Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 14, 2017

நாளை நன்நாள் நான் ஆணந்தமாய் யோகிகள்,ரிஷிகளோடு இருக்கின்ற நாள்

இநன்யா நமோ நம
08-09-2017
நாளை நன்நாள் நான் ஆணந்தமாய் யோகிகள்,ரிஷிகளோடு இருக்கின்ற நாள் என் அன்பிற்கினிய தந்தை யாகவா ஸ்தலத்திற்கு ஒன்பது நாள் வந்து செல்வார்கள் .நீ அன்பால் கேட்கும் எல்லா பிரார்த்தனையும் நிறைவேற நான் பரிந்துரை செய்வேன் .என் நாமம் தேவர்கள் அழைக்கும் நாமம் உன் பாவம் கரைக்கும் காலனையும் மிதிக்கும் என் சொல் சத்யம் நீ வெல்வாயடா.
***************************
நன்றிகள்
இநன்யா நமோ நம

காரணகுரு, காரியகுரு ...!

காரணகுரு, காரியகுரு ...!
'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.

காரியகுரு *******
காரியகுரு எனப்படுபவர் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகிய தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)

காரணகுரு **********
எந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகர், மகான் கருவூர்தேவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.
அத்தகு காரணகுருவின் திருவடிப்பற்றி பூசித்து ஆசிமாறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப்பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது.

காலம் உள்ளபோதே அதாவது இளமை இருக்கும்போதே காரணகுருவை அறிந்து, அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ளவேண்டும்.;;;;;;;;;;

தொழும்பி யாருமில்லை ! ஞான பெண்ணே, இங்கே நீ கடவுளின் சிறுவிதானடா ! மகிழ்ந்து நில்லடா ! அசுர மனத்தை மிதித்து வெல்லடா !

தொழும்பி யாருமில்லை ! ஞான பெண்ணே, இங்கே நீ கடவுளின் சிறுவிதானடா ! மகிழ்ந்து நில்லடா ! அசுர மனத்தை மிதித்து வெல்லடா !
ஞான மலர்கள்
வெண்தாமரை, செந்தாமரை வேதசாரம் நிறைந்தது ! பாரிஜாதம் உன் உள் உயிர்க்கு ஆணந்தம் தருவது ! தாமரை, பாதிரி, செண்பகம், புன்னை, நீலோத்பவம், நந்தியா, அரளி, பாரிஜாதம் ஆகிய இந்த எட்டு மலர்களும் அஷ்ட புஷ்பங்கள் ! இது உன் வேண்டுதலை நிறைவேற்றும் ஞான மலர்கள் ! கடவுளின் பாதத்திற்கு உகந்தது.
இந்த எட்டு மலர்களையும் ஒரு சேராக கடவுளுக்கு வைத்தால் உனக்கு அஷ்ட அதிர்ஷ்டங்கள் உண்டு ! இவை வழிபாடுகள் அல்ல ! பூ வைத்து வணங்குவது மணம், அன்பிற்காக !
வெள்ளெருக்கு பூமிக்கு பிடித்த மலர் ! இந்த புணித பூமி அன்னைக்கு அந்த மலர் பதித்து வணங்கு ! உன் வீடு சுபமாகும். வாஸ்து குறை என்று சொல்கிறாயே, அந்த குறை கூட காணாமல் போகும். இந்த எட்டும் உன்னை எட்டின் நிலை குறை தீர வைக்கும். சட்டத்தில் உன்னை பிணமாக வைக்கும் போது உன் உடல் நாறும் நிலை மாறும் !
மற்ற மலர்களும் குறைந்தவை அல்ல. முல்லை, மல்லி, குவளை, மனோரஞ்சிதம், திகுவழை, பன்னீர் கூட உன் குறைகளை போக்கும்.
கவலை தீர வெண்தாமரை வைத்து வணங்கு !
செல்வம், மன அமைதி பெற செந்தாமரை வைத்து வணங்கு !
எதையும் பக்தியால் செய்யாதே ! பாசத்தால் செய் !
பயத்தால் செய்யாதே ! பணிவுடன் செய் !
நான் மலரின் ஞானம் ! உலகின் 333 கோடி மலர்களின் சாரம் நான் ! என்னுள் கரைந்திடு ! நிறைந்திடு ! பல்கி பெருகுவாய் பவிசோடு ! எல்லா பூக்களின் நறுமனமும், ஞானமும் எனக்குள் உண்டு ! என் அன்பிற்கினிய தந்தையின் சஞ்சிநாத பாதத்தில் உண்டு.
உன்னில் ஸ்வேதமாக ஜொலிக்கின்றேன். என் அன்பு உண்மை வெண்மை போன்றது. தர்மாக்களுக்கு சத்திய பாதையை காண்பிக்கும் ! ஆனால் துஷ்ட சாம்ராஜ்ஜியங்களுக்கும் அசுர வர்க்கங்களுக்கும் என் ருத்ரம் மிக மிக பெரிது தான் !
என்னுள் கர்வமில்லை. போட்டி, பொறாமை, வஞ்சமில்லை. உன்னால் அன்பால் அரவணைக்கும் எண்ணம் உண்டு ! நான் அழகாக இருப்பதன் ரகசியம் இது தான். இந்த மன அழுக்கை குப்பையாக சேர்ப்பதாலே மனிதன் அழகாக இல்லை. அழகு என்றால் துன்பம் இல்லாமல் இருப்பது தான் !
வெகுண்டெழுந்தேன் உன் வேதனை தீர்க்க !
உன் துன்பம், வறுமை, நோய், பாவத்தோடு நான் சண்டையிடுகிறேன். உன் பாவத்தை கவலையை என் பாதத்தில் வைத்து விடு ! நான் அழுத்தி கரைப்பேன். உனக்கென்ன மனக்கவலைடா ? என் நாமம் உனை கரை சேர்க்கும். இநன்யா மலரின் ஞானம் !
பூக்களுக்கும் மலர்களுக்கும் ஞானம் உள்ளதால் தான் பூஜைக்கு பயன்படுத்துகிறான்.
தும்பை மலர் எனக்கு பிடித்தது !
பன்னீர், பாரிஜாதம், தாமரை என் தந்தைக்கு பிடித்தது !
ஆனால் எல்லா மலரிலும் சிறந்தது பெண் மலர் தான். அவள் மலர்ந்தால் தான் நீ மலர்வாய். ஆதலால் பெண்ணே கடவுளின் படைப்பில் உண்ணதம் !
பெண் பிரம்மநிலை அடைந்தவள் !
புத்தி நான்கும், கீர்த்தி எட்டும், பலத்தால் பதினாறும் நிறைந்தவள் பெண் ! ஞானம் பொருந்தி பூமியில் இறக்கப்பட்டவள் பெண் !
போற்றி பாடடா பெண்மையை ! பெருமை உனக்குள் லோகத்தில் !
333 கோடி மலர்களின் ஞானம் நான் !
வேதத்தின் சாரம் தான் !
மலரின் ஞானம் நான் !
நான் இநன்யா !

நாம் தூங்கும் பொழுது நம் மூச்சுக் காற்று நின்றால் நம் கதி என்னவாகும் ?

நான் இநன்யா !
’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா )
’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு )

’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )
’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்)
நன்றி ! இநன்யா நமோ நம !
நாம் தூங்கும் பொழுது நம் மூச்சுக் காற்று நின்றால் நம் கதி என்னவாகும் ? நாம் தூங்கும் போது நம் மூச்சுக் காற்றை தூங்காமல் இயக்குபவர் கடவுள் ! நாத்திகன் என்று சொல்லித் திரியும் யாரேனும் இருந்தால் இன்றே சொல்லிவிடுங்கள் மூச்சுக் காற்று கடவுள் உடையது என்று ! நாம் தூங்கும் பொழுது கூட நம்மை பாதுகாப்பாக கண்காணிப்பவர் கடவுள். நாம் கேட்காமலேயே கடல் நீரை காற்றைக் கொண்டு மேல் எழுப்பி அதை மேகமாய் மாற்றி பின் இன்ப மழையாய் தருபவர் கடவுள் ! மழை இல்லையென்றால் நம் நிலைமை என்னவாகும் ? எல்லாவற்றையும் நாம் கேட்காமலேயே கொடுக்கும் கடவுள், பின் ஏன் நாம் கேட்டும் கொடுக்கவில்லை என என்றாவது யோசித்திருக்கிறோமா ? இப்பொழுதாவது உணருங்கள் ! நமக்கு கடவுளிடம் கேட்கத் தெரியவில்லை ! “இநன்யா நமோ நம” என்ற நாமத்தை சொன்னாலே போதும் ! ஆன்மா ஆனந்த கூத்தாடும் ! புனித காற்றை அறிவியலின் பெயரால் மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றோம் ! காற்று ஆவேசமாய் கோபம் கொண்டு நம்மையும் நம் அறிவியலை அழித்துக் கொண்டிருக்கின்றது ! புனித தென்றல் காற்றை கரும்புகையாக்கி தெருவெங்கும் தீக்கோலமாய் பட்டாசு வெடித்து கொண்டாடுவது எதற்காக ? நமக்கு கனிகள் தரும் மரங்கள் அழுகின்றது ! பறவைகள் தன் கூட்டைவிட்டு தூரம் சென்று கதறுகின்றன ! பூக்கள் வாடுகின்றன ! நாய்கள், பசுக்கள் அலறியடித்து ஓடுகின்றன ! ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் ஞானமிழந்து சிரித்துக் கொண்டாடுகின்றான் பண்டிகையாக ! மூச்சுக் காற்றை யோகா என்ற பெயரில் இழுத்து விடுவது, தியானம் என்ற பெயரில் அடக்குவது எதற்கும் உதவாது ! கடவுள் சொன்னது போல் வியர்வை சிந்தி உழைத்து உங்களின் கடமையை மட்டுமே செய்யுங்கள் ! தியானம், யோகாவில் கிடைக்காத நிம்மதி ஆயிரம் மடங்கு சத்யமாக கிடைக்கும் ! கர்ம வினையால் சிலரை பார்வையற்றவராக, கேட்கும் திறனற்றவராக, பேசும் திறனற்றவராக படைக்கின்றார் கடவுள் ! யாரையேனும் சுவாசிக்கும் திறனற்றவராக படைத்துள்ளாரா ? எதற்கென்று யோசியுங்கள் ! காற்றின் சூட்சுமம் புரியும் !

நான் இநன்யா !
’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா )
’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு )

’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )
’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்)

நன்றி !
இநன்யா நமோ நம !

அப்பா | " யாகவா உரையாடல் "

அப்பா | " யாகவா உரையாடல் " _ குருடன் .
குருடன் ,,,, அப்பா நீங்கள் திட்டுகின்றீர்கள் .என்று உங்களிடம் பேச பயப்படுகின்றார்கள்.
டாய், நான் உன்னை திட்டவில்லை'உன் உடலை தான் திட்டுகிறேன்.
பார்த்துப் போ ,,, பள்ளம் ஒன்று உள்ளது என்று நான் உன்னை எச்சரிக்கின்றேன்.
நீ இரு கண் இருந்தும் குருடனைப் போல் அலைகின்றாய். பாழும் கிணற்றில் குரு டன் ஒருவன் விழுந்து விடுகின்றான்.
குருடன் நினைக்கின்றான். தனக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்று.. அச்சமயம் நான் பட்சிகளை ஏவி விடுகின்றேன். அவை அக் குருடன் நிலைக் கண்டு குரல் கொடுக்க, குருடனோ தனக்கு துணையாக இங்கு ஒரு பட்சி இருக்கின்றது என்பதை அறிகின்றான்.
பின் அங்கு உள்ள மரத்தின் வேரை பிடித்து மேலே வந்து விடுகின்றான்.
நீ இவ் யுகம் எப்படி உள்ளது என்பதை இரு கண் தெரியாதவனிடம் போய் கேட்டால் அவன் தெளிவாக கூறுவான்.
இரு கண் தெரியாதவன் எதை வணங்குவான்.
இரு கண் இருந்தும் நீ எதை வணங்குகின்றாய். உன் கண்ணுக்கு யாவும் தெரியும்.
உன் உயிருக்கு மனம் தான் தெரியும். என்றால் நீ உன்னை சிந்தி .
இரு கண் தெரியாத குருடனை சிந்தித்துப் பார் .
இந்த யுகம் சப்த யுகமாக உள்ளது என்பதனை குருடன் தெளிவாக உணர்வான்.
குருடன் ஒளி சப்தத்தை அறியாதவன். அது அவனது முற்பிறவி கர்மப்பாவம்.
நீயோ இரு கண் ஒளி உனக்குள் தான் இருந்தும், உனக்குள் ஒளி இருப்பதால் தான் கற்சிலையை காண்கின்றோம் என்பதனை மறந்து,
கற்சிலையை கடவுள் என்கிறாய். அப்படி என்றால் உனக்குள் ஒளியாக இருப்பது யார்.
என்று சற்றேனும் சிந்தித்தாயா?
நீ உருவமற்றதை சிந்தித்தால் உள்ளுணர்வை அறிவாய் .இரு கண் தெரியாதவன் பாழும் கிணற்றில் வீழ்ந்தது போல் நீயும் இவ்வுயகத்தில் அவையில் செய்த பிழைக்காக வந்து வீழ்ந்து கிடக்கின்றாய் .
இங்கு உனக்கு உதவி செய்யவே யாகவா = முனிவர்கள், மாயைகள் சித்தர்களுக்கு ஒான சப்தத்தையும் , வேத சப்தத்தையும் கொடுத்து ஒலிக்க செய்கின்றார் .
நீ இவ்வுயகத்தை விட்டு யாகத்திற்கு கரை சேர பிரம்மஸ்தலம் என்கின்ற ஆணிவேரையும் கொடுத்துள்ளார்.
இரு கண் தெரியாதவன் சப்தத்தை வணங்குகின்றான்.
இரு கண் இருந்தும் ஏன் நீ ஒளியை ஒலியை உணர மறுக்கிறாய்.
உன்னதமான பொருள் என்பது ஒளி.
"எனக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று எண்ணி விடாதே!
எனக்கு மேல் ஒளி தான் இருக்கின்றது."
"யாகவா"
இநன்யா நமோ நம

கேள்வி : - ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள் . இதைச் சற்று விளக்க முடியுமா ?

கேள்வி : - ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள் . இதைச் சற்று விளக்க முடியுமா ?
ஓஷோ பதில் : - " ஆம் .
★ இது உண்மைதான் . ஏனெனில் இருவரும் சாதாரண மனநிலையில் , சாதாரண மக்களைப் போல பெரும்பாலும் இருப்பது இல்லை . ஞானி என்பவன் சாதாரண மனதைக் கடந்து மேலே சென்றவன் . பைத்தியம் என்பவன் மனதிற்குக் கீழே சென்றவன் . இதுதான் ஒரே வித்தியாசம் . ஆனால் இதன் பின்விளைவுதான் அசாதாரணமானது .
★ஞானி மனதைக் கடந்து மேலே சென்று பேரானந்த நிலையில் இருக்கிறான் . பைத்தியம் மனதிற்குக் கீழே சென்று ஒருசில எண்ணச் சுழலிலேயே சிக்கித் தவிக்கறான் . மேலே சென்றவன் , எண்ணங்களை ஒதுக்கிச் சென்றிருக்கிறான் . கீழே சென்றவன் மன இறுக்கம் , கவலை , எதிர்பாராத பெருத்த ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து அவனுடைய மனநிலையைப் பாதித்து அவனை கீழே கொண்டு சென்றுவிட்டது .
★ஆனால் இருவரது கண்களையும் பாருங்கள் . அவை ஒன்றுபோலவே ஒருவித வெறுமையில் இருக்கும் . இருவரும் இந்த உலகத்தைப் பற்றி கவலைப்படாமல் எங்கேயோ சஞ்சரித்துக்கொண்டு இருப்பார்கள் . இருவரும் பலசமயம் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வார்கள் ; தானே சிரிப்பார்கள் ! இதனால் கீழை நாட்டில் , அநேக பைத்தியங்களை ஞானிகள் என்று கருதி மக்கள் வழிபடுகிறார்கள் ! இது கிராமத்தில் சகஜம் .
★ஆனால் மேலைநாட்டில் ஒரு ஞானியைக்கூட பைத்தியக்காரன் என்றுதான் எண்ணுவார்கள் . ஜீசஸ் , சாக்ரடீஸ் போன்றவர்களைப் பலர் பைத்தியக்காரன் என்றே கருதிவருகிறார்கள் . பொதுவாக பைத்தியம் ஒரு மிருகம்போல செயல்படும் . மனம் அவன்வசம் ஒருக்காலும் இருக்காது . ஆனால் ஞானியிடம் மனம் ஒரு வேலைக்காரன்போல செயல்படும் . அதைப் பார்த்துத்தான் அவன் சற்று சிரிப்பான் . இவன் வானத்தில் பறப்பவன் . ஆனால் பைத்தியம் பூமிக்கு அடியில் சென்றவன் .
★ஞானி விழிப்புணர்வில் முழுமையாக இருப்பவன் . பைத்தியக்காரன் விழிப்புணர்வின் அதல பாதாளத்தில் இருப்பவன் . ஆனால் வெளிப்பார்வைக்கு இருவருமே ஒன்றுபோலவே காணப்படுவார்கள் . இருவரும் ஆடை மற்றும் உணவு விஷயங்களில் அக்கறை காட்டமாட்டார்கள் . ஏதோ கிடைத்ததை உண்டு வழியில் எங்கேயாவது தன்னை மறந்து கிடப்பார்கள் .
★ஒருவன் ஞானி என்று எப்படி அடையாளம் காண்பது ? அதற்கு உங்கள் உள்ளுணர்வையும் , பகுத்தறிவையும் மேன்மைப்படுத்த வேண்டும் . அப்பொழுது அது உங்களுக்குச் சரியாகச் சுட்டிக்காட்டும் . வேறு வழியில்லை . " .
:-ஓஷோ

கடவுளை பற்றி பேசாத நிமிடம் நீ பிறவாத நிமிடமே,

இநன்யா நமோ நம
கடவுளை பற்றி பேசாத நிமிடம் நீ பிறவாத நிமிடமே,
கடவுளை நினைக்காத நிமிடம் இண்பத்தை தொலைத்த நிமிடம்.
எப்போதும் நினைத்திரு கடவுளை தவிற இங்கு எல்லாம் பொய்தான் ,
அன்பில் கரைந்திடு ஆளுமை உன்னில் பேசும்.
இந்த புணிதமாதத்தில் உன்னை கைவிடாது காக்க ஆயத்தமானேன் .
நீ செய்கின்ற செயல் அனைத்தும் வெற்றி பெற ஆசிகள் தந்தேன் .
உலகில் ஒருபக்கம் அழிவின் சாயல் கண்டேன் ,
ஒரு பக்கம் ஆணந்தம் சிறிது கண்டேன் .
நீ ஆளுமையோடு இருக்கிறாய் .
புறப்படு உன் கடமையை செய்ய ...
நீ வெல்ல நெஞ்சம் நிறைந்து ஆசிகள் தந்தேன் .
********************
நன்றிகள்
இநன்யா நமோ நம