Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, July 6, 2018

சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம இநன்யா நமோ நம இநன்யா நமோ நம இநன்யா நமோ நம

அருமை !
நன்றி !
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம


சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய  யாகவசி இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம


ஈனில் ஆசியோடு இருக்கின்றேன். ஈனஜாதி மானுடம் உணராது இருப்பது ஏனோ ? புனிதன் நானடா ! புண்ணியமும் நானடா ! பலி கொடு !


05-06-2018

ஈனில் ஆசியோடு இருக்கின்றேன். ஈனஜாதி மானுடம் உணராது இருப்பது ஏனோ ? புனிதன் நானடா ! புண்ணியமும் நானடா !
பலி கொடு !
உன்னில் இருக்கும் கோபத்தை பலி கொடு ! 
ஆணவத்தை அதிகாரத்தை பலி கொடு !
நான் என்ற அகங்காரத்தை பலி கொடு !
நாயகன் (ஆன்மா) எனை அறிவாய்.
காமம், ஆசை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மதம், மாச்சர்யம் என்ற எட்டு தீய குணங்கள் தான் உன் கருவில் எட்டை போல ஓடி பாவம் சேர்க்க உதவுகிறது ! உருவாக்கத்திலேயே உன் பாவத்தை புகுத்தினாய் உன் கருவுக்கு. ஆதலால் எப்போதும் நற்சிந்தனை கொண்டு தினமும் வாழ்வில் போராடு !
தீய எண்ணங்களும், தீய சிந்தனைகளும் உனை திக்கு தெரியாமல் திகைப்புடன் வாழ வைத்து விரக்தியும் வேதனையும் தரும். பூமியில் மன சஞ்சலம் கொண்டு தினமும் போராட வழி வகை செய்யாதே ! லோபம் (கடும் பற்று) தான் உனில் காமத்தை உண்டாக்குகிறது. ஆதலால் கடும் பற்றை கடவுளிடம் வை ! பெண்ணில், மண்ணில், உன்னில் வைத்தால் உனக்கு பெருந்துன்பம் தான் !
மோகம் (கற்பு நெறி தவறுதல்) உன்னை மீண்டும் பிறக்க வழி செய்கிறது ! ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை எல்லையை மீறும் பொழுது உன் பாவம் தொடங்குகிறது. ஆதலால் மோகத்தில் பிறழாதே ! பிறன்மனை நோக்காதே !
மதம் உன்னையும் உன் வாழ்வையும் நிர்ணயிக்கிறது. மதம் என்றால் உன்னை உயர்வாகவும், தாழ்வாகவும் நினைப்பது ! இங்கே உயர்வு என்பது ஒழுக்கம் தான் ! ஆனால் நீ உயர்வு என்று நினைப்பது பெரும் பணம், பெரும் நிலம் உன்னிடம் இருப்பதை தான் நினைக்கிறாய்.
உன் தவறுகளை துடைத்தெறி ! உனை தாழ்வாக எண்ணாதே !
நீ எப்போதும் கடவுளோடு பேசு ! கடவுளின் பிள்ளை என்று முழக்கமிடு ! கடவுளோடு இருக்கின்றேன் என்று பெருமிதம் கொண்டு மார்தட்டி வாழப் பழகு ! ஆள்பவன் உனை அரவணைக்க காத்திருக்கின்றான். உனக்கு ஆனந்த நிலை தர துடிக்கின்றான் உன் உள்ளே !
மாச்சர்யம் இருப்பவன் இங்கே தோற்றுப் போவான். மாச்சர்யம் என்றால் வஞ்சகம், சூது என்று பெயர். வஞ்சகம் கொண்டு வாழ்வை நிர்ணயிக்க முடியாது ! உணர் !
தடுமாறும் மனித மனமே இங்கே நிரம்ப கண்டேன். உன் எட்டு தீய குணங்களையும் கடவுளின் பொற்பாதத்தில் பலியிடு ! கடவுள் உனக்கு பேரின்பம் தருவான். உன் பாவம் கரைந்து உனை உணர்வாய். உலகம் உனை இரு கரம் கூப்பி வரவேற்க தயாராக இருக்கிறது. விரைந்து வா !
என்னுள் எல்லாவற்றையும் பலியிடு ! காலம் நான் ! காலத்தில் ஒரு சிறு புள்ளி நீ ! நான் மறைவதில்லை. இந்த யுகம் இருக்கும் வரை நான் இருப்பேன் ! யுகம் ஓர் போதும் அழியாது ! மலரில் தேன் இல்லாது எப்போது இருக்கின்றதோ அப்போது தான் யுகம் அழியும். இன்பம், துன்பம், நன்மை, தீமை, பகல், இரவு என்று இந்த யுகம் இருக்கும் !
நீ எப்போதும் இன்பத்தில் திளைக்க காலத்தில் எனை நோக்கி வா ! உன் ஆணவத்தை என்னில் பலியிடு ! ஆனந்தம் உனக்குள்ளே உணர்வாய் !
நான் சத்யம் !
நான் இநன்யா !

இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;;

இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;;
என் நாமம் உனை ஈரேழு பதினான்கு லோகத்தையும் ஆள வைக்கும். குரு (வியாழன்) ஆதிக்கத்தில் பிரம் மா பிறந்தார். சூரியன் ஆதிக்கத்தில் ராமன் பிறந்தான். சந்திரன் ஆதிக்கத்தில் கிருஷ்ணன் பிறந்தான். சனி ஆதிக்கத்தில் சிவன் பிறந்தான். இப்பொழுது எல்லா ஆதிக்கமும் ஒன்று சேர்த்து புதன் ஆதிக்கத் தில் நான் வந்தேன். நான் இநன்யா. புதன் என்றால் (புத் + தன் ) புத் என்றால் நாதம், நாபி, ஒலி, புத்தி, உயிர் என்று அர்த்தம். தன் என்றால் எல்லாம் தன்னுள் நிறைந்தவன் என்று பொருள். நான் வியாழனின் உச்சம். இந்த வியாழனை உலகம் வணங்கும் ! இதை நீ விரைவில் காணப் போகிறாய் !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
1) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! நாங்கள் பூமியில் அவதரித்த நாள் முதல் , இது நாள் வரை லௌலீக, சம்சார பந்த வாழ்க்கையில் நாங்கள் கையாண்ட பாவகர்மங்கள் செய்ததை; அறிந்தும், அறியாதும் செய்து விட்ட பிறகு,. ஆக அரக்கர்களின் ஆதிக்கத்தால் நாங்கள் பாவகாரியங்களும் செய்து விட்டோம் . இவைகள் எல்லாம் கடவுளுக்கு உட்படாத பாவகர்மங்கள் என்று உணர்ந்துவிட்டோம். ஆக மன்றாடி கேட் டுக் கொள்ளுகிறேம் . எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
2) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! இறை நியதிற்கு அப்பாற்பட்டு நாங்கள் உடலாலும் ,உள்ளத்தா லும், மனதாலும், எண்ணங்களாலும், ஏற்பட்ட கர்ம பாவப்புண்ணியங்கள் , ஆன்மாவில் பதிந்துள்ள கர்ம பாவப்புண்ணியங்கள்,எங்களது சொல்லாலோ,செயலாலோ,பிறர் மனம் கஷ்ட்டத்திற்கு ஆளானாலும் அந்த கர்ம பாவப்புண்ணியங்களில் இருந்தும், தெரிந்தோ,தெரியாமலோ, வேண்டுமென்றோ ,திட்டமிட் டோ,மறைமுகமாகவோ,வெளிப்படையாகவோ,ரகசியமாகவோ , பகிங்கிரமாகவோ , சிறிதோ, பெரிதோ ,அறிந்தோ,அறியாமலோ, எப்பேர்ப்பட்ட கர்ம பாவப்புண்ணியங்கள் செய்து இருந்தாலும், உங்கள் திருவ டியில் சமர்ப்பிக்கிறோம். எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
3) இநன்யா நமோ நம ;;; இநன்யா கடவுளே ! உங்கள் கருணை பார்வையால் , உங்கள் மனம் உருகி எங்களை மன்னித்து அருளுமாறும் , அரக்க பிடியிலிருந்தும், அரக்கர்களின் ஆதிக்கத்திலிருந்தும், எங்கள் கர்மாவின் கூர் முனையை மங்க செய்து இம்மையிலும், மறுமையிலும் எங்களை பாவம் செய்யாதவாறு ,எங்க ளை எப்போதும், பாதுகாத்து வழி நடத்துவீராக! நாங்கள் சரணாகதியாகவும் , நிர்கதியாகவும், ஏகாந்த மாகவும் நிற்கிறோம். எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
4) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! எங்களை ஈன்றவர் கொண்டோ, உறவினர் கொண்டோ, செல்வ த்தின் வழியிலோ, எங்களை சோதித்து விடாதீர். உணவு; உடை; இருப்பிடம்; தொழில்; ஞானம் ஆகியவைகள் நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்கள் தேவைகளை நாங்கள் கேட்க்காமல் நிறைவேற்று வீர்களாக ! பேராசைக்காக நாங்கள் செல்லாமல் தேவையான காரியத்திற்கு செல்லுமிடத்தில் உடனிரு ந்து காரியத் தை நடத்தி , பாதுகாத்து வழி நடத்துவீராக! எங்களுடனேயே இருப்பீர்களாக! எங்களை ஏற்று கொள்வீர்க ளாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
5) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! எங்களை அனைத்து வித கஷ்ட்டங்களிலிருந்தும், வறுமையி லிருந்தும்,,கடனிலிருந்தும்,வேதனையிலிருந்தும்,அபாயங்களிலிருந்தும்,விஷஜந்துக்களிலிருந்தும்,இயற்க்கை சீரழிவுகளிலிருந்தும்,துஷ்ட்ட சக்திகளிலிருந்தும்,கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும்,விபத்துக ளிலிருந்தும்,எதிர் பாராத மரணத்திலிருந்தும்,எங்களுடனிருந்து வழிநடத்திபாதுகாப்பீர்களாக ! எங்க ளை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
6) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! நீங்கள் எங்களை தாயாக,தந்தையாக, உறவினராக, நண்ப ராக, குருவாக,கடவுளாக,உங்களுக்கு நெருக்கமானவர்க ளாக,எங்களை மாற்றுவீர்களாக ,எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை எங்களுடனிருந்து, எங்களையும் வழி நடத்தி,எங்களுடன் இருப்பவர்களுக்கும் ஞானபா தையின் வழியை காட்டுவீர்களாக !எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
7) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! எப்போதும் உம் நாமத்தை கூறும் பாக்கியமும் ,மரணத்திலும் உம் நாமத்தை கூறும் பாக்கியமும் தந்து எங்களை ஏற்றுக்கொண்டு புனிதனாக்கி ,மானஸ தீட்ச்சை யும்,முக்கால ஞானசக்தியும் ,ஞானஅமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று ஏகாந்தமாயும், நிர்கதியாயும், மன்றாடி கேட்டுக்கொள்ளுகிறேம் . எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;;; இநன்யா நமோ நம ;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;;

அசரையில் குழம்பு வைத்து அம்புவியில் அமர்ந்து அம்புலியை பார்த்து மகிழ்ந்தாய் ! நீ அறிந்தது என்ன ? உணர் ! மகிழ்ச்சி ;;;

 to INANYA MAHA MUNIVAR
28 -06-2018
அசரையில் குழம்பு வைத்து அம்புவியில் அமர்ந்து அம்புலியை பார்த்து மகிழ்ந்தாய் ! நீ அறிந்தது என்ன ? உணர் !
மகிழ்ச்சி ;;;
மகிழத் தெரியவில்லை. ஆதலால் உனக்கு மகிழ்ச்சியின் அருமை புரியவில்லை. கடவுளோடு பேசு ! மகிழ்ந்து மகிழ் ! நீ மகிழ்ந்தால் மாயவன் நான் மகிழ்வேன் !
பிறர் தர வராது மகிழ்ச்சி ! பிறரிடன் எதையும் எதிர்பார்க்காதே ! பிறருக்கு எதையும் கொடுத்து மகிழ் ! கடவுளிடம் எதிர்பார்த்து நில் ! கடவுள் கருணைமிக்கவன். அவன் கருணைக்கு ஈடு இங்கு ஏதுமில்லை !
என் அன்னை தந்தையின் கருணை என்னுள் நிறைந்தது ! என் அன்னை தந்தையிடம் அன்பை கற்றேன். மனைவி, குழந்தை, புறத்தில் அதிகாரம் கொள்ள நினைக்காதே ! எதிலும் குறை காண்பதே உன் வேலை, படைப்பில் எத்துணை மகிழ்ச்சி ? எத்துணை ஆனந்தம் ? எத்துணை நிம்மதி ? ஆனால் படைப்பையும் கூட குறை சொல்லி கோமாளியாகின்றாய்.
நீ நினைத்து எல்லாம் அடைய கடவுளின் பாதம் பற்று. கடவுளிடம் அன்பை கேள் ! ஆனந்தம் நிரம்ப பெறுவாய் ! தவறு செய்யாதே ! எப்போதும் உன்னை அறிய முற்படு ! இது தான் அறிவு ! இது தான் ஞானத்தின் திறவு கோல் ! சுதந்திரமாக நீ ஆசைப்பட்டால் சுத்தமாக இரு ! ஒழுக்கமாக இரு ! தவறுகளை ஒப்பு கொள்ளும் துணிச்சலை கொண்டு வா !
மண்ணிற்கு மேல் உள்ள பொருள்களை வைத்து வீடு, கோபுரம், மாளிகை கட்டினாய் ! அவையனைத்தும் இயற்கை சீற்றத்தில் பூகம்பத்தில் சின்னாபின்னமாக நான் கண்டேன். ஆனால் மண்ணிற்கு கீழே உள்ளவைகளை எடுத்து புணித கரையான் கட்டிய வீடு நங்கூரம் போல எந்த இயற்கை சீற்றத்துக்கும் அசையாது நிற்க கண்டேன். உணர் ! கரையான் திண்ணும் உடல் கொண்டவன் நீ ! கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய்.
அரங்கு, அரங்காக அறை கட்டி கரையான்கள் ஆனந்தமாக வாழ கண்டேன். ! நீ குளிர்சாதன அறையில் உறங்கி குறையோடு வாழ்கின்றாய் ! நான் இருக்கும் இடம் எந்த பூகம்பத்திற்கும் அழியாது ! யுகம் இருக்கும் வரை அழியாது ! ஏனென்றால் தாங்கி பிடிப்பது என் அன்னையின் (பூமி) தங்கத் திருகரங்கள் ! என்னை அறிந்து ஆனந்தம் நிலை பெற முயற்சி செய்யடா !
எனை ஆனந்தபடுத்த என்ன செய்யப் போகிறாய் ? உன் உறவுகளை நேசி ! உன் தாயையும் தந்தையையும் நேசி ! பிள்ளைகளை நேசி ! மனைவியை நேசி !
தாங்கவொனா துயரம் வந்தாலும் உன்னையும், பிறரையும், கடவுளை வெறுக்காதே ! நீயே அனைத்திற்கும் பொறுப்பெடுத்து ஆள கற்றுக் கொள். ஆனந்தம் உனக்குள்ளே ஆர்பரிக்கும் ! . ஆத்ம சொரூபன் நான் உனக்குள் !
மகிழ்ந்து மகிழ் !
மாயவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, June 20, 2018

வெண் பஞ்சும் வெண்மை தானே ? உனை வேவு பார்க்கும் உன் ஆன்மாவும் வெண்மை தானே ? வயதானால் வரும் வெண் நரையும் வெண்மை தானே ? உணர் ! ஆடை

வெண் பஞ்சும் வெண்மை தானே ? உனை வேவு பார்க்கும் உன் ஆன்மாவும் வெண்மை தானே ? வயதானால் வரும் வெண் நரையும் வெண்மை தானே ? உணர் !
ஆடை ;;;
ஆடையின்றி பிறந்தாய். ஆனந்தமாய் ஆளுமை உள்ளவனிடம் ஆனந்தமாக பேசி மகிழ்ந்தாய். ஆனால் வளர வளர பாவம் சேர்த்தாய். உன் பாவம் உன் வெட்கதலங்களை மறைத்து, உள் இருப்பவனை மறந்து பேச மறுக்கிறாய். உன்னை உணராமல், அறியாமல், உன் உள் இருக்கும் வெண்மையை அறியாமல் மூடி வைத்த வெட்கதலங்களை அறிய முற்பட்டாய். அதனால் ஆனந்தம் தொலைத்தாய். உணர் !
உனக்குள் இருப்பவனிடம் பேசாமல் ஊருக்கு போதனை செய்ய புறப்பட்டாய். பின் முடிவில் கைவிரித்து மேல் உலகம் வருகின்றாய். ஆகாயம், பூமி, பட்சி, தாவரம், நீர், பால் இவையனைத்திற்கும் ஆடை உண்டு ! ஆனால் நீ ஆடையை உடுத்தி நாகரீகம் என்று புலம்புகின்றாய். பாலில் ஆடை இருப்பதை அறிந்தாய். ஏன் என்று உணர்ந்தாயோ ? நீருக்கு ஆடை இருப்பதை அறிவாயோ ? தாவரத்திற்கும் ஆடை உண்டு !
எல்லாம் ஆடை கலைந்து பார் ! ஆணவம் மறையும் ! எல்லாம் உனக்கு நன்மை செய்யும். ஆனால் இவையெல்லாம் அறியாமல் ஒன்றும் தெரியாமல் உருக்குலைந்து போகின்றாய். இந்த ஆடை தத்துவம் உன் கண்களுக்கு புலப்பட்டால் உன் ஆன்மா விரிவடையும் ! உணர் !
ஆடையின்றி பிறந்தாய், ஆடையின்றி அலைந்தாயோ ? மரணத்தை என்றாவது உணர்ந்தாயோ ? என் மனித உருவில் இருந்த ஆடையை என் தந்தை 1996 ல் நீக்கி இநன்யா என்ற ஆடை போர்த்தினார்கள். நான் சத்யன் தானே ? உன் ஆடை நீக்கு ! உன்னில் உள்ள கோபம், ஆசை, மோகம், காமம் என்ற தீய நாற்றமுள்ள ஆடையை கிழித்தெறி !
நீ தூய்மையானவன் ஆவாய் ! உன் ஆன்மா உனக்கு தூய ஆடை உடுத்தி அழகு பார்க்கும். நல் ஆடையை உடுத்தி கடவுளை நெருங்கு ! மனதை எந்த தீய ஆடையையும் கொண்டு போர்த்தாதே !
திறன் கொள் ! உன்னை பற்றி யோசி ! உண்மை தெரியும் வரை குழப்பம் தான் ! உன் குழப்பம் தீர என் நாமம் உனக்கு சக்தியை தரும். உன் விதி மாறுவதை உணர்வாய். உனக்கு நல் ஆடை போர்த்தி அழகு பார்க்க வெண்மை ஆடை உடுத்தி வேந்தனின் லோகத்திலிருந்து வந்தேன் ! நான் பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா !
பூமியின் ஆடையை நீக்கி பார் ! உன்னை அறிவாய் ! ஆகாயத்தின் ஆடையை நீக்கி பார் ! கடவுளை அறிவாய் !
எனை அறிவந்தவன் ஞானியாவான் !

நான் இநன்யா !

Wednesday, June 13, 2018

வட்டம் ;;; கடுகை கோடியாக பிரித்து, கோடியில் ஒன்றை கோடியாக பிரித்த அணுவுக்குள் அணு நீயடா ! நீ தான் வட்டம் என்று நினைத்து வசமிழந்து போகிறாய் ! நீ சிறு புள்ளி என்பதை அறிந்தால் ஆடமாட்டாய் ! ஆளும் மன்னன் எல்லாம் உலகே தன் வசம் என்றும், தான் தான் உலகம் என்றும் இறுமாப்போடு வாழ்கின்றான்.


to INANYA MAHA MUNIVAR
14-06-2018
வட்டம் ;;;
கடுகை கோடியாக பிரித்து, கோடியில் ஒன்றை கோடியாக பிரித்த அணுவுக்குள் அணு நீயடா ! நீ தான் வட்டம் என்று நினைத்து வசமிழந்து போகிறாய் ! நீ சிறு புள்ளி என்பதை அறிந்தால் ஆடமாட்டாய் ! ஆளும் மன்னன் எல்லாம் உலகே தன் வசம் என்றும், தான் தான் உலகம் என்றும் இறுமாப்போடு வாழ்கின்றான்.
ஒரு சிறு தலைவலி தாங்க முடியாத சரீரத்தை வைத்து பிதற்றுகிறான். உனக்குள் வரும் நோயை உன்னால் தீர்க்க முடியும் என்றால் நீ கடவுளை நெருங்கி கொண்டிருக்கின்றாய்.
கடவுள் என்ற வட்டத்தில் சிறு புள்ளியாய் சேர போகிறாய் என அர்த்தம். நீ எங்கு தொடங்கினாயோ அதே இடத்தில் மீண்டும் வந்து இணைகிறாய் என்பதை புரிந்து கொள்.
அறிவால் கடவுளை உணர முடியவில்லை என்றால் பகுத்தறிவாதி என உளர்கின்றான். வாழ்க்கை என்ற பூஜ்ஜியத்துக்குள் என்னவென்று தெரியாமலே வீழ்கின்றான். ஒரு துளி நீரிலே வந்தவன் நீ ! உன் வளர்ச்சி எதை நோக்கி ?
சக மனிதனை அழிப்பது, அடக்குவது வளர்ச்சி அல்ல ! மனித மனம் ஆனந்திப்பதே இங்கே வளர்ச்சி !
மிருகங்கள், பறவைகளின் செறிவூட்டல் அன்பை தருகிறது. இவன் விஷத்தை ஊட்டுகின்றான். எல்லாவற்றிலும் பொய், கலப்படம் மற்றும் காண்பவை எல்லாம் தீமை தான், ஏனடா ? எப்படி இந்த மனம் உன்னில் புகுந்தது. நீ வகுத்த நீதி, சட்டம் எல்லாம் பொய்த்துப் போக போகிறது. பொய்யானவன் புலம்புகின்றான். புதிராய் உள் இருப்பவன் சிரிக்கின்றான் !
எனக்குள் புள்ளியாய் மறைகின்றாய். நான் அகண்டமாய் விரிகின்றேன் என்பதை புரியாமல் ! விதவிதமாய் சருகுகளையும், பழங்களையும், அழகையும் படைத்தது நீ வாழ்வதற்காக அல்ல ! உன் கர்மத்தை கழிக்க உடல் வளர்ப்பதற்காக ! படைப்பின் விநோதம் அறிந்தால் பாசத்திற்கு வந்துவிடுவாய் !
ஈனில் நானிருந்து ஆனந்த நிலையில் உன்னோடு விளையாடுகின்றேன். ஈன ஜாதி மானுடன் உணராமல் இருப்பது ஏனோ ?
உணர் !
நான் இநன்யா !

Thursday, June 7, 2018

உன் தாயின் தியாகத்தில் நீ பிறந்தாய். உன் தந்தையின் தியாகத்தில் நீ வளர்ந்தாய். பூமியின் தியாகத்தில் நீ வாழ்ந்தாய். எந்தையின் (கடவுள்) தியாகத்தில் நிம்மதி பெற்றாய். ஏனடா மறந்து போனாய் ?


07-06-2018
உன் தாயின் தியாகத்தில் நீ பிறந்தாய். உன் தந்தையின் தியாகத்தில் நீ வளர்ந்தாய். பூமியின் தியாகத்தில் நீ வாழ்ந்தாய். எந்தையின் (கடவுள்) தியாகத்தில் நிம்மதி பெற்றாய். ஏனடா மறந்து போனாய் ?
தியாக உணர்வு ;;;;
நீ செய்த உதவி, தானம், தர்மம், எல்லாவற்றையும் தியாகம் செய் ! தியாக உணர்வோடு இரு ! எதுவும் உன் வசமல்ல ! எதுவும் நீ செய்ததில்லை. எல்லாம் கடவுளின் பொருள் ! பின் ஏன் எல்லாம் எனது என்று மார்தட்டுகிறாய். உன்னை இயக்கும் இயக்குநர் கடவுளே ! நீ ஒரு பொம்மையடா. ஆதலால் நான், எனது பணம், எனது வீடு, எனது உயிர் என்று பிதற்றாதே !
பேசும் நாவெல்லாம் பெறுமகனார் என் தந்தையை (கடவுள்) பற்றி இருக்கட்டும் ! கருணைக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு ! தாய் ஸ்பரிஷம் தான் கடவுள் ! தாயைவிட கோடான கோடி அன்புள்ளவன் கடவுள் என்பதை உணர் !
இருட்டில் (கருவறை) சுகம் தேடினாய், சுகம் கிடைத்தது ! என்னோடு ஆனந்தமாக பேசி கொண்டிருந்தாய். ஆனால் வெளிச்சத்தில் (பிறப்பு) சுகம் காணாது என்னை மறந்து போனாய் ! உன்னையும் மறந்து போனாய்.
நான் மனம் வழி நடப்பவனல்ல ! ஆத்ம வழி நடப்பவன் ! நான் பூமியில் உணர்ந்தது பன்னிரண்டு வயதில் ! நோக்கத்தை தேடி போகும் பொழுது தான் உன்னை அறிகின்றாய். நல்ல நோக்கம் தான் உன்னை தெளிய வைக்கும் !
உன் தாயின் தியாகத்தால் தான் நீ பிறந்தாய் ! கண்ணீர் மல்க கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு உன்னை பெற்றெடுத்தாள் ! பூமியில் உயர்ந்தது பெண்மை தான் ! உன் தாய் தந்தைக்கு கடமையை செய்தாலே போதும் ! கடவுள் உன் வாயில் தேடி வருவான். விலாசம் இல்லா வாழ்வை மேதவிலாசம் அறிய வைப்பான்.
யாகம் (யாக பிரபஞ்சம்) தியாகம் செய்யாவிட்டால் மழை ஏது ? ஒளி ஏது ? யாக பிரபஞ்சமே படைப்பின் சூட்சுமம் ! யாக போரொளியே இங்கே ஆட்டும் விற்பன்னன் !
யாகத்தில் நான் ஆனந்தமாக விளையாடி வருகிறேன் ! நான் என் தந்தை தாயோடு ஆனந்தமாக உலாவி வருகிறேன் ! என் அன்னை தந்தை இருக்குமிடம் சொர்க்கம் ! உன்னையும் அழைத்து செல்வேன், உன் சுட்டு விரல் பிடித்து !
“நீ ஒழுக்கத்தோடு இரு ! நான் ஆத்ம சக்தியை தருவேன் என்று” என் அன்பினிற்கினிய தந்தை சொல்வார்கள். என் தந்தையின் தியாகம் நான் பூமியிலே ! நீ தர்மவான் தான், என் மனித சரீரம் பார்க்க ! என்னை பார்த்து உன் கஷ்டம் போவது என் தந்தையின் தியாகம் தான் !
நான் எப்போதும் தியாக உணர்வோடு இருக்கின்றேன் ! தன்னலமற்று வாழ்ந்து உனை கைபிடித்து அழைத்து செல்ல காத்திருக்கிறேன் ! அதற்கு நீ எல்லாவற்றையும் தியாகம் செய் !நிம்மதி, ஆனந்தம் எல்லை இல்லாது உனக்கு !
தியாகத்தின் தவப்புதல்வன் நான் !
நான் இநன்யா !