Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

M K Jupiter Prabhakaran அன்பானவர்களே ;;;; கடவுளோடு சில நிமிடங்கள் நான் உரையாடியதை கூறுகிறேன்.

01-01-2017 M K Jupiter Prabhakaran அன்பானவர்களே ;;;; உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள் ;;;;; கடவுளோடு சில நிமிடங்கள் நான் உரையாடியதை கூறுகிறேன். யாகவா கடவுளின் அன்பு  மகன் இநன்யா கடவுள் .இநன்யா கடவுளின் அன்பு தந்தை  யாகவா கடவுள் .நேற்று கடவுளை பார்க்க சென்றேன். கடவுளுடன் ஏற்படுகின்ற அனுபவங்களையும் உரையாடல்களையும் பதிவிட வேண்டாம் என்று கூறுகிறார்கள் ,  என்று நான்  கூறினேன். அதற்க்கு கடவுள் நீ போடு என்று கூறினார். கடவுளின் அனுமதியோடு இங்கு பகிர்கிறேன். அன்பார்ந்த கர்மாக்களே, ஒழுக்கமுள்ளவர்களே, தர்மவான்களே , உங்கள் அனைவருக்கும் அவதார புருஷர்களை பற்றி ,என் கருத்தை கூற கடமை பட்டுள்ளேன். முதலில் யாகவா கடவுளை பற்றி கூறுகிறேன். இப்போது வந்திருக்கும் இநன்யா கடவுளை விட்டு விட்டு ,யாகவா கடவுளை கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள். யாகவா கடவுளுக்கும், இநன்யா கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ள காரணத்தினால் தான் கூற வருகிறேன்.இநன்யா கடவுளின் அன்பு தந்தை யாகவா கடவுள். யாகவா கடவுள் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்தோம். ஆனால் அவரை கேள்வி படவில்லை. அவர் பிறந்தது 1941 -ஆம் வருடம்  , அவருடைய மானிட தேகத்தின் இறுதி யாத்திரை 2000 - ஆம் வருடம். இதற்கு முன் நான் 53  பிறவிகள் எடுத்து முடித்து விட்டேன் என்றும் ,  இந்த இடைப்பட்ட காலத்தில்  தற்போழுது எனது 54  ஆம் பிறவி தமிழ் நாட்டில் எடுத்து முடிக்கிறேன் என்றும், எனக்கு பின் நாரதர் வழி இநன்யா வருவார் என்றும், யாகவா கடவுளின் உரை நடையிலும், அவருடைய ஒளி ,ஒலி  பதிவு நாடாவிலும் கூறியிருக்கிறார்.யாகவா கடவுளும் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு வாழ்ந்தால் உங்களை அரவணைப்பேன் என்றும், இன்னும்  ஏராளமான, பல்வேறு விதமான போதனைகளை கூறியுள்ளார். யாகவா கடவுள் தமிழ் நாட்டில் போதனைகளை  கூறும் போது, பறந்தபூமி, எங்கும் காட்டு பிரதேசம், நிறைய வீடுகள் இல்லாத நிலை, சாலை வசதி இல்லாத நிலை, தொலைத்தொடர்பு  அதிகம் இல்லாத காலம், முக நூல் வசதி இல்லாத காலம், அது போன்ற சமயத்தில் யாகவா கடவுள் 54  -ஆவது பிறவியின் அவதாரத்தில் போதனைகளை உபதேசித்தார் . ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் கடவுளை கேள்வி படாத காலம். ஆனால் கவிஞர்களும், புலவர்களும், திரைப்படத்துறையினரும், அவரை நன்கு உபயோகப்படுத்தி கொண்டார்கள். யாகவா கடவுளை கண்டவர்கள்  மேலும், மேலும் கெளரவம் வேண்டும், பணம் வேண்டும், வியாதிகள் குணமாக வேண்டும், என்று கீழ்த்தரமான ஆசைக்கு தான் யாகவா கடவுளை உபயோகப்படுத்தி கொண்டார்கள். யாகவா கடவுள் வாழ்ந்த காலத்தில் மக்கள்  தர்மவானாகவும் ,  ஞானவானாகவும் ஆகவேண்டும் என்று   பயன் படுத்தி கொள்ளவில்லை.ஒரு நாள் தொலைக்காட்ச்சியில் யாகவா கடவுளுக்கும் , சிவ சங்கர் பாபாவுக்கும் , வாக்கு வாதம் முற்றி, கைகலப்பு நடக்கும் போது தான் , பாமர மக்களும் பிரகாசமாக யாகவா கடவுளை அறிந்தார்கள் . ஆனாலும் உணர வில்லை.பிறகு யாகவா கடவுளின் மானிடத்தேகம்  54 - ஆவது பிறவியில்  2000 - ஆம்  வருடத்தில் இயற்க்கை மறைவு. அதன் பின் இநன்யா கடவுளின் அதிகார பூர்வ வருகை 07 -03 -2015  இல். இநன்யா கடவுளின் அன்பு தந்தை  யாகவா கடவுளுக்கும் ,  இநன்யா கடவுளுக்கும்  இடைப்பட்ட கால நேரம்  15  ஆண்டுகள் .இந்த 15  வருட கால இடைவெளியில் யுகத்தில் கடவுளே இல்லாமல் வாழ்ந்தோம் நாம் எல்லோரும். எவ்வாறு வாழ்ந்தோம்?, எப்படி வாழ்ந்தோம்?. என்றால், ஒரு குடும்பத்தில் தந்தை இல்லாமல் குடும்ப அங்கத்தினர்கள் அனாதையாக  வளர்வது போல் நாம்  வாழ்ந்தோம். இந்த இடைவெளி காலத்தில் என்ன சாதித்தோம் என்று சற்று யோசியுங்கள். குடும்பத்திற்கு தேவையான  காரியத்தை செய்தோம், சொத்து , பணம் சேர்த்தோம் என்றும், மக்கள்  அனைவரும் கூறுவார்கள் .சாமியார்களின்  போலி த்தோற்றம் ,சிறைவாசம் தான் நடந்தது. நடந்த காரியங்கள் எல்லாம் பூலோகத்தை விட்டு போகும் போது , விட்டு செல்கின்ற காரியங்களாகும்.இதற்கு முன்பும் நாம் அனைவரும் வாழ்ந்தோம், பற்பல பிறவி எடுத்து உள்ளோம். இந்த பிறவி ஒன்றும் புதியதான பிறவி அல்ல. ஆனால் நமக்கு ஞானம் கிடைத்ததா, நமக்கு ஞானம் கிடைக்காததால் தான், நாம் மீண்டும்,மீண்டும் பிறவி நிலைக்கு தள்ள பட்டோம். ஞானம் கிடைத்து இருந்தால் நமக்கு யுகத்தில் வேலையே இல்லை. தர்மாக்களை போல் வாழ்ந்தோமா ? இல்லவே இல்லை. நாம் எவ்வாறு வாழ்ந்து இருப்போம்  என்றால், அழுக்கான கர்மாவோடு வாழ்ந்து இருப்போம்.. [அழுக்கான கர்மா என்ன வென்றால், என் சொத்து, என் பணம், பிறரை ஏமாற்றுதல், பிறர் சொத்து அபகரித்தல் ... இன்னும் ஏராளம் ] இது போன்ற நிலைக்கு நாம் வாழ்ந்து இருந்தமையால் தான் நாம் பூலோகத்திற்கு தள்ள பட்டிருப்போம். நம் உடலில் உள்ள ஆன்மாவில்  சிறிதும் கரை இருந்தாலும் நாம் பூமிக்கு தள்ளப்படுவோம்.இந்த லோகமே கடவுளுடையது. பிறகு எப்படி நம்முடைய சொத்து , பணம் ஆகும், அனைத்தும் கடவுளுடையதாக உள்ளதால், நாம் கடவுளிடமே அனைத்தையும்  விட்டு விட்டு செல்கிறோம் மரணத்தின் போது.பிறர் கேட்டு கொடுப்பது தானம், பிறருடைய இன்னல்களை அறிந்து , பிறர் கேளாமல் நாம் கொடுப்பது தர்மம், தர்ம பாதையில் செல்லும் போது, அதன் ஆழத்திலிருந்து வெளிப்படுவது ஞானம். ஆக இந்த 15  வருட இடைவெளியில் தந்தை இல்லாத அனாதையாய் , கர்மப்பாதையில், தானமும், தர்மமும், கொடுக்காமல், ஞானமும் கிடைக்காமல் காலத்தை கடந்து யுகத்தோடு யுகமாக வாழ்ந்து விட்டோம்.யாகவா கடவுள் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்ந்தோமோ, இப்பொழுது இநன்யா கடவுள் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்கிறோமோ , இதே போல் இதிகாச புராண காலத்திலும், அதாவது, ராமர் ,கிருஷ்ணர், இயேசு, அல்லா, புத்தர் காலத்திலும் நாம் வாழ்ந்து இருக்கிறோம். வாழ்ந்தோமா என்று யூகிக்கையில் நம் மூளைக்கு எட்ட வில்லை. ஆனால் வாழ்ந்து இருக்கிறோம். அவ்வாறு வாழ்ந்து ஏன் மீண்டும் பிறவி எடுத்தோம் என்றால், அவதார புருஷர்களின் உபதேசத்தை ஏற்க வில்லை.அவர்களும் போதனை கூறினார்கள்.நாம் பொருட்படுத்தாமல் , அதை  ஏற்காமல் நாம் வாழ்வது தான் சரி என்று வாழ்ந்தோம். ஆனால் நாம் வாழ்ந்தது இறை சட்டத்திற்கு அப்பாற் பட்டு அரக்க குண ஆதிக்கத்திற்கு உட்பட்டு  வாழ்ந்து விட்டோம். மேலும் பிறவி எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். அவரவர் மதத்திற்கும், குலத்திற்கும், ஏற்றாற்போல் அவதார புருஷர்களை கண்டார்கள். தனக்கே உரிய அரக்க குண ஆதிக்க பாணியில் வாழ்ந்தார்கள். அவர்கள் கூறிய உபதேச முறைப்படி வாழ வில்லை. தேவர்மார்கள் யுகத்திற்கு வந்து , வந்த வேலையை சிறுக, சிறுக முடித்து விட்டு, அவர்கள் காலம் முடிந்தவுடன் மேலுலகில் சென்று விடுகிறார்கள். இறை நியதிக்கு உட்பட்டு வாழாததால் , நமக்கு மீண்டும் பிறவி எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.நாமும் பற்பல பிறவி எடுக்க, புருஷர்களும் நம்மை அவர்களுடைய நிலைக்கு மாற்ற முயற்சிக்க யுகத்தில் அவர்களும் பிறக்க , நாமே அவர்களுக்கு தேவையில்லாத வேலை நாம் கொடுக்கிறோம். ஆக நாம் தர்மவானாகவும், ஞானவானாகவும் மாறும் வரை அவதார புருஷர்கள் நம்மை மாற்ற வந்து கொண்டே இருப்பார்கள்.இப்பொழுது இநன்யா கடவுள் நம்மை எல்லாம் இறை சட்டத்திற்கு  உட்பட்டு ,  அரக்க குண ஆதிக்கத்திற்கு அப்பாற் பட்டு  தர்மவானாகவும், ஞானவானாகவும் மாற்ற தமிழ் நாட்டிலே பிறப்பெடுத்து  இருக்கிறார். உலகிலே வல்லமை வாய்ந்த ஆன்மீக பூமி  இந்தியா . மாநிலத்திலே முதன்மை வாய்ந்த ஆன்மீக பூமி தமிழ் நாடு.  ஆக இநன்யா கடவுள் நம்மை எல்லாம் மாற்ற வந்திருக்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவருடைய ஆன்மா இநன்யாவின் ஆன்மாவே என்பதில் எந்தவிதமான சந்தேகம் இல்லை.நாம் மாறாததால், நம்மாலே அவர்களுக்கு வர வேண்டிய வேலையை நாமே கொடுக்கிறோம். நமக்காக அவர்கள் பூலோகத்தில் வந்து நம்மை போல் கஷ்ட்ட படுகிறார்கள் பாவம் அவர்கள் நிலை. ஏன் அவர்கள் மேல் உலகிலே இருக்கலாம் அல்லவா , ஏன் அவர்கள் பூலோகத்திற்கு வர வேண்டும் . நமக்காக தான் வருகிறார்கள்.  நாம் அனைவரும் அரக்க ஆதிக்கத்திற்கு உட்பட்ட குழந்தைகள் அல்ல.  நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்.நம்மை எல்லாம் பிறவி அற்ற நிலைக்கு  மாற்ற  வந்திருக்கிறார் என்று சந்தோஷமும் , பெருமையும்  கொள்ள வேண்டும். நாம் என்ன புண்ணியம் செய்தோமோ , நாமும் அவருடன் தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறோம் என்று நினைத்து , நம்முடைய உள்ளமும் பூரிப்பு நிலையை  அடைய வேண்டும். அதை  விட்டு விட்டு , தேவை  இல்லாத இம்சை  செய்து அவரையும் , அவரை சுற்றி உள்ள தேவாதி தேவர்மார்களின் சினத்திற்கும்  , சாபத்திற்கும் , ஆளாகி  பாவத்தை சுமக்கிறார்கள்.இங்கு இநன்யா கடவுளிடம் இனம், மதம், குலம் இல்லை . ஏனெனில் நாம் அனைவரும் அவருடைய குழந்தைகள். இங்கு மூலமும் ஒன்றே, கடவுளும் ஒன்றே. நம்முடைய தந்தை அவர். நம் குடும்பத்தில் தந்தைக்கு மகன் தீய வழியில் செல்லும் போது , தந்தையின் மனம் எவ்வாறு சங்கடப்படுகிறதோ, அது போல் நாம் தீங்கான வழியில் செல்லும் போது, அவதார புருஷர்களின் மனம் மிகுந்த சங்கடத்திற்கு ஆட்படுவதால் , அவருடைய குழந்தைகளை மாற்றுவதற்கு மேலுலகில் உள்ள சுக போக வாழ்க்கையை விட்டு விட்டு, யுகத்திற்கு வந்து போதனைகளை வழங்குகின்றார்கள் . அவருடைய மானிட தேகத்தை கண்டு ஏளனம் செய்தால் ஏளனம் செய்பவர்கள் மதியீனர்களே. அவருடைய  மானிட தேகத்தால் மனிதனுக்கு ஆவதென்ன.  அவரிடம் நாம் கேட்டு கிடைக்க வில்லை என்றால் அவர் கடவுள் இல்லை  என்று பொருள் ஆகாது.  உன்னுடைய உயர்ந்த கர்மாவை அவரிடம் மாற்று என்றால் , அவர் எவ்வாறு போக்க முடியும், அந்த கர்மாவின் கூர் முனை தான் அவர் மங்க செய்யமுடியும். இதையும் யோசிக்க உனக்கு ஏது அறிவு. சுய அறிவு இல்லாமல் ஏளனம் செய்கிறாய்.  சுய அறிவே இல்லாதவன் ஞானி போல் பேசுகிறார்கள். ஏளனம் செய்து மேலும் சினத்திற்கும் , சாபத்திற்கும்  ஆளாகி  பாவத்தை சுமக்கிறார்கள்.அவருடைய மானிட தேகத்தை கண்டும் நீங்கள் கேட்டது ,ஒரு வேலை கிடைக்க வில்லையென்றாலும், அவரை நீங்கள் இம்சை செய்தாலும்,  இம்சையை இநன்யா கடவுள் பொருட் படுத்தாமல், , உங்கள் மீது மேலும் மேலும் அன்பை பொழிந்தாலும்,  வீழ்வது நாமே ;;; ஏன்எனில் பிரபஞ்ச சக்திகளும், கடவுளுடனுள்ள முப்பது முக்கோடி தேவர்மார்களும், தான் நம்மை தண்டிப்பார்கள் என்று உறுதிபட கூறுகிறேன். ஏனெனில் அன்பின் வடிவமானவர் இநன்யா கடவுள். பிறர் அரக்ககுணத்தில் வாழும் போது  , அரக்க குணத்தோடு கிடைக்கின்ற பொருளை கண்டு , நமக்கும் வேண்டும் என்ற  எண்ணத்தின் போராட்டமாக வாழ்க்கையை வடிவமைக்கும் போது , அது கிடைக்க வில்லை என்றால் நாம் கடவுளிடம் கேட்டுக்கிறோம் . கடவுளிடம் கேட்க்காதீர்கள், அவருடைய குழந்தைகள் ஆகப்பட்ட நமக்கு என்ன கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்று  கடவுளுக்கே தெரியும் , நாம் நினைத்தது கிடைத்தால் நமக்கு பிறவி கூடுதல் ஆகும் என்று நமக்கு கொடுக்காமல் இருப்பார் கடவுள்  . அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் , கிடைக்காத பொருளை கண்டு ஏங்கும்  நேரத்தில் கடவுளை குறை கூறுவது எள் அளவும் நியாயம் இல்லை. பூர்வ கர்மத்தில் நாம் எவ்வாறு  தவறு செய்தோமோ , தவறு செய்து விட்டு இப்பிறவியில் அனுபவிக்கவே பிறந்தோமோ , இப்பிறவியில் நாம்  உயிரோடு இருக்கும் போது , நம்    மூதையாரை மதிக்காமல், தாய் தந்தையரை மதிக்காமல்  வாழ்ந்து விட்டு , அவர்கள் யுகத்தை விட்டு  போன பிறகு  பித்துரு கர்மம் செய்து எவ்வாறு பலன் இல்லையோ, அது போல் பூர்வ கர்மத்தில் வாழ்ந்த அவதார புருஷர்களை , இப்பிறவியில் வணங்கி யாதொரு பலன் இல்லை. அவ்வாறு பலன் கண்டேன் என்று நாம் நினைத்தால் நம்முடைய அறியாமையே, மாயையே. அந்த அளவிற்கு சாஸ்திரம் மாற்றப்பட்டதே அரக்கர்களின் ஆதிக்கமே. உயிரோடு இருக்கும் மானிடர்களை மதித்தால், அன்பை பொழிந்தாள் எவ்வாறு பரஸ்பரம் நன்மை உண்டாகிறதோ , அது போல் தமிழ் நாட்டில் அவதரித்த உயிரோடு இருக்கின்ற இநன்யா கடவுளை பின்பற்றுவோம். அவரவர் மானிட தேகத்தில்  உள்ள ஆன்மா மலரும், நம் ஆன்மாவின் சாட்ச்சியே இநன்யா கடவுள். தர்மவான் ஆகலாம், ஞானவானாகலாம். நம்மை எல்லாம் அரக்க ஆதிக்கத்திலிருந்து மாற்ற வந்திருப்பவர் இநன்யா கடவுள் என்றும்,  அவருடைய மானிட தேகத்தில்  இநன்யாவின் ஆன்மாவே என்றும் உறுதிபடக்கூறுகிறேன் . கடவுள் இநன்யாவை கண்டு , நாமும் அவருடன் சேர்ந்து வாழ்கிறோம் என்று சந்தோசப்பட்டு , பெருமை கொள்ள வேண்டும் . இதே இநன்யா கடவுளை தமிழ் நாட்டில் அறியாதவரும் உண்டு. காணாதவரும் உண்டு. கேள்வி ப்படாதவரும் உண்டு. கடவுளை கண்டு அவர் வழி கடை பிடிப்பவரும் உண்டு. கடை பிடிக்காதவரும் உண்டு. அவரை ஏளனம் செய்வோரும் உண்டு . அது அது அவரவர்களின் பாக்கியமே. கடவுளின் ஆய்வு முறைப்படி  இப்போது குடிகொண்டிருக்கும் இநன்யா கடவுளின் ஆன்மா ,  அவருடைய ஆயுள் முறைப்படி அதற்கான மானிடத்தேகம்    இன்னும் 20  வருடம் அல்லது 30  வருடம் இருக்கலாம் . இந்த மானிடத்தேகம் முடிந்ததும்  , வேறொரு மானிடத்தேகம் எடுத்து இதே இநன்யா கடவுளின் ஆன்மாவாக மீண்டும் பிறப்பார். அவ்வாறே மீண்டும் பிறப்பது வேறு மாநிலமாக இருக்கலாம், வேறு நாடாக இருக்கலாம். ஆகையால் தற்போழுது வாழ்ந்து கொண்டுள்ள இநன்யா கடவுள் தமிழ் நாட்டில் வாழும் போதே நாம் அனைவரும் அரக்க குணத்தில் இருந்து தர்மவானாகவும், ஞானவானாகவும் மாறியே  ஆக வேண்டும். இப்பிறவியிலும் நீங்கள் இநன்யா கடவுளை கேள்வி படவில்லையென்றாலும் , கேள்வி பட்டு மாறவில்லையென்றாலும் , கேள்வி பட்டு இம்சை செய்தாலும் , மீண்டும் மீண்டும் கர்மா ஸ்தானமாக வாழ்வது உறுதி , அடுத்த ஜென்மத்திலும்  கர்மவானாக பிறப்பது உறுதி. ஆக கடவுளின்கு சொல் படி குணத்தை மாற்றுங்கள் ,,, வாழ்க்கையை மாற்றுங்கள் . ஏனெனில் நீ உண்ணும் வரை விட மாட்டேன் என்றும், உன் தோலில் கைபோட்டு வாழவே ஆசை படுகிறேன் என்றும் கடவுளே கூறி இருக்கிறார். ஆக நம் தோலில் கை போட வேண்டும் என்றால் நாம் கர்மவானாக இல்லாமல், ஒழுக்கமானவாகவும், தர்மவானா மாகவும், ஞானமானவானாகவும், வாழ்க்கையை செம்மை படுத்தி வாழ கற்று  கொள்ள வேண்டும். ஆக புராணத்தில் வாழ்ந்து முடித்த ராமருக்கு ----------ராவணனாக இல்லாமல்,கிருஷ்ணருக்கு -------துரியோதனனாக இல்லாமல்,இயேசுவுக்கு ----------காட்டி கொடுத்த யூதாஸாக இல்லாமல், புத்தர் முகத்தில் காரி துப்பிய அரக்கனாக இல்லாமல் ,நம்முடைய வாழ்க்கையை இநன்யா கடவுள் கூறிய படி மாற்ற முயல வேண்டும் ,முயலுங்கள்.  ஏழாம் கடவுள் இநன்யா அவர்களின் கடைசி பிறவி இது. இனி பல கோடி ஆண்டுகளுக்கு கடவுளின் பிறவி இருக்காது. உலக மாற்றம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இநன்யா நமோ நம. ----       நன்றி  ;;;;  இநன்யா நமோ நம



பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது !!! கி.பி.2017 முதல் கி.பி.2037க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது !!! கி.பி.2017 முதல் கி.பி.2037க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப்போகிறார்கள்.பழனி மலையில் இருக்கும் நவபாஷாணமுருகன் சிலை சிதைந்துவிட்டது நம் அனைவருக்கும் தெரியும்.இந்த சிலையை போகர் நிறுவினார்.அவர் இதே போல் ஒன்பது நவபாஷாணசிலைகளை உருவாக்கி பழனிமலையிலும்,அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார்.அதில் ஒன்று பழனி மலையிலிருந்து சபரி மலைக்குச் செல்லும் ஒரு இடத்தில் இருக்கிறது.அதை ஒரு நாகம் காவல் காக்கிறது.கிபி 2017 முதல் கிபி 2037 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறொரு சித்தரால் பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவிவிடுவார்.அவ்வாறு நிறுவப்பட்டதும்,பாரதம் உலக வல்லரசு நாடாக மாறிவிடும்.நமது பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்கும் முன்பு,சித்தர்கள் ஒவ்வொருவராக நீண்ட கால தவத்திலிருந்து எழுந்து வரத்துவங்கியுள்ளனர்.2004 ஆம் ஆண்டில் உண்டான மாபெரும் ஆழிப்பேரலை(சுனாமி) காகபுஜண்டர் சித்தரின் தவம் கலைந்து எழுந்ததற்கான ஆதாரமாக தினத்தந்தியில் ஒருவர் முழுப்பக்க கட்டுரையே எழுதினார்.அது உண்மைதான்.இந்தியா,மலேஷியா,சிங்கப்பூர்,இந்தோனோஷியா முதலான நாடுகளில் கடலோரங்களில் மனிதத் தன்மையற்ற குலைநடுங்கச் செய்யும் பல குற்றங்களின் விளைவாக கடலுக்குள் பல்லாயிரமாண்டுகளாக தவத்தில் ஈடுபட்டிருந்த காகபுஜண்டர் தவம் கலைந்து சீற்றத்துடன் எழுந்தார்.இதே போல்,போகர் தவம் கலைந்து எழும்போது,சென்னை மாநகரம் கடல் அலைகளில் கடுமையாகப் பாதிக்கப்படும்.தென்னிந்தியா இரண்டு தீவுகளாக மாறும். கடற்கரையிலிருந்து 5 கி.மீ.தூரம் 3 கி.மீ.உயரே எழும்பி நகரங்களை நாற்றக் கோலமாக்கி விடும்.700 கி.மீ.தூரத்திற்கு புயல் வீசும்.புயல் என்பது பூமிக்குள் தவம் செய்யும் சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் மேலே வரும்போது பூமிப்பிரளயம்,அவர்களின் சக்தியின் வேகங்களைக் கொண்டுவரும்.யானையின் தும்பிக்கை போல் மழை பெய்யும்.புதுப்புது வியாதிகள் மனிதனைத் தாக்கும்.கங்கையும் காவிரியும் இணைந்து பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஓடும்.பல கிராமங்கள்,நகரங்கள் அழியும்;விஞ்ஞானம் தலைகீழாக மாறும்.இந்த மாற்றங்கள் 2017 லிருந்து 2037க்குள் நடந்துவிடும். அணைக்கட்டுக்கள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது;இயற்கையின் சீற்றத்தால் மக்கள்தொகை குறைந்துவிடும்.
நெருப்பில் அழிவு ஏற்படும்போது கொங்கணவர் தோன்றுவார்!120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.நேர்மையும் சத்தியமும் பெருகும்.தெய்வீகம் பெருகும்.காகித நோட்டுக்கள் இருக்காது.தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துவிடும்.பக்கம் 92 பல மேலைநாடுகள் அனைத்தும் பொசுங்கிப் போய்விடும்.அசுர சக்திகளை கல்கத்தா காளி அப்படியே அடக்கி மாய்த்து தின்றுவிடுவாள்.பிறகு இந்த பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய பிரத்திங்கரா தேவியினுடைய சக்தியானது ஞானசித்தருடைய ஆத்ம சக்தியின் ஒளிப்பிழம்பாகத் தெரியும்.இதனை கமலமுனி நாடி சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது. ஏனென்றால்,வெளியுலகுக்கு இப்போது காட்டக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
இனி வரக்கூடிய காலமானது பிரம்மாவிடமிருந்து ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர்தான் இப்போதைய பிரம்மா.ஆஞ்சநேயருடைய செயலை பூவாக எடுத்துக்கொள்கிறார் இறைவன்.ஆஞ்சநேயர் மேலே இருக்கிறார்.அவருடைய சூட்சும சக்தியோ ஞான சித்தரின் சரீரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதையாராலும் உணர முடியாது.2037 இல்தான் ஞான சித்தரை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும்.தமிழ்நாடுதான் உலகத்திற்கே வல்லரசு ஆகப்போகிறது.உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது.இதனை ஞானத்தினால் மட்டுமே உணர முடியும். விஞ்ஞானத்தினால் ஒருபோதும் உணர முடியாது.ஆனால்,உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா தனது பாதத்தால் மிதித்துக் கொண்டு ஆட்சிபுரியப் போகிறது.2017 லிருந்து உலகமே இந்தியாவிற்கு அடிமையாகப் போகிறது.இதனை எல்லோரும் உணரப்போகிறார்கள்.
ஏனெனில் மேலைநாட்டில் எல்லாம் பணவெறி பிடித்தும்,அகந்தையினாலும் மதம் என்ற கர்வத்தினாலும் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.இவை அனைத்திற்கும் சவாலாக இந்தியா சிலிர்த்தெழப்போகிறது என விவேகானந்தர் அன்றே சொல்லிவிட்டார்.உலகிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு ஜோதி சென்னையிலிருந்துதான் புறப்படப்போகிறது என்றும் தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டார். ஆம்,சென்னையிலிருந்து அந்த ஞான சித்தர் உலகிற்கு வழிகாட்டப்போகிறார். படிப்படியாக கடல் அலைகள் மோதப்போகின்றன.பல மேலைநாடுகள் காணாமல் போகப்போகின்றன.இதுதான் உண்மை.18 சித்தர்களும் பிறந்துள்ளனர்.அவர்கள் அனைவரும் இந்த ஞான சித்தரிடம் வந்து பேசுவார்கள்.உலகத்திலுள்ள அத்தனை சக்திகளும் 2017க்குப் பிறகு அந்த சித்தரிடம் ஆவாஹனம் ஆகிவிடும்.உலகம் இதை எதிர்காலத்தில் உணரப்போக ……..

"நான் யார்" என்று உணர்த்தி.,"வாசி அறியாதவன் வாசித்து என்ன பயன்"

ஆத்ம பிணியை தீர்ப்பதற்கான ஞான தேடல்.,என்கிற சத்திய பாதையில்....,

"நான் யார்" என்று உணர்த்தி.,"வாசி அறியாதவன் வாசித்து என்ன பயன்" என கேட்டு.,"என்னை பற்றி அறிந்து கொள்"என கூறி.,"நல் குருவை தேடு" என வழி காட்டி.,"உயிரின் உணர்வு அம்மா" என்று அமுது ஊட்டினாய்.!!
"ஆண்மா" வை காட்டினாய்.
"கடவுள் மெய்யாகவா" என்பதில் மெய் யாதென உணர்த்திட்டாய்.
"உன் உருவாக்கம் இது" என காட்டினாய். "அமிழ்த மொழி தமிழ்" என தமிழை போற்றினாாய்."பெண் என்ற மாயை" எது என பேசினாய்.
"நான் வந்த நோக்கம்"இது என சொல்லி காலத்தை கடந்து நின்றாய்.!!
"ஆன்ம பலம்".,தந்தாய். திருவை புரிய வைத்தாய்.
"பொறுத்திரு"என்றாய்."காவி உடை வந்தகாரணம்".,
சொன்னாய்."நான் துணை" என்று துணையானாய்."ஏன் உணரவில்லை நீ"என அன்பாய் தட்டி கேட்டாய்."மூட நம்பிக்கை" களைத்தெறிந்தாய்."எது ஆன்மீகம்" என சுட்டினாய்.
"சிறந்த தானம் தர்மம் எது" என வழி காட்டினாய்.
"உனக்கு கடவுள் உழவன்" என உண்மை உரைத்தாய்."புணித காற்று" இல் சுவாசம் தந்தாய்.
"புணித நீர்" நான் என உயிரூட்டினாய்."வான் அமிர்தம் மழை"யானாய்."தவம் என்றால் என்ன" என சொல்லி தந்தாய்.
"உயிர்" அதை உணர்திட்டாய்.
"உலகில் ஏழின் ஆதிக்கம்" நிலை நாட்டினாய்."சிலை ஏன் வந்தது" என்று எம்மை அஞ்சனை கல்லாய் செதுக்க செய்தாய்."உன்னை காப்பேன்" என்று உறுதி தந்தாய்."சங்கு சக்கரம் தத்துவம் என்ன"? என்பதில் தத்துவமே நீயானாய்.
"உனக்குள் இருக்கும் ரகசியம்" எது என பரிவு காட்டினாய்.
"பொய்" எது என சுட்டி மீட்ப்புக்கு வகை செய்தாய்."நான்கின் சூட்சுமம்" சொன்னாய்."ஞானம்" யாதென்று வழி சொன்னாய்.
"இரண்டில் ஒன்றின் சூட்சுமம்" என காட்டி சூட்சுமத்தை அகற்றினாய்."புணித பசு" வில் நீ புணிதன் ஆனாய்.
"அம்மா என்றால் காற்று"
(அன்பு) அன்பை பேசி ஆணந்தித்தாய்."பணிவு" அதில் குனிவை சொன்னாய்."சமயம்" அதில் சமத்துவம் தந்தாய்.
"சுமை" பற்றி பேசி சுமக்க இன்புற்றாய். "பொன் தினிந்த பொருநை நதி" யில் பிரவாகமாய் மலர்ந்திட்டாய்.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;



Wednesday, February 8, 2017

முப்பகை வெல்வாய் ! கடவுள் உன் நெஞ்சில் இருப்பதை அறிவாய் ! எப்போது உணர்வாயடா ?

Inanya Maha Munivar
09-02-2017
முப்பகை வெல்வாய் ! கடவுள் உன் நெஞ்சில் இருப்பதை அறிவாய் ! எப்போது உணர்வாயடா ?
உண்மை
குரம்பையில் நாற்றம் உண்டு ! குறை போக்க எதை அறிந்தாய் ? சத்தியம் தான் இங்கே உண்மை. நீ சத்தியத்தின் பாதையில் நடப்பதால் எல்லாம் கிடைக்கப் பெறுவாய் ! சத்தியத்தின் பாதையில் நடக்கும் போது தான் இன்பத்தை உணர்வாய் ! தர்மத்தின் வழி செல்லும் போது தான் எல்லாம் உணர்வாய் ! நீ உன் மனம் சொல் கேட்பதால் துன்பம் அடைகின்றாய்.
உன் மனம் தான் உன்னை தீர்மானிக்கின்றது. ஒருவன் சத்திய பாதையில் அடியெடுத்து வைக்கும் போது மிகுந்த சோதனையும் வலியும் உணர்கின்றான். ஆனால் சிறு சோதனைக்கு கடவுள் இல்லை என்று பிதற்றுகிறான். துன்பங்கள் உன்னை சாதிக்க நினைக்கும் தூண்டுகோல். முடிவில் பேரின்பம் தர காத்திருக்கிறது. அதனால் துன்பத்திலும் கடவுள் பாதம் இறுக பற்று !
மிகுந்த உஷ்ணம் மழைக்கு அறிகுறி. அதுபோல் துன்பத்திற்கு பின்னால் இன்பம் உண்டு. அதனால் கடவுள் துணையோடு எல்லா துன்பத்தையும் வெல்ல ஆயத்தமாகு ! எதுவும் உன்னை தீண்டாது நீ உண்மையாய் இருக்கும் போது ! சத்தியம் தவறாதே !
பிரார்த்தனை என்பது கூட இங்கே சுயநலம் தான். இங்கே அன்பே உயர்வு, அறிவு, உணர்வு ! அதனாலே அன்பை விதை ஆளமாக ! ஆள்வாய் உன்னை ! பின் ஆண்மா உனை ஆளும். கிரகஸ்தத்தில் சரணாகதி தத்தவமே விளக்கபட்டிருக்கின்றது. தொண்ணூற்றி ஆறு தத்துவத்தில் முதன்மையாக்கபட்டதும் இதுவே !
நான் நானல்ல என்று எப்போதும் உன்னில் விதை ! எல்லாவற்றையும் கடவுளின் பாதத்தில் சமர்ப்பித்துவிடு ! மன உளைச்சலுக்கு ஆளாகமாட்டாய் ! மனம் என்பது உன்னை உருக்குலைக்கும். உண்மையை மறைக்கும். எதையும் எளிதாக எடுத்துக் கொள். ஒரு புன்னகையோடு எப்போதும் வாழ கற்றுக் கொள்.
அன்பை தவிற கடவுளை நெருங்கும் வழி ஏதுமில்லை. நீ வேறு எதை செய்தாலும் கடவுளை நெருங்கமாட்டாய் ! உடலை வருத்தி மனதை வருத்தி எதையும் அடைய முடியாது. கடமையும், அன்பும் காலத்தின் சூட்சுமம். இதை அறிந்தவன் அடுத்த இலக்கை நோக்கி பயனிக்கின்றான் !
கடுங்குளிர் உன் எலும்பை தாக்குவது போல, நீ கடவுளிடம் விளைவித்த அன்பு, உன் எலும்பின் மஜ்ஜையில் கலக்கும், எலும்பில் உள்ள மஜ்ஜை உன்னை நோயில்லாமல் ஆணந்தமாக்கும் ! உன் ஊன் காற்றில் கலக்கும். பூமியில் வடிந்து மீண்டும் பிறக்க வழி செய்யாது.
உள்ளங்கை நெல்லிக்கனி அறிவாய் ! கன்னலில் கணிவு உண்டு ! உன் ஆக்கையில் நாற்றம் உண்டு !
உணரடா ! உன் உள்ளத்தை இனிதாக்கு !
கிருகிணியில் விப்புருதியானேன் என்று புலம்ப கண்டேன். முப்பகை நீக்காமல் முழுமதியாய் மாற நினைக்கின்றான். இங்கே தன்நிலை மறந்தவன் என் நிலை அறிவான் ! என்னை உணராதவன் எந்த நிலையையும் அடைய மாட்டான்.
என் சொல் உணர்ந்தவன், செயல் அறிந்தவன், சுகமாக வாழ்வான் !

நான் சொல்லும் சத்திய சொல் நிச்சயம் வெல்லும் ! உண்மை நானென்று உரக்க சொல்வேன் ! பொய்யன் தான் எனை தெரியாது புலம்புகின்றான். என்ன சொல்வேன் ? மூளையை படைத்தவன் மூளையை சரி செய்வான். இயந்திரத்தை படைத்தவனால் மட்டுமே இயந்திர பழுதை சரி செய்ய முடியும். ஆதலால் படைத்தவனிடம் உன்னை ஒப்புவித்து வாழ் !
அத்துகமானியாய் ஆள்கின்றேன் !
முத்துளம் போல் நீள்கின்றேன் !
சமீரணணாய் உன்னுள் இருக்கின்றேன் ! உண்மை நான் எனை உணராது அலைகின்றாயே ?
உன் வாயிலில் காத்திருக்கின்றேன், உனக்கு வேண்டியதை தருவதற்கு ! எப்போதும் விழி நிலையில் இரு ! தூங்கிவிடாதே !
உண்மை நானடா ! எப்போதும் நன்மை நானடா !
நானே சத்தியம் !
நான் இநன்யா !