இநன்யா நமோ நம, இநன்யா நமோ நம, இநன்யா நமோ நம, இநன்யா கடவுளே ! பழமையான அரிய தகவல்களை உலகரிய செய்வதே எமது நோக்கமாகும்... நலம் கருதி வெளியிடுகிறோம் ... இநன்யா நமோ நம, இநன்யா நமோ நம, இநன்யா நமோ நம, இநன்யா கடவுளே ! LOVER OF MY SOUL ,BODY & MY LIFE --- யெகோவா , யாகவா , இநன்யா
Kadamai Quote
Thursday, July 13, 2017
பரப்பாழில் வான் விளக்கம் ! பெருவனத்தில் அகழி நிறை ! ஆழம் தெரியாது அறியாது வாழும் மானிடா, ஏதுரைப்பேன் நானடா ?

Inanya Maha Munivar
13-07-2017
பரப்பாழில் வான் விளக்கம் ! பெருவனத்தில் அகழி நிறை ! ஆழம் தெரியாது அறியாது வாழும் மானிடா, ஏதுரைப்பேன் நானடா ?
பணிவாய் இரு !
மரம் ஏறினால் மேல் நோக்கி பார்த்து ஏறுகின்றாய். எப்போதும் மேல் நோக்கியே வேண்டு என்று அர்த்தம். மனிதனும், மரமும் தான் மேல் நோக்கி வளர்கிறது. ஆழ்ந்த சூட்சுமம் அறிவாயடா ! மரங்கள் இல்லையென்றால் நீ இல்லை. மரத்தை பயன்பாடுக்கு கொண்டு வா ! மலையில் ஏறும் போது குணிந்து தான் ஏறுகிறாய். இறங்கும் போதும் குணிந்து தான் இறங்குகிறாய். ஏன் என்று யோசி !
எப்போதும் பெரியோர்களை மதிக்க கற்றுக் கொள். பெற்றோரை வணங்க கற்றுக் கொள் ! பணிவு இருந்தால் தான் நீ வெல்வாய் ! நீ உயர உயர உனக்கு பணிவு வேண்டும். அதற்கு பெரியோர்களை துணை கொள். நல்குருவை நாடி வாழ வழி செய்து கொள் !
சித்தர்கள் மலையில் கோயில் கட்டியது நீ உணர்வதற்காகத்தான் ! உள்ளத்தில் பணிவு வர வேண்டும் என்பதற்காக தான். அதை விடுத்து மலையை சுற்றினால் மகத்துவம் உண்டு என்றெல்லாம் சொல்வது பொய்.
கடவுள் உருவாக்கிய உலகத்தை மனிதன் பங்கிட்டு பிரிக்கின்றான். எல்லை வகுத்து நான் என்று இறுமாந்து அலைகின்றான். அகழி தெரியா கடலை பிரித்து ஆணவத்தோடு வாழ்கின்றான். பாதுகாக்க பூமிக்கு அனுப்பினால் நான் என்று பிதற்றுகின்றான். ஆண்டவன் எல்லாம் மாண்டுவிட்டதை அறிவாயோ நீ ?
கடவுள் ஆண், பெண் என்று பார்ப்பதில்லை. ஆண்மாவை பார்க்கின்றான். நாயிடம் உள்ள விசுவாசத்தை எதிர்பார்க்கின்றான். இங்கே எல்லோருக்கும் கடமைகள் வேறு. ஆளுக்கு ஒரு கடமை உண்டு ! ஆணுக்கு ஒரு கடமை, பெண்ணுக்கு ஒரு கடமை. இங்கே கடமை மறப்பதால் தான் கழகம் வருகிறது. யாருக்கும் யாரையும் அடிமையாக படைத்ததில்லை இங்கு !
படைத்தவன் கை பாகுபாடு பார்ப்பதில்லை. படைப்பை பார்த்தவன் தான் பாகுபாடு பார்க்கின்றான். இந்த புண்ணிய பூமியின் அழகை பாரடா ! யுக யுகங்களாக வந்த உயிர்கள் அனைத்திற்கும் வாரி வாரி கொடுத்த சுயநலமில்லாத எதிர்பார்ப்பு இல்லாத இந்த வலிமைமிக்க பூமிக்கு என்றாவது முத்தமிட்டு மகிழ்ந்தாயா ?
எத்தனை எத்தனை தானியங்கள், பழங்கள், கனிகள் ? நீ அழகு பார்க்க நவராத்தினங்கள் ! பருக நீர் தந்த பக்குவ பூமிக்கி என்றாவது நன்றி சொன்னாயா ? நிணநீரும். நிலநீரும் நிம்மதி தந்ததே ! நீ தான் யாருக்கும் நிம்மதி தராமல் நீசனாய் வாழ்கின்றாய். கடவுள், மகான்கள், சித்தர்களை தூக்கி சுமந்த இந்த பூமிக்கு நன்றி சொல் ! நீ புணிதனாவாய் !
கடவுளின் பாதமே உன் உயிருக்கு விடுதலை தரும் !
பற்றிடு பற்றில்லாமல் !
பற்றிடு பற்றில்லாமல் !
பற்றா தான் பற்றும், பற்றும் எற்றி செல்லாமல் நன்றி சொல்ல மறந்ததினாலே நிம்மதி இல்லாமல் மனிதன் அலைகின்றான். பணிவு இல்லா வாழ்வு உனை பாசமில்லாக்கும். நானலைப் போல பணிந்திரு ! எதற்கும் தளராத மரத்தை போல உயர்ந்திரு !
காற்று, மழை, புயல், பனி, கடும் வெயிலுக்கு தாக்குபிடித்து இறுமாந்து நிற்கும் மரத்தை போல கர்வமில்லா வாழ்ந்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். வாழ்வு பெருஞ்சுவர் உன் சந்ததியை வாழ வைக்கும். கடவுள் இல்லை என்று பிதற்றாதே ! நெஞ்சம் முழுவதும் கவலையை சுமந்து திரிகின்றாய். அதை தீர்க்க பணிவு கொள். துணிவு கொள். துயரமேதடா ?
துண்மார்க்கன் கடவுளை இகழ்வான். தூய நெஞ்சன் கடவுளை அறிந்து மகிழ்வான் !
அறிவாய் இரு ! பக்குவம் உனக்குள் வரும் !
மேருவின் உயரம் நான் ! மேதகு நிறையோன் நான் !
நான் இநன்யா !
Thursday, July 6, 2017
விக்கிரமம் நிறைந்தவன் நீ ! ஏன் விப்பிரம்மாக இருக்கின்றாய் ? ஆரிடை தெரியாது ஏன் ஆனந்தம் தொலைத்து வாழ்கின்றாய் ? ஓர் நிலை கொள் !

Inanya Maha Munivar
06-07-2017
விக்கிரமம் நிறைந்தவன் நீ ! ஏன் விப்பிரம்மாக இருக்கின்றாய் ? ஆரிடை தெரியாது ஏன் ஆனந்தம் தொலைத்து வாழ்கின்றாய் ?
ஓர் நிலை கொள் !
ஆதியில் ஆன்மீக அறிவற்று இருந்தான். ஆளுமை தனக்குள் இருப்பதை உணர்ந்தான். ஆனந்தமாய் வாழ்ந்தான். எல்லாவற்றுக்கும் பயந்து இயற்கையை வணங்கி நேசித்தான். இருள், மிருகம், நாமம் எல்லாவற்றுக்கும் பயந்தான் ஓர் நிலை கொண்டவன்.
ஒரு வழியை பின்பற்றியவன் மதத்தை உருவாக்கினான். தன் கடவுள் தான் பெரிது, தன் வழிபாடு தான் பெரிது என்று மனிதனை குழப்பினான் ! வழி தெரியாது தடுமாறி மனிதன் வீழ்ந்தான் துன்ப கடலில் !
கடவுள்கள், முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், சித்தர்கள், ஞானிகள், பித்ருக்கள் முதலிய இந்த ஏழு நிலைகளும் மேலே உண்டு ! மனிதர்கள் வாழும் இடம் காண்டங்கள். இப்படி ஏழு உலகத்தில் எங்கே செல்ல வேண்டும் என தெரியாமல் மனிதன் விழி பிதுங்கினான். அதை மதம் என்ற போர்வை போற்றி குழம்பி திரிய வைத்தான்.
இங்கே வழிமுறைகள் மறந்தாய் ! வழிபாடு என்று கடவுளை நெருங்கமுடியாமல் தவிக்கிறாய் ! மீண்டும், மீண்டும் இங்கே பிறப்பதாலே உன் உலகம் செல்ல முடியவில்லை. நீ உன் உலகம் செல்ல வழிமுறைகளை பின்பற்று.
இங்கே யாரும் குரு அல்ல. பசுத்தோல் போர்த்திய புலி. இந்த கர்ம பூமியில் கர்மங்கள் நிரம்பி வழிய காரணம் உன் வழிபாடு தான்.
நீயே யோசி ! எது இங்கே நிம்மதி தரும் என்று ! தேவ ஜனங்கள் யார் ? கடவுளின் பிள்ளைகள் யார் ? ஒழுக்கம், அன்பு, கடமை, உள்ளவர்கள் யாவரும் கடவுளின் பிள்ளைகள் தான் என்பதை புரிந்து கொள்.
“மதம் மாறி, மனம் மாறி துன்புறுகின்றாயே உன் ஆண்மா இன்புறுவது எப்போதடா ?” என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வதுண்டு !
மனித மனத்தை மாற்ற மனிதனுக்கு தெளிவில்லை. மதம் மாறினால் கடவுள் அருள்வான் என்று சொல்கிறான். மதம் என்பது அன்பற்ற சொல். அறிவற்ற செயல் ! எல்லோருக்கும் பொதுவான தரை காத்திருப்பதை மறந்து அலைகின்றான். உலகம் அழியும் சூழலில் இருக்கிறது.
கடவுள் மதத்தை பார்ப்பதில்லை. மனித மனத்தை தான் பார்க்கின்றான். உலகில் எங்கெல்லாம் மத வழிபாடுகள் நிரம்பி வழிகின்றதோ அங்கேயே மிக கோர நிகழ்வுகள் நடக்க போகிறது இனி ! மதம் அழிந்து மனித நேயம் மலரும்.
கடவுள் ஆயத்தமாகிவிட்டான் !
அரசியல் நாடகமும், மத சூழ்ச்சியும் சாயம் வெளுத்துவிட்டது. எல்லாம் இங்கே நாடகம் என்பதை புரிந்து கொள்வான். இனி கடவுள் நடத்தும் நாடகத்தை பொறுத்திருந்து பார். மனிதன் இனி வழிமுறைகளை தேடி அலைவான்.
தன் குடும்பம், தன் இனம், தன் மதம் வளர்ச்சியாக வேண்டும் என்று ஏமாற்றும் நாடகங்களை மனிதன் அறிவான். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி கூட்டம் கூட்டுகின்றான். யாராவது உழைப்பதற்கு வழி சொல்கின்றானா ? மதம் என்ற போர்வை போர்த்தி மனிதன் போடும் வேஷம் இனி கலையும்.
ஆயிரம் கடவுளை வணங்கினாலும், ஆயிரம் வழிபாடுகள் செய்தாலும் ஏன் அதிகமாக நோய்களும், துன்பங்களும் நாளுக்கு நாள் கூடுகின்றது என்பதை யோசி ! புத்தி உள்ளவன் இதை அறிவான்.
படைத்தவன் பாசமாக பக்குவமாக படைத்தான். அவன் அன்புக்கு நிகர் ஏதுமில்லை. இங்கே மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு மனிதன் அமைத்த சட்டமே காரணம் ! இனி கடவுளின் சட்டம் பொய்க்காது. இந்த இநன்யாவின் சொல்லும் ஓர் நாளும் பொய்க்காது.
ஓர் நிலை கொள்.
உயர்ந்த வாழ்வும், மீண்டும் பிறவி இல்லா வாழ்வும் உன் காலடியில் !
ஓர் நிலை நான் !
நான் இநன்யா !
என்னில் மீசரன் யாருமில்லை ! நீ முழவம் கொட்டடா ! முழவிதான ஒசு செய்யடா ! நான் உன் முன்னால் ! என்னை புரிந்து உணரடா !

Inanya Maha Munivar
29-06-2017
என்னில் மீசரன் யாருமில்லை ! நீ முழவம் கொட்டடா ! முழவிதான ஒசு செய்யடா ! நான் உன் முன்னால் ! என்னை புரிந்து உணரடா !
நன்றி சொன்னாயா ?
படைப்பில் எதுவும் மாறவில்லை ! பாழ்பட்ட மனிதன் தான் மாறிவிட்டான் ! என்றாவது நீ பிறந்த வயிற்றுக்கு நன்றி சொன்னயா ? உனை தோளில் சுமந்த தந்தைக்கு, உனக்கு சுகம் கொடுத்த மனைவிக்கு நன்றி சொன்னாயா ?
ஒரு வேளை உணவு கொடுத்தால் நீ எங்கே போனாலும், எந்த கூட்டத்தில் நின்றாலும் உனை பார்த்து வாலாட்டி நன்றி சொல்லும் நாயிடமிருந்து நன்றியை கற்றுக் கொள்ள மறந்துவிட்டாய்.
அதற்கும் மேலாக உண்ண உணவு, உடுக்க உடை , படுக்க இடம் தந்த பரமாத்மாவுக்கு நன்றி சொன்னாயா ?
நீ செய்யும் எல்லா கர்மாக்களையும், பாவங்களையும் சுமக்கும் தாய் பூமிக்கு நன்றி சொன்னாயா ?
எதற்கும் நன்றி சொல்ல தெரியாதவன் நீ ! எப்படி நலமாக வாழ்வாய் ?
கஷ்டத்தில், நஷ்டத்தில் கடவுளை நோக்கி கூக்குரல் போடும் குஷ்ட மனிதனையே கண்டேன். மரத்திற்கு நீர் ஊற்றுகிறாய். அதன் நன்றியை காய்கனியாக உனக்கு தந்து பெருமிதத்தோடு வாழ்கிறது. நீயோ உண்டவன் வீட்டுக்கு கெண்டி தூக்க பார்க்கிறாய்.
இங்கே மழைக்கும், மண்ணுக்கும், தண்ணீர்க்கும், தாவரத்திற்கும் நன்றி சொல்ல மறந்தாய். பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும் புறம் தள்ளும் வேடிக்கை மனிதர்களை பார்க்கின்றேன். பின் சக்தியும், சத்தும் இல்லாமல் நாதி இல்லா சாகக் கண்டேன்.
நன்றியை மறந்துவிட்டாய். பின் எப்படிடா உனக்கு பூரிப்பு வரும் ?
நன்றி, நன்றி இந்த சொல் எப்போதும் நாவில் வரட்டும் ! நாயகன் நான் உனை ஓடோடி வந்து அரவணைப்பேன் !
தன் உயிரையும் மெய்யையும் பிசைந்து பெற்றாள் உன்னை உயிர்மெய்யாக ! நீ பெற்றவளை மறந்து பேடியாக திரிகின்றாய். புலன் அனைத்தும் உனக்கு தந்து பொறி எல்லாம் உனில் கலந்து மெய் சுவைத்து உள் இனித்து பாவையின் ஒழுகு மாடத்தை முகர்ந்தாயடா. சுவைத்தாயடா. மனைவியாய் உனக்கு மார்விலக்கி மடிபிச்சை தந்தாளடா ! மாயை எனும் மனைவிக்கு ஏன் நன்றி சொல்ல மறந்தாயடா ?
உத்தமி என்றும் பத்தினி என்றும் பறைசாற்றும் உன் வாய் உருமறைந்து ஊருக்குள் அலைய கண்டேன். சத்தியம் நீ மறந்தாய். சடுதியில் துன்பம் கண்டாய். உண்டாய் ஊன் துன்பம். உலகின் ஆளுமையை நிந்தித்து வாழ்கின்றாய்.
திருமணமான புதிதில் ஆல் போல் தளைத்து சருகு போல் வேரூன்றி இருக்க கண்டேன். ஆனால் பக்கத்தில் நெருங்க நெருங்க காணல் நீர் போல் உறவு காணாமல் போக கண்டேன் ! அதே போல் தான் என்னில் வருகின்றான். என்னை மிக நெருங்குகிறான். நான் நெருங்கி பாசமாக வரும் பொழுது விலகிக் போகின்றான் !
இங்கே வீரமும், விவேகமும் இரண்டு மூன்று பிள்ளை பெருவதற்கே உபயோகபடுத்துகிறான் ! வந்த கடமை, வாழும் கடமை தெரியாது அன்பை தொலைத்து உறவை தொலைத்து வெளியே எங்கோ தேடுகின்றான். மீண்டும் பிறக்காத கடமை புரியாது மாண்டு போகின்றான்.
நன்றி சொல்லடா ! நாயகன் நான் உனக்கு எப்போதும் துணை இருப்பேன். சுகமான சுகம் தருவேன்.
அணுவுக்குள் அணுவானவன் நான் !
நான் இநன்யா !
தென்னில் கடுமழை உண்டு ,ஒருக்கலிக்கும் புணித நீர்,

03-07-2017
* தென்னில் கடுமழை உண்டு ,ஒருக்கலிக்கும் புணித நீர்,வரும் டிசம்பரில் மேலிருந்து வரும் சூட்சும்ம் யுகத்தை பிளந்து அதிரவைக்கும்.ஜீவராசிகள் கலங்கி நிற்கும்,உன் விஞ்ஞான கோள்கள் எல்லாம் குறையாய் நிற்ககண்டேன் எதை வைத்து தடுப்பாயடா ஆகாசவீதியெல்லாம் ஆனந்தமாய் நான் ஆள்பவன் எனை அறியாமல் ஆழிகூத்தில் சிக்கி தவிக்கின்றான் உன்னை ஆள்பவன் நானடா ,ஏனடா மனபயம்...
* நாம் நினைப்பது அனைத்தும் நடந்தாலும், நடக்காவிட்டாலும் பரவாயில்லை. நடப்பது அனைத்தும் நல்லதாக நடக்க கடவுளுக்கு தினமும் நன்றி சொல்வோம். நன்றி சொல்லும் வேதம் அருளிய ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
"யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா"
* என்னை பார்த்து உன்னை சரிசெய்து கொள் ,
நான் காலகண்ணாடி .
என்னை பார்த்தும் உன்லட்சியம் நிறைவேறவில்லை என்றால் ,
உன்னில் தவறு இருக்கிறது .
அதை விரைவில் சரிசெய்து என் சத்தியபாதையில் ஆனந்தமாக வாழ ஆயத்தமாகு .
நீ எல்லா செல்வமும் பெற்று ஆனந்நதமாக வாழ்வதை பார்க்க அவா எனக்கு .
நீ வாழ்வாயடா .
இநன்யா சத்தியமானவன்.Inanya Maha Munivar
Subscribe to:
Posts (Atom)

























