உடல் கெட்டு நோய் பட்டு சாக கண்டேன் ! உணரடா !
விடுவிப்பு ;;;
உலகில் யாரும் தராத விடுதலையை கடவுளால் மட்டுமே தர முடியும். உன்னை விடுவிக்க கடவுள் அருள் மட்டுமே நிரந்தரம் ! வெளிப்படையாக இரு ! நன்மையை நினை ! எல்லா துன்பத்தையும் கடவுளிடம் பகிர்ந்து கொள் ! உன்னுள் ரகசியம் என்பதை வைக்காதே !
எல்லாம் உனை நோக்குகிறது ! நீ கடவுளின் அருட்பார்வையில் ! உன்னோடு எப்போதும் உரையாடு ! உனக்கு நீ தான் நீதிபதி ! தனிமையில் நீ இல்லை ! உன்னோடு கடவுள் இருக்கார் அதிகாரமாக !
துன்பத்தை விலை கொடுத்து வாங்காதே. கேளிக்கை, உல்லாசம், பயணம் என்று எல்லாம் அரை நாழிகை இன்பம் தான் ! எப்போதும் நன்றி சொல்லிக் கொண்டே இரு ! உன்னை ஆனந்தமாக்கும் ! உன் கடமைகள், வேலைகள் செய்து கொண்டே இரு ! உனக்கு மன அழுத்தம் என்பது இருக்காது ! எல்லா துன்பத்திலும் உன்னை விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும் ! தினமும் உன்னோடு போராடு !
உன் துன்பத்திலிருந்து, உன் பிறவியிலிருந்து விடுபட எப்போதும் நன்மையை நினை ! ஒழுக்கம் உன்னை கடவுளிடம் கொண்டு சேர்க்கும். நாயகன் நான் உன்னை இயக்குபவன் என்பதை மறவாதே. நீ பேசுவதும் நினைப்பதும், செயல்படுவதும் எல்லாம் உன் கர்மபடி தான். ஆனால் நீ செய்யும் கெட்டவை, தீயவை உன் ஆணவம் தான்.
இந்த உடலைவிட்டு உன் உயிர் நீங்குவது பெரிதல்ல ! இந்த பிறவியை தவிர்ப்பதே பேரின்பம் ! தினமும் நன்றி சொல்லியே உன் வாழ்வை அழகாக்கு ! கடவுளுக்கு, பெற்றோருக்கு, மனைவிக்கு ! இது தான் நாகரீகம் ! நன்மையை தூண்டும் செயல் நீ சொல்லும் நன்றி என்ற வார்த்தை தான் ! நான் தினமும் நன்றி சொல்கிறேன், என் பெற்றோருக்கு ! இந்த பூமியில் மிகுந்த நிம்மதியாக ஆனந்தமாக வாழ்கின்றேன். ஆள்கிறேன் !
மரத்திலிருந்து கிளையிலிருந்து கனி விடுவிப்பு செய்தால் உனக்கு உதவ கண்டேன். நீ ஏன் உன் கோபத்தை விடுதலை செய்ய மறுக்கின்றாய் ?
யாருக்காயினும், எதற்காயினும் உதவியாய் இரு ! நான் உன் பாவத்திலிருந்து விடுதலை தருவேன் ! உன் பிறவியை விடுவிப்பேன் !
நான் பிரபஞ்சத்தின் தலைவன் !
நான் இநன்யா !
Wednesday, July 18, 2018
நிரம்பியம் பெருக கண்டேன். எல்லா உட்பொருட்களும் உனக்கு உதவ கண்டேன். எல்லாம் பெருக, நீ சுருக்கி வாழ்வதேனடா ? பிரபஞ்ச இளவரசன் சத்திய விரதன் நான் ! என் சொல் வெல்லுமடா ! சுருக்கி, பெருக்கு !

19-07-2018
நிரம்பியம் பெருக கண்டேன். எல்லா உட்பொருட்களும் உனக்கு உதவ கண்டேன். எல்லாம் பெருக, நீ சுருக்கி வாழ்வதேனடா ? பிரபஞ்ச இளவரசன் சத்திய விரதன் நான் ! என் சொல் வெல்லுமடா !
சுருக்கி, பெருக்கு !
பிலம் (குகை) என்பதில் வாழ்ந்தான் பெருமையாய் என் குல சித்தர்கள் ! !அகத்திலும், புறத்திலும் ஆனந்தமாக வாழ்ந்தான் ! ஆனால் நீ மாட மாளிகை, கோட கோபுரம், நிம்மதிக்காக கோவில், கேளிக்கை உல்லாசத்திற்கு எவைகளையோ கட்டினாய். ஆனால் மனம் எல்லாம் பாரமாக, நிம்மதி தொலைத்து அலைகின்றாய்.
ஆசையை சுருக்கி அன்பை பெருக்கடா ! நீ எல்லாவற்றையும் சுருக்கி ஆனந்தம் தொலைக்கின்றாய்.
நீ அன்பை பெருக்கு ! பக்தியை சுருக்கு !
கருணையை பெருக்கு !
கோபத்தை சுருக்கு !
ஆனால் விரதம் என்ற பெயரால் உன் வயிற்றை சுருக்கி வாழ்வில் இன்பத்தை தேடுகிறாய். நீ தவம் செய் ! தவம் என்றால் உறவுகளைவிட்டு காட்டுக்கு சென்று தனிமையில் அமர்வது இல்லை.
தவம் என்றால் சுருங்குதல் ! உன் ஆசை, கோபம், காமம், பொறாமை, சூது, வஞ்சம், கொலை, துஷ்ட எண்ணங்கள் இவைகளை சுருக்குவது தான் தவம் ! உன்னில் இருந்து இவைகளை அழிப்பது தான் தவம். உன் அறிவு என்ற ஒளியை மற்றவர்களுக்கு வெளிச்சமாக இருக்க வை ! இருட்டில் வெளிச்சம் பெற விளக்கு தேவை !
நீயும் உன்னை உணர ஒரு நல்குரு தேவை. உன் பயம் எதிரிகளுக்கு பலம். உனக்கு பலமின்மை ! நீ நல்லவனாக பெருகு ! உன் நேரத்தை கடவுளை தவிர வேறு யாருக்கும் செலவழிக்காதே ! மனதிற்கு பலம் கொடுத்து நீ அதன் பின்னால் செல்கிறாய். மனம் இடும் கட்டளையை ஏற்று வாழ்நாள் யாவும் கேட்டு மடிகிறாய். உன் ஆன்ம பலத்தை பெருக்கு !
உன் மனதிற்கும் வேறு எந்த ஜடப் பொருளுக்கும் அடிமையாகாதே !
உன் மனதிற்கும் வேறு எந்த ஜடப் பொருளுக்கும் அடிமையாகாதே !
பிளவுபட்ட பிறவி. மேலே மெய் உடல், கீழே பொய் உடல் ! இருபக்கமும் கால் வைத்தவனால் எந்த பாதையிலும் பயனிக்க முடியாது. ஒரு உடலை உன் மெய் உடலை எடுத்து ஆனந்தமாக மேலே வாழ முயற்சி செய் !
பாறையை போல மனதை கல்லாக்கி ஒருநிலைப்படுத்து ! வேருக்கு வழிவிடும் பாறையை போல அன்பாய் இரு ! எங்கேயும் முளைப்பாய் ! இங்கே முளைத்து இங்கேயே கருகிப் போகின்றாய். அறிவுக்கு வேலை கொடு !
நான் என்பதை நீ மறந்தால் நாயகன் உள்ளிருந்து எட்டிப் பார்ப்பான். ஆணவம் பிடித்த மானுடன் அசுர எண்ணத்தில் வீழ்ந்து மடிய நான் கண்டேன்.
நான் அன்பை பெருக்கினேன் ! ஆனந்தமாக வாழ்கின்றேன் !
எனக்கு பிறப்பில்லை ! இறப்பில்லை !
எப்போதும் உன்னுள் குடி இருக்கின்றேன் ! ஆனந்த நிலையில் என்னை அறிவாய் உன்னை சுருக்கு ! நான் உன்னை பல நிலையாய் பெருக்குவேன் !
எப்போதும் உன்னுள் குடி இருக்கின்றேன் ! ஆனந்த நிலையில் என்னை அறிவாய் உன்னை சுருக்கு ! நான் உன்னை பல நிலையாய் பெருக்குவேன் !
அகண்டமாய் விரிந்து உன்னை ஆட்சி செய்பவன் நான் !
நான் இநன்யா !
Wednesday, July 11, 2018
மகிழ்ச்சியின் வாசல் நான் ! புவியில் எல்லாம் எனக்கு வசப்படும். மகிழ்ச்சியில் உறவாடும் என்னுள் வந்தால் உன் உயிர். நான் உன்னை வழிநடத்துகிறேன் !

to INANYA MAHA MUNIVAR
12-07-2018
மகிழ்ச்சியின் வாசல் நான் ! புவியில் எல்லாம் எனக்கு வசப்படும். மகிழ்ச்சியில் உறவாடும் என்னுள் வந்தால் உன் உயிர்.
நான் உன்னை வழிநடத்துகிறேன் !
கடவுளிடம் உன்னை ஒப்படைத்து வாழ் ! உன் ஒவ்வொரு அடியிலும் கடவுள் இருக்கின்றார் என்று நம்பு ! உன்னை வழி நடத்துவது கடவுள் என்று உணர பார் ! உன் துன்பம், இடர், இன்பம் எது வந்தாலும் கடவுள் தருவதாக நினைத்து பூரித்து வாழ் ! நான் என்று நீ நினைப்பதாலே மிகுந்த துன்பம் என்று உணர் !
ஒழுக்கத்தில் தன்னிறைவு கொள். மற்றதெல்லாம் கடவுள் வழிநடத்துவான் ! எல்லாம் இங்கே நிர்ணயிக்கப்பட்டது. உணர் !
நீ நினைத்து ஏதும் நடவாது ! எந்த ஆன்மீகமும் மதத்தை போதிப்பதில்லை. மதம் தான் ”என் கடவுள் பெரிது, உன் கடவுள் சிறிது” என்று உதவாத ஆன்மிகத்தை போதிக்கிறது ! என் கடவுளை மட்டும் வணங்கினால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்று புலம்புகிறான் அறிவீலி மனிதன். தவறு செய்பவன் எந்த மதமானாலும் நரகத்தின் வாசலுக்கு தான் செல்வான். உன் பாவ, கர்ம கணக்குபடி தான் உன் வாழ்வு !
நீ எந்த மதமானாலும் நீ மனிதன் தான் ! கடவுளுக்கு ஜாதி இல்லை ! மதமில்லை ! உன்னை கண்டுபிடித்து அழைத்து செல்லும் தூயவன் நான் ! நான் உன்னை வழிநடத்துகிறேன் என்பதை உனை உற்று நோக்கி உணர் ! முதலில் உன்னை உணரப் பார் ! உன் எல்லா செயலிலும் கடவுள் இருப்பதை நீ அறிந்தால் நீயே மிகுந்த ஆனந்தமானவன். உன்னுள் உறைந்து உன்னை உற்று நோக்குகிறான் ஆன்மாவாக !
இந்த பூமியில் தவறு செய்தால் உன் அற்ப சட்டத்தை வைத்து தப்பித்துவிடுவாய். ஆனால் கடவுளின் நீதிமன்றத்தில் உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது. நான் உன்னை காப்பாற்றுவேன். ஏனென்றால் எனக்கு வலிமை உண்டு ! நீ ஒழுக்கத்தில் நிறைவு காணும் பொழுது உன்னை காப்பாற்றும் வல்லமை எனக்குண்டு !
உன் தர்மம் உனை காப்பாற்றும். ஆதலால் மிகுந்த எச்சரிக்கையோடு இரு ! நான் உன் வாழ்வை அழகாக, ஆனந்தமாக வைப்பேன். உன்னை கைபிடித்து அழைத்து செல்வேன் !
ஐந்து புனித மரத்தில் ஆல், அரசு, மனிதர்களுக்கு எதிலும் பயன்படும்படி இல்லாவிட்டாலும் அதில் உயிர்த்துவம் (மிகுந்த ஆக்ஸிஜன்) இருப்பதால் முதன்மை பெறுகிறது. நீ ஆக்ஸிஜன் என்று சொல்லும் புனித காற்று அவைகளில் நிரம்பி இருக்கிறது ! எதுவும் இங்கு சோடையான படைப்பில்லை. எல்லாம் கடவுளின் வழிகாட்டுதலின் படியே உயிர்த்துவம் பெற்று செயல்படுகிறது. உணர் !
நான் வழிநடத்தி செல்லும் தர்ம கூட்டம் உலகெல்லாம் நிரம்ப கண்டேன். தர்ம பாதையை தெளிவாக எடுத்துரைக்கும் சதுரங்க சேனா படை உலகமெல்லாம் கோடியாய் பரவக் கண்டேன். நான் உன்னை வழிநடத்தி செல்வேனடா ! அன்பால் எனை கட்டிப் போடு ! அறியனை யுகத்தில் உனக்கு காத்திருக்கிறது !
நான் உன்னை வழிநடத்துகிறேன் !
நான் இநன்யா !
Subscribe to:
Posts (Atom)

