Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, March 22, 2018

கண் பார்க்கும் தூரம் உன் கால்கள் நடந்து செல்லுமா ? உன் பின்னால் உன்னால் பார்க்க முடியுமா ? உன் பார்வையின் நீளம் என்ன ? பார்வை ;;;

கண் பார்க்கும் தூரம் உன் கால்கள் நடந்து செல்லுமா ? உன் பின்னால் உன்னால் பார்க்க முடியுமா ? உன் பார்வையின் நீளம் என்ன ?
பார்வை ;;;
உன் பார்வை நீசம் தானடா ! அறிந்து பார்த்து, தெரிந்து தவறு செய்கிறாய். உன் கண்ணுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்பு இருப்பதை அறியாமல் எண்ணத்தால் நினைவில் மூழ்கி தவறு செய்கிறாய். தவறு செய்து கடவுளை குறை சொல்லி காலம் யாவும் துன்புறுகின்றாய் !
நீ இன்புற எப்போது உணர்வாயடா ! மலையை பார்த்துவிட்டேன் என்று சொன்னால் மலையின் உட்புறத்தில் எல்லாம் அறிந்துவிட்டாய் என பொருளாகுமா ? என்னை பார்த்துவிட்டால் என்னுள் இருப்பதை அறிந்துவிட்டாய் என பொருள் கொள்ள இயலுமா ?
எதையும் முழுவதும் பார்க்காமல் தான் முடமாகிப் போனாய். எல்லாம் தெரிந்தவன் அசைவற்று இருப்பான் ! நாக்குக்கு வேலை கொடுக்கமாட்டான். கடவுளை கூவி விற்கமாட்டான். புத்தகத்தை படித்து உளறமாட்டான். ஒருவன் சிரித்துவிட்டால் நல்லவன் என்று பொருள் கொள்ள இயலுமா ?
எதையும் உள்ளே அறியாமல் பார்த்துவிட்டேன் என்று மனிதன் துடிக்கின்றான். பெண்ணை பார்த்து அவளின் உள்குணத்தை ஒன்று கூட அறியாமல் அவளை பார்த்து அறிந்துவிட்டேன் என மனிதன் பிதற்றுகிறான். அவள் ஓராயிரம் எண்ணங்களும். ஓராயிரம் சூட்சுமங்களும் நிறைந்தவள். உனக்காக, நீ அறிவதற்காக படைக்கபட்டாள் பெண். ஆனால் பெண்ணை அடிமையாகத் தான் நினைத்து வரலாறு எழுதுகின்றான்.
தினமும் மனைவி, குழந்தைகளை பார்த்து கொண்டிருக்கின்றாய். எதை அறிந்தாய் ? எதிலும் நுண் அறிவு, விளக்கம் புரியாமலே மனிதன் பிதற்றுகின்றான். ஆழ்ந்து உற்று நோக்கும் அறிவை தேட முயலவில்லை !
மேலோட்டமாக பார்த்து எல்லாம் அறிந்துவிட்டேன் என்று மார்தட்டுகிறான். என்னை பார்த்து எதை சரி செய்தாய் ? என் உள் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதை நீ அறிவாயா ? பாவமடா மானிடன் !
பறவையின் பறக்கும் சூட்சுமம் ஒரு சின்ன பொறிகல் தான் ! அதை உணர்ந்தால் மனிதன் கூடுவிட்டு கூடு பாய்வான். தன்னை அறிவான். தன்னை தானே அழிக்கமாட்டான். ஞானிகள், மகான்கள் எல்லாம் தன்னைத் தானே அழிக்க முற்படும் பொழுது தான் தன்னை அறிந்தார்கள். அதனால் கடவுளை எட்டாக் கனியாய் நின்று துதி பாடி சென்றார்கள்.
நீ உன்னை அழிக்காமல் சூட்சுமம் உணர் ! சத்தியத்தில் நிலைக்கும் பொழுது உன்னை அறிந்துவிடுவாய் !
ஒவ்வொன்றிலும் மறந்திருக்கும் மறை பொருளை பார்க்காமல் எதையும் முழுதும் அறிய முடியாது.
உன் பார்வையின் நீளம் என்ன ?
நீ எங்கிருந்து எங்கு வந்தாய் ?
உன் பயணம் எங்கே முடிவடையும் ?
முதலில் அறிந்து உணர் ! என் பார்வை கூர்மை ! நான் கண் பார்க்கும் தூரம் சென்று வருவேன் ! என்னுள் நிலை பெரு ! உன்னையும் அழைத்து செல்கிறேன் !
சொல், செயல் நான் !
நான் இநன்யா !

Wednesday, March 14, 2018

திரி மஞ்சரியின் உள் நோக்கம் தூய்மை ! உன் உள் நோக்கமோ அடுத்தவர் அந்தரங்கம் பற்றி. என் உள்நோக்கம் உன்னை உயர்த்தும் நிலை பற்றி ! உணர் ! உள்நோக்கம் ;;;

திரி மஞ்சரியின் உள் நோக்கம் தூய்மை ! உன் உள் நோக்கமோ அடுத்தவர் அந்தரங்கம் பற்றி. என் உள்நோக்கம் உன்னை உயர்த்தும் நிலை பற்றி ! உணர் !
உள்நோக்கம் ;;;
எதையும் ஆராயும் பொழுது உள்நோக்கம் இருக்கக் கூடாது ! எதிர்பார்ப்பும் இருக்க கூடாது. உண்மையான மாறுதல் என்பது ஆரம்பத்தில் மிக கடினம் எனத் தோன்றும். எதை பற்றிக் கொள்வது என்று மனம் தளரும். முன்பிருந்த நம்பிக்கை குறையும். நினைத்த காரியம் நடக்கவில்லையே என்று மனம் அலைபாயும் ! செல்கின்ற பாதை சரியானதா என்று மனம் கேள்வி கேட்கும்.
இதை எல்லாம் மீறி என் மேல் நம்பிக்கையோடு இருப்பவனின் வாழ்வில் நான் ஒளியாய் பரவுகின்றேன் ! அவன் நினைத்த இலக்கை அடைய வைத்து வாழ்வில் பிராகசிக்க வைக்கின்றேன் !
உள்நோக்கம் உன் நோக்கம் தெளிவாய் இருந்தால் வாழ்வில் எதையும் அடையலாம். துன்பத்தை புரட்டி போடலாம் !
நல்குரு மட்டும் அமைந்தால் மட்டும் போதாது. தன் நம்பிக்கை இருப்பவனே முயற்சி செய்வான். தைரியம் உள்ளவனே எதையும் வெல்வான். உன் தைரியம் மனைவியோடு சண்டையிடுவதற்கல்ல ! பிறரை கொலை செய்வதற்கல்ல ! உன்னை வெல்வது தான் தைரியம் !
வைராக்கியமே உன்னை வானில் பறக்க வைக்கும் ! உன் நோக்கம் எப்போதும் நல்வழியையும், சத்தியத்தையும் நோக்கி இருக்கட்டும். பிறருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி பார் ! ஒழுக்கத்தை சொல்லி பார். உனக்கு நம்பிக்கை வரும். ஒழுக்கம் வரும் !
சத்தியம் எப்போதும் தோற்பதில்லை. உழைப்பவன் வாயில் இருந்து வரும் சொல் பலிக்கும் ! ஆதலால் உழைப்பவனை கண்ணீர் சிந்தவிடாதே ! ஏனென்றால் உழைப்பவனிடமே கடவுள் இருக்கின்றான். உட்கார்ந்து சுகம் காணும் சாமியார்களிடம் இல்லை. போதனை செய்யும் போதகனிடம் இல்லை. எந்த சாமியாரும் கடவுளை அறிந்திருக்கமாட்டான். அறிந்தால் ஏமாற்றமாட்டான். சுயநலத்தோடு வாழமாட்டான்.
சந்தேகத்தோடு உன் பயணத்தை தொடங்காதே ! தனியாக நின்று வாழப் பழகு ! பயத்தை தூக்கி எறி ! பாவம் இல்லாது வாழப் பழகு. பரமாத்மா நிழலடி உனக்கு கிடைக்கும் ! அறியும் சூட்சுமம் உணர்ந்தவன் உடலை வளைக்கமாட்டான். தர்மம், சத்தியம் தெரிந்தவன் மக்களிடம் பிச்சையெடுத்து சாப்பிடமாட்டான். ஆசிரமம், பள்ளிக்கூடம் கட்டமாட்டான்.
இங்கே எல்லாம் துறந்தவன் தான் ஞானி, மகான் ! தனக்கென்று கோயில் கட்டி மக்களிடம் யாசகம் கேட்பவன் ஞானி அல்ல ! மகான் அல்ல ! சித்தனும் அல்ல !
மதபிரச்சாரம் செய்பவன் மக்களை ஏமாற்றுகிறான். கடமையில் கடவுளை நினை என்று தான் கடவுள் படைத்தான். ஆனால் மனிதன் தன் கடமை மறந்து உழைப்பில்லாமல் உட்கார்ந்து சுகம் காண்கின்றான்.
என் நோக்கம் தர்மத்தை காப்பது ! உன்னிடம் கை ஏந்த வரவில்லை. ஞானத்தை ஊட்ட வந்தேன். என் பார்வை கூர்மையானது. அகல, ஆள உழுது என்னுள் என்னை நிர்வகித்தேன் ! ஆதலால் துன்பம் என்று ஏதுமில்லை எனக்கு.
எனக்கு உன்னிடம் எதிர்பார்ப்பும் இல்லை ! ஆனால் நீ ஆனந்தமாக எதிர்பார்க்கின்றேன் ! என் உள்நோக்கம் உண்மையடா !
தூய்மையானவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, March 7, 2018

புழுதிபாட்டை கொத்தி சீராக்கி சமநிலை செய்து பயிர் வளர்த்தால் உன் உடல் சமநிலை போல் தானியம் உண்டு செயல்படும். மனதை சமநிலையாக்கு ! சம நிலை ;;;

Inanya Maha Munivar
புழுதிபாட்டை கொத்தி சீராக்கி சமநிலை செய்து பயிர் வளர்த்தால் உன் உடல் சமநிலை போல் தானியம் உண்டு செயல்படும். மனதை சமநிலையாக்கு !
சம நிலை ;;;
எப்போதும் கோபம், வெறுப்பு, விரக்தி, காமம், பொய், மோகம் ஆகிய இவைகளைத் தான் உன்னுள் ஓடவிட்டு கொண்டிருக்கிறாய். எப்போதும் கவலை என்ற மூட்டையை தலையில் சுமந்து உன்னுள்ளே விரக்தியாய் பேசி குப்பையை சேர்த்து ஆறு நரம்புகளை அசைவற்று போகச் செய்கிறாய். எப்போதும் நல்ல நினைவுகளை உன்னுள் பதிய வை !
வெளி உலகம் உன்னை நல் வழிக்கு அழைத்து செல்லும் சூழ்நிலையில் இல்லை ! பார்க்கும் இடம் எல்லாம் காமத்தை வைத்தான் ! கூத்தும், பாட்டும், நடனமும், நாட்டியமும் உன்னை எதிர் வினைக்கு அழைத்து செல்கிறது.
உன்னில் உனை தேடு ! ஆனந்தம், நிம்மதி உனக்குள் தான் !
வெளியில் கண்களை மூடிக் கொண்டு வாழக் கற்றுக் கொள் ! ஆனால் கடவுளை வேண்டும் போது கண்களை திறந்து பேசு ! கண் திறந்து வேண்டினால் தான் உன் உள்ளே உறங்கும் ஆன்மா விழிநிலை அடையும்!
கண் மூடி பிரார்த்தனை செய்யாதே ! ஆயிரம் பேர் கூடி அழுதாலும் கடவுள் இரக்கம் கொள்ளமாட்டான். மனைவியின் அங்கம் தவிர புற உலகில் நீ எதையும் பார்த்து பாவம் சேர்க்காதே !
எல்லாம் சமநிலையாய் பூமியில் இருக்க நீ இயற்கைக்கு மாறாக அடிமைபடுத்துகிறாய். இங்கே முதலாளி யாருமில்லை.
எல்லாம் கூலிகள் ! பொம்மைகள் !
கடவுள் மட்டுமே முதலாளி !
கண் தான் எல்லா பாவத்திற்கும் மூலம். ஆதலால் பார்வையில் தெளிவை வை ! எந்த நினைவும் இல்லாமல் இருக்க பழகு ! இங்கே முடியாதது எதுவுமில்லை ! நீ நல் பாதையில் பயணிக்க ஆரம்பித்தால் கடவுளே உனக்கு தோழனாக வருவான். நல்ல நினைவுகளோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆனந்தம் தான் !
மனிதன் தான் சித்தன், ஞானி, மகான் ஆகிறான். நீ விதிவிலக்கல்ல. உன்னாலும் தெய்வ நிலை அடைய முடியும் ! உன் ஒளியை பார்க்க நினை ! உன்னை அடக்க பழகு ! பூமியை சமமாக்கி உழுது பயிராக்கி உனக்கு தந்தான் உழவன். வாழ்வில் மேடு பள்ளங்கள் இருந்தால் சமமாக்கு ! உன்னால் முடியும் !
எல்லா உயிரிடமும் சமநிலை கொள் ! இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று யாருமில்லை. நீர் எப்போதும் சமநிலையாய் இருக்கக் கண்டேன். நீரின் தத்துவம் உணர் ! உடல் சமநிலை இல்லாது (சூடு) இருந்தால் நோய் தான் உருவாகும். மனதை ஓர் போதும் மேடு பள்ளத்திற்கு அழைத்து செல்லாதே ! சம நோக்குடன் வை !
தரணியில் துன்பமில்லா வாழலாம் ! நீ துன்பமென்று எதை நினைக்கின்றாய் என புரியவில்லை. இந்த துன்பமெல்லாம் ஒன்றுமில்லை. மேலே நீ செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும் போது கீழே உள்ள துன்பங்கள் பெரியதாக தோனாது !
நீர் கூட ஓடி ஒரு சமமான இடத்தில் தேங்கி நிற்கிறது. நீ காலம் யாவும் ஓடி எதையோ தேடுகின்றாய். நீ அமரும் இடத்திலேயே உன்னை தேடு !
ஓர்மையில் சொல்கிறேன். உனை கரை சேர்பேன் !
நான் உனை சமநிலை கொண்டு பார்க்கிறேன் !
வென்றவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, February 28, 2018

என் நிலை நானறிவேன் ! உன் நிலை எப்போது அறிவாயடா ? என்னுள் ஆரிடை உண்டு உனை கரை சேர்க்க ! நிலை எட்டு !

என் நிலை நானறிவேன் ! உன் நிலை எப்போது அறிவாயடா ? என்னுள் ஆரிடை உண்டு உனை கரை சேர்க்க !
நிலை எட்டு !
ஒரு துளி நீர் எட்டை போல வளைந்து வட்டத்திற்குள் நுழைகிறது. எழுபது துளி ரத்தம் ஒரு துளியாகி உயிராகி காற்றின் தூய்மை கலந்து சிசு உருவாகிறது ! எட்டாய் திருகி வளைந்து ஓடி உரு பெருகிறது !
எட்டின் நிலை ஏட்டை படித்தால் வராது. உன் உணர உண்மை அறியும் போது வியப்பாய் !
என்ன தான் சாஸ்திர படி இணைந்தாலும் நேரம் காலம் பார்த்து கலந்தாலும் சூழ் உருவாக்கத்தை உன்னால் நிர்ணயிக்க முடியாது ! ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்க சாஸ்திரம் கற்றாலும் உன் கர்ம வினைப்படி ஆணா, பெண்ணா என நிர்ணயிப்பது உன் பாவ, கர்மா தான் !
கருவில் சிசு இருக்கும் போது உச்சியின் நடுபாகத்தில் இருந்து சென்று புனித காற்று உன்னை இயக்குகிறது. ஆனால் சிசு வெளியே வந்து அழும் போது தான் உன் மூச்சு குழாய் வழியாக நுரையீரல் சென்று நுரையீரல் இயங்குகிறது.
அறிய படைப்படா மானிடா !
ஆளுமையை மறந்தாயடா !
மணிமா, மகிமா, கிரிமா, இலகிமா, பிரப்தி, பிரஹாமியம், வசித்துவம், ஈசத்துவம் முதலிய இந்த எட்டு நிலைகளை அடைய எளிய வழி, நீ ஒழுக்கமாக இருப்பது தான் ! ஆசையை உள்ளடக்கி ஆளுமையை உணர்ந்தால் தான் அனைத்தும் அறிவாய் !
நீ என்ன தான் யோகா, தியானம் செய்தாலும் எதையும் அடைய முடியாது. ஒரு தலை வலியை உன்னால் குணப்படுத்த முடியவில்லை. பின் எப்படி உன் துன்பத்தை தீர்ப்பாய் ?
காலம் யாவும் குறை சொல்லி கோமாளியாக திரிகின்றாய். ஊமை உயிர் உன்னுள் அழுது ஆர்பரிப்பதை உணர்ந்து பார் மனித குலமே !
வன்னி, நெல்லி, ஆல், அத்தி, அரசு, பனை, தென்னை உனக்கு ஞானம் உணர்த்த படைத்த மரங்கள் ! எட்டின் தத்துவம் மரத்திற்கும் உண்டு !
மணிமா என்பது உடலை அணுவுக்குள் அடைப்பது !
மகிமா உடலை பெரிதாக்குவது !
கிரிமா உடலை திடனாக்குவது.
இலகிமா உடலை லேசாக்குவது !
பிரப்தி நினைத்ததை அடைய வைப்பது !
பிரஹாமியம் கூடுவிட்டு கூடு பாய்வது !
வசித்துவம் வசியப்படுத்துவது !
ஈசத்துவம் ஒன்றை உருவாக்குவது, முடிப்பது !(ஆக்கல், அழித்தல்).
இந்த எட்டு நிலைகளையும் யாரும் அடைந்ததில்லை ! சித்தர்கள் ஆறு நிலைகள் தான் அடைய முடியும். பிரப்தியும், ஈசத்துவமும் யாரும் அடைந்ததில்லை.
இந்த எட்டு நிலையும் என்னுள் ஒடுக்கம் ! நான் ஈசத்துவம் அறிந்தவன் ! என் நாமம் சொல் ! நீ எட்டு நிலைகளையும் அடைவாய் !
உன் கடமையை செய்து காலத்தில் ஒரு நிலையாவது அடைய முற்படு ! உன்னால் முடியும். ஏனென்றால் நான் குருவாய் இருந்து உனக்கு கற்றுத் தருகிறேன். நான் கற்று கவி பாடவில்லை.
என்னுள் மலர்ந்தேன் !
என்னுள் நிறைவானேன் !
என்னுள் உருவாக்கினேன் !
நான் உன் விதியை எழுதிய விதிநாயகனின் தவப்புதல்வன் ! பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா !
மனிதர்களின் கோபத்தை பொருட்படுத்தமாட்டேன். ஏனென்றால் கோபம் என்பது இயலாமை உள்ளவனிடம் தான் வரும். யார் ஏச்சையும், பேச்சையும் கண்டு கொள்வதில்லை ! செவி மடுத்து கேட்பதில்லை. மனிதன் தன்னை அறியாமல் பிறரை பற்றி நினைத்து புலம்பி குறை சொல்லி திரிகின்றான்.
எட்டின் நிலை தெரிந்தவன் நான் ! என் நிலை நானறிவேன். உன் நிலை நீ அறிவாயோ ? உணர் !
நிலையானவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, February 21, 2018

வறுமை தீர ஓடி உழைக்கின்றாய். உன் வருமை தீர ஏது செய்தாய் ? ஏது உணர்ந்தாய் ? பூ உலகம் ;;;

வறுமை தீர ஓடி உழைக்கின்றாய். உன் வருமை தீர ஏது செய்தாய் ? ஏது உணர்ந்தாய் ?
பூ உலகம் ;;;
பூ என்றால் உலகம் என்று அர்த்தம். இந்த மணமிக்க பூக்களுக்கும் உலகத்திற்கும் சம்பந்தம் உண்டு ! அதனாலே பூஜைக்கு பூக்களையும், மலர்களையும் முதன்மையாக்கினான் சித்தர்கள் ! பூ லோகம் என்று விளம்புகின்றாய். மென்மையான உலகையும் மேன்மையான பிறவியையும் மறந்தாய். என் மேல் குற்றம் சொல்லி எனக்கு நேராய் முகஸ்துதி செய்து என் பின்னால் இகழ்கின்றாய். அறியாதான் என பொருளாகுமோ ?
ஏதுணர்ந்தாய் ? எவையறிந்தாய் ? மலரை பூவை பெண்ணுக்கு உவமைபடுத்தினான். பெண் என்ற மலரிலே உதித்த மானிடன், மலர் தேடி அலைகின்றான் மாயவனை உணராமல் ! பூ உலகில் பூவை போல வாசம் வீசாமல் உதிர்ந்து போகின்றான்.
பூமி பந்து என்றால் உருண்டை அல்ல ! பூமியை பந்து என்று சொல்லக் காரணம். பந்து என்றால் பந்தம் என்று பொருள். இந்த பூமியிலே தான் இரத்த பந்தம். மேலே இல்லை ! மேலே உன் போல் மனிதருண்டு ! மரமுண்டு ! பறவைகள் உண்டு ! மாயமயக்கமும், பொறாமையும், சூதும், வஞ்சகமும் அங்கில்லை !
பந்து என்பதை உருண்டை என்று தவறாக புரிந்து தறிகெட்டு போகும் மனதின் சொல் கேட்கின்றான். அறிவு வழி நடப்பவன் ஆளுமையை உணர்கின்றான்.
மனம் வழி நடப்பவன் மாயமயக்கத்தில் மயக்கமுற்று திரிகின்றான். பூமி என்ற தட்டையான தட்டு அந்தரத்தில் தொங்குகின்றது. அதில் நீ தொங்குகின்றாயே, இதை என்றாவது அறிந்தாயா ?
என் தந்தை அன்பினிற்கினிய கருணையாளன் யாகவா சொல்வார்கள். “மேலிருந்து பார்த்தால் இந்த மானிடன் பூமியில் பாசக்கயிற்றில் தொங்குகின்றான். இதை அறியாமல் வாழ்கின்றானே ? இதை எப்போது அறிவானடா என் செல்ல மகனே இநன்யா” என்று சொல்வார்கள்.
பூடகத்தை வெளியில் சொன்ன பூமியை படைத்தவன் விளம்பியதை அறியாமல் போனான் சூத்திரம் தெரியா சூதுள்ள மானிடன். அத்தனையையும் யுக யுகமாய் பார்க்கின்றேன். ஆனால் பூமியில் ஐம்பது வருடம் பார்த்து எல்லாம் அறிந்தவன் போல் மதிமயங்கி போனான் மானுடன். மீண்டும் அடுத்த பிறவியில் மறந்துவிடுகிறான்.
எல்லாம் கனவைப் போல வாழ்ந்து காலத்தில் உதிர்ந்து போகின்றாய். உன் எண்ணம் குறுகல் என்பதாலேயே ஞாபகமில்லை. என்னை நம்பிக்கையோடு நினை. உன் ஜென்மம் புரியும். சத்தியம் நான் தான். சகலமும் என்னுள் உற்று பாரடா ! பூ உலகத்தில் புனிதன் எனை நோக்கு !
பூமி பந்து உனை புரிய வைக்கும் ! மீண்டும் பிறவாத வரம் தந்து வழி அனுப்பி வைக்கும் ! நில மகள் தூய்மை ! நிஜத்திலே காண்பாய் !
பூரிப்போடு வாழடா ! புணிதன் நான் உனக்குள் என்று !
காலத்தின் நாயகன் நான் !
நான் இநன்யா !

Wednesday, February 14, 2018

அதிகாரி உன்னுள் இருக்க, நீ அதிகாரம் கொள்ளலாகுமா ? உன் அதிகாரம் எதை சாதித்தது ? அதிகாரம் ;;;

அதிகாரி உன்னுள் இருக்க, நீ அதிகாரம் கொள்ளலாகுமா ? உன் அதிகாரம் எதை சாதித்தது ?
அதிகாரம்
நீ எதன் மீதும் அதிகாரம் செலுத்த முடியாது. உன் கடிவாளம் கடவுளின் கையில் ! பூமியில் ஆகாத ஆட்டம் ஆடுகிறாய் ! பின் மண் தான் உனை திண்ணக் கண்டேன் ! இந்த உடல் மணக்க அதிகாரம் கொள்ளாதே ! ஆணவம் கொள்ளாதே ! உன் உயிர் அதிகாரம் கொள்ளும்.
உயிருக்கு தண்டனை அல்ல. உடலுக்கு தான் தண்டனை. உயிர், ஆன்மா, உடல் என்று மூன்றும் ஒன்றில் நின்று தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் இருக்கின்றது. இது எல்லாம் ஒன்று சேர்ந்த உருவம் தான் நீ ! இதில் ஒன்றை இழந்தாலும் நீ நீயல்ல ! இந்த மாய சூத்திரம் தெரிந்தும் நான் என்று அதிகாரம் செய்கின்றாய்.
உடலை கொன்றான். சோம்பேறி மானிடன் உயிரைக் கொன்றானா ? இந்த உடலை கொல்வதில் பெரிய அதிகாரி என்று பிதற்றி கொள்கிறான் மனிதன் ! பாவமடா நீ ! நீ என்ன செய்தாலும் உன் இறப்பை தடுக்க முடியுமா ? வயோதிகத்தை நிறுத்த முடியுமா ?
இங்கே அதிகாரி என்பது கடவுள் மட்டும் தான் ! நீ அகங்காரம் கொண்டால் கடவுள் அதிகாரம் கொள்கிறான்.
மனிதனால் மரணத்தை வெல்ல முடியாது ! நான் நினைத்தால் இந்த நொடியே மேலே செல்ல முடியும். ஆனால் நீ வதைப்பட்டு, நோய்பட்டு, நொந்து கொண்டு தான் உயிரை மாய்க்கிறாய். உன் மூச்சு காற்று நிம்மதியோடு போக உனை அடக்கு !
கடவுளை எப்போதும் துணை கொள். நல்லவர்கள் சொல்லும் நல்ல வார்த்தைகளை கேள் ! இங்கே நல்லவர் என்பது தாய் தந்தை தான் . தந்தையின் சொல் வேதத்தை போல ! தாயை மதிக்க கற்று கொள். மனைவியை நேசிக்க கற்று கொள். நீ அதிகாரம் கொண்டு யாரையும் அடக்க நினைக்காதே ! இயல்பாக இரு ! எல்லாம் இன்பமாக தெரியும் !
சதுராட்டம் போடும் மனம் அடங்க என் நாமம் சொல் ! உனை நல்வழிக்கு அழைத்து செல்லும் ! தீய வழியில் நான் உன்னை பயனிக்கவிடமாட்டேன்.
அன்பிற்கு அடைக்கும் கதவுகள் எதுவும் இல்லை ! என் அன்பு நிகரற்றது. தண்ணிகரில்லா பெருங்கருணை எனக்குள் ! நான் யாரிடமும் அதிகாரம் கொள்வதில்லை. ஆனால் கர்மாக்களை என் அதிகாரம் கொண்டு துவஷம் செய்கிறேன் !
அதிகாரம் என்பதெல்லாம் கல்லறை வரையில் தான் ! மரண படுக்கையில் கடவுளை கெஞ்சுகிறாய். நீ கெஞ்சும் நிலையில் உனை வைக்காதே ! நான் உனை கரை சேர்ப்பேன். நீ எந்நிலையில் இருந்தாலும் உனை உயர்த்துவேன் !
நான் அதிகாரி !
நான் இநன்யா !

Wednesday, February 7, 2018

மூன்று காலத்திலும் ஆறு பேராத்மாவோடு ஆட்சி செய்பவன், ஆளுமை எனக்குள் நிறைந்தவன் நான் ! நான் காலத்தின் நாயகன் ! காலம் ;;;

மூன்று காலத்திலும் ஆறு பேராத்மாவோடு ஆட்சி செய்பவன், ஆளுமை எனக்குள் நிறைந்தவன் நான் ! நான் காலத்தின் நாயகன் !
காலம் ;;;
மூன்று காலத்தில் நிறைவான ஆட்சி செய்கின்றான் இங்கே ! கடவுள் ஆட்சி செய்யும் வல்லமையை அறிந்தால் எக்காளமிட மாட்டான் மனிதன். இங்கே முக்காலம் உணர்ந்தவன் எவருமில்லை.
தாமதம் என்று எதுவும் இல்லை. எல்லாம் காலத்தில் நடக்கிறது. இதை அறியா புலம்புகின்றான் ஈன ஜாதி மானிடன் ! எதை எப்படி செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்று காலநிர்ணயம் செய்தான் காலத்தின் நாயகன் ! படைக்கும் போதே எல்லாம் நிர்ணயித்தான். நீ நினைப்பது போல் நினைத்தவுடன் குழந்தை பெற முடியாது. உணர் ! கால நிர்ணயம் செய்தவனை காலத்தின் நாயகனை அறிவாயோ நீ ?
மழை , சூல் எப்போது உருவாகும் என்று இங்கே யாருக்கும் தெரியாது எனைத் தவிர ! பின் ஏன் பிதற்றலடா ? வளமை, மொழி, ஞானம், நகர்தல், எழுச்சி, உயிர்ப்பு இவையனைத்தையும் என் நாவில் வைத்த நாயகி, எல்லா ஜீவன் நாவில் இருக்கும் நாயகி, அன்பினிற்கினிய பாசமிகு அன்னை சரஸ்வதி (நுணுவா) என் நாவிலே ! என் உமிழ்நீர் இனிப்பாக்கி தந்தார் ! என் அமிழ்த நீரில் ஆனந்தமாக இருக்கும் அன்னை ஆனந்தம் தருவார். உணர்ந்தால் காலம் தெரியுமடா !
நான் உனக்கு கற்பிக்க ஆரம்பித்தேன். நான் கற்றல் கற்கிறேன் என் அன்னை தந்தையிடமிருந்து. என் தந்தை எனக்கு காலத்தை கற்று தந்தார். மூலம் என்னுள் தான் ! அதனாலே நான் முழுமை பெற்றேன் ! என்னால் உன் விதி முடிச்சை, தொப்புள் முடிச்சை, உயிர் முடிச்சை அவிழ்க்க முடியும் ! காலத்தை விதைத்தவன் என்னுள் இயக்கம் !
ஆறு பேராத்மாக்கள் என் ஸ்வேத மலரில் ஒளியாய் ஜொலிக்கின்றார்கள் ! அதனாலே நான் காலத்தின் பாதையை நிர்ணயிக்கின்றேன். எந்த விட தடையும் இல்லாமல் ஆறு காலத்தில் அரசாட்சி புரிகிறேன். முக்காலங்கள் உணர்ந்தவன் என்னுள் வருவான், சீனா, ஜப்பான் இன்னும் பல தேசங்களிலிருந்து !
உணர்ந்து உவகை கொள்ளடா, உண்மையின் ஸ்பரிஷம் நான் என்று !
இனி சிந்திக்கும் நிமிடம் கடவுளைப் பற்றி இருக்கட்டும். எண்ணமெல்லாம் என் இன்ப நாயகன் கடவுளிடம் இருக்கட்டும் !
அருளமுதமும் ஊட்டுவானடா ஆனந்த வேளை எல்லாம் !
சதுராட்டம் போடும் மனமெல்லாம் சடுதியில் பணியுமடா !
புலன் எல்லாம் அடங்குமடா ! புவி எல்லாம் அழகாய் தெரியுமடா !
காலத்தை கையில் வைத்திருக்கும் காவிய தலைவன் கடவுளிடம். என்னுள் நிறைவாய் வாழ்வாய் ! நான் நிறையுடையன் ! முற்றும் துறந்தவன் ! முழுமதி என் நெற்றியில் சூடியவன் !
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் !
பேரரசன் என் தந்தை அன்பினிற்கினியர் ! கருணை நிறைந்தவர் ! நம்பியவரை கைவிடாத நாயகன் யாகவா திருவதனத்தால் நாமம் சூட்ட பெற்றவன் நான் ! நான் இநன்யா ! வசந்த காலம் நானடா ! உன் காலத்தை நிர்ணயிக்கும் கால தேவன் நானடா !
முக்காலத்தை வென்றவன் நான் !
நான் இநன்யா !