உன் நிறுத்தை திறந்து வையடா ! உள் ஒன்று இருக்கிறது. உனை பார்த்து கொண்டு உனை காத்து கொண்டு !
உன் கதவை திற !
உள்ளே தட்டுகின்றான் உன் கதவை ! நீ கதவை திறக்காமல் அடைத்து வைத்து காற்று வரவில்லை என்று ஆனந்தம் இல்லா அலைகின்றாய். உள்ளே கடவுள் தட்டுகின்ற ஓசை கேட்டும் கதவை திறக்காது கடவுளை மூச்சு முட்ட அடைத்து வைத்திருக்கின்றாய். எப்போது திறப்பாயடா ?
இதயம் துடிக்கிறது என்று ஆராய்ந்து அதன் கால நேரத்தை குறித்து காலம் தெரியாமல் வாழும் உன் கோமாளிதனத்தை என்ன சொல்வேன் ?
உன் துடிப்பு அடங்கும் வரை அங்கே கணக்குண்டு என்பதை புரியாமல் வாழ்கின்றாய் ! கடவுள் தான் உள்ளே உன் துடிப்பாய் உணர்த்துகிறான் என்பதை அறியாமல் ! உள்ளே தான் ஆனந்தம், நிம்மதி என்பதை புரிந்து கொள். உள்ளே உன் இதய கதவை திற !
கருவறை சாவி கடவுளின் கைகளில். ஆனால் உன் உள் அறையை திறக்கும் சாவி உன்னிடமே உள்ளது ! ஆனால் உன் அறையை திறக்காமல் கோவில் கட்டுகிறாய். இல்லையேல் மதுக்கடைகளை திறக்கிறாய். மாட மாளிகை, கோட கோபுரம் அமைத்து ஆசிரமம் திறந்து ஆளுமை தெரியாது அலைகின்றாய் !
உள்ளே ஓசை கேட்டும் துடிப்பு கேட்டும் அறிவதற்கு ஏன் முயலவில்லை. அந்த ஆனந்தத்தை அறிய ஏன் முற்படவில்லை. நீ கண்டுபிடித்த இயந்திரம் எந்நேரமும் பழுதடையும். ஆனால் உன் இதயம் விதி முடியும் வரை பழுதடையாது. இதயம் அருகில் பெருவிரல் போல ஒளிரும் ஆண்மாவை அறிய முற்படு !
நான் கதவை திறந்தேன், நிறைந்த காற்று (நிம்மதி) நிறைந்த ஸ்பரிஷம் (ஆனந்தம்) உணர்ந்தேன் ! ஆனந்தமாய் இருக்கின்றேன். நீயும் உன் உள் அறையை திறக்க பாடுபடு. உன்னால் முடியவில்லை என்றால் நல் குருவை நாடு !
பேரானந்தம் உனக்குள்ளே ! பொக்கிஷம் உனக்குள்ளே !
நீ வெளியில் தேடுகிறாய். அன்பில் கரைந்திடு !
நான் உனக்காக என் கதவை திறந்து வைத்திருக்கிறேன். ஆனந்தம், பேரானந்தம் தர !
விழித்து கொள்ளடா ! வேதனை இல்லாது வாழலாம்.
நீ வெளியில் தேடுகிறாய். அன்பில் கரைந்திடு !
நான் உனக்காக என் கதவை திறந்து வைத்திருக்கிறேன். ஆனந்தம், பேரானந்தம் தர !
விழித்து கொள்ளடா ! வேதனை இல்லாது வாழலாம்.
கருவறை திறந்து பிறந்தாலே சிசு பூரண விதி பெரும். ஆனால் இப்போது உன் விஞ்ஞானத்தால் வயிற்றை கிழித்து சிசுவை எடுக்கின்றாய். கருவை அடைத்தவன், காத்தவன் நிச்சயம் திறப்பான் ! ஆனால் நீ நல்ல நேரம், நட்சத்திரம் பார்த்து கிழித்து எடுக்கின்றாய். அதனால் விதி மாறிடுமோ ? உணர் !
உன் வேடிக்கை விஞ்ஞானமடா ! மதிமயங்கி நிற்கும் மானிடா, உன் உள்ளே துடிக்கும் ஓசையும், உன் கெண்டைகால் நரம்பின் நாடி துடிப்பும் உன்னை கடவுளிடம் கூட்டி செல்ல அலைக்கிறது ! துடிக்கிறது ! உணர்ந்து கொள்ளடா !
உன் இதய கதவை திறக்க உன்னாலே முடியும். உன் மன நிறுத்தை திறக்க வந்த மாயவன் நானடா !
இநன்யா அணுவுக்குள் அணுவானவன் ! ஆனந்தம் நிறைந்தவன் ! உனக்கும் தர காத்திருக்கிறேன். உன் கதவை திறந்து வையடா !
மாயவன் நான் !
நான் இநன்யா !



